Kollu podi recipe in tamil: 'இளைச்சவனுக்கு எள்ளு, கொளுத்தவனுக்கு கொள்ளு” என்பது நம் முன்னோரின் பழமொழி. அந்த வகையில் இன்று நாம் பார்க்கவுள்ள சூப்பர் ரெசிபி உங்கள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களை கரைந்து உடலை இளைக்க உதவும். தவிர சளித்தொல்லைகளுக்கு நிரந்தர தீர்வு கொடுக்கும்.
Advertisment
மேலும், அஜீரணம், செரிமான பிரச்சனைகள், ஜலதோஷம், ஜுரம், மாதவிடாய் பிரச்சனைகள், சிறுநீரக கற்கள், மலச்சிக்கல் என அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வாக இது இருக்கிறது.
இப்படிப்பட்ட அற்புதமான கொள்ளு-வில் எப்படி சாதத்திற்கான பொடி செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.
கொள்ளு பொடி செய்யத் தேவையான பொருட்கள்
Advertisment
Advertisements
கொள்ளு – 1கப் காய்ந்த மிளகாய் – 4 மிளகு – 1 டீ ஸ்பூன் சீரகம் – 1/2 டீ ஸ்பூன் கருவேப்பிலை (கொழுந்து) – சிறிதளவு பெருங்காயம் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு
கொள்ளு பொடிக்கு நீங்கள் செய்ய வேண்டியவை
முதலில் ஒரு கடாயில் எண்ணெய் சேர்க்காமல் கொள்ளு மட்டும் இட்டு வறுத்து எடுக்கவும். பொன்னிறமாக வறுபட்டதும் அவற்றை தனியாக வைத்துக்கொள்ளவும். பிறகு காய்ந்த மிளகாய், சீரகம், மிளகு ஆகியவற்றை வறுத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். இதன் பின்னர் கருவேப்பிலையை மட்டும் வறுத்து தனியாக எடுத்து வைக்கவும். தொடர்ந்து பெருங்காயம் மற்றும் உப்பை தனியாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
இவை அனைத்தும் நன்றாக ஆறிய பின்னர் அவற்றை ஒரு மிக்ஸியில் போட்டு சிறிது நொறுநொறுப்பாக அரைத்துக்கொள்ளவும். இப்போது நீங்கள் எதிர்பார்த்த கொள்ளுப்பொடி தயாராக இருக்கும். இவற்றை சூடான சாதத்தில் நெய் அல்லது நல்லெண்ணெயுடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு ருசிக்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“