Asia Cup 2023, India vs Pakistan Updates: 6 அணிகள் பங்கேற்றுள்ள 16வது ஆசிய கோப்பை தொடர் கடந்த 30ம் தேதி முதல் தொடங்கியது. மிகவும் விறுவிறுப்பாக அரங்கேறி வரும் இத்தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பரம போட்டியாளர்களான இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் இன்று (சனிக்கிழமை) இலங்கையில் உள்ள பல்லகெலே சர்வதேச மைதானத்தில் மாலை 3 மணிக்கு தொடங்கியது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
- 22:18 (IST) 02 Sep 2023இந்தியா – பாகிஸ்தான் போட்டி மழையால் ரத்து; இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி
இரண்டாவது இன்னிங்ஸ் முழுவதுமே இன்னும் விளையாடப்படாத நிலையில், மழையால் ஆசியக் கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது
- 21:53 (IST) 02 Sep 2023மழையால் ஆட்டம் பாதிப்பு
மழைக் காரணமாக பாகிஸ்தான் அணி களமிறங்குவது தாமதாகி வருகிறது
- 19:55 (IST) 02 Sep 2023266 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்
குல்தீப் 4 ரன்களில் அவுட் ஆனார். இவர் நசீம் பந்தில் ரிஸ்வானிடம் கேட்ச் கொடுத்தார். பின்னர் களமிறங்கிய பும்ரா 16 ரன்களில் அவுட் ஆனார். இவர் நசீம் பந்தில் சல்மானிடம் கேட்ச் கொடுத்தார். சிராஜ் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்திய அணி 48.5 ஓவர்களில் 10 விக்கெட் இழப்பிற்கு 266 ரன்கள் எடுத்தது.
- 19:27 (IST) 02 Sep 2023அடுத்தடுத்து விக்கெட்களை இழந்த இந்தியா; ரன் குவிக்க திணறல்
ஹர்திக் பாண்டியா 90 பந்துகளில் 87 ரன்கள் எடுத்து அவுட் ஆகியுள்ளார். இதில் 1 சிக்சர்கள் மற்றும் 7 பவுண்டரிகள் அடங்கும். இவர் அப்ரிடி பந்தில் சல்மானிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
அடுத்து வந்த ரவீந்தர ஜடேஜா 14 ரன்களில் அவுட் ஆனார். இவர் அப்ரிடி பந்தில் ரிஸ்வானிடம் கேட்ச் கொடுத்தார். பின்னர் களமிறங்கிய ஷர்துல் தாக்கூர் 3 ரன்களில் அவுட் ஆனார். இவர் நசீம் பந்தில் ஷதாப் கானிடம் கேட்ச் கொடுத்தார்.
இந்திய அணி 44.4 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது
- 18:51 (IST) 02 Sep 2023இஷான் கிஷன் அவுட்
இஷான் கிஷன் 81 பந்துகளில் 82 ரன்கள் எடுத்து அவுட் ஆகியுள்ளார். இதில் 2 சிக்சர்கள் மற்றும் 9 பவுண்டரிகள் அடங்கும். இவர் ரௌப் பந்தில் பாபர் அசமிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
இந்திய அணி 37.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது
- 18:16 (IST) 02 Sep 2023ஒடிசா ரயில் விபத்து; குற்றப்பத்திரிகை தாக்கல்
ஒடிசா ரயில் விபத்து வழக்கில் கைது செய்யப்பட்ட 3 ரயில்வே அதிகாரிகள் மற்றும் ரயில் விபத்து குறித்து புவனேஸ்வரில் உள்ள சி.பி.ஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது
- 18:10 (IST) 02 Sep 2023இஷான் கிஷன் அரைசதம்... வலுவான ரன்களை சேர்க்கும் இந்தியா!
ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா பேட்டிங் செய்து வருகிறது. இந்திய அணியில் சிறப்பாக விளையாடி வரும் இஷான் கிஷன் 55 பந்துகளில் அரைசதம் விளாசினார். அவர் தற்போது ஹர்திக் பாண்டியா உடன் இணைந்து சிறப்பாக விளையாடி வருகிறார்.
29 ஓவர்கள் முடிவில் இந்தியா 4 விக்கெட்கள் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது.
- 17:08 (IST) 02 Sep 2023கில் அவுட்!
ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா பேட்டிங் செய்து வருகிறது. இந்திய அணியில் அதிரடியாக விளையாடி வந்த கில் 10 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
- 17:00 (IST) 02 Sep 2023நின்ற மழை மீண்டும் தொடங்கிய ஆட்டம்... களத்தில் கில் - இஷான் பேட்டிங்!
ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா பேட்டிங் செய்து வருகிறது. ஆட்டத்தில் மழை மீண்டும் புகுந்த நிலையில், தற்போது மழை நின்று போட்டி நடந்து வருகிறது. கில் - இஷான் ஜோடி பேட்டிங் செய்து வருகிறார்கள்.
- 16:39 (IST) 02 Sep 2023மீண்டும் புகுந்த மழை... ஆட்டம் நிறுத்தம்; இந்தியா 51/3 (11.2)!
ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா பேட்டிங் செய்து வருகிறது. இந்நிலையில், ஆட்டத்தில் மழை மீண்டும் புகுந்தது. இந்திய அணி 11.2 வது ஓவரில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 51 ரன்கள் எடுத்துள்ளது.
- 16:38 (IST) 02 Sep 2023மீண்டும் புகுந்த மழை... ஆட்டம் நிறுத்தம்; இந்தியா 51/3 (11.2)!
ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா பேட்டிங் செய்து வருகிறது. இந்நிலையில், ஆட்டத்தில் மழை மீண்டும் புகுந்தது. இந்திய அணி 11.2 வது ஓவரில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 51 ரன்கள் எடுத்துள்ளது.
- 16:32 (IST) 02 Sep 2023ஷ்ரேயாஸ் ஐயர் அவுட்!
ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா பேட்டிங் செய்து வருகிறது. இந்திய அணியில் அதிரடியாக விளையாடி வந்த ஷ்ரேயாஸ் ஐயர் 14 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
10 ஓவர்கள் முடிவில் இந்தியா 3 விக்கெட்கள் இழப்புக்கு 48 ரன்கள் எடுத்தது.
- 16:11 (IST) 02 Sep 2023கோலியும் அவுட்!
கேப்டன் ரோகித்-க்குப் பிறகு களம் புகுந்த விராட் கோலியும் ஷஹீன் அப்ரிடி பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவர் வீசிய பந்தை ஆஃப் சைடில் கோலி விரட்டு முயன்று இன்சைடு - எட்ஜ் ஆகி போல்ட் -அவுட் ஆனார். கோலி ரன் மட்டுமே எடுத்தார்.
- 16:06 (IST) 02 Sep 2023நின்றது மழை... கேப்டன் ரோகித் அவுட்!
போட்டியின் போது மழை குறுக்கிட்டது. பின்னர் தொடங்கிய ஆட்டத்தில் கேப்டன் ரோகித் ஷஹீன் அப்ரிடி பந்துவீச்சில் போல்ட்-அவுட் ஆகி வெளியேறினார். அவர் 11 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
- 15:31 (IST) 02 Sep 2023புகுந்து ஆடும் மழை... ஆட்டம் நிறுத்தம்!
ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் செய்து வந்தது. இந்திய அணியில் ரோகித் சர்மா - சுப்மான் கில் தொடக்க வீரர்களாக களமாடி பேட்டிங் செய்து வந்தனர். 4.2-வது ஓவரில் இந்தியா 15 ரன்கள் எடுத்த போது ஆட்டத்தில் மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி நிறுத்தப்பட்டுள்ளது.
- 15:12 (IST) 02 Sep 2023ஸ்ரேயாஸ் ஐயர் உற்சாகம்!
காயம் காரணமாக நீண்ட இடைவெளிகுப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு திரும்பியுள்ள ஸ்ரேயாஸ் ஐயர்: "உற்சாகமாக இருந்தது... ஆனால் நேற்றிரவு தூங்க முடியவில்லை". என்று கூறினார்.
- 15:08 (IST) 02 Sep 2023ஆட்டம் இனிதே தொடக்கம்!
ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா பேட்டிங் செய்து வருகிறது. இந்திய அணியில் ரோகித் சர்மா - சுப்மான் கில் தொடக்க வீரர்களாக களமாடி பேட்டிங் செய்து வருகிறார்கள்.
முதல் ஓவர் முடிவில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் எடுத்தது.
- 14:53 (IST) 02 Sep 2023இந்தியா vs பாகிஸ்தான் லைவ் ஸ்கோர்: வீரர்கள் மேட்ச்-அப்!
விராட் கோலி v ஷாஹீன் அப்ரிடி
ரன்கள்: 34| பந்துகள்: 22| விக்கெட்: 1
ரோஹித் ஷர்மா v ஹாரிஸ் ரவுஃப்
ரன்கள்: 13| பந்துகள்: 12| விக்கெட்டுகள்: 2
ஃபகார் ஜமான் எதிராக ஜஸ்பிரித் பும்ரா
ரன்கள்: 45| பந்துகள்: 25| விக்கெட்: 0
பாபர் அசாம் vs குல்தீப் யாதவ்
ரன்கள்: 34| பந்துகள்: 18| விக்கெட்டுகள்: 2
- 14:51 (IST) 02 Sep 2023ரவி சாஸ்திரியின் பிட்ச் ரிப்போர்ட்!
இந்த ஆடுகளம் முந்தைய ஆடுகளத்தை விட அதிக புல் உள்ளது, இது பாகிஸ்தான் மற்றும் நேபாளத்தின் போது பயன்படுத்தப்பட்ட ஆடுகளம். இந்த டிராக் மெதுவாகத் தெரிகிறது மற்றும் பவுன்ஸ் இருக்கும். பந்து ஆரம்பத்திலேயே பிடிக்கலாம், நீங்கள் சுழலைப் பார்க்கலாம். இந்த விக்கெட்டில் 260-270 ரன்கள் எடுத்தால் சவாலாக இருக்கும்.
- 14:48 (IST) 02 Sep 2023ஆடும் லெவனில் தாக்கூர்!
இன்றைய இந்திய ஆடும் லெவன் அணியில் முகமது ஷமியை விட ஷர்துல் தாக்கூருக்கு முன்னுரிமை கொடுத்துள்ளது அணி நிர்வாகம். தற்போது இதற்கு நிறைய விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
2019 உலகக் கோப்பைக்குப் பிறகு ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுக்காக அதிக விக்கெட் வீழ்த்தியவர் ஷர்துல் என்பது இங்கு அனைவரும் நினைவூட்ட வேண்டியடிது என்றும், அவர் தனது செயல்பட்டால் விமர்சகர்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பார் என்றும் அவரது ரசிகர்கள் கூறிவருகிறார்கள்.
- 14:44 (IST) 02 Sep 2023கோலி vs அப்ரிடி: இந்தியா – பாக்,. மோதலில் முக்கிய மேட்ச்-அப்கள்
ஆசிய கோப்பை தொடரில் இன்றைய இந்தியா – பாகிஸ்தான் மோதலில் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய வீரர்கள் மேட்ச்-அப்கள்.
- 14:42 (IST) 02 Sep 2023பாகிஸ்தான் பிளேயிங் லெவன்
ஃபகார் ஜமான், இமாம்-உல்-ஹக், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), ஆகா சல்மான், இப்திகார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், ஷஹீன் அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவூப்.
- 14:40 (IST) 02 Sep 2023இந்தியா பிளேயிங் லெவன்!
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.
- 14:38 (IST) 02 Sep 2023டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்... பாக்,. பவுலிங்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அதனால், பாகிஸ்தான் இந்தியாவுக்கு பந்துவீசுகிறது.
- 13:58 (IST) 02 Sep 2023கலைந்து போன கருமேகங்கள், மழை இல்லை!
போட்டி நடக்கும் பல்லகெலேயில் மழை தற்போது நின்றுவிட்டது, இருப்பினும் சில கருமேகங்கள் இன்னும் அப்படியே உள்ளன. நாட்டில் உள்நாட்டுப் போரின் காலத்திலிருந்து அநேகமாகப் பார்க்கப்படாத ஏராளமான ஆயுதப் படைகள் சாலையில் உள்ளன. வெள்ளிக்கிழமை இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பயிற்சியில் ஈடுபட்டபோதும், எல்லையில் ஏராளமான ஆயுதப்படையினர் இருந்தனர்.
- 13:55 (IST) 02 Sep 2023ஆசிய கோப்பை: இந்தியா – பாக்,. மோதல்… கோலியின் சாதனையை முறியடிக்கும் பாபர் அசாம்!
கோலி கேப்டனாக வேகமாக 2000 ரன்கள் எடுத்த சாதனையை முறியடிக்க உள்ளார் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம். - 13:17 (IST) 02 Sep 2023இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன் வீரர்கள் பட்டியல் பின்வருமாறு:
இந்தியா:
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திரஜடேஜா, ஷர்துல் தாக்குர் அல்லது முகமது ஷமி, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.
பாகிஸ்தான்:
பஹர் ஜமான், இமாம் உல்-ஹக், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான், ஆஹா சல்மான், இப்திகர் அகமது, ஷதப் கான், முகமது நவாஸ், ஷகீன் ஷா அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவுப்.
- 13:17 (IST) 02 Sep 2023இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன் வீரர்கள் பட்டியல் பின்வருமாறு:
இந்தியா:
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திரஜடேஜா, ஷர்துல் தாக்குர் அல்லது முகமது ஷமி, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.
பாகிஸ்தான்:
பஹர் ஜமான், இமாம் உல்-ஹக், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான், ஆஹா சல்மான், இப்திகர் அகமது, ஷதப் கான், முகமது நவாஸ், ஷகீன் ஷா அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவுப்.
- 13:11 (IST) 02 Sep 2023ஆசிய கோப்பை ஜெர்சியில் பாக்,. பெயர் இல்லை… அதிருப்தியான ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் ஏ.சி.சி மீது பாய்ச்சல்!
ஆசிய கோப்பை அணி ஜெர்சியில் போட்டியை நடத்தும் பாகிஸ்தானின் பெயர் விடுபட்டுள்ளது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.
ஆசிய கோப்பை 2023 தொடரின் அதிகாரப்பூர்வ ஹோஸ்ட், அதாவது போட்டியை நடத்துவது பாகிஸ்தான் ஆகும்.
- 13:09 (IST) 02 Sep 2023மழை வாய்ப்பு எப்படி?
இன்றைய போட்டி நடக்கும் பல்லகெலேயில் இன்று மழை பெய்வதற்கு 84 சதவீதம் வாய்ப்புள்ளது. வானம் கருமேகம் சூழ்ந்து காணப்படும் என்று வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்படலாம். இவ்வாறான சீதோஷ்ண நிலையில், ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு அனுகூலமாக இருக்கக்கூடும்.
- 12:57 (IST) 02 Sep 2023பாபர் அசாமின் பாக்,. அணி எப்படி?
பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம், இமாம் உல்-ஹக், பஹர் ஜமான் தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார்கள். பந்து வீச்சில் ஷகீன் ஷா அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவுப் ஆகியோர் தலைச்சிறந்த வேகப்பந்து வீச்சு கூட்டணியாக திகழ்கிறது. எனவே இது இந்தியாவின் பேட்டிங்குக்கும், பாகிஸ்தானின் பந்து வீச்சுக்கும் இடையிலான யுத்தமாக வர்ணிக்கப்படுகிறது. மொத்தத்தில் நெருக்கடியை யார் நன்றாக எதிர்கொள்கிறார்களோ அவர்களுக்கு வெற்றி வாய்ப்பு கிட்டும்.
- 12:56 (IST) 02 Sep 2023இந்தியா எப்படி?
ஒரு நாள் கிரிக்கெட்டில் 2019-ம் ஆண்டு உலகக் கோப்பைக்கு பிறகு அதாவது 4 ஆண்டுக்கு கழித்து இரு அணிகளும் முதல் முறையாக சந்திப்பதால் எதிர்பார்ப்பு தாறுமாறாக எகிறியுள்ளது. விராட் கோலி இன்னும் 102 ரன்கள் எடுத்தால் ஒரு நாள் போட்டியில் அதிவேகமாக 13 ஆயிரம் ரன்களை கடந்த சச்சின் தெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பார். காயத்தில் இருந்து மீண்டுள்ள ஸ்ரேயாஸ் அய்யர், இளம் விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் ஆகியோர் களம் காணுவார்கள் என்று தெரிகிறது.
பந்து வீச்சில் காயத்தில் இருந்து குணமடைந்து அணிக்கு திரும்பியுள்ள ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஆல்-ரவுண்டர் ஜடேஜா, ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் இந்திய அணிக்கு வலு சேர்க்கிறார்கள்.
- 12:54 (IST) 02 Sep 2023பாகிஸ்தானுக்கு எதிராக சஞ்சு சாம்சன் களம் இறங்க முடியாது: காரணம் இதுதான்!
இந்திய விக்கெட் கீப்பர்களாக கே.எல் ராகுல் மற்றும் இஷான் கிஷன் ஆகிய இருவரும் சேர்க்கப்பட்டனர்.
- 12:43 (IST) 02 Sep 2023சூப்பர் - 4 சுற்று
சூப்பர் 4 சுற்றுக்குள் நுழையும் 4 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறைமோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பெறும் அணிகள் இறுதி சுற்றை எட்டும். இறுதிப்போட்டி வருகிற செப்டம்பர் 17ம் தேதி கொழும்பில் உள்ள ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடக்கிறது.
- 12:34 (IST) 02 Sep 20236 அணிகள் - 2 பிரிவுகள்
16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 6 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், 'பி' பிரிவில் நடப்பு சாம்பியன் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெறும்.
- 12:33 (IST) 02 Sep 2023தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்கு - க்கு அன்புடன் வரவேற்கிறோம்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் குறித்த தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்குடன் இணைந்திருங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.