தொடரும் கனமழை; பைக்கில் செல்வோர் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது – சென்னை வானிலை மையம்

Chennai weather news : அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகம் மற்றும் புதுவை கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசான முதல் மிதமான மழை

latest weather news latest weather update latest weather report chennai rains chennai weather imd chennai - தொடரும் மழை; சென்னை வானிலை மையம்
latest weather news latest weather update latest weather report chennai rains chennai weather imd chennai – தொடரும் மழை; சென்னை வானிலை மையம்

தஞ்சை, திருவாரூர், நாகை, விருதுநகர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “தென் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகம் மற்றும் புதுவை கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசான முதல் மிதமான மழையும் மற்றும் உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.


தமிழகத்தின் லேட்டஸ்ட் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

தஞ்சை, திருவாரூர், நாகை, விருதுநகர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

75 ஆண்டுகளுக்கு பிறகு தென் இந்தியாவில் வளைவு சூரிய கிரகணம் – மீண்டும் காண ஒரு மாமாங்கம் காத்திருக்கணும்

சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இலேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ்ஸை ஒட்டி இருக்கும்” என்று அவர் கூறினார்.

மழை தொடர்ந்து நீடித்து வருவதால், வெளியே செல்வோர் குடை, ரெயின் கோட் போன்ற உபகரணங்களை எடுத்துச் செல்வது நல்லது.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Latest weather news latest weather update latest weather report chennai rains chennai weather imd chennai

Next Story
இன்று சூரிய கிரகணம்: சென்னையில் எங்கே, எப்போது, எப்படி பார்க்கலாம்?solar eclipse today, today solar eclipse timings in chennai, சூரிய கிரகணம், கிரகணம் 2019 நேரம் இன்று, surya grahan 2019 in tamil
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com