Advertisment

தமிழ்நாட்டை திணறடித்த கஜ புயல்: 2 நாள் நிகழ்வுகள் முழு அப்டேட்

Gaja Cyclone in TN : கஜ புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை நேரில் பார்வையிட்ட பின்னர் மீனவர்களுக்கு நிதி உதவி வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Cyclone Fani Name Fact Checking

Cyclone Fani Name Fact Checking

Gaja Cyclone Landfall : கஜ புயல் முன்னெச்சரிக்கை மற்றும் மீட்புப் பணிகள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்திருக்கின்றன. தமிழக வரலாற்றில் இத்தனை எதிர்க்கட்சிகள் ஆளும் அரசின் நடவடிக்கையை பாராட்டியிருப்பது இதுதான் முதல் முறை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆகியோரைத் தொடர்ந்து வேறு சில தலைவர்கள் தெரிவித்த கருத்துகள் இங்கே: மேலும் படிக்க : தமிழ்நாட்டில் மழை எப்போது பெய்யும் - வெதர்மென் கணிப்பு

Advertisment

Gaja Cyclone Landfall Live Updates

5:00 PM: நாகை மாவட்டம், கோடியக்கரைக்கு மீட்பு பணிக்கு சென்ற 16 விமானப்படை வீரர்கள் பாதுகாப்பாக இருப்பதாக தேசிய பேரிடர் மீட்பு படையினர் உறுதி செய்துள்ளனர்.

4:45 PM: அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில், ‘குறை உள்ளபோது எதிர்க்கட்சிகள் அதனை சுட்டிக்காட்டுவதும், சிறந்த பணி மேற்கொள்ளும்போது வாழ்த்துவதும், அரசிற்கு உற்சாகத்தை தரும் வகையில் உள்ளது’ என்றார். மேலும் படிக்க : துரித கதியில் நடைபெற்று வரும் மீட்புப் பணிகள்

4:40 PM: கஜ புயல் முன்னெச்சரிக்கை மற்றும் மீட்புப் பணிகள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்திருக்கின்றன. தமிழக வரலாற்றில் இத்தனை எதிர்க்கட்சிகள் ஆளும் அரசின் நடவடிக்கையை பாராட்டியிருப்பது இதுதான் முதல் முறை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆகியோரைத் தொடர்ந்து வேறு சில தலைவர்கள் தெரிவித்த கருத்துகள் இங்கே:

மார்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்: கஜ புயல் முன்னெச்சரிக்கை தொடர்பாக தமிழக தமிழக அரசின் பேரிடர் குறித்த முன்னெச்சரிக்கை மற்றும் முன் தயாரிப்பு பணிகள் பாரட்டுக்குரியவை.

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்: தமிழக அரசு மேற்கொண்ட புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வரவேற்புக்குரியது.

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்: போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுவரும் தமிழக அரசு, அமைச்சர்கள் மற்றும் துறை அதிகாரிகளுக்கு என் பாராட்டுக்கள்.

அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: கஜ புயலால் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

திமுக எம்.பி. கனிமொழி: கஜ புயலுக்கு எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் தமிழக அரசு எடுக்கவில்லை.

03 :00 PM : ஆட்சியாளர்களின் அயராத உழைப்பிற்கு பாராட்டுகள் கூறிய கமல் ஹாசன்

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் பேரிடர் காலங்களில் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்ட தமிழக அரசிற்கு நன்றியினை கூறியிருக்கிறார்.

02:00 PM : முதல்வருடன் பேசிய மத்திய உள்துறை அமைச்சர்

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் புயல் நிலவரம் குறித்து அலைபேசியில் பேசி தெரிந்து கொண்டார். அது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருக்கிறார் ராஜ்நாத் சிங். அதில் “ மாநில அரசிற்கு தேவையான அனைத்துவிதமான உதவிகளையும் மத்திய அரசு விரைந்து செய்யும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

01:00 PM : பேராவூரணி பகுதியில் கஜவின் தாக்கம்

 12:45 PM : ஸ்டாலின் பாராட்டு

மாநில பேரிடர் மேலாண்மைக் குழுவின் முன்னேற்பாடுகள் பாராட்டுதலுக்குரியது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்திருக்கிறார். மேலும் திமுகவினர் அரசு மீட்புக் குழுவினருடன் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபடுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார்.

12:30 PM : பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு

கஜ புயலால் பலியானவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது. தஞ்சை மாவட்டத்தில் 4 பேரும், கடலூர் மாவட்டத்தில் 3 பேரும், புதுக்கோட்டையில் 2 பேரும், திருவாரூரில் 2 பேரும் திருச்சியில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

12:20 PM : மீட்புப் பணிகளுக்குச் சென்ற ராணுவ வீரர்கள் எங்கே ?

கோடியக்கரை பகுதி மற்ற இடங்களில் இருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகளுக்காக சென்ற 16  விமானப் படை வீரர்களின் நிலை குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

11:45 AM : சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும்

கஜ புயல் ஏற்படுத்திய சேதங்களை கணக்கிட இனிமேல் தான் பணி மேற்கொள்ளப்படும் என்றும் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்றும் வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் கூறியிருக்கிறார்.

11:10 AM : 102 துணை மின் நிலையங்கள் பாதிப்பு

கஜ புயலால் தமிழகத்தில் துணை மின் 102 துணை மின் நிலையங்கள் பாதிப்பிற்கு உள்ளாகியதாக மின்சார வாரியம் அறிவித்திருக்கிறது.

11:00 AM : மீனவர்களுக்கு நிதி உதவி

கஜ புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை நேரில் பார்வையிட்ட பின்னர் மீனவர்களுக்கு நிதி உதவி வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார்.

10:50 AM : உயிரிழந்தோர் குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரண நிதி

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தற்போது செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகிறார். இந்த புயலிற்கு இது வரையில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்களை அளித்திருக்கிறார். உயிரிழந்தோர் குடும்பத்திற்கு 10 லட்சம் நிதி உதவியும், படுகாயம் அடைந்தவர்களுக்கு 1 லட்சம் நிதி உதவியும், சிறு காயங்களுக்கு 25 ஆயிரம் வரை நிதி உதவியும் வழங்கப்படும் என்று கூறியிருக்கிறார்.

மேலும் படிக்க : கஜ புயல் தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பு

10:40 AM : சட்டக் கல்லூரிகள் தேர்வுகள் ஒத்திவைப்பு

இன்று நடைபெற இருந்த சட்டக் கல்லூரி தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அம்பேத்கார் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்திருக்கிறது.

10:30 AM : வருவாய்த் துறை அமைச்சர் ஆர். பி. உதயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பு

10:00 AM : புயல் தாக்கிய வேளாங்கண்ணி பகுதியில் மாதா கோவில் சேதம்

கஜ புயல் சூறையாடிய பகுதிகளில் ஒன்றான வேளாங்கண்ணி பகுதியில் உள்ள மாதா கோவிலில், கட்டிடங்கள் மற்றும் சிலைக்ள் சேதமடைந்துள்ளது. சுனாமிக்கு பிறகு வேளாங்கண்ணி கோவில் சந்தித்த அடுத்த இயற்கை சேதம் இது தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

09: 56 AM : 12 ஆயிரம் மின்கம்பங்கள் சேதம்

தஞ்சை, நாகை மற்றும் திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 12 ஆயிரம் மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளது. இதனை சீர் செய்யும் பணியில் பேரிடர் மீட்பு படையினர் களமிறங்க தொடங்கியுள்ளனர்.

09.37 AM : முழுமையாக கரையை கடந்தது கஜ புயல்

அதிராம்பட்டினம் பகுதியில் 100 கிமீ முதல் 110 கிமீ வேகத்தில் கஜ புயல் முழுமையாக கரையை கடந்தது என்று வானிலை ஆய்வு மையம் இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்தார். மேலும் காலை 11 மணியளவில் இப்புயல் காற்றழுத்த தாழ்வுமண்டலமாக மாறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

09:20 AM : தீவிர புயல் வலிவிழந்து புயலாக மாறியுள்ளது

அதி தீவிர புயலாக சுழற்றியடித்த அதி தீவிர கஜ புயல் தற்போது வலுவிழந்து தீவிர புயலாக மாறியுள்ளது.

09:14 AM : மின்சாரம் சீராக 2 நாட்கள் ஆகும்

நாகை உட்பட கஜ புயல் தாக்கியது பல்வேறு பகுதிகளில் மின்கம்பங்கள் சரிந்துள்ளதால், சீரான மின்சார சேவை திரும்ப இரண்டு நாட்கள் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

09:05 AM : 11 பேர் உயிரிழப்பு

கஜ புயல் காரணமாக இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். பட்டுக்கோட்டை அருகே இருக்கும் சிவக்கொல்லை பகுதியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் ரமேஷ், சதீஸ், அய்யாதுறை, தினேஷ் ஆகியோர் உயிரிழந்தனர். கடலூர் மாவட்டத்தில் இருவரும் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒருவரும் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

09:00 AM : பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

புயல் மற்றும் கனமழை எதிரொலியால் தமிழகத்தில் 17 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை. 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. மேலும் படிக்க : எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது ?

08: 30 AM : பாம்பனில் தொடங்கியது போக்குவரத்து

கடலூர் மற்றும் பாம்பனுக்கு இடையே புயல் கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டதால் பாம்பன் பாலத்தில் போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டிருந்தது. இன்று காலை முதல் பாம்பனில் போக்குவரத்து தொடங்கியது.

08 : 25 AM : கொடைக்கானலில் மண் சரிவு

பழனி - கொடைக்கானல் செல்லும் வழியில் அமைந்திருக்கும் ஆணைகிரி சோலை பகுதியில் மண் சரிவு ஏற்பட்டிருப்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருக்கிறது.

08: 00 AM : தற்போதைய நிலை

நேற்று நள்ளிரவு கரையைக் கடந்து கஜ புயல்... மீட்புப் பணிகள் அதி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பல்வேறு இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது. உட்புற மாவட்டங்களிலும் பலத்த சேதத்தினை உருவாக்கியிருக்கிறது கஜ புயல்.

Gaja Cyclone Landfall, TN Cyclone and Weather Today

publive-image

01:27 AM - நாகை மாவட்டம் ஆட்சியர் சுரேஷ் குமார் கூறுகையில், "நாகை மாவட்டம் முழுவதும் பலத்த காற்று மற்றும் மழை பெய்து வருகிறது. இதுபோன்று பாதிப்புகள் ஏற்படும் என்று முன்பே நமக்கு தெரிந்து இருந்ததால், அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. புயல் கடந்த பிறகு, பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு உடனுக்குடன் சரி செய்யப்படும்" என்றார்.

01:23 AM - நாகை மாவட்டத்தில் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. தொலைத் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

01:13 AM - காற்றின் வேகம் குறைந்தால் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்.. புயல் முற்றிலும் கரையைக் கடந்து சென்றுவிட்டது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்த பின்பு, வெளியே வந்தால் போதும் என்று வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தற்போது அறிவித்துள்ளார்.

01: 07 AM : திருவாரூர், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி ஆகிய பகுதிகள் கன மழை பெய்து வருகிறது.

01: 02 AM : கஜ புயலின் கண் பகுதியின் முதல் பாகம் கரையைத் தொட்டுள்ளது என வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்தார். அடுத்த ஒரு மணி நேரத்திற்கு இந்த கண் பகுதி கரையைக் கடக்கும் என தெரிவித்துள்ளார்.

01:00 AM : கஜ புயலினால் வேதாரண்யம் பகுதியில் உள்ள பல வீடுகளின் கூரைகள் சேதம் அடைந்துள்ளது.

12:50 AM: நாகையில் சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. மரங்களை அகற்றும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

12:35 AM : வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தற்போது செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில், "புயலின் முன் பகுதி கரையை கடக்கத் தொடங்கியுள்ளது. இன்னும் சில நேரத்தில் புயலின் மையப் பகுதி கரையை தொடங்கும்.

முன் பகுதி - அதிவேக காற்று வீசும்.

கண் பகுதி - பலத்த மழை பெய்யும்.

பின் பகுதி - மீண்டும் அதிவேக காற்று வீசும்

என்று தெரிவித்துள்ளார்.

கண் பகுதி கரையை கடக்கும் போது காற்று இருக்காது. மழை மட்டுமே இருக்கும். அதை நம்பி மக்கள் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது. ஏனெனில், பின் பகுதி கடக்கும் போது மீண்டும் அதிவேக காற்று வீசும்.

12:25 AM : கஜா புயல் கரையைக் கடக்க தொடங்கியதால் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என பேரிடர் மேலாண் துறை அறிவித்துள்ளது.

12:15 AM : வேதாரண்யத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

12:00 AM : புயலின் முன்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்கத் தொடங்கியது. 110 கி.மீ வேகத்தில் காற்று வீசத் தொடங்கியிருக்கிறது.

11:15 PM : ராமேஸ்வரம், பாம்பன் & அதன் சுற்றுவட்டார இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பாம்பன் சுற்றுவட்டார இடங்களில் பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது. கஜா புயலில் வெளி விளிம்பு கரையை தொட்ட நிலையில் சூறைக்காற்று அதிகளவில் வீசி வருகிறது.

11:00 PM : நள்ளிரவில் நாகைக்கு தெற்கே கஜா புயல் கரையை கடக்கும். அது கரையைக் கடக்கும்போது 100 - 110 கி.மீ வேகத்திலும், சில நேரத்தில் 120 கி.மீ வேகத்திலும் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கஜா புயலின் வேகம் தற்போது மணிக்கு 15 கிலோ மீட்டராக உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

10:50 PM : சென்னை மெரீனா கடற்கரையில் பலத்த காற்று. பொதுமக்கள் முற்றிலுமாக அப்புறப்படுத்தபட்டு உள்ளனர்.

10:40 PM : நாகையின் கிழக்கே 85 கி.மீ தொலைவில் கஜா புயல் மையம் கொண்டுள்ளது. 16 கி.மீ வேகத்தில் நகரும் கஜா புயல் நாகைக்கு தெற்கே கரையைக் கடக்கக்கூடும் - இந்திய வானிலை ஆய்வு மையம்

10:30 PM : திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் நாளை நடக்கவிருந்த தேர்வுகள் டிச.17ம் தேதிக்கு ஒத்திவைப்பு.

10:20 PM : வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரையில் பலத்த சூறைக்காற்று வீசத் தொடங்கியுள்ளது. கஜ புயலில் வெளி விளிம்பு கரையை தொட்ட நிலையில் சூறைக்காற்று வீசி வருகிறது.

10:00 PM : தற்போதைய நிலவரப்படி, நாகையில் இருந்து 95 கி.மீ தொலைவில் கஜ புயல் மையம் கொண்டுள்ளது.

09:50 PM : கடலூர், நாகை, ராமநாதபுரம், தஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் 262 முகாம்கள் செயல்பட தொடங்கின. 14330 குடும்பங்களை சேர்ந்த 55,078 பேர் முகாம்களில் தஞ்சம். முகாம்களில் இருப்போருக்கு உணவு மற்றும் மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

09:35 PM : கஜ புயலை முன்னிட்டு, நாளை நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த தேர்வு டிசம்பர் 13ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

09:15 PM : திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டையில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது. மக்கள் அருகே உள்ள பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

09:05 PM : வானிலை மைய இயக்குனர் தற்போது செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "தற்போதைய நிலவரப்படி, நாகையில் இருந்து 125 கி.மீ தொலைவில் கஜ புயல் மையம் கொண்டுள்ளது. புயலின் கண் பகுதி 26 கி.மீ வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. புயலின் வேகம் 11 கி.மீ வேகத்தில் உள்ளது. நாகைக்கு தெற்கே புயல் கரையை கடக்கும். கரையை கடக்கும் போது, தீவிர புயலாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

08:50 PM : "புயல் கரையை கடக்கும் போது காற்றின் வேகம் திடீரென்று குறையும், அதனால் புயல் கடந்துவிட்டதாக எண்ண வேண்டாம், மந்த நிலைக்கு பின் மீண்டும் சூறைக்காற்று வீசும். இந்திய வானிலை ஆய்வு மையத்திலிருந்து புயல் கடந்துவிட்டது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை மக்கள் வெளியில் செல்ல வேண்டாம்" என பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது.

08:40 PM : நாகை மாவட்டம் மயிலாடுதுறை, குத்தாலம், மணல்மேடு, மங்கைநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்கிறது. வேதாரண்யம், தோப்புத்துறை, ஆறுகாட்டுத்துறை உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்கிறது. திருவாரூர், ஆண்டிபந்தல், சன்னாநல்லூர், நன்னிலம், குடவாசல், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டையிலும் மழை பெய்து வருகிறது.

08:25 PM : புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரியில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் - கல்லூரி முதல்வர்

08: 15 PM : பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சந்தித்தார். 10க்கும் மேற்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை அவர் சந்தித்து வருகிறார்.

publive-image

08:05 PM : தற்போதைய நிலவரப்படி, நாகையில் இருந்து 125 கி.மீ தொலைவில் கஜ புயல் மையம் கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

07:55 PM : கஜ புயல் எச்சரிக்கையை தொடர்ந்து காரைக்குடி அழகப்பா பல்கலை. இணைப்புக் கல்லூரிகளில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் ரத்து. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் - பல்கலை. பதிவாளர் அறிவிப்பு

07:45 PM : கஜ புயல் நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே கரையை கடக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளதால், கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் வேதாரண்யம் MLA அலுவலகத்திலேயே தங்கி உள்ளார். அவசர உதவிக்கு 04369 250777 தொடர்பு கொள்ளலாம்.

வேதாரண்யம் MLA அலுவலகம் 04369 250777, 9445279199, 9444777555 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.

07:32 PM : கஜ புயலை முன்னிட்டு, 5 மாவட்டங்களில் உள்ள 40 முகாம்களில் 12,398 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

07:22 PM : கஜ புயலை முன்னிட்டு, நாளை நடைபெறவிருந்த பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வு, நவ.22ம் தேதி நடைபெறும் என்று தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

07:20 PM : நாகையில் இருந்து 135 கி.மீ தொலைவில் கஜ புயல் நெருங்கி வந்துள்ளது என வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

07:15 PM : கஜ புயல் நகரும் வேகம் மணிக்கு 16.8 கி.மீட்டரில் இருந்து 10 கி.மீட்டராக குறைந்தது - சென்னை வானிலை ஆய்வு மையம்

07:05 PM : 'சுமார் 25 வருடங்களுக்குப் பிறகு, டெல்டா பகுதிகளை நோக்கி வரும் ஆபத்தான புயல் கஜ' என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

06:50 PM : தற்போதைய நிலவரப்படி, நாகையில் இருந்து 138 கி.மீ தொலைவில் கஜ புயல் மையம் கொண்டுள்ளது. 10 கி.மீ தொலைவில் புயல் நகர்ந்து வருகிறது. புயலின் வெளிப் பாகம் கரையைத் தொட்டுள்ளது. காரைக்காலில் மழை தொடங்கியுள்ளது. படிப்படியாக வேகம் அதிகரித்து மழையும் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

06:45 PM : தஞ்சை, திருவாரூர், கடலூர், ராமநாதபுரம், நாகை ஆகிய ஐந்து மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.

06:30 PM : திருவாரூர் மாவட்டத்திலும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

06:15 PM: கடலூர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தைத் தொடர்ந்து தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

06:05 PM : நாகையில் இருந்து 155 கி.மீ தொலைவில் கஜ புயல் மையம் கொண்டுள்ளது என மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு,

05: 55 PM : புதுச்சேரி மாநிலத்தை பொறுத்தவரை கஜா புயலை எதிர்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர் முழுவீச்சில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள். கடலோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர் - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

05:43 PM : கஜ புயல் காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் (நவ.16) விடுமுறை அறிவிப்பு.

05: 38 PM : நாகையில் இருந்து 155 கி.மீ தொலைவில் கஜ புயல் மையம் கொண்டுள்ளது. கரையை கடக்கும்போது 80 கி.மீ முதல் 90 கீ.மீ வரை காற்று வீசும். சிலநேரத்தில் 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

05: 33 PM : திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

05:29 PM : கஜ புயல் காரணமாக, கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதால் அணைகளை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

05:19 PM : புதுச்சேரி மாநிலத்திலும் நாளை நவ.16) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

05: 15 PM: காரைக்கால் மாவட்டத்திலும், நாளை (நவ.16) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்ட ஆட்சியர் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

05: 10 PM : கஜ புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் (நவ.16) விடுமுறை அறிவிப்பு. நாகப்பட்டினத்தில் ஏற்கனவே நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

05:00 PM : கஜா புயல் நாகையின் வடகிழக்கே 160 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. கரையை கடக்கும்போது 80 கி.மீ முதல் 90 கி.மீ வரை காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

04:30 PM : நாகையில் இருந்து 217 கி.மீ. தொலைவில் கஜ புயல்

நாகையில் இருந்து 217 கி.மீ. தொலைவில் கஜ புயல் நிலைக் கொண்டுள்ளது. இரவு 8 முதல் 11 மணிக்குள் கஜ கரையை கடக்கலாம். மணிக்கு 22 கி.மீ. வேகத்தில் வந்துகொண்டிருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

03:30 PM : அவசர கால உதவி எண்கள் அறிவிப்பு

நாகை மாவட்டத்தில் புயல் கரையைக் கடக்க இருப்பதால் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றன. மேலும் உதவிக்கு அழைக்க அவசர கால சேவை 108 மற்றும் மருத்துவ உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது.

03:15 PM : பேருந்துகள் இயங்காது

புயல் பாதிப்பு அதிகம் இருக்கும் இடங்களாக கண்டறியப்பட்ட 7 மாவட்டங்களில் அரசு பேருந்துகள் இன்று மாலை 6 மணியில் இருந்து நாளை காலை 6 மணி வரை பேருந்துகள் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

03:00 PM : நாகைக்கு வடகிழக்கே 217 கி.மீ தொலைவில் மையம் கொண்டிருக்கும் கஜ. மணிக்கு 20 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது கஜ புயல் என வானிலை ஆராய்ச்சி மையம் கூறியிருக்கிறது.

02:35 PM : மணிக்கு 22 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது கஜ புயல் - வானிலை ஆராய்ச்சி மையம்

02: 30 PM : Gaja Cyclone Landfall Live Updates தொடர்பான தகவல்களை தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இருந்து உடனுக்குடன் பெற

02:20 PM : கஜ புயலின் தற்போதைய நிலவரம்

02:15 PM : 10ம் எண் புயல் கூண்டு ஏற்றம்

நாகை மாவட்டத்தில் 10ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது. கடலூர் துறைமுகத்தில் 9ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது. பாம்பன் மற்றும் குளச்சல் பகுதியில் 8ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்.  புதுச்சேரியில் 9ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டும், சென்னையில் 3ம் புயல் எச்சரிக்கைக் கூண்டும் ஏற்றப்பட்டிருக்கிறது.

மேலும் படிக்க : புயல் எச்சரிக்கை கூண்டு என்றால் என்ன ?

01:20 PM : சீற்றத்துடன் காணப்படும் கடல்

புயலைத் தொடர்ந்து மெரினாவில் கடல் அதிக சீற்றத்துடன் காணப்படுகிறது

Gaja Cyclone Landfall, TN Cyclone and Weather Today மெரினா கடற்கரைப் பகுதியில் சீற்றத்துடன் காணப்படும் கடல்

01:15 PM : ஊழியர்களை வீட்டிற்கு அனுப்ப உத்தரவு

பாதிப்பிற்கு உள்ளாகும் என கணிக்கப்பட்டிருக்கும் மாவட்டங்களில் இருக்கும் தனியார் மற்றும் அரசு அலுவலகங்களில் வேலை செய்துவரும் ஊழியர்களை நான்கு மணிக்கு முன்பு வீட்டிற்கு அனுப்பி வைக்க உத்தரவிட்டிருக்கிறது தமிழக அரசு.

01:00 PM : 5 நாட்களாக கடலுக்குள் செல்லாமல் இருக்கும் மீனவர்கள்

கஜ புயலின் எச்சரிக்கையைத் தொடர்ந்து ஐந்தாவது நாளாக தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்லவில்லை. தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் மீன்பிடித் துறைமுகத்தில் 260 விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.  நடுக்கடலில் மீனவர்கள் யாரும் இல்லை என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்திருக்கிறார்.

மேலும் படிக்க : கஜ புயலை எப்படி எதிர்க்கொள்ள வேண்டும் ?

12:50 PM : அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகள் தேதி மாற்றம்

கஜ புயலின் காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகள் 22ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு

12:45 PM : செங்கல்பட்டில் கனமழை

செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான கூடுவாஞ்சேரி, திருக்கழுக்குன்றம், மறைமலை நகர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 10 மணிக்கு மேல் கனமழை பெய்து வருகிறது.

12:30 PM : கஜ புயலின் வேகம் அதிகரிப்பு

சீரான வேகத்தில் அதிகரித்து வருகிறது கஜ புயலின் வேகம். மணிக்கு 18 கி.மீ வேகத்தில் தொடங்கி, மணிக்கு 25 கி.மீ வேகத்தில் நகர்கிறது கஜ புயல்.

தற்போது நாகைக்கு வடகிழக்கே 290 கி.மீ மற்றும் சென்னைக்கு தென்கிழக்கே 290 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது கஜ புயல்

11. 50 AM : Gaja Cyclone Landfall Live Updates : புயல் காலத்தில் நீங்கள் செய்யக் கூடாதவைகள்

  • பாதிப்பு அடைந்துள்ள கட்டிடத்திற்குள்ளே செல்ல வேண்டாம். பாதிக்கப்பட்டிருக்கும் தளத்திற்கு கீழே நிற்க வேண்டாம்.
  • தெருவில் செல்லும்போது மின்சார கம்பி அல்லது கூர்மையான பொருட்கள் கண்டால் பாதுகாப்பாக செல்லவும்.

மேலும் படிக்க : புயல் காலங்களில் பாதுகாப்பாக இருக்க நீங்கள் செய்ய வேண்டிய முக்கிய விசயங்கள் என்னென்ன ?

11.45 AM : 100 கி.மீ வேகத்தில் காற்று வீசும்

கஜ புயல் தற்போது தென்மேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. பாம்பன் மற்றும் கடலூருக்கும் மத்தியில் கரையைக் கடக்கும் போது 80 - 90 கி.மீ வேகத்தில் தொடங்கி மணிக்கு 100 கி.மீ என்ற வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.

11: 30 AM : மாநில அரசிற்கு தேவையான உதவிகளை செய்ய மத்திய அரசு தயார்

கஜ புயல் காலங்களில் மாநில அரசிற்கு தேவையான அனைத்து வகை உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாக மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியிருக்கிறார்.

11:10 AM : ஆறு மாவட்டங்களில் மின் இணைப்பு துண்டிப்பு

கஜ புயலினால் பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ள நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்திருக்கிறார்.

11:00 AM : 370 கி.மீ தொலைவில் இருக்கும் கஜ

நாகை மாவட்டத்திற்கு வடகிழக்கே சுமார் 370 கிலோ மீட்டருக்கு அப்பால் நிலை கொண்டிருக்கிறது கஜ புயல். அடுத்த 6 மணி நேரத்திற்குள் புயல் அதிக வலுப்பெறும் என வானிலை ஆராய்ச்சி மையம் தகவல் தெரிவித்திருக்கிறது.

10:40 AM : புயல் அறிவிப்பு எச்சரிக்கை மையங்கள்

புயல் தொடர்பான எச்சரிக்கை தகவல் மையங்களை சோதனை அடிப்படையில் துவங்கி வைக்கிறார் வருவாய் துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார்.

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் இந்நிகழ்வில் அமைச்சருடன் அதுல்ய மிஸ்ரா, வருவாய் நிர்வாக ஆணையர் சத்திய கோபால், ஆணையர் ராஜேந்திர ரத்னு மற்றும் மீட்பு பிரிவு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Gaja Cyclone Landfall, TN Cyclone and Weather Today மீட்புக் குழு அதிகாரிகளுடன் அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார்

10:20 AM : நள்ளிரவில் கரையைக் கடக்கும் கஜ

இன்று நள்ளிரவு 11.30 மணிக்கு கரையைக் கடக்கிறது கஜ புயல். பாம்பன் மற்றும் கடலூருக்கும் இடையே  கரையைக் கடக்க இருப்பதால் கடலூர், நாகை, தஞ்சை, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம்  போன்ற கடலோரப் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

10:00 AM : மீனவர்களுக்கு எச்சரிக்கை

புயல் கரையைக் கடந்த பின்பு தான் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டும் என அரசு மீனவர்களுக்கு எச்சரிக்கை செய்துள்ளது.

09: 30 AM : இந்திய பேரிடர் மேலாண்மைக் குழுவின் அறிக்கை

புயல் வரும் காலத்தில் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை குறித்த அட்டவணையை வெளியிட்டிருக்கிறது இந்திய பேரிடர் மீட்புக் குழு.

09: 15 AM : மணிக்கு 14 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் கஜ

தற்போதைய நிலவரப்படி மணிக்கு 14 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் கஜ இன்று மாலை அல்லது இரவு கரையைக் கடக்கும் என்று தகவல் தெரிவித்திருக்கிறது இந்திய வானிலை மையம்.

08:40 AM : சென்னையில் மழை

கஜ புயல் எதிரொலி : கஜ புயலின் காரணமாக சென்னையில் இன்று காலை முதலே பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்யத் தொடங்கியது.

08:25 AM : புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்

கஜ புயலின் எதிரொலி காரணமாக சென்னை, எண்ணூர், கடலூர், நாகை, பாம்பன், தூத்துக்குடி, மற்றும் புதுச்சேரி துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் செய்யப்பட்டுள்ளது.

08:20 AM : கஜ எங்கே நிலை கொண்டிருக்கிறது ?

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கைப்படி கஜ புயல் சரியாக சென்னைக்கு தென்கிழக்கே 380 கி.மீ தொலைவிலும், நாகைக்கு வடகிழக்கே 400 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. மணிக்கு 8 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

08:15 AM : பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரித் தேர்வுகள் ஒத்திவைப்பு

கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. அதே போல் பல்வேறு பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.  நேற்று தமிழக அரசு மற்றும் மாவட்ட அரசுகள் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து படிக்க

08:10 AM : ராமேஸ்வரம் செல்லும் ரயில்கள் ரத்து

மதுரை, திருச்சி, சென்னை மற்றும் திருப்பதியில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் ரயில்களுக்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அதே போல் ராமேஸ்வரத்தில் இருந்து கிளம்பும் திருப்பதி மற்றும் கன்னியாகுமரி ரயில்களும் இன்று இயங்காது என தென்னக ரயில்வே அறிவித்திருக்கிறது. மேலும் படிக்க : கஜ புயலின் காரணமாக ரத்து செய்யப்பட்ட ரயில்கள் பட்டியல் ஒரு பார்வை

08:05 AM : தயார் நிலையில் இருக்கும் இந்திய கடற்படை

கஜ புயல் எதிரொலியாய் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது ரன்வீர் மற்றும் கான்ஜார் கப்பல்கள்

08:00 AM : தமிழக அரசு வெளியிட்டிருக்கும் விழிப்புணர்வு வீடியோ

Rain In Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment