Tamil health tips: இஞ்சி காய்ந்தால் அல்லது உலர்ந்து போனால் அது சுக்கு. இஞ்சி – சுக்கு இவை இரண்டிலும் அதிகளவு மருத்துவ குணநலன்கள் உள்ளன. மேலும், இவை இரண்டும் ஒவ்வொரு வகையான பயன்பாடுகளையும் கொண்டுள்ளன.
ஆனால், இஞ்சி மற்றும் சுக்குவை பயன்படுத்தக்கூடிய சரியான நேரம் எது என்று நம்மில் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இது தொடர்பாக தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ள ஆயுர்வேத பயிற்சியாளரான நிதி ஷேத், “அனைத்து பொருட்களும் குறிப்பிட்ட பயன்பாடுகளைக் கொண்டுள்ளன. அவற்றின் அதிகபட்ச ஆரோக்கிய நன்மைகளை அறுவடை செய்ய நாம் சிலவற்றை மனதில் கொள்ள வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “இஞ்சி மற்றும் சுக்குவை எப்போது பயன்படுத்த வேண்டும் என்பதில் நீங்கள் எப்போதாவது குழம்பியது உண்டா?” என்று கேள்வியெழுப்பியுள்ள அவர், அவற்றை எளிமையான முறையில் சரியான நேரத்தில் பயன்படுத்தும் வழிமுறைகளை வழங்கியுள்ளார்.
இஞ்சியை எப்போது பயன்படுத்த வேண்டும்?

உங்கள் உடலில் வியர்வையைத் தூண்டவும், புறச் சுழற்சியை மேம்படுத்தவும் இஞ்சியை பயன்படுத்தலாம்.
பெண்கள் மாதவிடாய் வலியால் அவதிப்படும்போது சூடான தேநீர் தயாரித்து பருகி வரலாம்.
நீங்கள் மோசமான வாதத்தை உணரும்போது இஞ்சியை பயன்படுத்தலாம்.
இவற்றை லேசான மலமிளக்கியாகவும் நீங்கள் உபயோகம் செய்யலாம்.
உலர் இஞ்சி அல்லது சுக்குவை எப்போது பயன்படுத்த வேண்டும்?
நீங்கள் மந்தமான செரிமானம் (உடலில் உள்ள அமா அல்லது நச்சுகளின் அறிகுறி) உள்ளது என்று உணரும் போது பயன்படுத்தலாம்.
இது உடலில் உள்ள கஃபாவை (அதிகப்படியான சளி அல்லது நீர் தக்கவைப்பு) நீக்குகிறது.
இது மூட்டுவலி போன்ற உயர் அழற்சி நிலைகளுக்கும் உபயோகப் படுத்தப்படுகிறது.

முன்னதாக, ஆயுர்வேத பயிற்சியாளர் டாக்டர் டிக்ஸா பவ்சர் உலர்ந்த இஞ்சி அல்லது சுக்கு எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும் என்பதையும் பகிர்ந்துள்ளார்:
*இஞ்சியுடன் ஒப்பிடும்போது ஜீரணிக்க எளிதானது.
*புதிய இஞ்சிக்கு மாறாக இது இயற்கையில் குடலை பிணைக்கும் தன்மை கொண்டது.
*இது கபாவைக் குறைப்பதற்கும் அக்னியை அதிகரிப்பதற்கும் சிறந்த ஊக்கியாகவும், சளி நீக்கியாகவும் இருக்கிறது.
*உலர்ந்த இஞ்சியை மசாலாப் பொருளாகவோ மருந்தாகவோ எல்லாப் பருவங்களிலும் பயன்படுத்தலாம்.
ஒரு லிட்டர் தண்ணீரை எடுத்து, அரை தேக்கரண்டி உலர்ந்த இஞ்சி அல்லது சுக்குவைச் சேர்த்து, அதை 750 மில்லியாகக் குறைக்கும் வரை கொதிக்கவும் (¼ வது கொதித்தது மற்றும் ¾ வது மீதமுள்ளது). பின்னர் பருகி மகிழலாம்.
இந்த அற்புத பானத்தை குளிர் காலத்தில் நாள் முழுவதும் பருகலாம் என்று டாக்டர் டிக்ஸா பவ்சர் குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“