நோய் எதிர்ப்பு சக்தி, ஜீரண சக்திக்கு உதவும் மஞ்சள்…. இப்படி பயன்படுத்துங்க…!
How to use Turmeric For Digestion and to boost immunity in tamil: நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் ஒரு மூலிகையாகவும் இருக்கும் மஞ்சள், பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளால் செறிவூட்டப்பட்டுள்ளது.
Turmeric For Digestion in tamil: மஞ்சள் நமது அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. ஒவ்வொரு இந்திய சமையலறையிலும் ஒரு உணவுக்கு நிறம் மற்றும் அமைப்பைக் கொண்டு வர இது பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. அதுமட்டுமல்ல, மஞ்சள் ஊட்டச்சத்துகள் மிகுந்து காணப்படும் ஒன்றாகவும் உள்ளது.
Advertisment
மஞ்சளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளால் நிறைந்துள்ளதால், அனைத்து வகையான தொற்றுநோய்களிலிருந்தும் உங்களைப் பாதுகாக்கும். தினமும் நீங்கள் தூக்கச் செல்லும் முன், மஞ்சள் பொடியை பாலில் கலந்து குடிக்கலாம். இதனுடன், நீங்கள் மஞ்சள், இலவங்கப்பட்டை, கிராம்பு, இஞ்சி மற்றும் துளசி ஆகியவற்றை கலந்து காபி தயாரித்து குடித்து வரலாம். இது, நுரையீரலை வலுவாக வைத்திருப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் பலப்படுத்துகிறது.
இது பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளால் செறிவூட்டப்பட்டுள்ளது. நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் ஒரு மூலிகையாகவும் மஞ்சள் உள்ளது. அதனால்தான் இவை பாரம்பரிய மருத்துவ நடைமுறையில் முக்கிய பங்கு வகிக்கிறது.
பிரபல ஊட்டச்சத்து நிபுணரும் வாழ்க்கைப் பயிற்சியாளருமான லூக் குடின்ஹோ, மஞ்சளை சிறந்த செரிமானத்திற்காக எவ்வாறு உட்கொள்ளலாம் என்பது குறித்த விரைவான உதவிக்குறிப்பை சமீபத்தில் பகிர்ந்துள்ளார்.
குளிர்காலம் குடல் தொடர்பான பல பிரச்சனைகளை கொண்டு வருகிறது. இது செரிமானத்தை மெதுவாக்குவததோடு வளர்சிதை மாற்றத்தையும் மெதுவாக்குகிறது. அதனால்தான், சீரான செரிமானத்தை அதிகரிக்க சரியான உணவு வகைகளை சாப்பிட நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
லூக் குடின்ஹோவின் கூற்றுப்படி, ஊறவைத்த மஞ்சள் என்பது அத்தகைய உணவுகளில் ஒன்றாகும். அவர் இன்ஸ்டாகிராம் பதிவில், “மஞ்சள், எலுமிச்சை, இஞ்சி, உப்பு மற்றும் துளசி ஆகியவற்றுடன் தண்ணீரில் ஊறவைப்பது செரிமானத்தை அதிகரிக்கவும் “மற்ற அனைத்தையும்” அதிகரிக்கவும் உதவும். இவற்றுடன் நீங்கள் 1 தேக்கரண்டி ஆப்பிள் சைடர் வினிகரையும் சேர்க்கலாம்.
மேலும், கலவையை காற்றுப் புகாத மேசன் ஜாடியில் மூன்று நாட்களுக்கு ஊறவைத்து, உங்கள் சாப்பாட்டுடன் ஒரு நாளைக்கு ஒரு துண்டை அனுபவிக்கும்படி லூக் குடின்ஹோவின் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் அறிவுறுத்தியுள்ளார். அது உங்களுக்கு பொருத்தமாக இருந்தால் தொடர்ந்து எடுக்கொள்ளலாம் என்றும், இல்லை என்றால், வேண்டாம் என்றும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.