ஜீரண சக்திக்கு ஊறவைத்த மஞ்சள்: எப்படி பயன்படுத்துவது?

How To Make Soaked turmeric For Healthy Digestion in tamil: மஞ்சள் நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். அதனால்தான் இது பாரம்பரிய மருத்துவ நடைமுறையில் முக்கிய பங்கு வகிக்கிறது.

Turmeric benefits tamil: Turmeric For Digestion and more

Turmeric benefits tamil: நமது அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக மஞ்சள் இருந்து வருகிறது. இது ஒவ்வொரு இந்திய சமையலறையிலும் காணப்படக்கூடிய உணவுப்பொருள் ஆகும். நாம் தயார் செய்யும் உணவிற்கு நிறம் மற்றும் அமைப்பைக் கொண்டு வரவும், உடலுக்கு ஊட்டச்சத்துகளை வாரி வழங்கவும் இவை பயன்படுகிறது.

மஞ்சள் பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளால் செறிவூட்டப்பட்டுள்ளது. இது நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். அதனால்தான் இது பாரம்பரிய மருத்துவ நடைமுறையில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், பல நோய்களுக்கு தீர்வு தரும் ஒரு முக்கிய மூலிகையாகவும் மஞ்சள் உள்ளது.

இப்படி எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளைக்கொண்டுள்ள மஞ்சளை எப்படி சிறந்த செரிமானத்திற்காக உட்கொள்ளலாம் என்பது குறித்த விரைவான உதவிக்குறிப்பை பிரபல ஊட்டச்சத்து நிபுணரும் வாழ்க்கைப் பயிற்சியாளருமான லூக் குடின்ஹோ இங்கு பகிர்ந்துள்ளார்.

குளிர்காலம் பல குடல் தொடர்பான பிரச்சனைகளை கொண்டு வருகிறது. அதில் செரிமானத்தை மெதுவாக்குவதும் ஒன்றாகும். குளிர்காலத்தில், நமது உடல் வெப்பத்தையும் ஆற்றலையும் சேமிக்க முனைகிறது. இதனால் வளர்சிதை மாற்றத்தை மெதுவாக்குகிறது. அதனால்தான், சீரான செரிமானத்தை அதிகரிக்க சரியான உணவு வகைகளை சாப்பிட நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

ஊறவைத்த மஞ்சள் என்பது அத்தகைய உணவுகளில் ஒன்றாகும். “மஞ்சள், எலுமிச்சை, இஞ்சி, உப்பு மற்றும் துளசி ஆகியவற்றுடன் தண்ணீரில் ஊறவைப்பது செரிமானத்தை அதிகரிக்கவும் “மற்ற அனைத்தையும்” அதிகரிக்கவும் உதவும். இவற்றுடன் நீங்கள் 1 தேக்கரண்டி ஆப்பிள் சைடர் வினிகரையும் சேர்க்கலாம்.

மேலும், கலவையை காற்றுப் புகாத மேசன் ஜாடியில் மூன்று நாட்களுக்கு ஊறவைத்து, உங்கள் சாப்பாட்டுடன் ஒரு நாளைக்கு ஒரு துண்டை அனுபவிக்கும்படி லூக் குடின்ஹோவின் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் அறிவுறுத்தியுள்ளார். அது உங்களுக்கு பொருத்தமாக இருந்தால் தொடர்ந்து எடுக்கொள்ளலாம் என்றும், இல்லை என்றால், வேண்டாம் என்றும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Turmeric benefits tamil turmeric for digestion and more

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com