Advertisment

தி.மு.க அபார வெற்றி; அ.தி.மு.க-வை முந்திய அண்ணாமலை... 1,18,068 வாக்குகள் பின்னடைவு

Coimbatore Constituency Election Result 2024 | கோவை மக்களவைத் தேர்தல் 2024 முடிவுகள் குறித்து உடனுக்குடன் தெரிந்துகொள்ள 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்' லைவ் பிளாக்குடன் இணைந்திருங்கள். 

author-image
WebDesk
New Update
Coimbatore Election Result Live | Coimbatore Lok Sabha Election Result 2024

Coimbatore Constituency Election Result 2024 - கோவை தொகுதி தேர்தல் முடிவுகள் 2024

Coimbatore Lok Sabha Constituency Election Result 2024: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19 முதல் 7 கட்டங்களாக நடைபெற்று ஜூன் 1 ஆம் தேதியுடன் நிறைவுற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று செவ்வாய்க்கிழமை (ஜூன் 4) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. 

Advertisment

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19 அன்று முதல் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நடைப்பெற்றது. 20-வது தொகுதியான கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது. சுவாரசியமாக கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 71.7% வாக்குகள் பதிவாகின.

இந்த தொகுதியில் சூலூர், கவுண்டம்பாளையம், கோயம்புத்தூர் வடக்கு, கோயம்புத்தூர் தெற்கு, சிங்காநல்லூர், பல்லடம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இம்முறை  தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க என மும்முனை போட்டி நிலவியது. பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை களமிறங்கியுள்ளதால் இத்தொகுதி கூடுதல் கவனம் பெற்றது. 

இந்த நிலையில், நேற்று வெளியாகிய தேர்தல் முடிவுகளின் படி, கோவையில் தி.மு.க.வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 5,68,200 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். அவர் 1,18,068 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பா.ஜ.க. மாநில தலைவைர் அண்ணாமலை 4,50,132 வாக்குகளும், அ.தி.மு.க-வின் சிங்கை ஜி.ராமச்சந்திரன் 2,36,490 வாக்குகளும், நாம் தமிழர் கட்சியின் கலாமணி ஜெகநாதன் 82,657 வாக்குகளும் பெற்றனர். நோட்டாவுக்கு 11,788 வாக்குகள் பதிவாகின. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

  • Jun 04, 2024 20:21 IST
    கோவை மக்களவை தொகுதி: 23 வது சுற்று முடிவு

    தி.மு.க - 5,60,774
    பா.ஜ.க - 4,44,153
    அ.தி.மு.க -  2,32,681
    நாம் தமிழர் - 81,910

    தற்போதைய நிலவரப்படி பா.ஜ.க.வேட்பாளர் அண்ணாமலையை விட தி.மு.க.வேட்பாளர் கணபதி ராஜ்குமார்  1,16,621 வாக்குகள் முன்னிலை வகிக்கிறார். 

     

     



  • Jun 04, 2024 20:21 IST
    கோவை மக்களவை தொகுதி: 22-வது சுற்று முடிவு

    தி.மு.க - 5,49,897
    பா.ஜ.க - 4,34,995
    அ.தி.மு.க -  2.25,868
    நாம் தமிழர் - 80605

    தற்போதைய நிலவரப்படி பா.ஜ.க.வேட்பாளர் அண்ணாமலையை விட தி.மு.க.வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 1,14,902 வாக்குகள் முன்னிலை வகிக்கிறார். 



  • Jun 04, 2024 20:18 IST
    கோவை மக்களவை தொகுதி: 21-வது சுற்று முடிவு

    தி.மு.க - 5,32,592
    பா.ஜ.க - 4,21,448
    அ.தி.மு.க - 2, 18097
    நாம் தமிழர் - 78,249

    தற்போதைய நிலவரப்படி பா.ஜ.க.வேட்பாளர் அண்ணாமலையை விட தி.மு.க.வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 111144 வாக்குகள் முன்னிலை வகிக்கிறார். 



  • Jun 04, 2024 20:17 IST
    20 - வது சுற்று முடிவு

    தி.மு.க 507018
    பா.ஜ.க 405736
    அ.தி.மு.க 208238
    நாம் தமிழர் 75580

    தற்போதைய நிலவரப்படி பா.ஜ.க.வேட்பாளர் அண்ணாமலையை விட தி.மு.க.வேட்பாளர் கணபதி ராஜ்குமார்  101,282 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். 



  • Jun 04, 2024 18:35 IST
    16வது சுற்று முடிவு - தி.மு.க. அபார முன்னிலை 

    தற்போதைய நிலவரப்படி பா.ஜ.க.வேட்பாளர் அண்ணாமலையை விட தி.மு.க.வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 87,924 வாக்குகள் முன்னிலையில் உள்ளார் 

    திமுக - 412196
    பாஜக  - 324272
    அதிமுக - 168208
    நாம் தமிழர் - 60432



  • Jun 04, 2024 17:04 IST
    கோவை: தி.மு.க வேட்பாளர் கணபதி ராஜ்குமார் பேட்டி

    கோவை மக்களவை தி.மு.க வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வாக்கு எண்ணும் மையமான ஜி.சி.டி கல்லூரி வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது:- 

    தற்போது 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் உள்ளோம். முடிவில் ஒரு லட்சத்துக்கு அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்.முதலமைச்சரின் திட்டங்கள் மக்களிடம் சென்று சேர்ந்ததுதான் இந்த அடையாளங்கள். 

    குறிப்பாக, ஜி.எஸ்.டி பிரச்சனையால்  தொழிற்சாலைகள் இங்கு நலிவடைந்துள்ளது.இதனால் இங்குள்ள வாழ்வாதாரமே கேள்விக்குறியாகவே உள்ளது. அதனுடைய பதில் தான் இந்த தீர்ப்பு. முதலமைச்சர்க்கு தான் இந்த பெருமை அனைத்தும். முதலமைச்சர் தமிழக மக்களுக்கு ஒரு விடிவை ஏற்படுத்தி கொடுப்பார்.

    கோவை மிகப்பெரிய தொழில் நகரம் தனித்தன்மையை இழந்து கொண்டிருக்கிற இந்த நேரத்தில் எங்களுக்கு வாக்களித்தது மீண்டும் பழைய கோவை அடையாளங்களை பெற எடுத்துக் கொள்கிறோம். நாங்கள் எதிர்பார்த்தபடி மக்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளனர்.

    பா.ஜ.க உடைய வளர்ச்சியை காட்டுவதை விட அ.தி.மு.க-வின் செயல்பாடு தான் காட்டுகிறது. அதுதான் எங்களுடைய கருத்து. தமிழகத்தை பொறுத்தவரை இந்திய கூட்டணிக்கு வெற்றி. ஜி.எஸ்.டி பிரச்சனை சிறுகுறு தொழிற்சாலை பிரச்சனை, விமான நிலைய விரிவாக்கம், ரயில் நிலையம் உள்ளிட்டவை சீர் அமைப்பதோடு, மக்கள் என்ன எதிர்பார்ப்புகளுடன் இருக்கிறார்களோ அதை சீரமைத்து தருவோம். 

    இவ்வாறு அவர் தெரிவித்தார். 



  • Jun 04, 2024 16:39 IST
    அ.தி.மு.க-வை முந்திய அண்ணாமலை - கோவையில் விறுவிறு வாக்கு எண்ணிக்கை 

    கோவை மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நடந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, பா.ஜ.க தலைவர் அண்ணாமலை  2,24,185 வாக்குகள் பெற்று அ.தி.மு.க-வின்  சிங்கை ராமச்சந்திரனை (1,15,415 வாக்குகள்) விட முன்னிலையில் உள்ளார். 

     பா.ஜ.க.வேட்பாளர் அண்ணாமலையை விட தி.மு.க.வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 52,804 வாக்குகள் முன்னிலை வகித்து வருகிறார். 



  • Jun 04, 2024 16:34 IST
    11 சுற்றுகள் முடிவு - கோவையில் 52 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க முன்னிலை!

    கோவை மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நடந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி பா.ஜ.க.வேட்பாளர் அண்ணாமலையை விட தி.மு.க.வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 52,804 வாக்குகள் முன்னிலை வகித்து வருகிறார். 

    கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியில், தி.மு.க வேட்பாளர் கணபதி ராஜ்குமார்  2,76,989 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். 

    பா.ஜ.க தலைவர் அண்ணாமலை  2,24,185 வாக்குகள் பெற்றுள்ளார்.

    அ.தி.மு.க-வின்  சிங்கை ராமச்சந்திரன் 1,15,415 வாக்குகள் பெற்றுள்ளார்.

    நாம் தமிழர் கட்சி 36,050 வாக்குகள் பெற்றுள்ளது. 

     



  • Jun 04, 2024 15:07 IST
    கோவை மக்களவை தொகுதியில், 7வது சுற்று முடிவில் 

    தி.மு.க 1,75927
    பா.ஜ.க 1,42187
    அ.தி.மு.க 74,549
    நாம் தமிழர் 2,5248

    தற்போதைய நிலவரப்படி பா.ஜ.க.வேட்பாளர் அண்ணாமலையை விட தி.மு.க.வேட்பாளர் கணபதி ராஜ்குமார்  33740 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார். 



  • Jun 04, 2024 14:48 IST
    பொள்ளாச்சி மக்களவை தொகுதி 8வது சுற்று நிலவரம்

    பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி ஐந்து சுற்றுகள் முடிவில், திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி.கே, 1,93562 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளது. 

    8  சுற்றுகள் முடிவில் மொத்தம் திமுக 1,93,562 வாக்குகளும், அதிமுக 1,22,150 வாக்குகளும், பாஜக 90788 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி 22360 வாக்குகள் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 71,327 வித்தியாத்தில் தி.மு.க முன்னிலை வகித்து வருகிறது. 



  • Jun 04, 2024 14:46 IST
    கோவையில் 25 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க முன்னிலை

    கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி ஐந்து சுற்றுகள் முடிவில், திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 25,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை உள்ளார். 

    ஐந்து சுற்றுகள் முடிவில் மொத்தமாக திமுக 1,27,784 வாக்குகளும், பாஜக 1,02,784 வாக்குகளும், அதிமுக 53,811 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி 18,380 வாக்குகளும் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Jun 04, 2024 14:45 IST
    பா.ஜ.க-வுடன் சவாலில் ஜெயித்த தி.மு.க: கோவையில் சொன்னபடி மட்டன் பிரியாணி விருந்து

    கோவை தேர்தல் பிரச்சாரத்தின் போது, தி.மு.க பா.ஜ.க இடையே பல்வேறு விமர்சனங்கள் ஏற்பட்டது. அப்போது, அண்ணாமலையை கேலி செய்யும் விதமாக ஆடு வெட்டி பிரியாணி போடுவோம் என அறிவித்தனர்.

    மேலும் படிக்கவும்: பா.ஜ.க-வுடன் சவாலில் ஜெயித்த தி.மு.க: கோவையில் சொன்னபடி மட்டன் பிரியாணி விருந்து



  • Jun 04, 2024 14:43 IST
    அண்ணாமலையை ஜெயித்த மகிழ்ச்சி: கொண்டாட்டத்தை தொடங்கிய கோவை தி.மு.க

    தி.மு.க தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதால் கோவை மாநகரத்தின் பல்வேறு பகுதிகளில் தி.மு.க-வினர் பட்டாசுகள் வெடித்து இனிப்புகளை வழங்கி வருகின்றனர்.

    மேலும் படிக்கவும்: அண்ணாமலையை ஜெயித்த மகிழ்ச்சி: கொண்டாட்டத்தை தொடங்கிய கோவை தி.மு.க

     



  • Jun 04, 2024 13:52 IST
    பொள்ளாச்சி தொகுதியில்  6வது சுற்று முடிவில் 

    திமுக ஈஸ்வர சாமி - 144841

    அதிமுக கார்த்திகேயன் - 93293

    பாரதிய ஜனதா வசந்தகுமார் 66354

    நாதக   சுரேஷ்குமார் - 18011



  • Jun 04, 2024 13:35 IST
    கோவையில் தி.மு.க முன்னிலை: தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம் 

    கோவை மக்களவை தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலையை விட திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார், நான்காவது சுற்றில் 22,389 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார். 

    தி.மு.க தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதால் கோவை மாநகரத்தின் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் பட்டாசுகள் வெடித்து இனிப்புகளை வழங்கி வருகின்றனர்.  இதன் தொடர்ச்சியாக காந்திபுரம் அண்ணா சிலை அருகே திமுக கோவை மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்திக் தலைமையில் பட்டாசுகள் வெடித்து கொண்டாடி வருகின்றனர். தொடர்ந்து காந்திபுரம் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.



  • Jun 04, 2024 12:47 IST
    அ.தி.மு.க-வை முந்திய அண்ணாமலை... 3 சுற்றுகள் முடிவில் கோவையில் தி.மு.க முன்னிலை! 

    கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி மூன்று சுற்றுகள் முடிவில், திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 19,005 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார். 

    மூன்று சுற்றுகள் முடிவில் மொத்தமாக திமுக 80,040 வாக்குகளும், பாஜக 61,035 வாக்குகளும், அதிமுக 33,883 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி 10,858 வாக்குகளும் பெற்றுள்ளனர். 



  • Jun 04, 2024 12:10 IST
    கோவை மக்களவை தொகுதி மூன்றாம் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவுகள் 

    கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி

    தி.மு.க 3602
    அதிமுக 1175
    பாஜக 2835
    நாம் தமிழர் 472

    கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி 

    திமுக 3290
    அதிமுக 1889
    பாஜக 2956
    நாம் தமிழர் 507

    பல்லடம் சட்டமன்ற தொகுதி 

    திமுக 5311
    அதிமுக 2157
    பாஜக 3113
    நாம் தமிழர் 862



  • Jun 04, 2024 11:41 IST
    கோவை தொகுதி 2வது சுற்று முடிவு - தி.மு.க அதிரடி முன்னிலை

    கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியில், தி.மு.க வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 26,311 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். 

    பா.ஜ.க தலைவர் அண்ணாமலை  21,298 வாக்குகள் பெற்றுள்ளார்.

    அ.தி.மு.க-வின்  சிங்கை ராமச்சந்திரன் 10,525 வாக்குகள் பெற்றுள்ளார்.

    நாம் தமிழர் கட்சி 3, 433 வாக்குகள் பெற்றுள்ளார். 



  • Jun 04, 2024 11:33 IST
    தருமபுரியில் சௌமியா அன்புமணி 70,000 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலை: தி.மு.க 2-ம் இடம்

    தருமபுரிதொகுதியில் சௌமியா அன்புமணி 70,000 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். சௌமியா அன்புமணி - 72,761 திமுக ஆர். மணி- 53,379 அ.தி.மு.க அசோகன் - 45,473  வாக்குகள் பெற்றுள்ளனர். 

    மேலும் படிக்கவும்:-  Tamilnadu Loksabha Election Results 2024 Live Updates



  • Jun 04, 2024 11:09 IST
    கோவையில் தி.மு.க முன்னிலை 

    கவுண்டம்பாளையம் 4வது சுற்று முடிவில், 

    திமுக- 4964
    அதிமுக- 1189
    பாஜக- 4447



  • Jun 04, 2024 11:08 IST
    கோவையில் தி.மு.க முன்னிலை 

    கோவை சூலூர் 3வது சுற்று முடிவில், 

    திமுக- 8685
    அதிமுக- 4710
    பாஜக- 6784



  • Jun 04, 2024 10:33 IST
    கோவையில் தி.மு.க முன்னிலை 

    கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியில், தி.மு.க வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 72 670வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். 



  • Jun 04, 2024 10:28 IST
    கோவையில் ஆதிக்கம் செலுத்தும் தி.மு.க - அண்ணாமலை பின்னடைவு 

    கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியில் 10:12 மணி நிலவரப்படி, தி.மு.க வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 45,536 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். 

    பா.ஜ.க தலைவர் அண்ணாமலை 29, 877 வாக்குகள் பெற்றுள்ளனர். 

    அ.தி.மு.க-வின்  சிங்கை ராமச்சந்திரன் 20, 853 வாக்குகள் பெற்றுள்ளனர். 



  • Jun 04, 2024 10:12 IST
    தி.மு.க வேட்பாளர் முன்னிலை!

    கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி முதல் சுற்று முடிவில் தி.மு.க வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 7400 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். 

    கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்கு எண்ணிக்கை பணிகள் துவங்கி உள்ளது. முதல் சுற்று முடிவில் கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியில் 7,400 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க வேட்பாளர் முன்னிலை வகித்து வருகிறார். 

    முதல் சுற்று முடிவில் திமுக 27,269 வாக்குகளும், பா.ஜ.க 19,869 வாக்குகளும், அ.தி.மு.க 12,871 வாக்குகளும் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Jun 04, 2024 10:11 IST
    மீண்டும் முன்னிலை எடுத்த தி.மு.க - கோவை தொகுதி நிலவரம் 

    கோவை மக்களவைத் தொகுதியில் 

    தி.மு.க - ராஜ்குமார் 17255

    அ.தி.மு.க - சிங்கை ராமச்சந்திரன் 6907

    பா.ஜ.க -அண்ணாமலை  8860

    நாம் தமிழர் கட்சி - கலாமணி 241

    திமுக முன்னிலை - வித்தியாசம் - 8395



  • Jun 04, 2024 09:04 IST
    கோவையில் அண்ணாமலை முன்னிலை

    கோவை சூலூர் தொகுதியில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை முன்னிலையில் உள்ளார். 



  • Jun 04, 2024 08:43 IST
    கோவையில் தீவிர சோதனை

    வாக்கு என்னும் மையங்களுக்கு வரும் அனைவரையும்  தீவிர சோதனைக்கு பின்னரே போலீசார் அனுமதித்து வருகின்றனர். குறிப்பாக கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் 1500 காவலர்களும் -  மாநகரத்தில் 1000  காவலர்களும், பொள்ளாச்சி வாக்கு எண்ணும் மையத்தில் 1425 காவலர்களும், மாவட்டத்தில் 600 காவலர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

    குறிப்பாக கோவை நாடாளுமன்ற தொகுதியில் சூலூர், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு,கோவை தெற்கு, சிங்காநல்லூர் மற்றும் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பல்லடம் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.இதில் மொத்தம் 21,06,124 வாக்காளர்கள் உள்ளனர். 26 சுயேட்சைகள் உட்பட மொத்தம் 37 வேட்பாளர்கள் போட்டியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.



  • Jun 04, 2024 08:43 IST
    தி.மு.க கூட்டணி முன்னிலை

    தமிழகத்தில் மதுரை, நாகப்பட்டினம், திருச்சி, நீலகிரி, காஞ்சிபுரம் சென்னை, வடசென்னை, தூத்துக்குடி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், ஸ்ரீபெரும்புதூர் தொகுதிகளில் தபால் வாக்கில் தி.மு.க கூட்டணி முன்னிலையில் உள்ளது. 



  • Jun 04, 2024 08:24 IST
     வாக்கு எண்ணும் பணியில் 373 அலுவலர்கள்

    கோவை வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதை ஒட்டி  பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன.மேலும் வாக்கு எண்ணும் மையத்தில் நான்கு அடுக்கு பாதுகாப்பில் மத்திய படை மற்றும் மாநில காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், உள்ளே செல்போன் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக கோவை மக்களவைத் தொகுதி பொருத்தவரை 23 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படும் என்றும் தபால் ஓட்டுக்கு 7 மேசைகளும் மின்னணு வாக்கு எண்ணிக்கைக்கு 94 மேசைகளும் அமைக்கப்பட்டுள்ளது.

    வாக்கு எண்ணும் மையத்தில் 373 அலுவலர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ளனர். மேலும், ஒவ்வொரு மூன்று தொகுதிக்கும் இரண்டு மேற்பார்வையாளர்கள் விதம் ஒரு மக்களவைத் தொகுதிக்கு இரண்டு அதிகாரிகள் இந்திய தேர்தல் ஆணையம் மூலமாக நியமனம் செய்யப்பட்டிருந்தது. வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகம் மூலம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. வாக்கு எண்ணிக்கை தேவையான அனைத்து பொருள்களும் வாக்கு என்னும் மையங்களில் தயார் நிலையில் உள்ளன. 



  • Jun 04, 2024 08:22 IST
    கோவை  அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை 

    கோவை மாவட்டத்தை பொறுத்தவரை, கோவை பொள்ளாச்சி என இரண்டு மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற்றது. 

    இதைத் தொடர்ந்து கோவை தொகுதியில் பதிவான வாக்குகள் கோவை அரசு தொழில் நுட்பக் கல்லூரியிலும், பொள்ளாச்சி தொகுதியில் பதிவான வாக்குகள் மகாலிங்கம் கல்லூரில் வாக்கு என்னும் மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தது. 

    இந்நிலையில், இன்று கோவை தடாகம் சாலையில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தில்  வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.



  • Jun 04, 2024 08:11 IST
    பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பிறந்த நாள்: வெற்றியை தன்வசப்படுத்துவாரா ?

    தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு இன்று பிறந்த நாள். அவர் போட்டியிடும் கோவை தொகுதி அதிக கவனம் பெற்றுள்ளது. இந்நிலையில் அவர் பிறந்த நாளில், அவருக்கு நல்ல செய்தி கிடைக்குமா ? என்று அவரது கட்சியினர் காத்திருக்கின்றனர்.  



  • Jun 04, 2024 06:52 IST
    கோவை தொகுதி அதிமுக, நாதக வேட்பாளர்கள் சொத்து விவரம் என்ன?

    அதிமுக வேட்பாளர் சிங்கை ஜி.ராமச்சந்திரன் அசையும் சொத்து தனது பெயரில் ரூ.1 கோடியே 14 லட்சத்து 9,023, மனைவி ஸ்ருதி பெயரில் ரூ.1 கோடியே 2 லட்சத்து 65,320 மதிப்பிலும், அசையா சொத்துக்கள் முறையே ரூ.12 லட்சத்து 58 ஆயிரம் மற்றும் ரூ.20 லட்சத்து 100 மதிப்பிலும் இருப்பதாக வேட்புமனுவில் தெரிவித்துள்ளார்.

    நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கலாமணி தனது பெயரில் அசையும் சொத்துக்கள் ரூ.47 லட்சத்து 49,024 மதிப்பிலும், கணவர் ஜெகநாதன் பெயரில் ரூ.34 லட்சத்து 14,830 மதிப்பிலும் இருப்பதாகவும், அசையா சொத்துக்கள் எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.



  • Jun 04, 2024 06:52 IST
    வாக்கு எண்ணும் பணிக்கு தயார் நிலையில் கோவை ஜிசிடி வளாகம்

    கோவை மக்களவை தொகுதிக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி ஜிசிடி வளாகத்தில் மேற்கொள்ளப்படுகிறது. இவிஎம் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம் தொடர்ந்து 24 மணி நேரம் சிசிடிவி கேமராக்கள் உதவியுடன் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    தவிர வளாகம் முழுவதும் போலீஸார் பாதுகாப்பு பணி மேற்கொண்டுள்ளனர். ஜிசிடி வளாகத்துக்கு உள்ளே செல்லும் பணியாளர்கள் சோதனை செய்த பின் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். வாக்கு எண்ணும் பணிக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.



  • Jun 04, 2024 06:52 IST
    கோவை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள்

    கோவை மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக, அதன் தமிழக தலைவர் அண்ணாமலை, திமுக சார்பில் முன்னாள் மேயரும், மாநகர் மாவட்ட அவைத் தலைவருமான கணபதி ப.ராஜ்குமார், அதிமுக வேட்பாளராக சிங்கை ஜி.ராமச்சந்திரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்



coimbotore Pmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment