சுகர் பிரச்னைக்கு தீர்வு முதல் இம்யூனிட்டி வரை… சின்ன சுண்டைக்காயில் பெரிய பலன்கள்!

Sundakkai payankal in tamil: சுண்டைக்காய் வற்றலை நன்றாக பொடி செய்து தினமும் ஐந்து கிராம் பொடியை காலையில் சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும். அன்றாட சமையலில் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை குணமாகும்.

Tamil health tips: Turkey Berry benefits in tamil

Health benefits of Turkey Berry in tamil: நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களில் நமக்கு தேவையான ஊட்டச்சத்துக்களும், ஆற்றலும் உள்ளன. அப்படி ஆரோக்கியம் மிகுந்து காணப்படும் உணவுகளில் ஒன்று தான் சுண்டைக்காய். இதில் நுண் ஊட்டச் சத்துக்கள் அதிகமாக உள்ளது. இவை உடலிலுள்ள கிருமிகளை அழிப்பதோடு, தேவையற்ற கொழுப்புகளைக் கரைக்கின்றன. மேலும் நீரிழிவு, இதய நோய் போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு தருகின்றன.

பார்ப்பதற்கு சிறிய பொருள் போல் காணப்படும் இந்த சுண்டைக்காயின் இலைகள், வேர், கனி, மற்றும் முழுச் செடியுமே மருத்துவ குணமுடையதாக உள்ளது. அவற்றின் இலைகள் உடலில் ஏற்படும் ரத்தக் கசிவினை தடுக்கக் கூடியவையாகவும், அவற்றின் கனிகள் கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான நோய்ககளை குணப்படுத்தும் தன்மை கொண்டவையாக உள்ளன மேலும் ஜீரணத் தன்மை தூண்டும் பொருளாகவும் உள்ளன. மற்றும் இவற்றில் வைட்டமின் ஏ,சி,இ சத்துக்கள் எக்கச்சக்கமாக உள்ளன.

இவ்வளவு மருத்துவ குணம் காணப்படும் சுண்டைக்காயில், காட்டுச் சுண்டை, நாட்டுச் சுண்டை என இருவகை இருக்கின்றன. காட்டுச் சுண்டை பெரும்பாலும் மலைக்காடுகளில் தானாக வளருபவைகள். நாட்டுச் சுண்டை நம்முடைய ஊர்களில் காணப்படுகின்றன.

சுண்டைக்காயை எப்படி பயன்படுத்துவது?

கடைகளில் கிடைக்கும் சுண்டக்காயை வாங்கி, அவற்றை மோரில் ஊறவைத்தும், வற்றலாகப் போட்டு வறுத்தும் சாப்பிட்டு வரலாம். மற்றும் இந்த வற்றலை காரகுழம்பில் சேர்த்தும் சாப்பிடலாம்.

சுண்டைக்காய் வற்றலை நன்றாக பொடி செய்து தினமும் ஐந்து கிராம் பொடியை காலையில் சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும். மற்றும் சுண்டைக்காயை நம்முடைய அன்றாட சமையலில் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை குணமாகும்.

கசப்பு சுண்டைக்காயை உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், வாயுத் தொந்தரவு மற்றும் வயிற்றில் உள்ள கிருமிகளை போக்கும். மேலும் வயிற்றில் ஏற்படும் புண்ணையும் குணப்படுத்தும்.

சுண்டைக்காயை வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமடையும்.

பச்சையாக பறித்த சுண்டைக்காயை தொக்கு செய்தோ, கூட்டு செய்தோ சாப்பிட்டு வந்தால், சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் நோய்கள் நீங்கும்.

சுண்டைக்காயுடன், சிறிதளவு மிளகு, சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து கஷாயம் செய்து சிறு குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

முற்றின சுண்டைக்காயை நன்றாக நசுக்கி மோரில் போட்டு ஊறவைத்து, பின்னர் அவற்றை வெயிலில் காயவைத்துக் கொள்ளவும். பின்னர் அவற்றை தினமும் எண்ணெயில் வறுத்து சாப்பிடலாம் அல்லது வற்றல் குழம்பாக்கி சாப்பிடலாம். இது மார்புச்சளியைப் போக்க வல்லதாகும்.

சுண்டைக்காய் குடலில் உள்ள அசடுகளை நீக்குவதோடு, சுவாசப் பாதை நோய்கள், வயிற்றுப் புழுக்கள், மற்றும் பேதியை கட்டுப்படுத்தப் பயன்படுகிறது.

சுண்டைக்காயை உப்பு கலந்த புளித்த மோரில் 2 முறை ஊறவைத்து, பின் அவற்றை காயவைத்து எண்ணெயில் வறுத்து, இரவு உணவில் பயன் படுத்தி வந்தால் மார்ச்சளி, ஆஸ்துமா, காச நோய் போன்ற நோய்கள் தீரும். மேலும் வயிற்றுப் போக்கு நின்று விடும்.

உலர்த்தி பொடியாக்க்கப்பட்ட சுண்டைக்காயை சூரணம் செய்து நீரில் கரைத்து சாப்பிட்டு வந்தால், மலக்கிருமிகள் மற்றும் மூலக்கிருமிகள் அகலும்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil health tips turkey berry benefits in tamil

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com