Tamil Nadu news today one year of Pulwama attack : காஷ்மீரில் இருந்து ஸ்ரீநகர் வழியாக பாதுகாப்பு படையினர் சென்று கொண்டிருந்த போது தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டது. ஜெய் - இ - முகமது என்று அழைக்கப்படும் தீவிரவாத குழு நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 40 பேர் பலியாகினர். இதனைத் தொடர்ந்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான உறவு சுமூகமாக இல்லை. கடந்த 12 மாதங்களிலும் பல்வேறு உட்பூசல்களை இரண்டு நாடுகளும் சந்தித்து வந்தது. இன்று இந்த தாக்குதல் நிகழ்ந்து ஒரு ஆண்டு ஆன நிலையில், இந்த தாக்குதலில் பலியான வீரர்களுக்கு நாம் நம்முடைய அஞ்சலியை செலுத்துவோம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
காதலர் தினம் 2020
அனைவருக்கும் இனிய காதலர் தின நல்வாழ்த்துகள். உங்கள் துணையுடன் இந்த நாளை சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் கொண்டாடி மகிழ்ந்திடுங்கள். நல்லதோ கெட்டதோ இருவரும் சேர்ந்து ஒன்றாகவே எதிர்கொள்ளுங்கள். மேலும் படிக்க : நாம் ஏன் காதலர் தினம் கொண்டாடுகின்றோம்? சுவரசியமான வரலாற்று பின்னணி!
தமிழக பட்ஜெட்
இன்று தமிழ் நாடு அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட்டில் மக்கள் மனதில் இடம் பெறும் வகையில் சிறப்பு அறிவிப்புகள் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் நிலவி வருகிறது. இது தொடர்பான முழுமையான செய்தியை படிக்க
Live Blog
Tamil Nadu news today : சென்னை மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்
சசிகலாவின் பினாமி நிறுவனம் என வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசை எதிர்த்து தனியார் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவிட்டது.
சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் போலீசார் தடியடி நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து செல்ல மறுத்து தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் போலீசார் தடியடி நடத்தினர்.
தமிழக பட்ஜெட் குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பட்ஜெட் அறிவிப்பு தமிழகத்தின் வளங்களை வாரிச்சுருட்டி செல்வது போல் உள்ளது. திமுக மற்றும் அதிமுக அரசுகள் கடைபிடித்த தவறான பொருளாதார கொள்கைகளால்தான் ஒவ்வொரு தமிழரும் கடனாளியாக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.
தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்: கீழடியில் 6 ஆம் கட்ட கீழடி அகழாய்வுப் பணிகளை பிப்ரவரி 19ஆம் தேதி முதல்வர் பழனிசாமி சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார் என்று தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை பாதுகாப்பு பிரிவு துணை இயக்குனராகப் பணியாற்றி வந்த உருஜல் ஹாசன் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், முதலமைச்சர்கள் பற்றி சமூக வலைதளங்களில் சர்ச்சைக் கருத்துகள் பதிவிட்டு வந்ததாக புகார்கள் எழுந்தன. புகாரின் அடிப்படையில், உருஜல் ஹாசன் 2018-இல் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இது தொடர்பாக விசாரணை நடைபெற்ற நிலையில் உருஜல் ஹாசன் பாதுகாப்பு பிரிவு துணை இயக்குனர் பொறுப்பில் இருந்து மாநிலங்களவை பாதுகாப்பு அதிகாரியாக பதவியிறக்கம் செய்யப்பட்டுள்ளார்.
டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேட்டில் கைது செய்யப்பட்ட வினோத்குமார், சீனிவாசன், ராஜசேகர் ஆகியோருக்கு ஜாமின் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு - இடைத்தரகர் ஜெயகுமார் கூட்டாளி செல்வேந்திரன் சரண். சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் செல்வேந்திரன் சரண் அடைந்தார்.
பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார் செல்வேந்திரன். எழும்பூர் நீதிமன்றத்தில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வர் பிரபாகரன் என்பவரும் சரண்
சென்னையில் நாளை (15-02-2020) பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
கொட்டிவாக்கம் பகுதி : பத்திரிக்கையாளர் காலனி, லட்சுமணபெருமாள் நகர் (1 முதல் 6) தெருக்கள், ஸ்ரீனிவசாபுரம், ஈ.சி.ஆர் மெயின் ரோடு, கொட்டிவாக்கம் திருவீதியம்மன் கோயில் தெரு, காவேரி நகர் (1 முதல் 6) தெருக்கள், ராஜா கார்டன், கல்யாணி தெரு, நிஜாமா அவென்யூ, கற்பகாம்பாள் நகர்(1 முதல் 3) தெருக்கள், பே வாட் பபூல் வார்ட். கொட்டிவாக்கம் பகுதி : பத்திரிக்கையாளர் காலனி, லட்சுமணபெருமாள் நகர் (1 முதல் 6) தெருக்கள், ஸ்ரீனிவசாபுரம், ஈ.சி.ஆர் மெயின் ரோடு, கொட்டிவாக்கம் திருவீதியம்மன் கோயில் தெரு, காவேரி நகர் (1 முதல் 6) தெருக்கள், ராஜா கார்டன், கல்யாணி தெரு, நிஜாமா அவென்யூ, கற்பகாம்பாள் நகர்(1 முதல் 3) தெருக்கள், பே வாட் பபூல் வார்ட்.
ஆடிக்கு ஒருமுறை, அமாவாசைக்கு ஒருமுறை ட்விட்டரில் பதிவிடும் தோனி, இன்று தனது ட்விட்டரில் புலி பற்றிய புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில், "நீங்கள் ஒரு புலியை கண்டறிந்து, அதை ஒரு போதுமான நேரத்திற்குள் புகைப்படம் எடுக்க வேண்டுமெனில்..." என்று கேப்ஷனிட்டு பகிர்ந்துள்ளார்.
இந்தியா - நியூஸி., மோதும் முதல் டெஸ்ட் போட்டி வரும் 21ம் தேதி வெலிங்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்கு முன் நியூசிலாந்து லெவன் அணியுடனான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி இன்று விளையாடியது.
டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக சுப்மன் கில், ப்ர்திவ் ஷா இருவரில் யாரை களமிறக்கலாம் என்ற குழப்பம் நீடித்து வந்தது. இதற்கு பயிற்சி ஆட்டம் தீர்வாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நியூசிலாந்து லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இளம் வீரர்கள் அடுத்தடுத்து அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர்.
மயங்க் அகர்வால் 1 ரன்னிலும், ப்ரிதிவ் ஷா மற்றும் சுப்மன் கில் டக் அவுட்டாகியும் வெளியேறினர். புஜாரா - விஹாரி ஜோடி பொறுப்புடன் விளையாடினர். விஹாரி 101 ரன்னிலும் புஜாரா 93 ரன்னிலும் அவுட்டாக மற்ற வீரர்கள் யாரும் நிலைத்து நின்று விளையாடததால் இந்திய அணி 263 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
ஐபிஎல் அணிகளில் ஒன்றான ராயல் சேலஞ்ஜர்ஸ் பெங்களூரு தன்னுடைய புதிய லோகோவை இன்று அறிமுகம் செய்துள்ளது.
If you know, you know.#PlayBold #NewDecadeNewRCB pic.twitter.com/unoSfHTb4q
— Royal Challengers Bangalore (@RCBTweets) February 14, 2020
2015 - 2018 வரை குரூப்4 தேர்வில் வெற்றி பெற்றவர்களின் பணியிடங்களை நிரப்பும் வரை 2019 ஜூலை 14ல் நடத்தப்பட்ட தேர்வில் வெற்றி பெற்றவர்களை நியமிக்க தடை கோரிய வழக்கில்
* டிஎன்பிஎஸ்சி செயலர், தமிழக வருவாய்துறை செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
ஏர்டெல், வோடஃபோன் உள்ளிட்ட தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிலுவைத் தொகையைச் செலுத்தாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறிய மத்திய தொலைத்தொடர்புத் துறை அதிகாரிக்கு கண்டனம் தெரிவித்துள்ளது உச்சநீதிமன்றம். தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு சேவை மூலம் கிடைக்கும் வருமானம் மட்டுமின்றி வாடகை, சொத்துக்களை விற்பது ஆகியவற்றின் மூலமாக கிடைக்கும் வருமானமும் மொத்த வருமானத்தில் கணக்கிட்டு, உரிம கட்டணம் செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி, பார்தி ஏர்டெல், வோடபோன் ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் நிலுவை வைத்துள்ள 90,000 கோடிக்கும் அதிகமான கடந்த ஜனவரி 23-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
காதலர் தினத்தில் காதலர்களுக்கு பூங்கொத்து கொடுத்து தபெதி கழகத்தினர் தெரிவித்தனர்.
காதலர் தினத்தில் காதலர்களுக்கு பூங்கொத்து வாழ்த்து தெரிவித்த தபெதி கழகத்தினர்#SunNews #SunNewsSocial #velentineday #ValentinesDay2020 #Puducherry pic.twitter.com/FgOqIyH1O7
— Sun News (@sunnewstamil) February 14, 2020
புதுச்சேரியில் காதலர் தினத்திற்கு சிறப்பு சலுகை அறிவித்த ஹோட்டலில் இருந்த அலங்கார பொருட்களை இந்து முன்னணியினர் உடைத்தனர்.
புதுச்சேரியில் காதலர் தினத்திற்கு சிறப்பு சலுகை அறிவித்த ஹோட்டலில் இருந்த அலங்கார பொருட்களை உடைத்த இந்து முன்னணியினர்.#SunNewsSocial #SunNews #ValentinesDay2020 #HinduMunnani #Pondicherry pic.twitter.com/m6C7qyjDte
— Sun News (@sunnewstamil) February 14, 2020
காதலர் தினமான இன்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், கிரிக்கெட் விளையாடும் வீடியோவை வெளியிட்டு "இதுதான் என் முதல் காதல்" என பதிவிட்டுள்ளார்,
My First Love! 😀 pic.twitter.com/KsYEYyLaxD
— Sachin Tendulkar (@sachin_rt) February 14, 2020
டி20 கிரிக்கெட் போட்டிகளில் போட்டி சமநிலையில் முடிவுற்றால் சூப்பர் ஓவர் மூலம் வெற்றி பெற்ற அணி தேர்வு செய்யப்படும். சூப்பர் ஓவரும் சமநிலையில் முடிந்தால் தொடர்ச்சியாக முடிவு கிடைக்கும் வரை போட்டி தொடரும் என்றும் ஒரு ஓவருக்கு 6 பந்துகள் வீசப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு விக்கெட்டுகள் வீழ்ந்தால் ஒரு அணியின் இன்னிங்ஸ் முடிவுற்று எதிர் தரப்பினர் விளையாடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இரண்டு அணியாக பிரிந்த அதிமுகவில் சிலர் பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக செயல்பட்டனர். செம்மலை, கே. பாண்டியராஜன், ஓ. பன்னீர் செல்வம், ஆறுக்குட்டி, ஆர் நட்ராஜ், சரவணன். சண்முகநாதன் மனோரஞ்சிதம், மனோகரன், மாணிக்கம் , சின்னராஜ் ஆகியோர் மீது விரைவாக சபாநாயகர் முடிவெடுப்பார் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. மேலும் இந்த காலகட்டத்தில் முடிவெடுக்க வேண்டும் என்று சபாநாயகரை வலியுறுத்த இயலாது என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ். அவருடைய பிறந்த நாளான இன்று, அவர் குறித்த நினைவுகளை பகிர்ந்துள்ளார் பிரதமர் மோடி.
Remembering Sushma Ji.
She epitomised dignity, decency and unwavering commitment to public service. Firmly rooted in Indian values and ethos, she had great dreams for our nation. She was an exceptional colleague and an outstanding Minister. pic.twitter.com/IeEJlNRAQB
— Narendra Modi (@narendramodi) February 14, 2020
கடந்த ஆண்டு நடைபெற்ற புல்வாமா தாக்குதல் குறித்து ட்வீட் செய்துள்ளார் மோடி. கடந்த ஆண்டு நடைபெற்ற புல்வாமா தாக்குதலில் இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். அவர்களுக்கு அஞ்சலி. இந்தியா அவர்களின் தியாகத்தை என்றும் மறக்காது.
Tributes to the brave martyrs who lost their lives in the gruesome Pulwama attack last year. They were exceptional individuals who devoted their lives to serving and protecting our nation. India will never forget their martyrdom.
— Narendra Modi (@narendramodi) February 14, 2020
லெத்போரா முகாமில், புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர் ராணுவ வீரர்கள்.
Jammu and Kashmir: Tributes being paid to the 40 CRPF jawans who lost their lives in #PulwamaAttack last year, at the memorial at CRPF's Lethpora camp, in Srinagar. pic.twitter.com/9aAxF5cbhE
— ANI (@ANI) February 14, 2020
அதே நேரத்தில் மாஸ்டர் படத்தின் முதல் பாடல் இன்று வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார் அனிருத் ரவிச்சந்திரன். தெறி படத்திற்கு பிறகு விஜயும் அனிருத்தும் இணைந்து பணியாற்றும் இந்த படத்தினை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க, மாளவிகா மோகனன் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார். இந்த பாடல் குறித்த அப்டேட்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் இணையத்துடன் இணைந்திருங்கள்.
மேலும் படிக்க : 100 குழந்தைகளை விமானத்தில் ஏற்றி அழகு பார்த்த சூர்யா!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights