இன்றைய செய்திகள்: திமுகவிற்கு 2 கோடி கையெழுத்து எங்கு இருந்து வந்தது? – பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி

இன்று நடைபெறும் அரசியல், சினிமா, உள்ளூர், இந்திய, வெளிநாட்டு, மற்றும் விளையாட்டு செய்திகளை இந்த இணைப்பில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

By: Feb 14, 2020, 11:06:19 PM

Tamil Nadu news today one year of Pulwama attack : காஷ்மீரில் இருந்து ஸ்ரீநகர் வழியாக பாதுகாப்பு படையினர் சென்று கொண்டிருந்த போது தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டது. ஜெய் – இ – முகமது என்று அழைக்கப்படும் தீவிரவாத குழு நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 40 பேர் பலியாகினர். இதனைத் தொடர்ந்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான உறவு சுமூகமாக இல்லை. கடந்த 12 மாதங்களிலும் பல்வேறு உட்பூசல்களை இரண்டு நாடுகளும் சந்தித்து வந்தது. இன்று இந்த தாக்குதல் நிகழ்ந்து ஒரு ஆண்டு ஆன நிலையில், இந்த தாக்குதலில் பலியான வீரர்களுக்கு நாம் நம்முடைய அஞ்சலியை செலுத்துவோம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

காதலர் தினம் 2020

அனைவருக்கும் இனிய காதலர் தின நல்வாழ்த்துகள். உங்கள் துணையுடன் இந்த நாளை சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் கொண்டாடி மகிழ்ந்திடுங்கள். நல்லதோ கெட்டதோ இருவரும் சேர்ந்து ஒன்றாகவே எதிர்கொள்ளுங்கள். மேலும் படிக்க : நாம் ஏன் காதலர் தினம் கொண்டாடுகின்றோம்? சுவரசியமான வரலாற்று பின்னணி!

தமிழக பட்ஜெட்

இன்று தமிழ் நாடு அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட்டில் மக்கள் மனதில் இடம் பெறும் வகையில் சிறப்பு அறிவிப்புகள் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் நிலவி வருகிறது. இது தொடர்பான முழுமையான செய்தியை படிக்க

Live Blog
Tamil Nadu news today : சென்னை மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்
22:59 (IST)14 Feb 2020
சசிகலாவின் பினாமி நிறுவனம் என வருமான வரித்துறையின் நோட்டீசை எதிர்த்து தனியார் நிறுவனம் வழக்கு

சசிகலாவின் பினாமி நிறுவனம் என வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசை எதிர்த்து தனியார் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவிட்டது.

22:24 (IST)14 Feb 2020
சென்னையில் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அமைப்புகளுடன் கமிஷனர் பேச்சுவார்த்தை

சென்னையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அமைப்புகளுடன் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார்.

22:20 (IST)14 Feb 2020
சென்னை வண்ணாரப்பேட்டையில் சிஏஏவுக்கு எதிரான போராட்டத்தில் போலீசார் தடியடி

சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் போலீசார் தடியடி நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து செல்ல மறுத்து தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் போலீசார் தடியடி நடத்தினர்.

21:02 (IST)14 Feb 2020
திமுகவிற்கு 2 கோடி கையெழுத்து எங்கு இருந்து வந்தது? - பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி

பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன்: திமுகவிற்கு 2 கோடி கையெழுத்து எங்கு இருந்து வந்தது?. ஓட்டுக்காக திமுக தந்திரம் செய்து வருகிறது. திமுகவை நம்பி ஏமாந்து விடாதீர்கள் என தெரிவித்துள்ளார்.

20:35 (IST)14 Feb 2020
தமிழக வளங்களை வாரி சுருட்டும் பட்ஜெட் - கமல்ஹாசன் விமர்சனம்

தமிழக பட்ஜெட் குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பட்ஜெட் அறிவிப்பு தமிழகத்தின் வளங்களை வாரிச்சுருட்டி செல்வது போல் உள்ளது. திமுக மற்றும் அதிமுக அரசுகள் கடைபிடித்த தவறான பொருளாதார கொள்கைகளால்தான் ஒவ்வொரு தமிழரும் கடனாளியாக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

20:32 (IST)14 Feb 2020
கீழடி 6-ம் கட்ட அகழாய்வுப் பணிகளை பிப்ரவரி 19-இல் காணொலி மூலம் தொடங்கி வைக்கிறார் முதல்வர்

தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்: கீழடியில் 6 ஆம் கட்ட கீழடி அகழாய்வுப் பணிகளை பிப்ரவரி 19ஆம் தேதி முதல்வர் பழனிசாமி சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார் என்று தெரிவித்தார்.

20:13 (IST)14 Feb 2020
பிரதமருக்கு எதிராக கருத்து பதிவிட்ட மாநிலங்களவை பாதுகாப்பு அதிகாரி பதவியிறக்கம்

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை பாதுகாப்பு பிரிவு துணை இயக்குனராகப் பணியாற்றி வந்த உருஜல் ஹாசன் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், முதலமைச்சர்கள் பற்றி சமூக வலைதளங்களில் சர்ச்சைக் கருத்துகள் பதிவிட்டு வந்ததாக புகார்கள் எழுந்தன. புகாரின் அடிப்படையில், உருஜல் ஹாசன் 2018-இல் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இது தொடர்பாக விசாரணை நடைபெற்ற நிலையில் உருஜல் ஹாசன் பாதுகாப்பு பிரிவு துணை இயக்குனர் பொறுப்பில் இருந்து மாநிலங்களவை பாதுகாப்பு அதிகாரியாக பதவியிறக்கம் செய்யப்பட்டுள்ளார்.

18:46 (IST)14 Feb 2020
முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பிரசாத் உடல் நல்க் குறைவால் காலமானார்

கன்னியாகுமரியைச் சேர்ந்த முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபிரசாத் உடல்நலக் குறைவால் காலமானார்.

18:41 (IST)14 Feb 2020
டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் கைதான வினோத்குமார், சீனிவாசன், ராஜசேகர் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேட்டில் கைது செய்யப்பட்ட வினோத்குமார், சீனிவாசன், ராஜசேகர் ஆகியோருக்கு ஜாமின் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

17:48 (IST)14 Feb 2020
ஜெயகுமார் கூட்டாளி செல்வேந்திரன் சரண்

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு - இடைத்தரகர் ஜெயகுமார் கூட்டாளி செல்வேந்திரன் சரண். சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் செல்வேந்திரன் சரண் அடைந்தார்.

பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார் செல்வேந்திரன். எழும்பூர் நீதிமன்றத்தில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வர் பிரபாகரன் என்பவரும் சரண்

17:45 (IST)14 Feb 2020
2,398 பேர் மரணம்

கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் யானை தாக்கி 2,398 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய வன மற்றும் சுற்றுச்சூழல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

17:42 (IST)14 Feb 2020
சென்னையின் முக்கியப் பகுதிகளில் நாளை 7 மணி நேர மின்தடை...! விபரம் உள்ளே...

சென்னையில் நாளை (15-02-2020) பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

கொட்டிவாக்கம் பகுதி : பத்திரிக்கையாளர் காலனி, லட்சுமணபெருமாள் நகர் (1 முதல் 6) தெருக்கள், ஸ்ரீனிவசாபுரம், ஈ.சி.ஆர் மெயின் ரோடு, கொட்டிவாக்கம் திருவீதியம்மன் கோயில் தெரு, காவேரி நகர் (1 முதல் 6) தெருக்கள், ராஜா கார்டன், கல்யாணி தெரு, நிஜாமா அவென்யூ, கற்பகாம்பாள் நகர்(1 முதல் 3) தெருக்கள், பே வாட் பபூல் வார்ட். கொட்டிவாக்கம் பகுதி : பத்திரிக்கையாளர் காலனி, லட்சுமணபெருமாள் நகர் (1 முதல் 6) தெருக்கள், ஸ்ரீனிவசாபுரம், ஈ.சி.ஆர் மெயின் ரோடு, கொட்டிவாக்கம் திருவீதியம்மன் கோயில் தெரு, காவேரி நகர் (1 முதல் 6) தெருக்கள், ராஜா கார்டன், கல்யாணி தெரு, நிஜாமா அவென்யூ, கற்பகாம்பாள் நகர்(1 முதல் 3) தெருக்கள், பே வாட் பபூல் வார்ட்.

17:11 (IST)14 Feb 2020
'குட்டி கதை' பாடலின் லிரிக் வீடியோ

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'மாஸ்டர்' படத்தின் முதல் சிங்கிள் 'குட்டி கதை' பாடலின் லிரிக் வீடியோ இன்று வெளியாகியுள்ளது. 

16:58 (IST)14 Feb 2020
பிரதமர் மோடிக்கு சுப்ரமணியன் சுவாமி வலியுறுத்தல்

ஏர் இந்தியாவை பாராட்டுகிறீர்கள் என்றால், அதனை விற்பனை செய்யும் முடிவை கைவிடச் சொல்லுங்கள் என்று பிரதமர் மோடிக்கு பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.

16:57 (IST)14 Feb 2020
கோவையில் பா.ஜ.க. பேரணி

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு கோவையில் பா.ஜ.க. பேரணி

1998ல் கோவை குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு அஞ்சலி

16:23 (IST)14 Feb 2020
தோனி ட்விட்டர் பதிவு

ஆடிக்கு ஒருமுறை, அமாவாசைக்கு ஒருமுறை ட்விட்டரில் பதிவிடும் தோனி, இன்று தனது ட்விட்டரில் புலி பற்றிய புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். 

அதில், "நீங்கள் ஒரு புலியை கண்டறிந்து, அதை ஒரு போதுமான நேரத்திற்குள் புகைப்படம் எடுக்க வேண்டுமெனில்..." என்று கேப்ஷனிட்டு பகிர்ந்துள்ளார். 

15:55 (IST)14 Feb 2020
காதலர் தினத்தை முன்னிட்டு கொடைக்கானலில் குவியும் காதலர்கள்

காதலர் தினத்தை முன்னிட்டு, இளசுகள் கொடைக்கானல் தேசத்தை நோக்கி படையெடுத்துள்ளனர். 

15:50 (IST)14 Feb 2020
பயிற்சி ஆட்டத்தில் இந்தியா தடுமாற்றம்

இந்தியா - நியூஸி., மோதும் முதல் டெஸ்ட் போட்டி வரும் 21ம் தேதி வெலிங்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்கு முன் நியூசிலாந்து லெவன் அணியுடனான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி இன்று விளையாடியது.

டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக சுப்மன் கில், ப்ர்திவ் ஷா இருவரில் யாரை களமிறக்கலாம் என்ற குழப்பம் நீடித்து வந்தது. இதற்கு பயிற்சி ஆட்டம் தீர்வாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நியூசிலாந்து லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இளம் வீரர்கள் அடுத்தடுத்து அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர்.

மயங்க் அகர்வால் 1 ரன்னிலும், ப்ரிதிவ் ஷா மற்றும் சுப்மன் கில் டக் அவுட்டாகியும் வெளியேறினர். புஜாரா - விஹாரி ஜோடி பொறுப்புடன் விளையாடினர். விஹாரி 101 ரன்னிலும் புஜாரா 93 ரன்னிலும் அவுட்டாக மற்ற வீரர்கள் யாரும் நிலைத்து நின்று விளையாடததால் இந்திய அணி 263 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

15:40 (IST)14 Feb 2020
ஆர்சிபி புதிய லோகோ

ஐபிஎல் அணிகளில் ஒன்றான ராயல் சேலஞ்ஜர்ஸ் பெங்களூரு தன்னுடைய புதிய லோகோவை இன்று அறிமுகம் செய்துள்ளது.

15:38 (IST)14 Feb 2020
தமிழக வருவாய்துறை செயலர் பதிலளிக்க உத்தரவு

2015 - 2018 வரை குரூப்4 தேர்வில் வெற்றி பெற்றவர்களின் பணியிடங்களை நிரப்பும் வரை 2019 ஜூலை 14ல் நடத்தப்பட்ட தேர்வில் வெற்றி பெற்றவர்களை நியமிக்க தடை கோரிய வழக்கில்

* டிஎன்பிஎஸ்சி செயலர், தமிழக வருவாய்துறை செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

15:08 (IST)14 Feb 2020
பிரதமர் மோடிக்கு அழைப்பு

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார்

15:06 (IST)14 Feb 2020
மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

கருணை மனு நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு தள்ளுபடி - உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

நிர்பயா குற்றவாளி வினய் சர்மா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

உடல் மற்றும் மனதளவில் குற்றவாளி நலமுடன் உள்ளார் - உச்ச நீதிமன்றம்

14:13 (IST)14 Feb 2020
டாஸ்மாக் மூலம் ரூ.30 ஆயிரம் கோடி வருவாய்

டாஸ்மாக் கடைகள் மூலம் ரூ.30 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளதாக நிதித்துறை செயலர் அறிவித்துள்ளார்.

