Budget phones for Diwali 2018 : தீபாவளி என்றால், புதிதாக எதாவது வாங்க வேண்டும் என்ற எண்ணம் நம் அனைவருக்கும் இருக்கும். இந்த வருட தீபாவளிக்கு இன்னும் சரியாக 10 நாட்கள் இருக்கிறது. 15000 ரூபாய்க்குள் ஸ்மார்ட் போன்கள் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஒரு பட்டியல்.
இந்த போன்கள் உங்களின் தேவையை உங்களின் பட்ஜெட்டில் பூர்த்தி செய்யும். ஃபிளிப்கார்ட் மற்றும் அமேசான் போன்ற இணைய தளங்கள் நிறைய ஆஃபர்களில் போன்களை விற்பனை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க : பட்ஜெட் 25,000 ... டாப் 5 கேமரா போன்கள்
Budget phones for Diwali 2018
சியோமி Mi A2 - விலை : ரூ. 14,999 (Xiaomi Mi A2)
அடுத்த இரண்டு வருடங்களுக்கு வர இருக்கும் ஆண்ட்ராய்ட் அப்டேட்டுகள் அனைத்தையும் பெற விரும்பினால் இந்த போன் சரியான தேர்வாக இருக்கும். ஓரியோ இயங்கு தளத்துடன் வெளிவந்துள்ளது இந்த போன். 12 எம்.பி மற்றும் 20 எம்.பி செயல் திறன் கொண்டிருக்கும் இரண்டு ரியர் கேமராக்களை கொண்டிருக்கிறது. 4ஜிபி RAM மற்றும் 64GB ஸ்டோரேஜ் கொண்ட போனினை தற்போது 15000 ரூபாய்க்குள் வாங்கலாம். இந்த போன் பற்றிய இதர சிறப்பம்சங்களைப் படிக்க
ரியல்மீ 2 ப்ரோ - விலை ரூ. 13,990 (Realme 2 Pro)
6.3 அங்குல அளவுள்ள இந்த போனில் இருக்கும் இரட்டைக் கேமரா வசதிகள் அனைவரையும் ஈர்க்கும் வகையில் புகைப்படங்களை தரும் என்பது குறிப்பிடத்தக்கது. 16MP மற்றும் 2MP செயல் திறன் கொண்ட கேமராக்கள் நல்ல வெளிச்சமான (right lighting condition) சூழலில் புகைப்படங்கள் எடுப்பதற்கு ஏற்ற ஒன்றாகும்.
குவால்கோம் 660 ப்ரோசசர் மூலம் செயல்படும் இந்த போன் கலர் இயங்குதளம் 5.2வில் வேலை செய்கிறது. 4ஜிபி RAM மற்றும் 64GB ஸ்டோரேஜ் கொண்ட போனினை தற்போது ரூ. 13,990க்கு வாங்கலாம்.
நோக்கியா 6.1 ப்ளஸ் : விலை ரூ. 15,999 (Nokia 6.1 Plus)
5.8 அங்குல ஃபுல் எச்.டி திரையுடன் வர இருக்கிறது இந்த ஸ்மார்ட்போன். இதன் ரெசலியூசன் 2280×1080 பிக்சல்கள் ஆகும். குவால்கோம் ஸ்னாப்ட்ராகன் 636 ப்ரோசசருடன் வரும் இந்த போனில் ஆட்ரெனோ 509 கிராபிக்ஸ் ப்ராசசர் யூனிட்டும் இருக்கிறது. 4GB of RAM மற்றும் 64GB இண்டெர்நெல் ஸ்டோரேஜ்ஜுடன் வரும் இந்த போன் ஆண்ட்ராய்ட் 8.1 ஓரியோ இயங்கு தளத்தில் இயங்கும்.
3060mAh திறன் கொண்ட பேட்டரியை போனில் இருந்து வெளியில் எடுக்க இயலாது. 16MP + 5MP என இரட்டை பின்பக்க கேமராக்களையும் 16MP செல்பி கேமராவையும் கொண்டிருக்கிறது இந்த ஸ்மார்ட்போன். இந்த போன் பற்றிய முழுமையான தகவல்களை படிக்க . 4ஜிபி RAM மற்றும் 64GB ஸ்டோரேஜ் கொண்ட போனினை தற்போது ரூ. 15,990க்கு வாங்கலாம்.
சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ - விலை : ரூ. 12, 999 ( Xiaomi Redmi Note 5 Pro )
குவால்கோம் 636 ப்ரோசசர் மூலம் இயங்கும் இந்த போனின் அளவு 5.99 இன்ச் ஆகும். ஃபுல் ஹெச்.டி திரை கொண்டிருக்கிறது. 4000 mAh பேட்டரி திறன் கொண்டிருக்கிற இந்த போனில் 12MP+5MP திறன் கொண்ட இரண்டு ரியர் கேமராக்கள் இருக்கின்றன. 4ஜிபி RAM மற்றும் 64GB ஸ்டோரேஜ் கொண்ட போனினை தற்போது ரூ. 12,999க்கு வாங்கலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.