கருணாநிதி மறைவு : திமுக கட்சித் தலைவர் மற்றும் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணிக்கு உடல்நலக்குறைவால் காலமானார்.
திமுக தலைவர் கருணாநிதி கடந்த மாதம் 27ம் தேதி முதல் காவேரி மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை நேற்று மாலை மிகப் பெரிய பின்னடைவை சந்தித்தது.
24 மணி நேரம் அவகாசத்திற்கு பிறகே அவரின் உடல்நிலை குறித்த உறுதி தகவல் அளிக்க முடியும் என்று காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.
இந்நிலையில் இன்று மாலை 4.30 மணியளவில், கருணாநிதியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் பதற்றமான சூழல் தமிழகம் முழுவதும் உருவானது. பின்பு மாலை 6.40 மணியளவில், கருணாநிதி உடல்நலக் குறைவால் 6.10 மணிக்கு காலமானார் என்று மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.
கலைஞரின் வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்ள
கருணாநிதி மறைவு - இரங்கல் தெரிவித்த தமிழக முதல்வர்
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய இரங்கல் செய்தியினை வெளியிட்டிருக்கிறார். அதில் கருணாநிதியின் அரசியல் பணி பற்றி பெருமையாக கூறியிருக்கும் முதல்வர் அன்னாரின் இழப்பிற்கு ஆழ்ந்த இரங்கல்களுடன் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனைகள் செய்வதாகவும் கூறியிருக்கிறார்.
டெல்லியில் இருந்து நாளை தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. அது குறித்து அறிந்து கொள்ள
காவேரி மருத்துவமனையில் செய்யப்படும் ஏற்பாடுகள் குறித்த தகவல்களை உடனக்குடன் அறிந்து கொள்ளுங்கள்
கருணாநிதி மறைவு தமிழகத்திற்கு ஏற்பட்ட மிகப்பெரும் இழப்பு என தலைவர்கள் வருத்தம் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.