Advertisment

'இந்தியாவ தோற்கடிக்க நினைச்சா தப்பு, நம்ம கைக்கு வருது வேர்ல்டு கப்பு': கிரிக்கெட் வர்ணனையாளர் முத்து பஞ்ச்

'இந்திய அணி பேட்டிங் வரிசையில் சுப்மன் கில் வழக்கம் போல் அகமதாபாத் ஆடுகளத்தில் வெளுத்து வாங்குவார். அவருக்கு அது சொந்த மைதானம்.' என்று வர்ணனையாளர் பிரதீப் முத்து கூறினார்.

author-image
Martin Jeyaraj
New Update
Pradeep Muthu cricket commentator on IND vs AUS World Cup 2023 final in tamil

'பனிப் பொழிவு இல்லையென்றால், 2வது பேட்டிங் செய்யும் அணிக்கு பெரிய பிரச்சனையாக இருக்கும்' என்று கிரிக்கெட் வர்ணனையாளர் முத்து கூறினார்.

ச. மார்ட்டின் ஜெயராஜ் – Martin Jeyaraj

Advertisment

worldcup 2023 | india-vs-australia | Pradeep Muthu: இந்திய மண்ணில் பரபரப்பாக நடைபெற்று வந்த 13-வது ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த தொடரில் கோப்பை முத்தமிட போவது யார்? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது. இதில் 2 முறையை சாம்பியனான இந்தியா - 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. 

கிரிக்கெட் வர்ணனையாளர் முத்து கருத்து

இந்நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இறுதிப்போட்டி குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியின் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து தனது கருத்தை 'இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்' இணைய பக்கத்துடன் பகிர்ந்து கொண்டார். 

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா என்கிற இரு பலம் பொருந்திய அணிகளின் மோதல் அகமதாபாத் களத்தில் எப்படி இருக்கும் என்பதை அறிய அவரை தொடர்பு கொண்டு பேசினோம். அவர் நம்மிடம் பேசியது பின்வருமாறு: - 

போட்டி ஒருதலை பட்சமாக இருக்கும் என்று நம்புகிறேன். அதாவது இந்தியாவுக்கு அதிக சாதமாக இருக்கும். ஏனெனில், ஆடுகளத்தில் கொஞ்சம் திருப்பம் இருக்கும். அப்போது நமது பவுலர்கள் சுழல் வித்தையை காட்டுவார்கள். குறிப்பாக, ஜடேஜா வேற லெவலில் பந்து வீசுவார். இதே ஆண்டில் இதே மைதானத்தில் தான் அவர் சென்னை அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார். அவருக்கு அகமதாபாத் ஆடுகளம் அத்துப்பிடி எனலாம். பந்து கொஞ்சம் ஸ்பின் ஆக தொடங்கினால் அவர் 'பீஸ்ட்' ஆக மாறுவார். 

இந்தியாவுக்கு சாதகமாக ஆடுகளம் தயார் செய்யப்படுகிறது என்ற குற்றச்சாட்டை பொறுத்தவரையில், ஒரு ஐ.சி.சி தொடருக்கு அப்படி எளிதாக ஆடுகளத்தை தயார் செய்து விட முடியாது. அதற்கென தனி கமிட்டி உள்ளது. அவர்களது மேற்பார்வையின் கீழ் தான் கியூரேட்டர்கள் ஆடுகளத்தை தயார் செய்கிறார்கள். ஐ.சி.சி இறுதிப்போட்டி ஆடுகளம் எப்படி இருக்க வேண்டுமோ அந்த வகையில் இருக்கும். அதற்கு என்று ரொம்பவும் ஸ்லோ-வான ஆடுகளத்தை கொடுக்க மாட்டார்கள். 

ஆனால், கண்டிப்பாக ஆடுகளத்தில் திருப்பம் (டர்ன்) இருக்கும். பனிப் பொழிவு இல்லையென்றால், 2வது பேட்டிங் செய்யும் அணிக்கு பெரிய பிரச்சனையாக இருக்கும். நீங்கள் இந்திய அணிக்கு எந்த ஆடுகளத்தை கொடுத்தாலும் அவர்கள் சிறப்பாக விளையாடுவார்கள். அந்த அளவுக்கு  இந்த தொடர் முழுதும் செயல்பட்டு உள்ளார்கள். 

இந்திய அணி பேட்டிங் வரிசையில் சுப்மன் கில் வழக்கம் போல் அகமதாபாத் ஆடுகளத்தில் வெளுத்து வாங்குவார். அவருக்கு அது சொந்த மைதானம். அங்கு பேட்டிங் செய்ய அவர் ரொம்பே விரும்புவார். கூடுதலாக, கேப்டன் ரோகித்தின் அற்புதமான தொடக்க அதிரடி பேட்டிங் பற்றி சொல்லவே தேவையில்லை. முந்தைய போட்டியில் மிட்சல் ஸ்டார்க்கின் உள்ளே வரும் பந்தை விட்டு அவுட் ஆனார். அதன்பிறகு ட்ரெண்ட் போல்ட், அப்ரிடி ஆகியோரின் பந்துகளை அடித்து நொறுக்கினார். இந்த முறை நிச்சம் ஸ்டார்க்கை அவுட் எடுக்க விட மாட்டார் என்று நினைக்கிறேன். 

அத்துடன் இந்த உலகக் கோப்பையில் சிறப்பான ஓப்பனிங் பேட்டிங்கையும் ரோகித் கொடுத்துள்ளார். அவர் கொடுக்கும் தொடக்கம் தான் அணிக்கு இன்ஜினாக உள்ளது. தொடக்க போட்டி முதலே அணிக்கு அதிரடியாக ரன்களை குவிக்க அபரிவிதமான அர்ப்பணிப்பை போடுகிறார். அதிலும் செமி ஃபைனலில் அவர் ஆடிய விதம் பார்க்கவே மிரட்டலாக இருந்தது. அணிக்கு ஒரு 'கிக் ஸ்டார்ட்' ரோகித் சர்மா தான் கொடுக்கிறார்.  

விராட் கோலி தற்போது உள்ள ஃபார்மில் இன்னும் ரன்களை அடித்து நொறுக்குவார் என்பதில் சந்தேகமே இல்லை. சூர்யகுமார் யாதவின் அதிரடியான ஆட்டத்தை இன்னும் நாம் பார்க்கவில்லை. அவருக்கு குறைவான வாய்ப்புகளே கிடைத்துள்ளன. அந்த வாய்ப்பையும் அவர் கச்சிதமாக பயன்படுத்தி இருக்கிறார். அவரை அவசர காலத்தில் தேவைப்படும் காப்பீடு போன்று தான் பார்க்க வேண்டும். பேட்டிங் வரிசையில் ஏதாவது தடுமாற்றம் என்றால், அவர் பேக்-அப் வீரராக வந்து விடுவார். அணிக்கு தேவைப்படும் ரன்களை எடுக்கவும் கை கொடுக்கிறார். 

பவுலிங்கில் யாரும் எதிர்பார்க்க அளவுக்கு ஷமி கலக்கி வருகிறார். நியூசிலாந்து செமி ஃபைனல் முடிந்தவுடன் அவரது கையின் மணிக்கட்டை தொட்டுப் பார்த்தேன். அப்போது அவரிடம் சொன்னேன், இந்தியாவிலே இன்றைக்கு ரொம்பவும் மதிப்புமிக்கது உங்களது மணிக்கட்டு தான், அதை நான் தொட்டுப் பார்த்து விட்டேன், நல்ல விதமாக பார்த்துக்கொள்ளுங்கள் என்றேன். அவர் சிரித்தபடி என்னை கட்டியணைத்தார்.   

அவரைப் பொறுத்தவரை ரொம்பவும் தெளிவாக இருக்கிறார். அவரது பந்துவீச்சை என்ஜாய் செய்து வீசி வருகிறார். தனக்கு பவுலிங் போட ரொம்பவும் விருப்பமாக உள்ளது என்கிறார். அவரது பயிற்சி பற்றி நான் கேட்கையில், 'அதெல்லாம் அந்த அளவுக்கு இல்லை, தினமும் 10 முதல் 15 பந்துகளை வீசி பயிற்சி எடுக்கிறேன், அவ்வளவு தான். பந்துகளை சரியான இடத்தில் போடுவதால் விக்கெட் எடுக்க முடிகிறது' என்று சொன்னார். என்னைப் பொறுத்தவரையில், தொடரின் நாயகன் விருதை அவருக்கென தனியாக எடுத்து வைத்துவிடுங்கள். அது அவருக்கு மட்டும் தான் கிடைக்க வேண்டும். அதை வெல்லக்கூடிய முழுத் தகுதியும் அவருக்குத் தான் இருக்கிறது. 

பும்ரா பவுலிங்கில் ரோகித் சர்மாவாக இருக்கிறார். அதிக விக்கெட்டுகளை வீழ்த்தவில்லை என்றாலும், ரொம்பவும் கட்டுக் கோப்பாக வீசிசுகிறார். பேட்ஸ்மேன்களுக்கு அதிக அழுத்தத்தை கொடுக்கிறார். சிராஜ் தனது சிறப்பான பவுலிங்கை எல்லா போட்டியிலும் கொடுக்க முடிவில்லை. ஆனாலும், முக்கிய கட்டத்தில் விக்கெட் வீழ்த்தி அசத்தி இருக்கிறார். அவரும் இறுதிப் போட்டியில் கை கொடுப்பார் என நம்பலாம். 

என்னைப் பொறுத்தவரையில், இந்த உலகக் கோப்பையே ஒரு பழி தீர்க்கும் உலகக் கோப்பை தொடர் என்று கூறுவேன். நியூசிலாந்துக்கு நீண்ட காலத்திற்குப் பிறகு பதிலடி கொடுத்திருக்கிறோம். இதேபோல், ஆஸ்திரேலியாவுக்கும் இறுதிப் போட்டியில் வைத்து அடி கொடுப்போம் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார். 

இதையும் படியுங்கள்: தடுமாற்ற ஃபார்மில் சிராஜ்; சந்தேகத்தில் கடைசி வரிசை பேட்டிங்... பலவீனங்களை சரி செய்யுமா இந்திய அணி?

விமானப்படை சாகசம், கபில்- டோனி வருகை... உலகமே உற்று நோக்கும் அகமதாபாத்தில் ஸ்பெஷல் நிகழ்ச்சிகள்

இவங்க 2 பேரும் வந்தாலே சரிப் படாது: இந்திய ரசிகர்களை கவலையில் ஆழ்த்தும் அம்பயர் சென்டிமெண்ட்

இந்த 33 வயது வீரர்தான் எங்களுக்கு ஆபத்து: ஆஸி., கேப்டன் கம்மின்ஸ் ஒப்புதல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

India Vs Australia Worldcup Pradeep Muthu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment