எஸ்.வி.சேகருக்கு முன்ஜாமின் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

எஸ்.வி.சேகருக்கு முன்ஜாமின் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு

எஸ்.வி.சேகருக்கு முன்ஜாமின் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. விசாரணை நீதிமன்றத்தை அணுக உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. எழும்பூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக எஸ்.வி.சேகருக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : பத்திரிக்கையாளர்களை மோசமான வார்த்தைகளால் விமர்சனம் செய்த எஸ்.வி.சேகர்

நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி சேகர் சில வாரங்களுக்கு முன்னர் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அநாகரீகமான கருத்தை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிந்திருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததுடன் அவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

மேலும் படிக்க : எஸ்.வி.சேகர் தலைமறைவாகவில்லை, மத்திய அமைச்சருடன் நிகழ்ச்சியில் பங்கேற்பு

இதையடுத்து, கைது நடவடிக்கையை தவிர்க்க, சென்னை ஐகோர்ட்டில் அவர் முன்ஜாமின் மனு தாக்கல் செய்தார். ஆனால், அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், மனுவை நிராகரித்தனர். இதனை அடுத்து அவர் சுப்ரீம் கோர்ட்டை நாடினார். அவரது மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இன்று வரை அவரை கைது செய்ய தடை விதித்திருந்தனர்.

மேலும் படிக்க : எஸ்.வி.சேகர் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவு

இன்று அவரது மனு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், எஸ்.வி.சேகருக்கு முன்ஜாமின் வழங்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் 30-ம் தேதியே அவர் மீது குற்றப்பத்திரிக்கை எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என கூறப்பட்டது.

இதனை அடுத்து, சேகர் விசாரணை நீதிமன்றமான எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

×Close
×Close