Tamil Nadu news today updates : ‘திமுக இருக்கும் வரை தமிழகம் வளராது’ – தமிழிசை

Tamil Nadu news today updates : அஞ்சலக தேர்வுகளை ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே எழுத வேண்டும் என்பதற்கு கடும் எதிர்ப்புகள் தமிழகத்தில் வெளியாகி வருகிறது.

By: Jul 14, 2019, 11:00:08 PM

Tamil Nadu news today updates : பாஜக இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்த பின்பு, இந்தி பேசாத மக்கள் மத்தியில் சவாலான பல்வேறு திட்டங்களை திணித்து வருகிறது. மும்மொழிக் கொள்கை துவங்கி, கடந்த 2 வாரங்களுக்கு முன்பு உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தெலுங்கு, கன்னடம், ஒடியா, அசாம், இந்தி, மற்றும் மராத்தி ஆகிய மொழிகளில் மொழி பெயர்த்து தரப்படும் என்று அறிவிப்பு வெளியானது. ஆனால் அந்த பட்டியலில் தமிழ் இல்லாதது பல்வேறு தரப்பினருக்கும் அதிர்ச்சி அளித்தது.

நாடாளுமன்ற கூட்டத் தொடரில்,  பொருளாதார அறிக்கை சமர்பிக்கப்பட்ட நாளன்று (ஜூலை 4) அசாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடா, கொங்கனி, மலையாளம், மணிப்பூரி, மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது மொழிகளில் வங்கித் தேர்வுகள் எழுதலாம் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதனை எண்ணி அனைவரும் மனம் மகிழ்ந்த நிலையில் அஞ்சல் அலுவலக தேர்வுகளை பிராந்திய மொழிகளில் எழுத இயலாது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திமுக தலைவர் முக ஸ்டாலின் எதிர்ப்பு

மத்திய அரசின் இந்த முடிவிற்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் எதிர்ப்பு கூறி ட்வீட் செய்துள்ளார்.

Live Blog
Tamil Nadu and Chennai news today updates of weather, traffic, political events and southwest monsoon: தமிழகத்தில் நடைபெறும் முக்கிய செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
21:41 (IST)14 Jul 2019
சந்திரயான் உலகத்திற்கே முன்னோடி - மயில்சாமி அண்ணாதுரை

நிலவு குறித்த ஆய்வில் சந்திரயான் உலகத்திற்கே முன்னோடியாக உள்ளது; மனிதன் செல்ல நீண்ட நாட்களாகும் என்பதால் தொழில்நுட்பம் மூலம் நிலவை ஆய்வு செய்ய முடியும். பூமியைவிட மாறுபட்ட ஈர்ப்புவிசை உள்ள நிலவில் ஆய்வு செய்வது சவாலான பணியாகும்; சந்திரயான் - 2 ரோவர் வாகனத்தை இறக்கி சோதனை செய்ய சேலம் பகுதியிலிருந்து மாதிரி மண் பெறப்பட்டது என்று சந்திரயான் - 1 திட்ட இயக்குநர் மயில்சாமி தெரிவித்துள்ளார்.

20:27 (IST)14 Jul 2019
இது இனிமையான தகவல் அல்லோ!

கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

19:07 (IST)14 Jul 2019
திமுக இருக்கும் வரை தமிழகம் வளராது - தமிழிசை

திமுக, விசிக, மதிமுக ஆகிய கட்சிகள் இருக்கும் வரை தமிழகம் வளர்ச்சியடையாது; தமிழகத்திற்கு கிடைக்கும் வளர்ச்சித்திட்டங்கள் அனைத்தையும் இக்கட்சிகள் தடுக்கின்றன. திமுகவிற்கு இப்பொழுதே வேலூர் தேர்தல் குறித்த பயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் செய்த பணப்பட்டுவாடாவால் வேலூர் தொகுதியில் மட்டும் தேர்தல் ரத்தானது தலைகுனிவை ஏற்படுத்தியது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

18:28 (IST)14 Jul 2019
NEET-க்கு பதில் NEXT?

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முறையை கைவிட மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எம்.பி.பி.எஸ். இறுதி ஆண்டில் NEXT (National Exit Test) தேர்வை நடத்தில் முதுநிலை மருத்துவ படிப்புக்கு மாணவர் சேர்க்க நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

17:44 (IST)14 Jul 2019
அசன் அலி, ஆரிஷ் முகமதுவிற்கு 25ம்தேதி வரை நீதிமன்ற காவல்

தமிழகத்தில் அன்சருல்லா என்ற பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டிய புகாரில் அசன் அலி, ஆரிஷ் முகமது கைது செய்யப்பட்டனர்.  நாகையில் கைதான அசன் அலி, ஆரிஷ் முகமதுவை வரும் 25ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க பூந்தமல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி செந்தூர்பாண்டியன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

16:53 (IST)14 Jul 2019
அரசியல் வேண்டாம் – ரஜினிக்கு கே.எஸ்.அழகிரி அட்வைஸ்

ஒரு ரசிகனாக ரஜினிக்கு நான் கூறும் ஆலோசனை அரசியல் வேண்டாம் என்பது தான்  என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.

16:15 (IST)14 Jul 2019
அத்திவரதர் தரிசனம் – ஒருமணிநேரம் குறைப்பு

கோயில் தூய்மைப்பணி, அத்திவரதரை அலங்கரித்தல் உள்ளிட்ட காரணங்களுக்காக  காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசனத்திற்கான நேரம் குறைப்பு செய்யப்பட்டுள்ளது.  அத்திவரதரை, இரவு 11 மணி வரை தரிசிக்கலாம் என்ற நிலையில் தற்போது இரவு 9 மணி வரை மட்டுமே தரிசிக்க அனுமதி அளிக்கப்படும் என்று கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

15:40 (IST)14 Jul 2019
இளைஞர்கள் சுயதொழில் செய்ய முன்வரவேண்டும் – அமைச்சர் ஜெயக்குமார்

அரசு வேலைக்கு 65 லட்சம் இளைஞர்கள் காத்துக்கொண்டுள்ளனர். இளைஞர்கள் அரசு வேலையை மட்டும் பார்க்காமல், சுயதொழில் செய்ய அதிகளவில் முன்வரவேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

14:59 (IST)14 Jul 2019
தேசிய கல்விகொள்கை புதிய வரைவை ஆய்வு செய்ய குழு - ஸ்டாலின்

மத்திய அரசின் புதிய வரைவு தேசிய  கல்வி கொள்கையை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க குழுவை,  திமுக தலைவர் ஸ்டாலின் அமைத்துள்ளார். பொன்முடி, தங்கம் தென்னரசு உள்ளிட்ட 8 பேர் கொண்ட இந்த குழு, 10 நாட்களில் ஆய்வை முடித்து அறிக்கையளிக்கும். அந்த அறிக்கையின் அடிப்படையில், மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு திமுக தனது கருத்தை பதிவு செய்யும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

14:11 (IST)14 Jul 2019
தபால் துறை தேர்வில் தமிழுக்கு தடை- அமைச்சர் ஜெயகுமார் விளக்கம்

தமிழக அமைச்சர் ஜெயகுமார் இன்று அளித்த பேட்டியில், ‘தபால்துறை தேர்வுகள் தமிழில் நடத்தப்படாதது குறித்து சட்டப்பேரவையில் விளக்கம் அளிக்கப்படும்’ என்றார். ஆகஸ்ட் 5-ல் நடைபெற இருக்கும் வேலூர் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் பற்றி கேட்டபோது, ‘வேலூர் தொகுதி ஸ்டாலினுக்கு வெற்று கோட்டையாக போகிறது’ என்றார்.

13:39 (IST)14 Jul 2019
வடகிழக்கு மாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை : அசாம், பிகாரில் கரை புரண்டோடும் வெள்ளம்

அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டிவருவதால் பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். பிரம்மபுத்திரா நதியில் ஏற்பட்ட வெள்ளத்தினால் வீடுகளுக்குள் மழை புகுந்துவிட்டது. படகுகள் மூலமாக மக்கள் பத்திரமாக இடம் மாற்றப்பட்டு வருகின்றனர்.

13:04 (IST)14 Jul 2019
சரவணபவன் ராஜகோபால் உடல்நிலை கவலைக்கிடம்

தன்னுடைய ஓட்டலில் வேலை செய்த பிரின்ஸ் சாந்த குமார் என்பவரை கொடைக்கானலுக்கு அழைத்துச் சென்று கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றார் சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால். உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிறைக்கைதிகள் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இருப்பினும் அவருடைய உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

12:59 (IST)14 Jul 2019
நடன கலைஞர்கள் சங்கத்தேர்தல்

வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை படங்கள் மற்றும் நாடகங்களுக்கு நடனம் அமைத்து தரும் நடன கலைஞர்களுக்கான  நடன கலைஞர்கள் சங்கத்தேர்தல் இன்று காலையில் இருந்து நடைபெற்று வருகிறது. தி.நகர் பர்கிட் சாலையில் உள்ள சங்க அலுவலகத்தில் காலை முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

12:37 (IST)14 Jul 2019
ஸ்டாலின் - உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு

அண்ணா அறிவாலயத்தில் தற்போது திமுகவின் இளைஞரணி செயாளர் உதயநிதி ஸ்டாலின், திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசி வருகிறார்.

12:33 (IST)14 Jul 2019
அடுத்த ஆண்டில் 5 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்க்கப்படுவார்கள்

தமிழகத்தில் 16 ஆயிரம் உபரி ஆசிரியர்கள் உள்ளனர். அடுத்த ஆண்டுக்குள் 5 லட்சம் மாணவர்களை அரசு பள்ளிகளை சேர்க்க முயற்சிகள் மேற்கொள்வோம் என அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி. புதிய கல்வி கொள்கையினால் மாநில அரசுகளின் உரிமைகள் மறுக்கப்படவில்லை என்றும் அவர் பேச்சு.

12:31 (IST)14 Jul 2019
ICC World Cup 2019 Finale

மே 30ம் தேதி முதல் நடைபெற்று வந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் இறுதி போட்டி இன்று நடைபெற உள்ளது. இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று பலபரீட்சை நடத்துகிறது. இது தொடர்பான முழுமையான செய்திகளை உடனுக்குடன் பெற்றிட 

11:42 (IST)14 Jul 2019
இந்தியா மிகப்பெரிய அளவில் பொருளாதாரத்தில் வளர்ந்து வருகிறது - வெங்கையா நாயுடு

தமிழகம் வளர்ந்து கொண்டே இருக்கிறது. கல்வி, மருத்துவம் போன்ற துறைகளில் வளர்ந்ந்து வரும் தமிழகம் சிறந்த மாநிலமாக திகழ்கிறது. தமிழகத்தின் சுகாதாரம் நாட்டின் மருத்துவ வளர்ச்சியை காட்டில் அதிகமாக உள்ளது என்று கூறியுள்ளார் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு. இந்தியா மிகப்பெரிய அளவில் பொருளாதாரத்தில் வளர்ந்து வருகிறது என்றும் உலக நாடுகளுடன் ஒப்பிட்டு பார்க்கையில் 3-வது பெரிய நாடாக இந்தியா திகழ்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

10:56 (IST)14 Jul 2019
தனியார் மருத்துவமனை திறப்புவிழாவில் தலைவர்கள் பேச்சு

சுற்றுச்சூழல் பாதிப்பு, காலநிலை மாற்றம் ஆகிய காரணங்களால் அடிக்கடி பலநோய்களை சந்திக்கிறோம் என துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் பேச்சு.

தமிழகம் எப்போதும் சுகாதாரத் துறையில் சிறந்து விளங்குகிறது. ஆயுஷ்மான் திட்டத்தின் மூலம் ஏழை மக்கள் நல்ல பலன்களை பெறுவார்கள் என்று ஆளுநர் பன்வாரி

சென்னைக்கு வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. இது என்னுடைய இன்னொரு வீடு என்று துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு பேசினார். ஒரு நாடு முன்னேற்றப் பாதையில் செல்கிறது என்றால் அதில் சுகாதாரத்திற்கு முக்கிய பங்கு உண்டு என்றும் அவர் குறிப்பிட்டார்.

10:46 (IST)14 Jul 2019
தனியார் மருத்துவமனையை திறந்து வைத்த துணை குடியரசு தலைவர்

சென்னை அமைந்தகரையில் உள்ள நெல்சன் மாணிக்கம் சாலையில் தனியார் மருத்துவமனையை, துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார். அந்நிகழ்வில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

10:44 (IST)14 Jul 2019
மீனாட்சியம்மன் கோவில் : பாதாள சிறை கண்டுபிடிப்பு

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் கார் நிறுத்துவதற்கான பிரத்தேக பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த பணிகளுக்காக 30 அடியில் பள்ளம் தோண்டிய போது 10 அடி நீளம் கொண்ட பெரிய பெரிய கற்தூண்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாதாள சிறையாக இருக்க வாய்ப்பு உள்ளதாக ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர். பார்க்கிங் அமைக்கும் மேற்பகுதியில் ராணி மங்கம்மாள் காலத்தில் சிறைச்சாலை ஒன்று செயல்பட்டு வந்தது குறிப்பிடத்த்க்கது.

10:40 (IST)14 Jul 2019
யுனெஸ்கோவின் பாரம்பரிய அடையாளத்தை இழக்கும் அபாயத்தில் டார்ஜிலிங் மலை ரயில் சேவை

உலகில் இருக்கும் பாரம்பரிய தலங்கள் அனைத்தையும் பட்டியலிட்டு பராமரித்து வேலையை பார்த்து வருகிறது யுனெஸ்கோ. இந்தியாவின் பாரம்பரியமான இடங்களும் இந்த பட்டியலில் அடங்கும்.  சுமார் 140 ஆண்டுகள் பழமை வாய்ந்த டார்ஜிலிங் இமாலயன் ரயில் சேவை தற்போது தன்னுடைய பாரம்பரிய மதிப்பை இழந்து வருகிறது. அதன் முழுமையான தகவல்களைப் பெற

10:20 (IST)14 Jul 2019
அத்திவரதரை காண பெருந்திரளாக கூடும் பக்தர்கள்

40 ஆண்டுகளுக்கு ஒரு முறை அருள் தரும் காஞ்சி அத்திவரதரை காண தினமும் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். நேற்று விடுமுறை என்பதால் 2.50 லட்சம் பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர். கேரளா ஆளுநர் சதாசிவம் தன்னுடைய குடும்பத்தினருடன் அத்திவரதரை தரிசனம் செய்தார்.

10:01 (IST)14 Jul 2019
இலங்கை குண்டு வெடிப்பு விவகாரம் : தமிழகத்தில் தொடர் விசாரணை நடத்தும் என்.ஐ.ஏ

ஏப்ரல் மாதம் புனித ஞாயிறு அன்று,  இலங்கையின் 6 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல் நடைபெற்றது. இதில் 250க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், முக்கிய குற்றவாளியான ஜெஹ்ரானின் கூட்டாளிகள் யாராவது இருக்கின்றார்களா என்ற அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.  நாகை, சிக்கல் பகுதியை சேர்ந்த அசன்அலி, மஞ்சகொல்லை ஆரிப் முகமது ஆகிய இருவரிடம் நாகையில் விசாரணை நடத்திய  என்ஐஏ அதிகாரிகள் அவர்களை சென்னை அழைத்து வருகின்றனர். 

09:40 (IST)14 Jul 2019
பயணிகள் ரயில் ரத்து

பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்ற காரணத்தால் வேளச்சேரி - சென்னை கடற்கரை மார்க்கங்களில் செல்லும் பயணிகள் ரயில்கள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. காலையில் இருந்து மதியம் 2.10 மணி வரை ரயில்கள் ஏதும் செயல்படாது.

09:21 (IST)14 Jul 2019
திருநெல்வேலி நெல்லையப்பர் காந்தி அம்மன் திருக்கோவில் ஆனித் தேரோட்டம்

கடந்த ஜூலை ஆறாம் தேதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியது திருநெல்வேலி நெல்லையப்பர் சுவாமி திருக்கோவில் ஆனிப் பெருந்திருவிழா.  விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை  8 மணியிலிருந்து 9.30 மணி வரைக்கும் நடைபெற்றது. அதற்கு முன்பாக காலை 04:30 மணி முதல் 5.30 மணி வரை நெல்லையப்பர் காந்திமதி அம்மாள் தேரில் எழுந்தருளினர்.  விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் திருநெல்வேலி இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்சோதி, மண்டல தணிக்கை அலுவலர் ராஜேந்திரன், உதவி ஆணையர் சங்கர், ஆய்வாளர் கண்ணன் உட்பட்டோர் செய்தனர். 

09:09 (IST)14 Jul 2019
சந்திரயான் 2 - துவங்கியது கவுண்ட்டவுன்

இந்திய விண்வெளி ஆய்வுத்துறையில் மிக முக்கியமான மைல்கல்லாக அமைந்தது சந்திரயான் ஆகும். இந்த செயற்கைகோளின் இரண்டாவது செயற்கைக்கோள் நாளை அதிகாலையில் ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்படுகிறது. நாளை காலை சரியாக இரண்டு மணி 51 நிமிடங்களுக்கு விண்ணில் பாய இருக்கும் சந்திரயான்-2க்கான 20 மணி நேர கவுண்ட்டவுன் இன்று காலை தொடங்கியுள்ளது. 

விண்ணில் ஏவப்பட்ட உடன் சந்திரயான்-2 புவியின் சுற்றுவட்டப் பாதையை அடைய 16 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும். நிலவின் சுற்றுவட்ட பாதைக்கு மாற தோராயமாக 45 நாட்கள் ஆகும். இறுதியாக செப்டம்பர் 6ஆம் தேதி நிலவில் தரை இறங்கும் சந்திராயன் இந்த நிகழ்வை காண குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித், ஆந்திர ஆளுநர் நரசிம்மன், ஆந்திராவின் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர் நேரில் செல்கின்றனர். 

08:59 (IST)14 Jul 2019
இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 19 காசுகள் அதிகரித்து ரூபாய் 75 89 ஆக விற்பனையாகிறது டீசல் விலை ரூபாய் 69 96 காசுகளாக உள்ளது

08:57 (IST)14 Jul 2019
Postal exams : தேர்வு முடிவுகளை வெளியிட மதுரை உயர்நீதிமன்றக் கிளை மறுப்பு

தபால் துறை தேர்வுகள் இனி இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே எழுத முடியும் என்று மத்திய அரசு தலைமை அஞ்சல் அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியது இதற்கு தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பு உருவாகியுள்ளது. அரசியல்வாதிகள், எம்பிக்கள் உள்ளிட்டோர் தங்களின் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.  இந்தி பேசாத மக்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதலாகும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி அறிவித்துள்ளார். 

இந்நிலையில் இன்று அஞ்சல் துறை தேர்வுகள் நடைபெறுகின்றன இந்த தேர்வுக்கு தடை ஏதும் இல்லை இருப்பினும் தேர்வு முடிவுகளை வெளியிடக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது மதுரை சொக்கிகுளத்தை சேர்ந்த ஆசிர்வாதம் என்பவர் தொடுத்த வழக்கில் நீதிபதிகள் ரவிச்சந்திர பாபு மற்றும் மாதேவன் அமர்வு இந்த உத்தரவை வழங்கியது. தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகள் நீக்கப்பட்டதன் காரணம் என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும் என்றும் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

Tamil Nadu news today updates : 1954ம் ஆண்டு முதல் 9 ஆண்டுகளாக தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்து சிறப்பான ஆட்சியை வழங்கியவர் காமராஜர். தமிழகத்தை பல்வேறு துறைகளிலும் முன்னோடி மாநிலமாக மாற்றிய பெறுமை அவரை சேரும். அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் கல்வியை கொண்டு போய் சேர்க்கும் வகையில் மாபெரும் சமூக சீர்திருத்ததை தன்னுடைய உத்தரவால் நடத்திக் காட்டியவர். இதற்காக பெரியார் அவரை கல்வி வள்ளல் என்று காமராஜரை அழைத்தார். அவருடைய பிறந்தநாளான ஜூலை 15ம் தேதியை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட வேண்டும் என்றும், அதற்காக நிதியை தமிழக அரசு தர வேண்டு என்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி முக்கிய அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டார்.

அஞ்சலக தேர்வுகள் : தபால்துறை தேர்வுகளில் இனி இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே வினாத்தாள் வழங்கப்படும் என அனைத்து மாநிலங்களிலும் உள்ள தலைமை அஞ்சலகங்களுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.  தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இந்த புதிய உத்தரவுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான முழுமையான தகவல்களைப் படிக்க 

Web Title:Tamil nadu news today live updates chennai weather political events rainfall postal exams chandrayaan

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
JUST NOW
X