Tamil Health tips: நாம் நம்முடைய வீட்டில் தயாரிக்கும் ஊறுகாயில் நிறைய ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இயற்கை பொருட்களால் ஆன ஊறுகாய் வைட்டமின் கே, ஏ மற்றும் புரோபயாடிக் பாக்டீரியாவின் சிறந்த ஆதாரம் என பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர் குறிப்பிட்டுள்ளார்.
கட்டுக்கதை 1: ஊறுகாயில் உப்பு மற்றும் எண்ணெய் நிறைந்துள்ளது
தன்னுடைய சமீபத்திய இன்ஸ்டா பதிவில் வீட்டில் தயாரிக்கப்பட்ட ஊறுகாய் ஆரோக்கியமற்றது என்ற கட்டுக்கதைகள் மற்றும் பயங்களை உடைத்துள்ள அவர் "எண்ணெய் மற்றும் உப்பு இல்லாமல், நட்பு பாக்டீரியா வளராது மற்றும் இவை சேர்க்காவிடில் ஒரு ஊறுகாயின் அனைத்து நன்மைகளும் உங்களுக்கு கிடைக்காது" என்று தெரிவித்துள்ளார்.
கட்டுக்கதை 2: ஊறுகாயில் உப்பு இரத்த அழுத்த பிரச்சினைகளை ஏற்படுத்தும்
உப்பை விட, வெறுமனே உட்கார்ந்த வாழ்க்கை முறைதான் ஒட்டுமொத்த ஆரோக்கியமற்ற மற்றும் உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது என்று குறிப்பிடுள்ள ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர் "உடற்பயிற்சி இல்லாமை, மோசமான தூக்க சுகாதாரம் மற்றும் பேக்கேஜ் செய்யப்பட்ட, பதப்படுத்தப்பட்ட உணவு போன்ற பழக்கங்களே இதற்கு காரணமாகின்றன. டேபிள் உப்புக்கு பதிலாக, ஒருவரின் உணவு பாரம்பரியத்தின்படி, பதப்படுத்தப்படாத ஜடா அல்லது காலா நாமக் (கருப்பு உப்பு) அல்லது செந்தா நாமக் (இமாலய உப்பு) ஆகியவற்றைப் பயன்படுத்வது நல்லது" என்று பரிந்துரை செய்துள்ளார்.
கட்டுக்கதை 3: ஊறுகாயில் உள்ள எண்ணெய் இதய ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல
"கொழுப்பு அல்லது எண்ணெயை உட்கொள்வது இதயப் பிரச்சினைகளை ஏற்படுத்தாது, அது பழக்கம். நிலக்கடலை அல்லது கடுகு அல்லது நல்லெண்ணெயைப் பயன்படுத்தலாம்" என ஊட்டச்சத்து நிபுணர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கட்டுக்கதை 4 ஊறுகாய் ஆரோக்கியமற்றது
"ஊறுகாயில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நட்பு பாக்டீரியாக்கள் நிறைந்துள்ளன. வீக்கம், இரத்த சோகை, வைட்டமின் டி மற்றும் பி 12 குறைபாடுகளைக் குறைக்க தினமும் ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி ஊறுகாய் சாப்பிட வேண்டும். இது எரிச்சலூட்டும் குடல் நோய்க்குறி (IBS) க்கு உதவுகிறது, அதன் அறிகுறிகளில் வயிற்று வலி, வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கல் ஆகியவை அடங்கும்." என்று திவேகர் கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil