Advertisment

குளிர்காலத்தில் சூடான மசாலா தேநீர்… இவ்வளவு நன்மை இருக்கு…!

6 reasons you should have spiced teas in winters Tamil News: இலவங்கப்பட்டை தேநீர் குடிப்பது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதோடு, உட்புறமாக இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது.

author-image
WebDesk
New Update
Tamil health tips: reasons you should have spiced teas in winters in tamil

Tamil health tips: குளிர்காலத்தில் இருக்கும் நமக்கு நிலையான சூடான உணவு அல்லது பானங்களை எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது என சோம்லியர் மற்றும் டீ பிளெண்டரும், செலஸ்டீ நிறுவனருமான அனுபா ஜாவர் கூறுகிறார். மேலும், “ஒவ்வொரு மூலிகையும் அல்லது மசாலா அல்லது கலவையும் பல்வேறு நோக்கங்களுக்காக உதவுகிறது. மேலும் நம் உணவில் சேர்க்க விரும்பும் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதிக கொழுப்பு மற்றும் நல்ல கொலஸ்ட்ரால் உள்ள உணவுகள், உலர்ந்த பழங்கள், இறைச்சிகள் மற்றும் நெய் போன்றவற்றை உட்கொள்வது குளிர்கால உணவுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. உணவை முடிக்க, உடல் சூடாகவும், செரிமான அமைப்பு இயங்கவும் மூலிகை தேநீரையும் சேர்க்க வேண்டும்." என்று தெரிவிக்கிறார்.

Advertisment

ஜாவரின் கூற்றுப்படி, தேநீருக்கான மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருள்களை நீங்கள் சேமித்து வைப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அவற்றில் சில இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன:

publive-image
  • ஆன்டிஆக்ஸிடன்ட்கள்

மசாலா தேநீரில் அதிக அளவு ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. இவை உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும், காய்ச்சல் மற்றும் பிற வைரஸ்களிலிருந்து பாதுகாக்கவும் உதவுகின்றன.

  • அழற்சி

சூடான தேநீர் அல்லது பானங்கள் பருகுவது வீக்கம் மற்றும் வலியை நீக்குகிறது. குங்குமப்பூ கலந்த தேநீர் அருந்துவது அல்லது கொதிக்கும் நீரில் ஒரு சில கிராம்புகளைச் சேர்த்துக் குடிப்பது உடலில் ஏற்படும் அழற்சியைக் குறைத்து, வலியைப் போக்க உதவும் என்று நம்பப்படுகிறது.

publive-image
  • உங்கள் அதிர்வை அமைக்கிறது

குளிர்கால மாதங்களில் நாம் சற்று மாறுதலாக உணர்கிறோம். எனவே, சாக்லேட் போன்றவற்றை சாப்பிடுகிறோம். இருப்பினும், மூலிகை தேநீர் குடிப்பதன் மூலம் நம்மை சமநிலைப்படுத்தப்பட முடியும்.

எனவே லாவெண்டர், கெமோமில் டீ அல்லது ஏலக்காய் டீ ஆகியவை நீங்கள் அமைதியாக இருக்கவும், நம்பிக்கையுடன் இருக்கவும் உதவும். நன்றாக தூங்குவதற்கு படுக்கைக்குச் செல்வதற்கு முன் சிறிது துளசியுடன் லாவெண்டர் மற்றும் கெமோமில் கலந்து சாப்பிடலாம்.

  • சீரான செரிமானம்

கனமான உணவை உட்கொள்வது மற்றும் உட்கார்ந்து, அசைவுகளைத் தவிர்ப்பது ஆகியவை குளிர்காலத்தில் செரிமான பிரச்சனைகளின் வாய்ப்பை அதிகரிக்கின்றன. சில இஞ்சி, புதினா அல்லது நட்சத்திர சோம்பு உட்செலுத்தப்பட்ட தேநீர் செரிமானம் மற்றும் இரைப்பைக் கோளாறுகளுக்கு உதவுகிறது. குறிப்பாக உணவுக்குப் பிறகு அல்லது இடையில் உட்கொண்டால் கொள்ளல் நமக்கு அதிக நன்மை பயக்கும்.

publive-image
  • இரத்த ஓட்டம்

குளிர்கால மாதங்களில், உடற்பயிற்சியின்மை காரணமாக, நமது உடல் மந்தம் அடைகிறது. இதனால் இரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது. இலவங்கப்பட்டை தேநீர் குடிப்பது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதோடு, உட்புறமாக இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது.

  • சளி மற்றும் இருமலை எதிர்த்துப் போராடுகிறது

குளிர்காலத்தில் நமக்கு அடிக்கடி சளி அல்லது இருமல் வருகிறது. எனவே, சூடான தேநீர் குடிப்பது மிகவும் தேவையான ஆறுதலைத் தருகிறது. மசாலா தேநீர் பொதுவான இருமல் மற்றும் சளி நிவாரணம் உதவுகிறது. சில இஞ்சி, மஞ்சள் அல்லது லைகோரைஸ் டீ நாசிப் பாதையில் ஏற்படும் எரிச்சலைத் தணித்து, சளி அல்லது இருமலைப் போக்க உதவுகிறது.

publive-image

மேலே உள்ள கட்டுரை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. தொழில்முறை மருத்துவ ஆலோசனைக்கு மாற்றாக இல்லை. உங்கள் உடல்நலம் அல்லது மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் எப்போதும் உங்கள் மருத்துவர் அல்லது பிற தகுதிவாய்ந்த சுகாதார நிபுணரின் வழிகாட்டுதலைப் பெறவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle Healthy Life Food Tips Healthy Food Tips Healthy Food Tamil News 2 Health Tips Tamil Health Tips Healthy Food
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment