Advertisment

தேனில் ஊறவைத்த சின்ன வெங்காயம்… உடல் வலிமைக்கு இப்படி சாப்பிடுங்க!

How to Make a Simple Honey Onion Cough Syrup in tamil: சின்ன வெங்காயத்தை தேனில் ஊற வைத்து தினசரி காலையில் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைந்து தொப்பை குறையும். மற்றும் அடி வயிறு மற்றும் இடுப்பைச் சுற்றியுள்ள ஊளைச்சதை குறையும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil health tips: onion soaked in honey benefits in tamil

honey with onion benefits in tamil: மருத்துவ குணம் மிகுந்து காணப்படும் காய்கறி வகைகளில் சின்ன வெங்காயத்திற்கு தனி இடம் உண்டு. இவை நம்முடைய அன்றாட சமையல் முதல் மூலிகை மருந்துகள் தயார் செய்வது வரை முக்கிய பொருளாக வலம் வருகிறது. இவற்றை நம்முடைய அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் உடல் வலிமை பெறுகிறது. மேலும், பருவ கால நோய்த்தொற்றுக்களில் இருந்து தற்காத்துக்கொள்ளவும் உதவுகிறது.

Advertisment

சின்ன வெங்காயத்தின் அற்புத நன்மைகள்:

publive-image

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

சின்ன வெங்காயம் உடலுக்கு பல அற்புத நன்மைகளை அள்ளித்தருகிறது. குறிப்பாக இது நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது. உடலில் நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாவதால் மூச்சுப் பிரச்சினைகள், ஆஸ்துமா, சளித் தொல்லைஈ நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வருகின்றன. இதற்கு சின்ன வெங்காயம் மிகச்சிறந்த தீர்வாக உள்ளது.

இது போன்ற பிரச்சினைகள் இருக்கும் மக்கள், தினமும் காலையில் வெறும் வயிற்றில் தேனில் ஊறவைத்த சின்ன வெங்காயத்தைச் சாப்பிட்டு வரலாம். இது உடலில்ன் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்க உதவுகிறது.

நெஞ்சு சளியை போக்குகிறது

நெஞ்சு சளி அதிகம் இருப்பின், ஒரு சின்ன வெங்காயத்தை சாப்பிட்ட பிறகு வெந்நீர் பருகலாம். மேலும் அதன் சாறை சம அளவு தேனுடன் கலந்து சாப்பிட்டு வரலாம். இது நமது முன்னோர்களின் மருத்துவ குறிப்புகளுள் ஒன்று. ஆனால், நாம் அதைப் பின்பற்ற மறந்து விட்டோம்.

நெஞ்சு சளியால் அவதிப்படுகிறவர்கள் இரவு தூங்கச் செல்லும் முன்பாக தேனில் ஊறவைத்த சின்ன வெங்காயத்தை சாப்பிட்டு வரலாம். இது நெஞ்சில் கட்டியிருக்கும் சளி வாய் அல்லது மலத்தின் வழியே வெளியேறிவிடும். இதை நீங்கள் ஒரு சில தினங்களில் உணரக்கூடும்.

publive-image

ரத்தத்தை சுத்தப்படுத்த உதவுகிறது.

சின்ன வெங்காயம் ​ரத்தத்தை சுத்தப்படுத்த உதவு ஒரு முக்கிய பொருள் என்பதை நாம் அறிந்திருக்கக் கூடும். இவற்றுடன் கூடுதலாக தேன் சேர்க்கப்படும்போது அது இன்னும் அதிக நன்மையைத் தருகிறது.

எனவே, நீங்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் தேனில் ஊறவைத்த வெங்காயத்தைச் சாப்பிட்டு வரலாம். இது ரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்கி, ரத்த ஓட்டத்தைச் சீராக்க உதவுகிறது.

தொப்பைக் குறைக்க உதவுகிறது

சின்ன வெங்காயத்தை தேனில் ஊற வைத்து தினசரி காலையில் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைந்து தொப்பை குறையும். மற்றும் அடி வயிறு மற்றும் இடுப்பைச் சுற்றியுள்ள ஊளைச்சதை குறையும்.

செரிமான கோளாறை போக்குகிறது

சின்ன வெங்காயம், தேன் இரண்டிலுமே மிக அதிக அளவிலான ஆன்டி - ஆக்சிடண்ட்டுகள் உள்ளன. இவை நமது உடலின் ஜீரண சக்தியை மேம்படுத்தி, மெட்டபாலிசத்தை அதிகரிக்கிறது. இதனால் செரிமான கோளாறு ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

தேனில் ஊற வைத்த சின்ன வெங்காயத்தை காலையில் வெறும் வயிற்றில் தினமும் 2 இரண்டு வீதம் சாப்பிட்டு வந்தால், உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்குகிறது. மேலும், இது ரத்தத்தில் உ்ளள பிற கழிவுகளை வெளியேற்றுவதோடு, த்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பையும் வெளியேற்றுகிறது.

publive-image

தூக்கமினையை போக்குகிறது

தூக்கமின்மை பிரச்சினையால் அவதிப்படுகிறவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த பிரச்னைக்கு சின்ன வெங்காயம் நல்ல தீர்வைத் தருகிறது.

போதுமான தூக்கமின்மை என்னும் இன்சோம்னியா பிரச்சினையை தீர்க்கும் தன்மை கொண்டதகாவும் சின்ன வெங்காயம் உள்ளது.

தேன் - சின்ன வெங்காயம் செய்வது எப்படி?

முதலில் ஒரு சுத்தமாக பாத்திரம் அல்லது கண்ணாடி பாட்டில் எடுத்துக் கொள்ளவும்.

பிறகு அதில் நன்கு தோலுரித்து இரண்டாகக் கீறிய (தேனுடன் ஊற வசதியாக) சின்ன வெங்காயத்தைப் போட்டு அது மூழ்கும் அளவுக்கு தேனை ஊற்றவும்.

இவற்றை இரண்டு நாட்கள் அப்படியே ஓரமாக, கைபடாமல் எடுத்து வைக்கவும். இரண்டு நாட்கள் கழித்து சின்ன வெங்காயத்தில் தேன் நன்றாக இறங்கியிருக்கும். வெங்காயம் தேனில் நன்றாக ஊறி இருக்கும்.

இந்த தேன் - சின்ன வெங்காயத்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மேலே குறிப்பிட்ட நன்மைகள் மற்றும் இன்னும் பல ஆரோக்கிய நன்மைகளை பெறலாம்.

publive-image

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle Healthy Life Healthy Food Tips Healthy Food Tamil News 2 Health Tips Tamil Health Tips Healthy Food
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment