2 டீஸ்பூன் எள்ளு ஒரு கிளாஸ் பாலுக்கு சமம்… கால்சியம் சத்துக்கு எளிய வழிகள்!
Calcium-Rich Foods in tamil: "50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் 70 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் ஒரு நாளைக்கு 1,200 மில்லி கிராம் கால்சியம் சத்துடைய பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும்." என ஊட்டச்சத்து நிபுணர் பூஜா மகிஜா குறிப்பிட்டுள்ளார்.
Healthy foods tami news: நமது உடலுக்கான தேவையான கால்சியம் சத்து கிடைக்க 'பால்' ஒரு மிக முக்கிய ஆதாரமாக உள்ளது. இதற்காக தினந்தோறும் நாம் பால் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. அவற்றுக்கு பதில் பாலில் தயார் செய்யப்படும் உணவு பொருட்களை நாம் சேர்த்துக் கொள்ளலாம். தவிர, நமது உடலுக்கு தேவையான கால்சியம் சத்துகளை மற்ற உணவுப்பொருட்களில் இருந்தும் நாம் பெறலாம் என ஊட்டச்சத்து நிபுணர் பூஜா மகிஜா தனது இன்ஸ்டா பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Advertisment
மேலும், ஆரோக்கியமான வாழ்விற்கு "கால்சியம் மிகவும் முக்கியமானது" என எடுத்துரைத்துள்ள பூஜா மகிஜா, "பெரும்பாலான பெரியவர்களுக்கு தினசரி பரிந்துரைக்கப்பட்ட கால்சியம் உட்கொள்ளல் 1,000 மி.கி. 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் 70 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் ஒரு நாளைக்கு 1,200 மில்லி கிராம் கால்சியம் சத்துடைய பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும். அதே நேரத்தில் 4 முதல் 18 வயதுடைய குழந்தைகள் கண்டிப்பாக 1,300 மி.கி கால்சியம் நிறைந்த உணவு பொருட்களை உட்கொள்ள வேண்டும். பால் அல்லாத கால்சியஉணவுகளை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். நிறைய உணவுகளில் கால்சியம் நிறைந்துள்ளது." என்றுள்ளார்.
கால்சியம் சத்துக்கள் நிரம்பியுள்ளதாக ஊட்டச்சத்து நிபுணர் பூஜா மகிஜா குறிப்பிடுவது பின்வருமாறு:-
*20 கிராம் பாப்பி விதைகளை உட்கொள்ளவது ஒரு கிளாஸ் பால் அருந்துவதற்கு சமம். இவற்றை ஹல்வா அல்லது கஞ்சி போன்ற பானம் போல் செய்து சுவைக்கலாம்.
*30 கிராம் சியா விதைகள் ஒரு கிளாஸ் பாலுக்கு நிகரானது.
*2 டீஸ்பூன் எள் விதைகள் ஒரு கிளாஸ் பாலுக்கு சமமான கால்சியத்தை அளிக்கிறது.