IND vs PAK highlights: கடைசி ஓவரில் பாக்,. அணி த்ரில் வெற்றி; இந்தியா போராடி தோல்வி!

IND vs PAK T20 Match Asia Cup super 4 match highlights in tamil: ஆசிய கோப்பை தொடரில், இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 182 ரன்கள் இலக்கை எட்டிப்பிடித்த பாகிஸ்தான், இந்தியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி திரில் வெற்றியைப் பெற்றது.

IND vs PAK T20 Match Asia Cup super 4 match highlights in tamil: ஆசிய கோப்பை தொடரில், இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 182 ரன்கள் இலக்கை எட்டிப்பிடித்த பாகிஸ்தான், இந்தியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி திரில் வெற்றியைப் பெற்றது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
IND vs PAK Asia cup 2022,04/09/22,7.30 | ஆசிய கோப்பை 2022,( 04/09/2022,7.30 ) |

Asia cup 2022,super 4 match

IND vs PAK Asia Cup 2022 Updates, | IND vs PAK ஆசியகோப்பை 2022 அப்டேட்ஸ்: 15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், நேற்று ஞாயிற்று கிழமை இரவு 7:30 மணிக்கு துபாயில் தொடங்கிய சூப்பர் “4” சுற்று 2-வது ஆட்டத்தில் இந்தியா -பாகிஸ்தான் அணிகள் மோதின.

Advertisment

கிரிக்கெட் பரம போட்டியாளர்களான இவ்விரு அணிகள் மோதிய இந்த ஆட்டத்தில் கடைசி வரை பரபரப்புக்கு குறைவில்லாமல் இருந்தது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பந்துவீசுவதாக அறிவித்தார். அதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

இந்திய அணி சார்பில் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் - கேஎல் ராகுல் ஜோடி அணிக்கு தொடக்கம் கொடுத்தனர். முதல் ஓவர் முதல் மிகவும் அதிரடியாக விளையாடி வந்த இந்த ஜோடியில் கேப்டன் 2 சிக்ஸர் 3 பவுண்டரியை விரட்டி கேப்டன் ரோகித் 28 ரன்னிலும், 2 சிக்ஸர் 1 பவுண்டரியை விளாசிய ராகுல் 28 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

தொடர்ந்து களமாடி விராட் கோலி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அரைசதம் அடித்த அவர் 44 பந்துகளில் 1 சிக்ஸர் 4 பவுண்டரிகளை ஓடவிட்டு 60 ரன்கள் குவித்தார். அதன்பிறகு வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் சேர்த்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் ஷதாப் கான் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Advertisment
Advertisements

இதனைத் தொடர்ந்து 182 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக முகமது ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் களமிறங்கினர். இந்த தொடக்க ஜோடியில் பாபர் அசாம் 14 ரன்னிலும், அடுத்துவந்த பகர் சமான் 15 ரன்னிலும் அவுட் ஆகி வெளியேறினர்.

ஆனால், பின்னர் களமாடிய முகமது நவாசுடன் ஜோடி சேர்ந்த ரிஸ்வான் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நவாஸ் 20 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். முகமது ரிஸ்வான் 51 பந்துகளில் 71 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், இந்திய அணியின் பலவீனமான பந்துவீச்சால், 19.5 ஓவரிலே இலக்கை எட்டிப்பிடித்த பாகிஸ்தான் அணி, இந்தியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி திரில் வெற்றியைப் பெற்றது.

ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் நாளை இரவு 7:30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் இலங்கை அணியை துபாயில் வைத்து சந்திக்கிறது இந்திய அணி. இறுதிப்போட்டிக்கு முன்னேற இனி வரும் 2 ஆட்டங்களில் இந்திய அணி வெற்றியைப் பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. எனவே, இந்த ஆட்டத்தில் வெற்றியை ருசிக்குமா இந்தியா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil


  • 23:26 (IST) 04 Sep 2022
    பாகிஸ்தான் அணி த்ரில் வெற்றி; இந்தியா போராடி தோல்வி

    பாகிஸ்தான் அணி 19.5 ஓவர்களில் 182 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. இதன் மூலம் பாகிஸ்தன் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி போராடி தோல்வி அடைந்தது.


  • 21:17 (IST) 04 Sep 2022
    அதிரடியில் அசத்திய இந்தியா : பாகிஸ்தான் அணிக்கு 182 ரன்கள் இலக்கு

    ஆசியகோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் சுற்றின் 2-வது ஆட்டத்தில் இந்திய பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக விராட்கோலி 60 ரன்களும், ராகுல் ரோகித் தலா 28 ரன்களும் எடுத்தனர். தொடர்ந்து 182 ரன்கள் வெற்றி இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்க உள்ளது.


  • 21:06 (IST) 04 Sep 2022
    தொடர்ந்து 2-வது அரைசதம் கடந்த விராட்கோலி

    பாகிஸ்தான் அணிக்கு எதிரான சூப்பர் 4 ஆட்டத்தில் முதலில் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. தற்போதுவரை இந்திய அணி 18 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்துள்ளது. விராட்கோலி 36 பந்துகளில் அரைசதம் கடந்து 53 ரன்களுடனும், தீபக் ஹூடா 15 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.


  • 20:46 (IST) 04 Sep 2022
    வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பிய ஹர்திக் பாண்டியா

    பாகிஸ்தான் அணிக்கு எதிரான சூப்பர் 4 ஆட்டத்தில் முதலில் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. தற்போதுவரை இந்திய அணி 14.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்துள்ளது. விராட்கோலி 40 ரன்களுடன் களத்தில் உள்ள நிலையில், சற்றுமுன் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா தான் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்துள்ளார்


  • 20:40 (IST) 04 Sep 2022
    ரிஷப் பண்ட் 14 ரன்களுக்கு அவுட்

    பாகிஸ்தான் அணிக்கு எதிரான சூப்பர் 4 ஆட்டத்தில் முதலில் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. தற்போதுவரை இந்திய அணி 13.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்துள்ளது. விராட்கோலி 35 ரன்களுடன் களத்தில் உள்ள நிலையில், பண்ட் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.


  • 20:36 (IST) 04 Sep 2022
    அதிரடியை தொடரும் இந்தியா : 13 ஓவர்களில் 3/118

    பாகிஸ்தான் அணிக்கு எதிரான சூப்பர் 4 ஆட்டத்தில் முதலில் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. தற்போதுவரை இந்திய அணி 13 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்துள்ளது. விராட்கோலி 33 ரன்களுடனும் பண்ட் 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.


  • 20:17 (IST) 04 Sep 2022
    சூர்யகுமார் யாதவ் 13 ரன்கள் அவுட்

    பாகிஸ்தான் அணிக்கு எதிரான சூப்பர் 4 ஆட்டத்தில் முதலில் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. இந்திய அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேஎல் ராகுல் – கேப்டன் ரோகித் சர்மா ஜோடி தலா 28 ரன்கள் குவித்து ஆட்டமிழந்த நிலையில், தற்போது சூர்யகுமார் யாதவ் 10 பந்துகளில் 13 ரன்கள் குவித்து ஆட்டமிழந்துள்ளார். இந்தியா 9.4 ஒவர்களில் 91/3.


  • 20:09 (IST) 04 Sep 2022
    ராகுல் அவுட் : இந்தியா 7 ஓவர்களில் 72 ரன்கள் குவிப்பு

    பாகிஸ்தான் அணிக்கு எதிரான சூப்பர் 4 ஆட்டத்தில் முதலில் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. இந்திய அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேஎல் ராகுல் – கேப்டன் ரோகித் சர்மா ஜோடி தலா 28 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. சற்று முன்வரை இந்திய அணி 7 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 72 ரன்கள் குவித்துள்ளது.


  • 19:57 (IST) 04 Sep 2022
    ரோகித் அவுட்!

    பாகிஸ்தான் அணிக்கு எதிரான சூப்பர் 4 ஆட்டத்தில் முதலில் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. இந்திய அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேஎல் ராகுல் – கேப்டன் ரோகித் சர்மா ஜோடியில் அதிரடியாக விளையாடிய கேப்டன் ரோகித் 28 ரன்னில் அவுட் ஆனார்.


  • 19:48 (IST) 04 Sep 2022
    அதிரடி காட்டும் "ஹிட் மேன்" - ராகுல் ஜோடி... பந்துவீச திணறும் பாகிஸ்தான்!

    பாகிஸ்தான் அணிக்கு எதிரான சூப்பர் 4 ஆட்டத்தில் முதலில் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. இந்திய அணியில் தொடக்க வீரர்களாக கேஎல் ராகுல் – கேப்டன் ரோகித் சர்மா ஜோடி களமாடி விளையாடி வருகின்றனர்.

    அதிரடியாக விளையாடி வரும் இந்த ஜோடி 3 ஓவர்கள் முடிவில் 34 ரன்களை சேர்த்துள்ளது. இருவரும் தலா 2 சிக்ஸர்களை பறக்கவிட்டுள்ளனர்.


  • 19:39 (IST) 04 Sep 2022
    இந்தியா பேட்டிங்!

    பாகிஸ்தான் அணிக்கு எதிரான சூப்பர் 4 ஆட்டத்தில் முதலில் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. இந்திய அணியில் தொடக்க வீரர்களாக கேஎல் ராகுல் - கேப்டன் ரோகித் சர்மா ஜோடி களமாடி விளையாடி வருகின்றனர்.


  • 19:10 (IST) 04 Sep 2022
    இரு அணி சார்பில் களமாடும் வீரர்கள் பட்டியல்!

    பாகிஸ்தான் பிளேயிங் லெவன்:

    முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), பாபர் அசாம் (கேப்டன்), ஃபகார் ஜமான், குஷ்தில் ஷா, இப்திகார் அகமது, ஷதாப் கான், ஆசிப் அலி, முகமது நவாஸ், ஹாரிஸ் ரவுஃப், முகமது ஹஸ்னைன், நசீம் ஷா


  • 19:10 (IST) 04 Sep 2022
    இரு அணி சார்பில் களமாடும் வீரர்கள் பட்டியல்!

    இந்தியா பிளேயிங் லெவன்:

    கேஎல் ராகுல், ரோகித் சர்மா(கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தீபக் ஹூடா, ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ரவி பிஷ்னோய், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங்


  • 19:07 (IST) 04 Sep 2022
    இரு அணி சார்பில் களமாடும் வீரர்கள் பட்டியல்!

    இந்தியா பிளேயிங் லெவன்:

    கேஎல் ராகுல், ரோகித் சர்மா(கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தீபக் ஹூடா, ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ரவி பிஷ்னோய், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங்


  • 19:05 (IST) 04 Sep 2022
    டாஸ் வென்ற பாக்,. அணி பவுலிங் தேர்வு; இந்தியா முதலில் பேட்டிங்!

    இன்று இரவு 7:30 மணிக்கு துபாயில் அரங்கேறும் சூப்பர் “4” சுற்று 2-வது ஆட்டத்தில் இந்தியா -பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கான டாஸ் சரியாக 7 மணிக்கு சுண்டப்பட்ட நிலையில், டாஸ் வென்ற பாக்ஸ்தான் அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இதனால் இந்தியா முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கும்


  • 18:47 (IST) 04 Sep 2022
    இந்தியா vs பாகிஸ்தான்: இந்தியாவுக்கான தேர்வு எப்படி?

    இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவின் அணி தேர்வில் ஐந்து அல்லது ஆறு பந்துவீச்சாளர்களுடன் செல்ல வேண்டுமா? என்பதை பற்றி யோசிப்பார். ஹாங்காங்கிற்கு எதிராக அவர் 5 பந்துவீச்சாளர்களையும், பாகிஸ்தானுக்கு எதிராக 6 பந்துவீச்சாளர்களையும், அவர் பயன்படுத்தி இருந்தார்.

    கேப்டன் ரோகித் 5 பந்துவீச்சாளர்களுடன் விளையாடினால், விக்கெட் கீப்பர்களான ரிஷப் பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் இருவரும் களத்தில் இறங்கலாம்.


  • 18:31 (IST) 04 Sep 2022
    மீண்டும் இந்தியா- பாக். மோதல்: சூப்பர் 4 சுற்றில் யார் யாருக்கு போட்டி?

    நடப்பு ஆசிய கோப்பை தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் 3 முறை சந்திக்கும் என்று கணிக்கப்பட்டது. அதன்படி, தற்போது 2வது முறை அந்த அணி இந்தியாவை எதிர்கொள்ள தயாராகி வருகிறது.

    https://tamil.indianexpress.com/sports/asia-cup-2022-super-4-full-schedule-ind-vs-pak-match-on-4th-sept-details-in-tamil-504322/


  • 18:29 (IST) 04 Sep 2022
    சூப்பர் 4 சுற்றில் மோதும் இந்தியா – பாக்,. அணிகள்… ஓவர் ரேட்டின் மீது ஒரு கண் வைக்கும் கட்டாயம் ஏன்?

    ஸ்லோ ஓவர் ரேட்டிற்கான அபராதம் தொடர்பான ஐசிசியின் புதிய விதிகள் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.

    https://tamil.indianexpress.com/sports/slow-over-rate-why-will-ind-and-pak-keep-an-eye-during-their-super-four-match-504630/


  • 18:29 (IST) 04 Sep 2022
    சூரியகுமார் யாதவ் அல்ல; இந்தியாவுக்கு டாப் வீரர் இவர்தான்: பாக் வீரர்கள் கருத்து

    இந்திய ஆல்ரவுண்டர் வீரர் ஹர்திக் பாண்டியாவைப் புகழ்ந்து பேசியுள்ள பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அகிப் ஜாவேத், டி20 போட்டிகளில் வளர, ஹர்திக் போன்ற ஆல்ரவுண்டரை பாகிஸ்தான் அணி கண்டுபிடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    https://tamil.indianexpress.com/sports/former-pakistan-cricketers-about-indian-cricketer-hardik-pandya-505104/


  • 18:27 (IST) 04 Sep 2022
    கவலை தரும் டாப் ஆர்டர் பேட்டிங்: இந்தியா வியூகம் மாறுகிறதா?

    பாகிஸ்தான் அணிக்கு எதிரான முந்தைய லீக் ஆட்டத்தில் இந்திய அணியின் டாப் ஆடரில் உள்ள வீரர்கள் மெச்சும் படியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

    https://tamil.indianexpress.com/sports/india-changing-top-order-batting-strategy-against-pak-in-super-4-match-asia-cup-2022-504690/


  • 18:25 (IST) 04 Sep 2022
    இந்தியா vs பாகிஸ்தான்: இரு அணிகளின் உத்தேச வீரர்கள் பட்டியல்!

    பாகிஸ்தான்:

    பாபர் ஆசாம் (கேப்டன்), ஷதாப் கான், ஆசிப் அலி, ஃபகார் ஜமான், ஹைதர் அலி, ஹாரிஸ் ரவுப், இப்திகார் அகமது, குஷ்தில் ஷா, முகமது நவாஸ், முகமது ரிஸ்வான், நசீம் ஷா, ஷாநவாஸ் தஹானி, உஸ்மான் காதர், முகமது ஹஸ்னைன், ஹசன் ஏ ஹலீன்.


  • 18:23 (IST) 04 Sep 2022
    இந்தியா vs பாகிஸ்தான்: இரு அணிகளின் உத்தேச வீரர்கள் பட்டியல்!

    இந்தியா:

    ரோகித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், தீபக் ஹூடா, தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ஆர் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், ரவி பிஷ்னோய், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான்


  • 18:13 (IST) 04 Sep 2022
    ஆடுகளம் யாருக்கு சாதகம்?

    கிரிகெட்டில் பரம போட்டியாளர்களான இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதல் என்றாலே ரசிகர்கள் மட்டுமின்றி, வீரர்களும் இனம் புரியாத உணர்ச்சிக்கு உட்படுவது உண்டு. நெருக்கடி நிறைந்த இந்த போட்டியில் எந்த அணி அழுத்தத்தை திறம்பட கையாள்கிறதோ, அந்த அணிக்கே அனுகூலமான முடிவு கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

    இந்த நிலையில், துபாய் ஆடுகளத்தில் 2-வது பேட்டிங் செய்யும் அணிக்கு ஆடுகளம் சாதகமாக இருப்பதால், இன்றைய ஆட்டத்தில் டாஸ்சும் முக்கிய பங்கு வகிக்கும்.


  • 17:48 (IST) 04 Sep 2022
    பாகிஸ்தான் அணி பலம் என்ன?

    பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி திரில்லிங்கான முதலாவது லீக்கில் இந்திய அணியிடம் வீழ்ந்தது. ஆனால் இரண்டாவது லீக்கில் 155 ரன்கள் வித்தியாசத்தில் ஹாங்காங்கை துவம்சம் செய்து 'ஏ' பிரிவில் 2-வது இடம் பெற்று சூப்பர்4 சுற்றுக்குள் நுழைந்தது.

    ஹாங்காங்குக்கு எதிராக 2 விக்கெட்டுக்கு 193 ரன்கள் குவித்த பாகிஸ்தான் அணி 10.4 ஓவர்களில் 38 ரன்னுக்குள் அந்த அணியை சுருட்டி கம்பீரத்தை காட்டியது. எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் பாபர் அசாம் ஏமாற்றம் அளித்தாலும், முகமது ரிஸ்வான் (78 நாட்-அவுட்), பஹர் ஜமான் (53 ரன்கள்) அரைசதமும், குஷ்தில் ஷா ஆட்டம் இழக்காமல் அதிரடியாக 35 ரன்னும் எடுத்து அணியின் ஸ்கோரை வலுப்படுத்தினர்.

    வுலிங்கில் ஷதப் கான், முகமது நவாஸ், நசீம் ஷா உள்ளிட்டோர் கலக்கினர். முந்தைய ஆட்டத்தில் காயம் அடைந்த வேகப்பந்து வீச்சாளர் ஷாநவாஸ் தஹானி இந்த ஆட்டத்தில் இருந்து விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக ஹசன் அலி அல்லது முகமது ஹஸ்னைன் ஆகியோரில் ஒருவருக்கு இடம் கிடைக்கும் என்று தெரிகிறது.


  • 17:44 (IST) 04 Sep 2022
    இந்திய டாப் வரிசையில் மாற்றம் நிகழுமா?

    இந்திய அணியில் டாப் பேட்டிங் வரிசையில் உள்ள 6 வீரர்களும் வலது கை பேட்ஸ்மேன்களாக உள்ளனர். ஜடேஜா காயம் காரணமாக வெளியேறியுள்ள நிலையில், அந்த இடத்தில் ரிஷப் பண்ட் களமாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


  • 17:40 (IST) 04 Sep 2022
    இந்திய அணி எப்படி?

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அதன் முதலாவது லீக் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானையும், 2-வது லீக் ஆட்டத்தில் 40 ரன்கள் வித்தியாசத்தில் ஹாங்காங்கையும் தோற்கடித்து 'ஏ' பிரிவில் முதலிடத்தை பிடித்து சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறியது.

    இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் சிறப்பான தொடக்கம் காண வேண்டியது அவசியமானதாகும். விராட்கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர்.

    பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஆல்-ரவுண்டராக அசத்திய ஹர்திக் பாண்ட்யா அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். காயம் காரணமாக விலகிய ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவுக்கு பதிலாக சேர்க்கப்பட்டுள்ள அக்‌ஷர் பட்டேல் இன்றைய ஆட்டத்தில் களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பந்து வீச்சில் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் கச்சிதமாக செயல்பட்டு வருகிறார். ஹாங்காங்க்கு எதிரான ஆட்டத்தில் அவேஷ் கான், அர்ஷ் தீப் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்தனர். யுஸ்வேந்திர சாஹல் இரு ஆட்டங்களிலும் விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை. இது இந்திய அணிக்கு கவலை அளிக்கும் விஷயமாகும்.


  • 16:58 (IST) 04 Sep 2022
    ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்கு - க்கு அன்புடன் வரவேற்கிறோம்!

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று துபாயில் நடைபெறும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் குறித்த தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொள்ள 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்' லைவ் பிளாக்குடன் இணைந்திருங்கள்.


Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: