மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது. இந்த சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், முஸ்லிம்களுக்கு இந்த சட்டத்தில் இடம் அளிக்கப்படவில்லை.
கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்களாகக் கருதப்படுவர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த சட்டத்துக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில், மேற்கு வங்கம், டெல்லி ஆகிய மாநிலங்களில் கடும் போராட்டம் நடந்து வருகிறது. தமிழகத்திலும் திமுக போராட்டங்களை முன்னெடுத்தி நடத்தி வருகிறது.
இந்நிலையில், கேரளாவில் நடைபெற்ற கால்பந்து போட்டி ஒன்றில், ரசிகர்கள் சிஏஏ-வுக்கு எதிராக கோஷம் எழுப்பியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
இந்து என்பதால் புறக்கணிக்கப்பட்டது உண்மைதான் : பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா ஒப்புதல்
கடந்த டிசம்பர் 22ம் தேதி, கேரளாவின் மலப்புரத்தில் நடைபெற்ற கால்பந்து போட்டி, ரசிகர்கள் வழிய நடைபெறவிருந்தது. அப்போது பார்வையாளர்கள் சிஏஏவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பார்வையாளர்கள் 'ஆசாதி' கோஷம் எழுப்பினர்.
26, 2019How a 7s football venue in Kerala turned into a #CAA_NRC_Protest site. pic.twitter.com/XwMkV6e0Ln
— Kalpanthu (@KalPanthu)
How a 7s football venue in Kerala turned into a #CAA_NRC_Protest site. pic.twitter.com/XwMkV6e0Ln
— kalpanthu (@KalPanthu) December 26, 2019
26, 2019Getting more visuals from this very clever protest. pic.twitter.com/Yv19adL31m
— Kalpanthu (@KalPanthu)
Getting more visuals from this very clever protest. pic.twitter.com/Yv19adL31m
— kalpanthu (@KalPanthu) December 26, 2019
வைரலான ஒரு வீடியோவில், கால்பந்து வீரர்கள் வரிசையாக நிற்கும்போது "ஆசாதி" என்று ரசிகர்கள் கோஷமிடுவது தெரிகிறது. உள்ளூர் தகவல்களின்படி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவரும், இளைஞர் தலைவருமான கன்ஹையா குமாரின் புகழ்பெற்ற "ஆசாதி" கோஷங்கள் ஸ்டேடியம் முழுக்க பார்வையாலர்களால் எழுப்பப்பட்டது.
அரங்கத்திலிருந்து மற்றொரு வீடியோவில், மக்கள் கோஷங்களை எழுப்பியபோது, பல ரசிகர்கள் தங்கள் தொலைபேசியில் ஃபிளாஷ் லைட்டுகளை ஒளிர விட்டனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.