14:12 (IST)14 Feb 2020
ஏர்டெல், வோடஃபோன் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு அவமதிப்பு நோட்டீஸ் - சுப்ரீம் கோர்ட்

ஏர்டெல், வோடஃபோன் உள்ளிட்ட தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிலுவைத் தொகையைச் செலுத்தாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறிய மத்திய தொலைத்தொடர்புத் துறை அதிகாரிக்கு கண்டனம் தெரிவித்துள்ளது உச்சநீதிமன்றம். தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு சேவை மூலம் கிடைக்கும் வருமானம் மட்டுமின்றி வாடகை, சொத்துக்களை விற்பது ஆகியவற்றின் மூலமாக கிடைக்கும் வருமானமும் மொத்த வருமானத்தில் கணக்கிட்டு, உரிம கட்டணம் செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி, பார்தி ஏர்டெல், வோடபோன் ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் நிலுவை வைத்துள்ள 90,000 கோடிக்கும் அதிகமான கடந்த ஜனவரி 23-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

14:09 (IST)14 Feb 2020
காதலர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து

காதலர் தினத்தில் காதலர்களுக்கு பூங்கொத்து கொடுத்து தபெதி கழகத்தினர் தெரிவித்தனர்.

14:07 (IST)14 Feb 2020
காதலர் தினம் - அலங்கார பொருட்களை உடைத்த இந்து முன்னணி

புதுச்சேரியில் காதலர் தினத்திற்கு சிறப்பு சலுகை அறிவித்த ஹோட்டலில் இருந்த அலங்கார பொருட்களை இந்து முன்னணியினர் உடைத்தனர்.

14:04 (IST)14 Feb 2020
இதுதான் என் முதல் காதல் - சச்சின்

காதலர் தினமான இன்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், கிரிக்கெட் விளையாடும் வீடியோவை வெளியிட்டு "இதுதான் என் முதல் காதல்" என பதிவிட்டுள்ளார்,

13:40 (IST)14 Feb 2020
2,398 பேர் பலி

கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் யானை தாக்கி 2,398 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய வன மற்றும் சுற்றுச்சூழல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

13:39 (IST)14 Feb 2020
கார்த்தி சிதம்பரத்திற்கு அனுமதி

லண்டனில் நடைபெறும் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க கார்த்தி சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 

13:38 (IST)14 Feb 2020
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

2020ஆம் ஆண்டிற்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு. தமிழகத்தில் மொத்தம் 6,13,06,638 வாக்காளர்கள் உள்ளனர்

ஆண்கள் - 3,02,54,172, பெண்கள் - 3,10,45,969, மூன்றாம் பாலினத்தவர்கள் - 6,497 பேர் வாக்காளர்களாக உள்ளனர் - தேர்தல் ஆணையம்

13:37 (IST)14 Feb 2020
பஞ்சாயத்து தலைவராக பதவியேற்க தடை

சங்கராபுரம் கிராம பஞ்சாயத்து தலைவராக, தேவி வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு

தேவி வெற்றி பெற்றதாக அறிவித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு, உச்சநீதிமன்றம் இடைக்கால தடை

பஞ்சாயத்து தலைவராக பதவியேற்கவும் தடை

12:40 (IST)14 Feb 2020
டி20 போட்டிகளின் சூப்பர் ஓவருக்கு புதிய விதிமுறைகள்

டி20 கிரிக்கெட் போட்டிகளில் போட்டி சமநிலையில் முடிவுற்றால் சூப்பர் ஓவர் மூலம் வெற்றி பெற்ற அணி தேர்வு செய்யப்படும். சூப்பர் ஓவரும் சமநிலையில் முடிந்தால் தொடர்ச்சியாக முடிவு கிடைக்கும் வரை போட்டி தொடரும் என்றும் ஒரு ஓவருக்கு 6 பந்துகள் வீசப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு விக்கெட்டுகள் வீழ்ந்தால் ஒரு அணியின் இன்னிங்ஸ் முடிவுற்று எதிர் தரப்பினர் விளையாடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

11:46 (IST)14 Feb 2020
11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க விவகாரம்

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இரண்டு அணியாக பிரிந்த அதிமுகவில் சிலர் பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக செயல்பட்டனர். செம்மலை, கே. பாண்டியராஜன், ஓ. பன்னீர் செல்வம், ஆறுக்குட்டி, ஆர் நட்ராஜ், சரவணன். சண்முகநாதன் மனோரஞ்சிதம், மனோகரன், மாணிக்கம் , சின்னராஜ் ஆகியோர்  மீது விரைவாக சபாநாயகர் முடிவெடுப்பார் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. மேலும் இந்த காலகட்டத்தில் முடிவெடுக்க வேண்டும் என்று சபாநாயகரை வலியுறுத்த இயலாது என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.  

11:05 (IST)14 Feb 2020
சுஷ்மா ஸ்வராஜ் பிறந்த தினம் : நினைவு கூறிய மோடி

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ். அவருடைய பிறந்த நாளான இன்று, அவர் குறித்த நினைவுகளை பகிர்ந்துள்ளார் பிரதமர் மோடி.  

Remembering Sushma Ji. 

10:47 (IST)14 Feb 2020
புல்வாமா தாக்குதல் மோடி ட்வீட்

கடந்த ஆண்டு நடைபெற்ற புல்வாமா தாக்குதல் குறித்து ட்வீட் செய்துள்ளார் மோடி. கடந்த ஆண்டு நடைபெற்ற புல்வாமா தாக்குதலில் இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். அவர்களுக்கு அஞ்சலி. இந்தியா அவர்களின் தியாகத்தை என்றும் மறக்காது.

10:22 (IST)14 Feb 2020
லெத்போரா ராணுவ அஞ்சலி

லெத்போரா முகாமில், புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர் ராணுவ வீரர்கள்.

09:46 (IST)14 Feb 2020
பவானி சாகர் அணை நிலவரம்

பவானி சாகர் அணையின் நீர்மட்டம் தற்போது 99.60 அடியாக உள்ளது. நீர் இருப்பு 28.4 டி.எம்.சியாகும். நீர் வரத்து 982 கன் அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 3300 கன அடியாக உள்ளது.

09:45 (IST)14 Feb 2020
வட்டார கல்வி அலுவலருக்கான கணினி தேர்வு

வட்டார கல்வி அலுவலருக்கான கணினி வழித்தேர்வு தமிழகம் முழுவதும் 57 மையங்களில் இன்று நடைபெற்று வருகிறது.

Tamil Nadu news today : பிப்ரவரி மாதம் என்றாலே நிறைய காதல் படங்கள் வரிசையாக திரையரங்குகளில் வெளியாக துவங்கும். காதலுக்கும் என்றும் அப்படி ஒரு சிறப்பு. இன்று ஓ மை கடவுளே என்ற படம் வெளியாகி உள்ளது. தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் அந்த படம் தொடர்பாக மக்கள் ரிவ்யூ குறித்து இன்னும் சிறிது நேரத்தில் எழுதுவார்கள்.

அதே நேரத்தில் மாஸ்டர் படத்தின் முதல் பாடல் இன்று வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார் அனிருத் ரவிச்சந்திரன். தெறி படத்திற்கு பிறகு விஜயும் அனிருத்தும் இணைந்து பணியாற்றும் இந்த படத்தினை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க, மாளவிகா மோகனன் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார். இந்த பாடல் குறித்த அப்டேட்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் இணையத்துடன் இணைந்திருங்கள்.

மேலும் படிக்க : 100 குழந்தைகளை விமானத்தில் ஏற்றி அழகு பார்த்த சூர்யா!

Web Title:Tamil nadu news live today one year of pulwama attack valentines day 2020 tn budget

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
இதைப் பாருங்க!
X