COVID-19 Virus in Chennai: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17,728-ஆக அதிகரித்துள்ள நிலையில், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 127 ஆக உயர்ந்துள்ளது.
Corona Virus Cases in Tamil Nadu Today Reports: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17,728-ஆக அதிகரித்துள்ள நிலையில், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 127 ஆக உயர்ந்துள்ளது.
Advertisment
தமிழகத்தில் மேலும் 646 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17,728-ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. நாட்டிலேயே கொரோனா பரிசோதனை அதிகம் மேற்கொள்ளும் மாநிலங்களின் வரிசையில் முதலிடத்தில் தமிழகம் தான் உள்ளது.
இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழகத்தில் இன்று (மே.25) மேலும் புதிதாக 646 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 17,082-ல் இருந்து 17,728 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் மேலும் 509 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அங்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 11,640ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 611 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 8,731 லிருந்து 9,342 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 9 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ள நிலையில், இறப்பு எண்ணிக்கை 127ஆக அதிகரிப்பு.
தமிழகத்தில் 12 வயதிற்குட்பட்ட 1,088 சிறார்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 13-60 வயதிற்குட்பட்ட 9,685 ஆண்கள், 5,415 பெண்கள் என மொத்தம் 15,105 பேருக்கு தொற்று. 60 வயதிற்குட்பட்ட 952 ஆண்கள், 583 பெண்கள் என மொத்தம் 1,535 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil