சிறந்த ப்ரீமியம் போன்கள் வாங்க வேண்டுமா ? இந்த பட்டியலை ஒருமுறை பார்த்துவிடுங்கள்!

இந்த போன்கள் அனைத்தும் 50 ஆயிரம் ரூபாய்க்கு குறைவான விலையில் உள்ளது.

By: Updated: February 4, 2019, 06:01:14 PM

Best smartphones above Rs 35,000 :   ஒன்ப்ளஸ் 6டி, நோக்கியா 8.1, ஹானர் வியூ20, ஆப்பிள் ஐபோன் 7 ப்ளஸ் ஆகிய போன்கள் தான் தற்போது ப்ரீமியம் போன்கள் லிஸ்டில் இருக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்கள்.  இந்த போன்கள் அனைத்தும் 50 ஆயிரம் ரூபாய்க்கு குறைவான விலையில் உள்ளது.

ஹானர் வியூ 20

பன்ச் ஹோல் டிஸ்பிளே, 48 எம்.பி. ரியர் கேமரா, 4,000mAh செயல்திறன் கொண்ட பேட்டரிகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் போன் இதுவாகும். இரண்டாவது டைம் ஆஃப் ஃப்ளைட் கேமராவும் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இண்டோர் மற்றும் அவுட் டோர் போட்டோகிராபிக்கு சிறந்த போனாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன். இந்த போனின் ஆரம்ப விலை ரூ. 37,999 ஆகும். 8ஜிபி ரேம் கொண்ட போனின் விலை ரூ. 45,999 ஆகும்.

இந்த போன் பற்றிய அனைத்து தகவல்களையும் படிக்க

நோக்கியா 8.1

6.18 இன்ச் ஃபுல் எச்.டி திரை கொண்ட போன் இது. ப்யூர் டிஸ்பிளே டெக்னாலஜியுடன் வெளிவந்திருக்கும் இந்த போன் ஆண்ட்ராய்ட் ஒன் டிவைஸ் ஆகும். கேமரா செயல் திறன் 12 எம்.பி மற்றும் 13 எம்.பி.  இதன் விலை 26 ஆயிரம் ரூபாய் (4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இண்டெர்நெல் ஸ்டோரேஜ்)

இந்த போன் பற்றிய முழுமையான தகவல்களைப் படிக்க

ஒன்ப்ளஸ் 6டி

சமீபத்தில் வெளியாகி வாடிக்கையாளர்கள் மனதில் இடம் பிடித்திருக்கும் இந்த ஆண்ட்ராய்ட் போனின் விலை ரூ.37,000 ஆகும். (6ஜிபி ரேம் + 128 ஜிபி இண்டெர்நெல் ஸ்டோரேஜ்). இதன் ஹையர் எண்ட் போனின் விலை ரூ.45,999 ஆகும்.

இந்த போன் பற்றிய முழுமையான தகவல்களைப் படிக்க

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

Web Title:Best smartphones above rs 35000 honor view20 nokia 8 1 oneplus 6t and more

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X