சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "தென் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகம் மற்றும் புதுவை கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசான முதல் மிதமான மழையும் மற்றும் உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இலேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ்ஸை ஒட்டி இருக்கும்" என்று அவர் கூறினார்.
மழை தொடர்ந்து நீடித்து வருவதால், வெளியே செல்வோர் குடை, ரெயின் கோட் போன்ற உபகரணங்களை எடுத்துச் செல்வது நல்லது.