Peanuts For Weight Loss: யார் சொன்னது எடை குறைப்புக்கான டயட் மிகவும் சலிப்பானதாகவும் சுவை இல்லாத உணவுகள் நிறைந்ததாகவும் இருக்கும் என்று ? சரியான முறையில் செய்தால் எடை குறைப்பு மிகவும் வேடிக்கையானதாகவும் பயன் தரக்கூடியதாகவும் இருக்கும். உடல் எடையை குறைக்க பல உணவுகள் இருந்தாலும் வேர்க்கடலை போன்ற சில உணவுகள் உடனடியாக பலன் தரக்கூடியவை. ஆனால் நீங்கள் முறையான உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு வழக்கத்தை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
வேர்க்கடலையில் கலோரிகள் அதிகமாக இருப்பதாக சொல்லப்பட்டாலும் அவற்றில் புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகமாக அடங்கியுள்ளன. இவை உங்கள் வயிறு நிரம்பி இருக்கும் உணர்வை வெகு நேரத்துக்கு தரும் மேலும் எடை குறைப்புக்கும் செரிமானத்துக்கும் உகந்தது. ஆனால் வேர்க்கடலையை அளவோடு சாப்பிட வேண்டும் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் எல்லாவற்றையும் போல இதுவும் எதிர்மறை விளைவுகளை தரும்.
ஊரடங்கு காலத்தில் குழந்தைகளை சுறுசுறுப்பாக்கும் செயல்கள்...
The Journal of Nutrition என்ற ஆய்வு இதழில் வெளிய்டப்பட்டுள்ள ஒரு ஆய்வின்படி, புரதம் நிறைந்த எந்த உணவும் சில கலோரிகளை எரிக்கும். வேர்க்கடலையிலும் கலோரிகள் உள்ளது ஆனால் அவை மெல்லப்பட்டு நசுக்கப்படுகின்றன. அதாவது நீங்கள் குறைந்த அளவிலேயே கலோரிகளை எடுத்துக் கொள்கிறீர்கள் என்று பொருள். மேலும் வேர்க்கடலையில் உள்ள ஆரோக்கியமான கொழுப்பு இதயத்துக்கு நல்லது. இவை உடல் பருமன் அபாயத்தைக் குறைக்கும். மேலும் சில இதய நோய்களையும் விரட்டும்.
Weight Loss Tips: வேர்க்கடலை
உடலின் metabolism க்கும் வேர்க்கடலை நல்லது ஏனென்றால் வேர்க்கடலையில் அதிக ஆற்றல் (energy) அடங்கியுள்ளது. நீங்கள் வேர்க்கடலையை உண்ணும் போது உங்களுடைய உடலுக்கு தேவையான ஆற்றல் நிரம்பும். உடலில் அதிக ஆற்றல் இருந்தால் அதிகப்படியான கலோரிகளை எரிக்கலாம். மேலும் இதன் மூலம் உங்கள் எடையை குறைக்கவும் இது உதவுகிறது.
உங்கள் டயட்டில் வேர்க்கடலையை சேர்த்துக் கொள்ளுங்கள்
இதை செய்வதற்கான எளிய வழி இவற்றை பச்சையாக உட்கொள்வது. சிறிது வேர்க்கடலையை நீரில் ஊர வைத்து தினமும் காலை வெறும் வயிற்றில் உட்கொள்வது நல்லது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆனால் அவற்றை பச்சையாகவோ அல்லது வருத்தோ உட்கொள்ளலாம். வேர்க்கடலை மிட்டாய் அல்லது வழக்கமான உணவுகளில் வேர்க்கடலையை சேர்த்தும் உட்கொள்ளலாம்.
ரோஜா, பால், தேன்... இதழுக்கு மெருகூட்டும் இனிய காம்பினேஷன்!
எப்போதும் உங்கள் உங்கள் டயட்டில் சில மாற்றங்களை செய்வதற்கு முன் உங்கள் மருத்துவரிடமோ அல்லது உட்டசத்து நிபுணரிடமோ ஆலோசித்து விட்டு செய்யுங்கள். ஏனென்றால் அவர்களுக்கு உங்கள் மருத்துவ வரலாறு தெரியும் மேலும் அவர்கள் உங்களை சிறந்த முறையில் வழிநடத்துவார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“