India-vs-New-Zealand Semi-Final Live Score, Cricket WorldCup 2023: இந்திய மண்ணில் விறுவிறுப்பாக அரங்கேறி வரும் 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
இந்நிலையில், இன்று புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கிய முதல் அரையிறுதியில் நியூசிலாந்து - இந்தியா அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் - நியூசி., பவுலிங்
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி, பேட்டிங் செய்து வரும் இந்திய அணியில் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா - சுப்மான் கில் ஜோடி களமிறங்கினர். இந்த ஜோடியில் கேப்டன் ரோகித் பவுண்டரி, சிக்ஸர்களை பறக்கவிட்டு இந்தியாவுக்கு அதிரடியான தொடக்கத்தை கொடுத்தார்.
அவரது விக்கெட்டை கைப்பற்ற நியூசிலாந்து ஒரு பக்கம் போராட, மறுபக்கம் அவர் சிக்கி பந்துகளை எல்லாம் நாலாபுறமும் அடித்து நொறுக்கினார். அரைசதம் அடிப்பார் என எதிர்ப்பார்த்த நிலையில், 29 பந்துகளில் 4 பவுண்டரிகள் 4 சிக்ஸர்களுடன் 47 ரன்கள் எடுத்த நிலையில் ரோகித் அவுட் ஆனார்.
இதன்பின்னர் களத்தில் இருந்த சுப்மன் கில் உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். இதில், தொடக்க வீரர் கில் 41 பந்துகளில் அரைசதம் விளாசினார். அவர் தனது அதிரடியை தொடர்ந்திருந்த நிலையில், அவருக்கு இடது காலில் தசைப் பிடிப்பு ஏற்பட்டது. இந்த காயம் காரணமாக அவர் ஓய்வு எடுக்கச் செல்வதாக தெரிவித்தார்.
கில் 65 பந்துகளில் 8 பவுண்டரிகள் 3 சிக்ஸர்களுடன் 79 ரன்கள் எடுத்து இருந்தார். அவர் ஓய்வுக்கு வெளியேறிய நிலையில், அவரைத் தொடர்ந்து ஷ்ரேயாஸ் ஐயர் களம் புகுந்தார். இந்த ஜோடி சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வரும் நிலையில், கோலி 59 பந்துகளில் அரைசதம் விளாசினார். அவருடன் வலுவான பார்ட்னர்ஷிப்பை அமைத்துள்ள ஷ்ரேயாஸ் ஐயர் 35 பந்துகளில் அரைசதம் விளாசினார். தனது அதிரடியை கைவிடாத கோலி 106 பந்துகளில் சதம் விளாசி மிரட்டினார்.
தொடர்ந்து அதிரடியாக விளையாடிய விராட் கோலி 113 பந்துகளில் 9 பவுண்டரி 2 சிக்சருடன் 117 ரன்கள் குவித்து டீம் சவுதீ பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய கே.எல்.ராகுல் அதிரடி ஆட்டத்தை தொடங்கிய நிலையில், விராட்கோலிக்கு ஒத்துழைப்பு கொடுத்து விளையாடிய ஸ்ரேயாஸ் அய்யர் 67 பந்துகளில் 3 பவுண்டரி 8 சிக்சருடன் சதமடித்து அசத்தினார்.
சதமடித்த பின் ஒரு பவுண்டரி அடித்த ஸ்ரேயாஸ் அய்யர் 49-வது ஓவரின் 5-வது பந்தில் ஆட்டமிழந்தார். 69 பந்துகளை சந்தித்த அவர் 4 பவுண்டரி 8 சிக்சருடன் 105 ரன்கள் குவித்து வெளியேறினார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் (1) தான் சந்தித்த 2-வது பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினார். இறுதிக்கட்டத்தில் கே.எல்.ராகுல் 1 சிக்சர் 2 பவுண்டரி அடித்தார். இதன் காரணமாக 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 397 ரன்கள் குவித்துள்ளது.
சுப்மான் கில் 66 பந்துகளில் 8 பவுண்டரி 3 சிக்சருடன் 80 ரன்களுடனும், ராகுல் 20 பந்துகளில் 5 பவுண்டரி 2 சிக்சருடன் 39 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். நியூசிலாந்து அணி தரப்பில் சவுதீ 3 விக்கெட்டுகளும், போல்ட் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து 398 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் ரச்சின் ரவீந்திரா - டெவான் கான்வே ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இதில் முதல் ஓவரை சந்தித்த கான்வே 2 பவுண்டரியுடன் 8 ரன்கள் எடுத்தார். ஆனால் 13 ரன்கள் எடுத்திருந்த கான்வே, மற்றும் ரச்சின் ரவீந்திரா 13 ரன்களுக்கும் ஷமி பந்துவீச்சில் ராகுலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழிந்தானர். இதனால் 39 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த நியூசிலாந்து அணிக்கு 3-வது விக்கெட்டுக்கு இணைந்த வில்லியம்சன் - டேரல் மீச்செல் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தனர்.
இந்த ஜோடியை பிரிக்க இந்திய வீரர்கள் மேற்கொண்ட முயற்சிக்கு பலன் கிடைக்கவே இல்லை.
இந்த ஜோடி 3-வது விக்கெட்டக்கு, 181 ரன்கள் சேர்த்து அசத்தியது. அடுத்து களமிறங்கிய லத்தம், 2 பந்துகளில் ரன் கணக்கை தொடங்காமலே ஆட்டமிழந்தார். அடுத்து மீச்செல் - பிலிப்ஸ் இருவரும் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 75 ரன்கள் சேர்த்த நிலையில், அதிரடியாக விளையாடிய பிலிப்ஸ், 33 பந்துகளில் 4 பவுண்டரி 2 சிக்சருடன் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த செம்போன் 2 ரன்களுக்கும், சதமடித்து நம்பிக்கை கொடுத்த மீச்செல் 119 பந்துகளில் 9 பவுண்டரி 7 சிக்சருடன் 134 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், சிறிது நேரம் தாக்குபிடித்த சாண்டனர் 9 ரன்களில் வீழ்ந்தார்.
தொடர்ந்து டீம் சவுதி 9 ரன்களில் வெளியேறிய நிலையில், அடுத்து வந்த பெர்குசன் ஒரு சிக்சருடன் 6 ரன்களில் வீழ்ந்தார். இதனால் நியூசிலாந்து அணி 48.5 ஓவர்களில் 327 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 2023-ம் ஆண்டு உலககோப்பை தொடரில் முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்த போட்டியில் அசத்தலாக பந்துவீச்சிய முகமது ஷமி, 9.5 ஓவர்களில் 57 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இரு அணிகளின் பிளேயிங் லெவன்
நியூசிலாந்து: டெவோன் கான்வே, ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன் (கேப்டன்), டேரில் மிட்செல், மார்க் சாப்மேன், க்ளென் பிலிப்ஸ், டாம் லாதம் (விக்கெட் கீப்பர்), மிட்செல் சான்ட்னர், டிம் சவுத்தி, லாக்கி பெர்குசன், டிரென்ட் போல்ட்.
இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ்
ஆங்கிலத்தில் படிக்கவும்: India vs New Zealand Live Score, World Cup 2023 Semi-Final
நடப்பு உலகக் கோப்பை தொடரில் சமபலம் பொருந்திய அணிகளாக இந்தியா - நியூசிலாந்து அணிகள் பார்க்கப்படுகிறது. இவ்விரு அணிகளும் நெருக்கமான மற்றும் பரபரப்பான போட்டிகளில் விளையாடிய நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளன.
இதையும் படியுங்கள்: மும்பை வான்கடேவில் 'ஸ்லோ பிட்ச்': இந்திய அணி விருப்பத்தால் நடந்த மாற்றம்?
இந்த உலகக் கோப்பை லீக் சுற்றில் 9 ஆட்டங்களிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை ருசித்த இந்தியா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும். 2003க்குப் பிறகு ஒரு நாக்-அவுட் போட்டியில் கூட இந்தியாவிடம் தோல்வி பெறாத நியூசிலாந்து அந்த சாதனையை தொடரவே நினைக்கும். அதற்கு பதிலடி கொடுத்து வரலாறு படைக்க இந்தியா தீவிரம் காட்டும். எனவே, இவ்விரு அணிகள் மோதும் இன்றைய போட்டியில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இதையும் படியுங்கள்: IND vs NZ: உலகக் கோப்பை முதல் அரைஇறுதிப் போட்டி... ஆன்லைனில் லைவ்-ஆக பார்ப்பது எப்படி?
இதையும் படியுங்கள்: IND vs NZ Semi Final: பனிப் பொழிவின் தாக்கம்; மும்பை வான்கடே பிட்ச் யாருக்கு சாதகம்?
இதையும் படியுங்கள்: உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்தியாவின் அரையிறுதி மழையால் கைவிடப்பட்டால் என்ன ஆகும்?
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.