Advertisment

Weight Loss: புரோட்டீன் உணவு முக்கியம்; இந்த 4-ஐ மிஸ் பண்ணாதீங்க!

4 best high-protein lentils and its health benefits in tamil: பச்சை பயறு இரத்த ஓட்டத்தை அதிகரித்து, சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, உடல் எடை குறைக்கவும் உதவுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
weight loss foods in tamil: 4 high-protein lentils that are best for weight loss

weight loss foods in tamil: நம்முடைய அன்றாட உணவுகளுடன் வேகவைத்த பருப்பு வகைகளை சேர்த்து உட்கொள்வது உடலின் ஆரோக்கியத்தை பேணிகாக்க உதவுகிறது. அத்துடன் இந்த பருப்பு வகைகள் உடல் எடையை குறைக்கவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன. இவற்றில் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் புரதம் சத்துக்கள் நிறைந்துள்ளதால், இவை குறைந்த கலோரி உணவாக மட்டுமல்லாமல், நீங்கள் நீண்ட நேரம் முழுமையாக இருக்கவும் உதவுகின்றன.

Advertisment

நார்ச்சத்து, லெக்டின்கள் மற்றும் பாலிபினால்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாக திகழ்ந்து வரும் இந்த பருப்பு வகைகள் இதய நோய், உடல் பருமன், நீரிழிவு மற்றும் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கின்றன. மேலும், நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு சிறந்த உணவு விருப்பமாகவும், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

இந்தியாவில், பருப்பு வகைகள் கிட்டத்தட்ட ஒவ்வொரு வீட்டிலும் தினசரி உணவின் ஒரு பகுதியாக இருந்து வருகின்றன. மேலும் எளிதில் கிடைக்கக்கூடிய, உள்நாட்டில் கிடைக்கும் மற்றும் புரதம் நிரம்பிய உணவுகளுடன் பொருத்தமாகவும், சேமித்து வைப்பதற்கும் சமைப்பதற்கும் மிகவும் எளிதானதாகவும் இவை உள்ளன. இவற்றை நாம் பல்வேறு வழிகளில் சமைத்து ருசிக்கலாம்.

publive-image

அந்த வகையில், நமது எடை இழப்புக்கு உதவும் 4 உயர் புரதம் கொண்ட பருப்பு வகைகள் குறித்து காணலாம்.

  1. உளுத்தம் பருப்பு

உளுத்தம் பருப்பை நாம் பொதுவாக பல வழிகளில் நமது உணவுகளுடன் சேர்த்து உட்கொள்கிறோம். உளுந்து பருப்பு என்பது மனிதகுலத்திற்குத் தெரிந்த மிகவும் சத்தான பருப்பு வகைகளில் ஒன்றாகும்.

இவற்றில் குறைந்த கொழுப்பு மற்றும் கலோரிகள் உள்ளதால் இவை செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது.

publive-image
  • உளுத்தம் பருப்பு
  • உளுத்தம் பருப்பில் புரதம் மற்றும் வைட்டமின் பி 3 நிறைந்த ஆதாரமாக இருப்பதால், இது நமது எலும்புகளை வலிமையாக்குகிறது மற்றும் ஆற்றல் அளவை அதிகரிக்கச் செய்கிறது. மேலும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் நமது நரம்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது.

    அரை கப் உளுத்தம்பருப்பில் 12 கிராம் புரதம் இருப்பதால், உங்கள் கொழுப்பை குறைக்கும் செயல்முறையை துரிதப்படுத்துகிறது.

    1. கடலை பருப்பு

    புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த கடலை பருப்பை உங்கள் தினசரி உணவுகளில் சேர்த்துக்கொள்வது மிகவும் நன்மை பயக்கும்.

    publive-image
    கடலை பருப்பு

    கடலை பருப்பு உங்களுக்கு போதுமான அளவு புரதம், இரும்பு, கால்சியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றை வழங்குகிறது.

    இவை நன்கு சமச்சீரான சூப்பர்ஃபுட் என்பதால், இதயம் மற்றும் நீரிழிவு நோய்க்கு உகந்ததாக இருக்கிறது.

    கடலை பருப்பு இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதில் நன்மை பயக்கும் என்றும், உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கச் செய்யும் என்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் அதிக கலோரிகள் எரிக்கப்படும்.

    1. துவரம் பருப்பு

    துவரம் பருப்பு நமது அன்றாட சமையலில் இடம்பிடிக்கும் மற்றொரு பிரதான உணவுப்பொருள் ஆகும். மேலும் இது தாவர புரதத்தின் வளமான ஆதாரங்களில் ஒன்றாகும்.

    இவை நார்ச்சத்து, ஃபோலிக் அமிலம், இரும்பு மற்றும் கால்சியம் ஆகியவற்றைக் கொண்டிருக்கின்றன. இது நல்ல கார்போஹைட்ரேட்டுகளையும் உள்ளடக்கியுள்ளது.

    publive-image
    துவரம் பருப்பு

    துவரம் பருப்பு அகால பசியை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. நீரிழிவு மற்றும் இதய பிரச்சனை உள்ளவர்களுக்கும் துவரம் பருப்பு ஒரு சிறந்த உணவாகும்.

    1. பச்சை பயறு

    பச்சை பயறு மிகவும் பிரபலமான சைவ சூப்பர்ஃபுட்களில் ஒன்றாகும். உங்கள் உணவில் பச்சை பயறை தவறாமல் சேர்த்துக்கொள்வது பல அதிசயங்களைச் செய்யும்.

    publive-image
  • பச்சை பயறு
  • பச்சை பயற்றில் புரதம் அதிகளவு காணப்படுகிறது. இது இரத்த ஓட்டத்தை அதிகரித்து, சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, உடல் எடை குறைக்கவும் உதவுகிறது.

    இவற்றில் பொட்டாசியம், கால்சியம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளதால், எலும்புகளை பலப்படுத்துகிறது மற்றும் தசைப்பிடிப்பில் இருந்து பாதுகாக்கிறது.

    “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

    Lifestyle Healthy Life Food Tips Healthy Food Tips Healthy Food Tamil News 2 Health Tips Tamil Health Tips Healthy Food
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment