Advertisment

ஆரோக்கியம் நிறைந்த பச்சை பட்டாணியில் விஷம் மிக்க கலர் கலப்படம்.. எப்படி கண்டறிவது?

பல ஆரோக்கிய நன்மைகள் உள்ள பச்சை பட்டாணி, சில சமயங்களில் செயற்கை நிறங்களுடன் கலப்படம் செய்யப்படலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?

author-image
WebDesk
New Update
kitchen Tips

Try this simple test to find colour adulteration in green peas

பல ஆரோக்கிய நன்மைகள் உள்ள பச்சை பட்டாணி, சில சமயங்களில் செயற்கை நிறங்களுடன் கலப்படம் செய்யப்படலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?

Advertisment

உணவில் கலப்படம் செய்வது பொதுவான பிரச்சனையாகி விட்டது, இது அன்றாட உணவு பொருட்களை நுகர்வுக்கு தகுதியற்றதாக ஆக்குகிறது. எனவே, கலப்படம் செய்யப்பட்ட உணவு தானியங்களை உட்கொள்வதற்கு முன்பு நீங்கள் கவனமாக இருக்க வேண்டும், ஏனெனில் அவை உங்கள் ஆரோக்கியத்தில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

இத்தகைய தீங்கு விளைவிக்கும் உணவுப் பொருட்களிலிருந்து அனைவரையும் பாதுகாக்க, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) நாம் உட்கொள்ளும் உணவுகளில் கலப்படம் உள்ளதா என்பதைச் சரிபார்க்க பயனுள்ள சோதனைகளை தொடர்ந்து பகிர்ந்து கொள்கிறது.

அந்தவகையில் தற்போது, பச்சை பட்டாணியில் உள்ள கலப்படத்தை கண்டறியும் சோதனையை FSSAI பகிர்ந்துள்ளது.

பச்சை பட்டாணி சுவையானது மட்டுமல்ல, அதில் பல ஆரோக்கிய நன்மைகளும் நிறைந்துள்ளன. பச்சை பட்டாணியில் ஊட்டச்சத்துக்கள், குறிப்பாக பைட்டோநியூட்ரியன்கள், லுடீன் மற்றும் ஜியாக்சாண்டின் மற்றும் வைட்டமின்கள் (ஏ, பி, சி, ஈ மற்றும் கே) நிறைந்துள்ளன. அவை நார்ச்சத்து நிறைந்தவை, குறைந்த கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் இல்லை.

இப்படி பல ஆரோக்கிய நன்மைகள் உள்ள பச்சை பட்டாணி, சில சமயங்களில் செயற்கை நிறங்களுடன் கலப்படம் செய்யப்படலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? எனவே, நீங்கள் பட்டாணி சாப்பிடுவதற்கு முன், கலப்படத்தை சோதிக்க, ஒரு எளிய பரிசோதனை இங்கே உள்ளது.

எப்படி சோதிப்பது?

* ஒரு கண்ணாடி டம்ளரில் சிறிது பச்சை பட்டாணி சேர்க்கவும்.

* டம்ளரில் தண்ணீர் சேர்க்கவும். நன்றாக கலந்து அரை மணி நேரம் காத்திருக்கவும்.

* கலப்படமற்ற பச்சை பட்டாணி என்றால் தண்னீர் நிறம் மாறாது, அதேசமயம் கலப்படம் செய்யப்பட்ட பட்டாணி உள்ள தண்ணீர் பச்சை நிறமாக மாறும்.

எப்படி செய்வது என்று பாருங்கள்:

அடுத்த முறை பச்சை பட்டாணி வாங்கும் போது இந்த பரிசோதனையை செய்து பாருங்கள்.

இதையும் படிக்க

கிராம்பு கலப்படம்

தானியங்களில் விஷமிக்க ஊமத்தை விதைகள் கலப்படம்

சர்க்கரைவள்ளி கிழங்கில் நச்சுத்தன்மை வாய்ந்த ஃபுட் கலர் கலப்படம்

நீங்கள் பயன்படுத்தும் மஞ்சள் நச்சுத்தன்மை வாய்ந்ததா?

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment