Advertisment

பொன்முடிக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை: தலைவர்கள் ரியாக்ஷன் ஹைலைட்ஸ்

DMK Ponmudi Case Verdict : பொன்முடி வழக்கு தொடர்பான உடனடி அப்டேட்ஸ்: இந்த லிங்கில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
எரட

DMK Ponmudi Case Verdict : வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட   பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி உள்ளிட்டோருக்கான தண்டனை விவரங்களை இன்று காலை 10.54 மணிக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் அறிவித்தார். 

 சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி  ஜெயச்சந்திரன் முன்பாக பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி   ஆஜரானார்கள். நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு காலை 10.45  மணிக்கு 2வது  வழக்காக விசாரிக்கப்பட்டது 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

  • Dec 21, 2023 22:41 IST
    உச்ச நீதிமன்றத்தில் வாய்ப்பு உள்ளது: ஆர்.எஸ் பாரதி

     

    பொன்முடி வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் எங்களுக்கு வாய்ப்புள்ளது என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி கூறியுள்ளார்.
    மேலும், “பாரதிய ஜனதா ஆட்சியில் அரசியல் பழிவாங்கல் தொடர்ந்து நடந்துவருகிறது” என்றார்.



  • Dec 21, 2023 21:31 IST
    “அறம் வெல்லும், இதையெல்லாம் உச்ச நீதிமன்றத்தில் முன்வைப்போம்“: டிஆர்பி ராஜா


    தமிழக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பொன்முடி வழக்கு குறித்து ட்விட்டரில், “"நீதிபதி ஜெயச்சந்திரன் அப்பழுக்கற்றவர், சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டவர். ஆனால், *** அதிமுக ஆட்சியில் சட்டத்துறை செயலாளராக இருந்துள்ளார் ***. திரு பொன்முடி வழக்கில் சொத்துகள் முடக்கும் கோப்புகளை கையாண்டுள்ளார். இதனை #LatentBias என சட்ட முறையில் கூறுவார்கள். 
    இதை நாங்கள் நீதிபதியிடமே எடுத்துச் சொன்னோம். ”நீங்கள் அப்போதே சொல்லியிருந்தால் கூட நான் வழக்கில் இருந்து விலகியிருக்க மாட்டேன்” என பதிலளித்தார். இது முழுக்க முழுக்க சட்டம் சார்ந்த பிரச்னை. இதையெல்லாம் உச்ச நீதிமன்றத்தில் நாங்கள் முன்வைப்போம்”
    - திரு பொன்முடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் 
    @nrelango_dmk  செய்தியாளர் சந்திப்பு. அறம் வெல்லும்” எனத் தெரிவித்துள்ளார்.



  • Dec 21, 2023 19:51 IST
    திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகள்: வேறோரு மாநிலத்துக்கு மாற்ற கோரிக்கை

     

    “இன்று தண்டனை பெற்றுள்ள அமைச்சர் பொன்முடி மீதான மற்றொரு சொத்து குவிப்பு வழக்கு, விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அதை திடீரென வேலூர் மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றி 2022ல் சென்னை உயர் நீதிமன்றம், அலுவல் ரீதியான உத்தரவை பிறப்பித்தது. அதை தொடர்ந்து சொத்து குவிப்பு வழக்கில் இருந்து பொன்முடி விடுவிக்கப்பட்டார்.

    ஆட்சி அதிகாரம் உள்ளிட்ட அனைத்தையும் பயன்படுத்தி ஊழல் வழக்கிலிருந்து தப்பிக்க பொன்முடி மேற்கொண்ட முயற்சிகளை குறிப்பிட்டு உயர் நீதிமன்றமே அதிர்ச்சி தெரிவித்தது.

    திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளை, திமுக கூட்டணி கட்சிகள் ஆட்சி செய்யாத வேறொரு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும்” என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.



  • Dec 21, 2023 19:38 IST
    பொன்முடிக்கு தண்டனை; தி.மு.க-வுக்கு சனி பெயர்ச்சி தொடக்கம்: ஹெச். ராஜா


    பொன்முடிக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தி.மு.க-வுக்கு சனி பெயர்ச்சி தொடக்கம் என பாஜக மூத்தத் தலைவர் ஹெச். ராஜா கூறியுள்ளார்.



  • Dec 21, 2023 19:33 IST
    ஊழல் தன்னை மட்டுமல்ல,  தன் குடும்பத்தையும் பாதிக்கும்: நாராயணன் திருப்பதி

    “தான் செய்கின்ற ஊழல் தன்னை மட்டுமல்ல,  தன் குடும்பத்தையும் பாதிக்கும் என்பதை பொன்முடி மற்றும் அவரின் மனைவிக்கு  எதிரான இன்றைய தீர்ப்பின் மூலம்  அரசியல்வாதிகள் அறிந்து கொள்ள வேண்டும். அவர் செய்த தவறினால் சட்ட ரீதியாக அவர் மனைவியும் தண்டிக்கப்பட்டுள்ளது அரசியல்வாதிகளுக்கும், அரசியல்வாதிகளின் குடும்பங்களுக்கும் ஒரு படிப்பினையை ஏற்படுத்தியுள்ளது” என பாஜகவின் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.



  • Dec 21, 2023 18:58 IST
    பொன்முடி வழக்கிற்கும் பா.ஜ.க-வுக்கும் தொடர்பு இல்லை- அண்ணாமலை

    “முன்னாள் அமைச்சர் பொன்முடி வழக்கிற்கும்,  பாஜகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. திமுக அமைச்சர்கள் மீது உள்ள வழக்குகளை நீதிமன்றத்திற்குச் சென்று இல்லை என்று நிரூபித்தால்  நாங்கள் அதனை வரவேற்கிறோம்.
    1998-ம் ஆண்டுக்குப் பிறகு தற்போது தான் மீண்டும் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்கள்;
    திமுக அரசு மழை வெள்ளத்தைப் பொறுத்தவரை சரியாக கையாளவில்லை. தென் மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நிவாரணத்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்” என்று சென்னை விமான நிலையத்தில் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.



  • Dec 21, 2023 18:42 IST
    இன்னும் பல அமைச்சர்கள் கைதாவார்கள்: எடப்பாடி பழனிசாமி


    திமுக அரசில் உயர் கல்வித் துறை அமைச்சராக பொன்முடிக்கு சொத்துக் குவிப்பு வழக்கில் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், “இன்னும் பல அமைச்சர்கள் கைதாவார்கள்” என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.



  • Dec 21, 2023 18:24 IST
    நெல்லை, தூத்துக்குடிக்கு ரூ.6 ஆயிரம் நிதி: மு.க. ஸ்டாலின்

     

    திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட 2 மாவட்ட மக்களுக்கு ரேஷன் கார்டுகளுக்கு தலா ரூ.6,000 நிதி  வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



  • Dec 21, 2023 18:08 IST
    பிரதமரை சந்தித்து நிவாரண நிதி வழங்க கோரிக்கை விடுத்துள்ளேன்- நெல்லையில் மு.க. ஸ்டாலின் பேட்டி

    தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நெல்லையில் இன்று பேட்டியளித்தார்.
    அப்போது,  “தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம், ஏரல் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்;
    இதுவரை 12,000 பேர் மீட்கப்பட்டு முகாம்களில் பத்திரமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
    பிரதமர் மோடியை சந்தித்து அடுத்தடுத்து 2 பேரிடர்களில் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டிற்கு பேரிடர் மீட்பு நிதியிலிருந்து நிவாரணம் வழங்க கோரிக்கை வைத்துள்ளேன்” என்றார்.



  • Dec 21, 2023 17:58 IST
    திமுகவுக்கு இது ஒரு துரதிருஷ்டவசமான நாள்: அண்ணாமலை


    திமுக பிரமுகர் பைந்தமிழ் ரவி வீட்டில் கர்நாடக லோக் ஆயுத்தா போலீசார் சோதனை நடத்திய நிலையில், தமிழக பாஜக மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை ட்விட்டரில், “திமுக முன்னாள் அமைச்சர் திரு பொங்கலூர் பழனிசாமியின் மகனும், திமுக செயலாளருமான திரு பைந்தமிழ் பாரியின் வீட்டில், அனுமதிக்கப்பட்ட வரம்புக்கு மேல் சட்டவிரோதமாக சுரங்கம் தோண்டியதாக, கர்நாடக லோக் ஆயுக்தா அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர்.

    பல துறைகளில் ஊழலை அம்பலப்படுத்திய திமுகவுக்கு இது ஒரு துரதிர்ஷ்டமான நாள். ஜேடியுவைத் தொடர்ந்து தற்போது காங்கிரஸ் அவமானப்படுத்தியுள்ளது.
    ஆனால் நாள் தேர்வு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது!” எனத் தெரிவித்துள்ளார்.



  • Dec 21, 2023 17:25 IST
    நாடாளுமன்ற மக்களவை ஒத்திவைப்பு


    நாடாளுமன்ற மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.



  • Dec 21, 2023 17:25 IST
    நாடாளுமன்ற மக்களவை ஒத்திவைப்பு


    நாடாளுமன்ற மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.



  • Dec 21, 2023 16:56 IST
    மிகநீண்ட இரவு இன்று

    இந்த ஆண்டின் மிகநீண்ட இரவை இன்று இந்தியா எதிர்கொள்கிறது. பூமியின் சாய்ந்த பகுதியில் வெயில் படாதபோது இந்த நிலை ஏற்படுகிறது



  • Dec 21, 2023 16:41 IST
    எண்ணூர் எண்ணெய் கசிவு; பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.12,500 நிவாரணம்; மீன்வளத்துறை

    சென்னை எண்ணூர் முகத்துவாரத்தில் எண்ணெய் கசிவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 2,301 குடும்பங்களுக்கு தலா ரூ.12,500 நிவாரணம் வழங்கப்படும் என மீன்வளத்துறை அறிவித்துள்ளது. எண்ணெய் கசிவு விவகாரத்தில் பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரித்த வழக்கில் மீன்வளத்துறை இவ்வாறு பதில் அளித்துள்ளது



  • Dec 21, 2023 16:24 IST
    நடிகை கெளதமி புகார்; 6 பேர் கைது

    நடிகை கெளதமி அளித்த நில மோசடி புகாரில் 6 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்



  • Dec 21, 2023 16:01 IST
    மேலும் 3 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்

    மக்களவையில் இருந்து மேலும் 3 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்



  • Dec 21, 2023 15:32 IST
    பொன்முடிக்கு தண்டனை: நீதித்துறை மீதான நம்பிக்கை அதிகரித்திருக்கிறது - ராமதாஸ்

    வருவாய்க்கு மீறி சொத்துக்குவித்த வழக்கில் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி அவர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு பொதுவாழ்க்கையில் இருப்பவர்களுக்கு ஒரு பாடம். அரசியலும், பொதுவாழ்க்கையும் தூய்மையாக இருக்க வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். அந்த நோக்கத்தை நிறைவேற்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு துணை செய்யும். இந்தத் தீர்ப்பின் மூலம் நீதிமன்றங்கள் மீதான மக்களின் நம்பிக்கை அதிகரித்திருக்கிறது, என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.



  • Dec 21, 2023 15:08 IST
    ஊழலுக்கு சகிப்புத் தன்மை இருக்கக் கூடாது; குஷ்பூ

    ஊழலுக்கு சகிப்புத் தன்மை இருக்கக் கூடாது. வேரிலிருந்து ஒழிக்கப்பட வேண்டும். பொன்முடிக்கு வழங்கிய தீர்ப்பை முழுமனதுடன் வரவேற்கிறேன் என பா.ஜ.க நிர்வாகியும் நடிகையுமான குஷ்பூ தெரிவித்துள்ளார்



  • Dec 21, 2023 15:02 IST
    ராஜகண்ணப்பனுக்கு கூடுதல் பொறுப்பு; ஆளுநர் ஒப்புதல்

    அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதல் பொறுப்பாக உயர்கல்வித்துறை ஒதுக்கீடு செய்ததற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். ராஜகண்ணப்பனிடம் இருந்த காதி மற்றும் கிராம தொழில்கள் வாரியத்துறை, அமைச்சர் காந்திக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது



  • Dec 21, 2023 14:38 IST
    பொன்முடி சரணடைய ஜன.22 வரை அவகாசம்

    சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள திமுக மூத்த அமைச்சர் பொன்முடி சரணடைய ஜன.22ஆம் தேதிவரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.



  • Dec 21, 2023 14:37 IST
    சென்னை: பத்திரிகையாளர் சிறப்பு மருத்துவ முகாம்


    சென்னை கலைவாணர் அரங்கத்தில் பத்திரிகையாளர் சிறப்பு மருத்துவ முகாமை சுகாதாரத் துறை அமைச்சர் ம. சுபபிரமணியன் தொடங்கிவைத்தார்.



  • Dec 21, 2023 14:24 IST
    பொன்முடி தீர்ப்பு; மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ பேட்டி

    உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டால் பொன்முடியின் தகுதி இழப்பு செல்லாததாகிவிடும் என மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தெரிவித்துள்ளார்



  • Dec 21, 2023 14:13 IST
    பொன்முடிக்கு சிறை; தீர்ப்பை எதிர்த்து வரும் ஜனவரி 2-ம் தேதி மேல்முறையீடு

    உயர்நீதிமன்றம் தீர்ப்பை எதிர்த்து ஜனவரி 2ம் தேதி உச்சநீதிமன்றத்தில் பொன்முடி மேல்முறையீடு செய்கிறார். தீர்ப்பின் நகல் இன்று கிடைத்ததும், வழக்கறிஞர் உடன் ஆலோசனை மேற்கொண்ட பின் 2ம் தேதி மேல்முறையீடு செய்யப்படவுள்ளது



  • Dec 21, 2023 13:15 IST
    இதை பின்னடைவாக பார்க்கவில்லை

    இதை பின்னடைவாக பார்க்கவில்லை. இது இடைக்கால தீர்ப்பே. உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது. பொன்முடி குற்றமற்றவர் என்பதை உச்ச நீதிமன்றத்தில் நிரூபிப்போம்- திமுக நிர்வாகி கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்



  • Dec 21, 2023 13:13 IST
    இறுதி முடிவுக்கு வர முடியாது

    குறிப்பிட்ட நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை வைத்து இறுதி முடிவுக்கு வர முடியாது. உயர் நீதிமன்றம் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு அளித்துள்ளது.

    ஊழலை மட்டுமே கவனத்தில் கொண்டு மக்கள் தீர்ப்பு அளிப்பதில்லை – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன்



  • Dec 21, 2023 13:10 IST
    அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

    சென்னை உயர் நீதிமன்றம் நல்ல தீர்ப்பு வழங்கி உள்ளது. ஒரு விக்கெட் இப்போது விழுந்துள்ளது. மேலும் சில விக்கெட்டுகள் விழும். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது உள்ள வழக்குகளை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்.

    எந்த கட்சியாக இருந்தாலும் குற்றம் செய்தவர் சிறைக்கு செல்ல வேண்டும்- அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி



  • Dec 21, 2023 13:05 IST
    வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ செய்தியாளர் சந்திப்பு

    நீதிபதி ஜெயச்சந்திரன் அப்பழுக்கற்றவர், சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டவர். ஆனால், அதிமுக ஆட்சியில் சட்டத்துறை செயலாளராக இருந்துள்ளார். பொன்முடி வழக்கில் சொத்துகள் முடக்கும் கோப்புகளை கையாண்டுள்ளார். இதனை Latent Bias என சட்ட முறையில் கூறுவார்கள்.

    இதை நாங்கள் நீதிபதியிடமே எடுத்துச் சொன்னோம். நீங்கள் அப்போதே சொல்லியிருந்தால் கூட நான் வழக்கில் இருந்து விலகியிருக்க மாட்டேன்என பதிலளித்தார். இது முழுக்க முழுக்க சட்டம் சார்ந்த பிரச்னை. இதையெல்லாம் உச்ச நீதிமன்றத்தில் நாங்கள் முன்வைப்போம்

    மேல்முறையீட்டின் விசாரணையில் தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டால் பொன்முடிக்கு மீண்டும் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர் பதவி கிடைக்கும்- - பொன்முடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ செய்தியாளர் சந்திப்பு



  • Dec 21, 2023 12:31 IST
    அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதல் பொறுப்பு

    சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கும் அவரின் மனைவிக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ரூ. 50 லட்சம் அபராதம் விதித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் அவரின் அமைச்சர் பதவியை இழந்து விட்டார். இந்நிலையில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு, அமைச்சர் பொன்முடி கவனித்து வந்த உயர்கல்வித்துறை கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.



  • Dec 21, 2023 12:23 IST
    எம்.எல்.ஏ- அமைச்சர் பதவியை இழந்த பொன்முடி: சிறை தண்டனை 30 நாட்களுக்கு நிறுத்தி வைப்பு

    மூன்று ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு அந்த தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதால் பொன்முடி உடனடியாக சிறைக்கு செல்ல வேண்டிய தேவை இல்லை. இந்த வழக்கில் நிவாரணம் கோரி அவர் உச்ச நீதிமன்றத்திற்கு செல்லலாம்.

    முழு செய்தியும் படிக்க

    எம்.எல்.ஏ- அமைச்சர் பதவியை இழந்த பொன்முடி: சிறை தண்டனை 30 நாட்களுக்கு நிறுத்தி வைப்பு



  • Dec 21, 2023 12:12 IST
    கதறி அழுத பொன்முடி மனைவி

    பொன்முடிக்கும், அவரது மனைவி விசாலாட்சிக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை என அறிவிக்கப்பட்டதால் அவர் நீதிமன்றத்திலேயே கதறி அழுதார். தொடர்ந்து தண்டனை விவரங்களை குறைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.



  • Dec 21, 2023 12:11 IST
    பாஜக வரவேற்பு

    அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த தீர்ப்பை பாஜக வரவேற்பதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து நம்மிடையே அவர் பேசுகையில், “தாமதமான தீர்ப்பு என்றாலும், நல்ல தீர்ப்பு வந்துள்ளது. நீதி நிலைநிறுத்தப்பட்டுள்ளதுஎன்றார்.



  • Dec 21, 2023 11:41 IST
    பொன்முடி வழக்கில் 30 நாட்களுக்கு தண்டனை நிறுத்தி வைப்பு

    வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை

    பொன்முடி வழக்கில் 30 நாட்களுக்கு தண்டனை நிறுத்தி வைப்பு. 

    30 நாட்கள் முடிந்த பின் விழுப்புரம் நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவு

                         



  • Dec 21, 2023 10:54 IST
    பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு  3 ஆண்டு சிறை தண்டனை

     பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு  3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தண்டனை 30 நாட்கள் நிறுத்தி வைப்பு. ரூ. 50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 



  • Dec 21, 2023 10:27 IST
    நீதிமன்றத்திற்கு வந்தார் பொன்முடி

    சற்று நேரத்தில், வழக்கின் தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், பொன்முடி மற்றும் அவரது மனைவி நீதிமன்றத்திற்கு வந்தனர்.  



  • Dec 21, 2023 10:05 IST
    தேசியக்கொடி இல்லாத காரில் புறப்பட்ட பொன்முடி

    பொதுவாக பொன்முடி, தேசியக் கொடி உள்ள காரில்தான் எல்லா இடத்திற்கும் செல்வார். இந்நிலையில் தற்போது தேசியக்கொடி அகற்றப்பட்ட காரில் மனைவி விசாலாட்சியுடன் உயர்நீதிமன்றம் புறப்பட்டார். 



  • Dec 21, 2023 09:46 IST
    வீட்டிலிருந்து புறப்பட்டார் பொன்முடி

    பொன்முடி நீதிமன்றத்திற்கு செல்ல, வீட்டிலிருந்து புறப்பட்டார். சரியாக 10 மணிக்கு அவர் ஆஜராக உள்ளார். சைதாப்பேட்டையிலிருக்கும் இல்லத்தில் இருந்து அவர் புறப்பட்டார். அவரது மனைவியும் அவருடன் புறப்பட்டார். 

     



  • Dec 21, 2023 09:38 IST
    தி.மு.க-வில் இதுவே முதல் முறை: ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற அரசியல்வாதிகள் யார் யார்?

    தி.மு.க-வில் இதுவே முதல் முறை: ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற அரசியல்வாதிகள் யார் யார்? 

    மேலும் படிக்க :https://tamil.indianexpress.com/tamilnadu/dmkminister-ponmudi-asset-accumulation-case-2034619 



  • Dec 21, 2023 09:33 IST
    பொன்முடிக்கு இன்று தண்டனை: ரூ1.7 கோடி சொத்துக் குவிப்பு வழக்கின் முழு பின்னணி

    பொன்முடிக்கு இன்று தண்டனை: ரூ1.7 கோடி சொத்துக் குவிப்பு வழக்கின் முழு பின்னணி : முழுவதுமாக படிக்க : https://tamil.indianexpress.com/tamilnadu/minister-ponmudi-case-total-history-2034650



  • Dec 21, 2023 09:31 IST
    சென்னை உயர்நீதிமன்றத்தில் பொன்முடி இன்று நேரில் ஆஜர்

    பொன்முடி வழக்கு - இன்று தண்டனை அறிவிப்பு அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி மீதான வழக்கில் இன்று தண்டனை அறிவிப்பு. சென்னை உயர்நீதிமன்றத்தில் பொன்முடி இன்று நேரில் ஆஜர் நேரிலோ அல்லது காணொலி மூலமோ ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் இன்று ஆஜர். 



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment