Chandrayaan 2 Vikram Lander Updates: சந்திரயான் -2 விண்கலம் நிலவில் இறங்கும் வரலாற்று நிகழ்வை காண இந்தியாவே காத்துக் கொண்டிருக்கையில் விக்ரம் லேண்டருடான தொடர்பை இழந்தது இஸ்ரோ. இதனால் நிலவில் தரையிறங்க முடியாமல் போனது. இந்த நிகழ்வு பில்லியன் கணக்கான மக்களின் கனவுகளை சிதறடித்துள்ளது.
இருப்பினும் இஸ்ரோவின் இந்த முயற்சியை அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.
Chandrayaan 2 Moon Landing Live: Chandrayaan 2 Landing on Moon Live Telecast
Congratulations to the team at #ISRO for their incredible work on the Chandrayaan 2 Moon Mission. Your passion & dedication is an inspiration to every Indian. Your work is not in vain. It has laid the foundation for many more path breaking & ambitious Indian space missions. ????????
— Rahul Gandhi (@RahulGandhi) September 6, 2019
உங்கள் பணி வீண் போகவில்லை என காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார். “நிலவில் தரையிறங்கும் சந்திரயான் 2 திட்டத்தில் நம்ப முடியாத பணியை செய்த இஸ்ரோ குழுவினருக்கு வாழ்த்துக்கள். உங்கள் ஆர்வமும் அர்ப்பணிப்பும் ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகம் அளிக்கும். உங்கள் பணி வீண் போகவில்லை. பல சாதனைகளை படைக்க இது சிறப்பான அடித்தளமாக அமைந்துள்ளது” என ராகுல் காந்தி தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.
ISRO’s achievement with getting Chandrayaan-2 so far has made every Indian proud.
India stands with our committed and hard working scientists at @isro.
My best wishes for future endeavours.
— Amit Shah (@AmitShah) September 6, 2019
”இஸ்ரோவின் சந்திரயான் -2 சாதனை ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்த்துள்ளது. இஸ்ரோவின் எங்களது உறுதியான மற்றும் கடின உழைப்பாளிகளான விஞ்ஞானிகளுடன் இந்தியா துணை நிற்கும். எதிர்கால முயற்சிகளுக்கு எனது வாழ்த்துக்கள்” என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
”பெங்களூருவில் உள்ள இஸ்ரோ டெலிமெட்ரி, டிராக்கிங் மற்றும் கமாண்ட் நெட்வொர்க்கில் உள்ள மிஷன் ஆபரேஷன்ஸ் காம்ப்ளக்ஸ் லேண்டரிடமிருந்து அப்டேட் பெறுவதில் தடை ஏற்பட்டது. “திட்டத்தின் படி விக்ரம் செயல்பட்டுக் கொண்டிருந்தது, சாதாரண செயல்திறன் 2.1 கி.மீ உயரத்தில் காணப்பட்டது. இதையடுத்து, லேண்டரிலிருந்து இஸ்ரோ நிலையத்திற்கு தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதன் டேட்டா தற்போது அனலைஸ் செய்யப்படுகிறது” என இஸ்ரோவின் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
சந்திரயான் -2 என்பது நிலவில் ஒரு விண்கலத்தை தரையிறக்கும் இந்தியாவின் முதல் முயற்சி. இதற்கு முதல் அமெரிக்கா, முந்தைய சோவியத் ஒன்றியம் மற்றும் சீனா ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே இதனை செய்திருக்கிறார்கள்.
Live Blog
Chandrayaan-2 landing updates: சந்திரயான் 2 குறித்த லைவ் அப்டேட்டுகளை இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.
அறிவியலில் முடிவுகளைத் தேடக்கூடாது; மீண்டும் மீண்டும் நடத்தும் சோதனைகளே முடிவுக்கு அழைத்துச் செல்லும். ககன்யான் திட்டத்திற்காக முழுமையாக தயாராகி வருகிறோம். பிரதமர் மோடி எங்களுக்கு ஊக்கம் மற்றும் ஆதரவு தரும் சக்தியாக இருக்கிறார் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
'அறிவியலில் முடிவுகளைத் தேடக் கூடாது; மீண்டும் மீண்டும் நடத்தும் சோதனைகளே முடிவுக்கு அழைத்துச் செல்லும். விக்ரம் லேண்டர் தரையிறங்கும் போது சிக்னல் துண்டிக்கப்பட்டதால், அதை தொடர்பு கொள்ள முடியவில்லை. அடுத்து வரும் 14 நாட்களும் விக்ரம் லேண்டரின் சிக்னலை மீண்டும் பெற முயற்சிப்போம்' என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
சந்திரயான் -2 விண்கலத்தை ஏவும் திட்டத்திற்காக அல்லும், பகலும் அயராது உழைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளின் முயற்சி, உழைப்பு மிகவும் பாராட்டத்தக்கது. இஸ்ரோ விஞ்ஞானிகள் இந்த திட்டத்தில் மட்டுமல்லாமல், மேலும் பல திட்டங்களில் கண்டிப்பாக வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இஸ்ரோ விஞ்ஞானிகள் புது நம்பிக்கையுடனும், ஊக்கத்துடனும் செயல்பட்டு பல வெற்றிகள் பெற தமிழக மக்கள் சார்பாக வாழ்த்துகிறேன் - முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து
"வெற்றியின் அளவுகோல்கள் ஒவ்வொரு கட்டத்திற்கும் வரையறுக்கப்பட்டன, தற்போது வரை 90 முதல் 95 சதவிகித இலக்கு நிறைவேற்றப்பட்டுவிட்டது. மேலும் லாண்டருடனான தொடர்பு இழப்பு இருந்தபோதிலும், இது சந்திர அறிவியலுக்கு தொடர்ந்து பங்களிக்கும். தற்போதைய பின்னடைவு குறித்து கவலைப்படாமல் நிலவின் ஆய்வில் தொடர்ந்து முனைப்பு காட்டுவோம்" என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சந்திரயான்-2 திட்டத்தில் பணியாற்றிய விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது
விஞ்ஞானிகளின் கடும் உழைப்பிற்கான பலனை அறுவடை செய்யும் காலம் வெகுதொலைவில் இல்லை
சந்திரயான்-2 திட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள சோதனை விரைவில் சரியாகிவிடும்
- கேரள முதல்வர் பினராயி விஜயன்
'நாங்கள் உங்களோடு இருக்கிறோம்' என இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு நம்பிக்கை தெரிவித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ட்வீட் செய்துள்ளார்.
All of us are with you #ISRO. #IndiawithISRO #ProudOfISRO 🇮🇳
— A.R.Rahman (@arrahman) September 7, 2019
சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டரை நிலவில் இறங்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்ட இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பாராட்டு தெரிவித்துள்ளார்.
உற்சாகம், தன்னம்பிக்கையுடன் பணியாற்றிட வேண்டும் என்ற இஸ்ரோவின் நோக்கம் விரைவில் வெற்றிபெறும் என துணை முதல்வர் ஓபிஎஸ் வாழ்த்தியுள்ளார்.
முயற்சி பெருமைக்குரியது. தற்போது ஏற்பட்டுள்ள பின்னடைவு தற்காலிகமானது தான். விண்வெளிக்கு மனிதர்களை அழைத்து செல்லும் ககன்யான் உள்ளிட்ட அனைத்து அடுத்த கட்ட முயற்சிகளிலும் இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றி பெற வாழ்த்துகள் என அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சந்திரயான் - 2 சோதனையை கடந்து சாதனை படைக்கும் என சரத்குமார் வாழ்த்தியுள்ளார். சந்திராயன் 2 விண்கலம் நிலவில் கால்பதிக்கும் இறுதிகட்டத்தில் சந்தித்திருக்கும் சோதனை, ஏமாற்றம் அல்ல. வெற்றி சாதனையை பற்றி பிடிக்கும் நேரம் ஒத்தி போடப்பட்டிருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சந்திரயான் விண்கலத்தின் ஆராய்ச்சிக் கருவியை தரையிறக்குவதில் ஏற்பட்ட பின்னடைவு தற்காலிகமானதே. சந்திரயான்-2 முயற்சி மிகவும் அற்புதமானது. இஸ்ரோ விஞ்ஞானிகள் பாராட்டப்பட வேண்டியவர்கள். நிலவை நெருங்கும் முயற்சியில் விஞ்ஞானிகளுக்கு இந்த நாடு துணை நிற்கும் என்று பாமக தலைவர் ராமதாஸ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இஸ்ரோவிற்கும் அங்கு பணியாற்றும் புத்திசாலித்தனமான ஆண்களுக்கும் பெண்களுக்கும் நாங்கள் கடன் பட்டிருக்கிறோம். அவர்களின் கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் விண்வெளி பயண நாடுகளின் லீக்கில் இந்தியாவுக்கு ஓரிடத்தைப் பெற்றுத் தந்துள்ளது” என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Congress President Smt. Sonia Gandhi's statement on the Chandrayaan 2 Mission. pic.twitter.com/FQHbLTggbs
— Congress (@INCIndia) September 7, 2019
நிலவில் தரையிறங்கும், இந்தியாவின் சந்திரயான் 2 எனும் "தைரியமான முயற்சியில்" இருந்து கற்றுக்கொண்ட பாடங்கள், அதன் எதிர்கால பயணங்களின் போது நாட்டுக்கு உதவும் என்று நாசாவின் முன்னாள் விண்வெளி வீரர் ஜெர்ரி லினெஞ்சர் தெரிவித்துள்ளார். ”நாம் மிகவும் சோர்வடையக்கூடாது. இந்தியா மிகவும் கடினமான ஒன்றைச் செய்ய முயற்சித்திருக்கிறது. உண்மையிலேயே, லேண்டர் இறங்கும்போது எல்லாமே திட்டமிட்டபடி நடந்து கொண்டிருந்தது” என முன்னணி செய்தி நிறுவனத்துக்கு மின்னஞ்சலில் தெரிவித்துள்ளார் ஜெர்ரி.
சந்திரயான் -2 வின் ’விக்ரம் லேண்டர்’ இஸ்ரோவுடனான தொடர்பை இழந்ததால் சந்திரனில் ஒரு விண்கலத்தை தரையிறக்க வேண்டும் என்ற இந்தியாவின் கனவு மங்கிப்போனது. இந்நிலையில், விண்கலத்தின் ஆர்பிட்டார் கூறு சந்திர சுற்றுப்பாதையில் ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. " விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யன் ரோவர் பயணத்தின் 5 சதவிகிதத்தை மட்டுமே இழந்திருக்கிறது. 95 சதவிகிதம் மீதம் இருக்கிறது” என முன்னணி செய்தி நிறுவனத்திற்கு இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சந்திரயான் 2-வுக்காக கடுமையாக உழைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளை நினைத்து பெருமைப் படுகிறோம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.&nbs
We are proud of our scientists. The @isro team worked hard for #Chandrayaan2 . A befitting tribute to our founding fathers who envisioned India’s place in the league of scientifically advanced nations far ahead of their times. (1/2)
— Mamata Banerjee (@MamataOfficial) September 7, 2019
p;
”சோதனை இல்லாமல் அறிவியல் இல்லை . சில நேரங்களில் நாம் வெற்றி பெறுகிறோம், சில நேரங்களில் நாம் கற்றுக்கொள்கிறோம். புத்திசாலித்தனமான இஸ்ரோவுக்கு வாழ்த்துகள். உங்களால் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம், நம்பிக்கையுடன் இருக்கிறோம். மீண்டு எழுவோம்” என பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தெரிவித்துள்ளார்.
There’s no science without experiment...sometimes we succeed, sometimes we learn. Salute to the brilliant minds of @isro, we are proud and confident #Chandrayaan2 will make way for #Chandrayaan3 soon. We will rise again.
— Akshay Kumar (@akshaykumar) September 7, 2019
இஸ்ரோவுடன் துணை நிற்பதாக யூ ட்யூப் இந்தியா ட்வீட் செய்துள்ளது.
2.1 kms short.
But still got 1.3 billion people closer than ever before ❤We stand by @isro and our scientists 🛰#Chandrayaan2 #ISRO
— YouTube India (@YouTubeIndia) September 7, 2019
”இது தோல்விக்கு சமமானதல்ல, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் எப்போதும் ஒரு கற்றல் வளைவு இருக்கும். நாங்கள் விரைவில் சந்திரனுக்கு வருவோம். இந்த தேசம் இஸ்ரோவை நம்புகிறது” என நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.
This does not tantamount to failure. In Research and Development there will be a learning curve. This, is that precious learning moment. We will soon be on the Moon, Thanks to #ISRO. The Nation believes and applauds ISRO.
— Kamal Haasan (@ikamalhaasan) September 7, 2019
புத்திசாலித்தனமான விஞ்ஞானிகள் விடாமுயற்சியுடன் நம்மை சந்திரனுக்கு அழைத்துச் செல்வார்கள் என்று நம்புகிறேன் என சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.
Dr K Sivan and the entire @isro team both in the present & past have strived for this incredible effort. Bit of slip from cup to lip but I'm sure these brilliant scientists with relentless dedication will persevere & get us to the moon. Jai Hind. -Sg #Chandrayaan2 #ISRO
— Sadhguru (@SadhguruJV) September 7, 2019
”இதில் விரக்தியடைய ஒன்றுமில்லை. இஸ்ரோ விக்ரம் லேண்டருடனான தொடர்பை மட்டுமே இழந்தது, 1.3 பில்லியன் இந்தியர்களின் நம்பிக்கையை அல்ல” என்று துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
There is nothing to despair. ISRO only lost communication with the Lander & not the hopes of 1.3 billion Indians. The Orbiter with its payloads is performing its mission. @isro #Chandrayaan2
— VicePresidentOfIndia (@VPSecretariat) September 7, 2019
”ஒரு பில்லியன் மக்களை விண்வெளியை நோக்கிப் பார்க்கவும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் ஆற்றலில் எங்கள் நம்பிக்கையை ஊக்கப்படுத்தியதற்காகவும் இஸ்ரோ குழுவினருக்கு நன்றி. எங்கள் விஞ்ஞானிகளால் பெருமைப் படுகிறோம்” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Thank you Team @isro for inspiring a billion people to look towards outer space and place our faith in the power of science and technology.
We are proud of our scientists for taking us farther than before. #Chandrayaan2
— M.K.Stalin (@mkstalin) September 7, 2019
சந்திரயான் 2 மிஷன் மூலம், இஸ்ரோ குழு, முன்மாதிரியான அர்ப்பணிப்பையும் தைரியத்தையும் காட்டியுள்ளன. இஸ்ரோவால் நாடு பெருமிதம் கொள்கிறது” என குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
With #Chandrayaan2 Mission, the entire team of ISRO has shown exemplary commitment and courage. The country is proud of @ISRO. We all hope for the best #PresidentKovind
— President of India (@rashtrapatibhvn) September 6, 2019
மோடியின் உரையைக் கேட்ட சில பெண் விஞ்ஞானிகள் கண்ணீர் விட்டு அழுதனர். அப்போது பிரதமரிடம் இறுதியாக பேசிய, இஸ்ரோ தலைவர் சிவனும் கண்ணீர் விட்டு அழுதார். அவரை கட்டியணைத்த மோடி, சிவன் மற்றும் குழுவினருக்கு தைரியம் கூறினார். சிவனுக்கு தைரியம் சொல்லும் போது, மோடியும் கண் கலங்கினார்.
நிலவில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்பட்ட சந்திரயான் 2-ன் விக்ரம் லேண்டாரிடமிருந்து சிக்னல் கிடைக்காமல் போனது, இது இந்தியர்களுக்கு அதிர்ச்சியளித்தாலும், இஸ்ரோ விஞ்ஞானிகளின் கடும் உழைப்பை அனைவரும் பாராட்டி வருகிறார்கள். இந்நிலையில், இன்று காலை நாட்டு பெங்களூருவில் இஸ்ரோ விஞ்ஞானிகள் முன்னிலையில் உரையாற்றினார் பிரதமர் மோடி. அப்போது, “இஸ்ரோ விஞ்ஞானிகளால் இந்தியா பெருமை கொள்கிறது. சந்திரயான்-2 திட்டத்துக்காக தூக்கமின்றி பல நாட்கள் விஞ்ஞானிகள் உழைத்துள்ளனர். இரவு-பகலாக உழைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளால் இந்தியா பெருமை கொள்கிறது ! கடைசி நிமிட தோல்வி நிரந்தரமில்லை. நிலவை தொடும் முயற்சி நிச்சயம் வெற்றியடையும். நமது விண்வெளி திட்டத்தில் புதிய உச்சங்கள் இனிமேல்தான் வரவுள்ளன. அறிவியல் ஆராய்ச்சியில் தோல்வி என்பதே கிடையாது” என்றார்.
India is proud of our scientists! They’ve given their best and have always made India proud. These are moments to be courageous, and courageous we will be!
Chairman @isro gave updates on Chandrayaan-2. We remain hopeful and will continue working hard on our space programme.
— Narendra Modi (@narendramodi) September 6, 2019
இந்தியா தங்கள் விஞ்ஞானிகளை நினைத்துப் பெருமிதம் கொள்கிறது! அவர்கள் மிகச் சிறந்ததை இந்தியாவிற்கு கொடுத்திருக்கிறார்கள், இவை தைரியமாக இருக்க வேண்டிய தருணங்கள், நாம் தைரியமாகவே இருப்போம்' என்று பிரதமர் மோடி தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, 'நாம் இங்கு அடைந்தது சிறியதல்ல. வாழ்வில் ஏற்றமும் இருக்கும், தாழ்வுகளும் இருக்கும். சந்திரயன் -2 ஒரு சிறிய பணி அல்ல'. உங்களை நான் மனமார வாழ்த்துகிறேன். உங்களோடு நான் நிற்கிறேன், தைரியமாய் முனேறி செல்லுங்கள்.
இஸ்ரோவின் விஞ்ஞானிகள் தங்களது தைரியத்தைக் காட்டியுள்ளனர், மேலும் மனிதகுலத்துக்காகவும் கடுமையாக உழைத்துள்ளனர் என்று நரேந்திர மோடி கூறி இஸ்ரோவில் இருந்து வெளியேறினார்
#Vikram lander descent was as planned and normal performance was observed; subsequently communication from lander was lost; data is being analysed: K Sivan, #ISRO Chairperson#Chandrayaan2 #Chandrayaan2Live pic.twitter.com/UEbe1ODEu1
— PIB India (@PIB_India) September 6, 2019
இஸ்ரோ தலைவர் கே. சிவன் கூறுகையில் : “விக்ரம் லேண்டரோடு தகவல் பரிமாற்றத்தை இழந்திருக்கின்றோம். கிடைத்த தகவல்களை பகுப்பாய்வு செய்து கொண்டிருக்கிறோம்" என்றார்
விக்ரம் லேண்டர் rough breaking phase கட்டத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டது. அடுத்த 96 வினாடிகளில் Fine-breaking phase கட்டத்தை எட்டும் . சந்திரனின் தென் துருவ பகுதியில் தரையிறங்க 9 நிமிடங்களே உள்ளன.
fine breaking phase - ல் லேண்டர் விக்ரம்
Watch Live : Landing of Chandrayaan2 on Lunar Surface https://t.co/zooxv9IBe2
— ISRO (@isro) September 6, 2019
ரோவர் 'பிரக்யான்' உடன் சந்திரயான் 2 லேண்டர் 'விக்ரம்' சந்திரனின் தென் துருவ பகுதியில் இறங்கும் பணியைத் தொடங்கியது.
Watch Live : Landing of Chandrayaan2 on Lunar Surface https://t.co/zooxv9IBe2
— ISRO (@isro) September 6, 2019
இந்திய விண்வெளி திட்டத்தின் தந்தை டாக்டர் விக்ரம் சரபாயின் பெயரால் பெயரிடப்பட்ட இந்த லேண்டர் சந்திரியன் -2 இன் தனித்துவமான அம்சமாக கருதப்படுகிறது. இஸ்ரோ ஒரு லேண்டரை பூமிக்கு வெளியில் முயற்சிப்பது இதுவே முதல் முறை. விக்ரம் லேண்டர் ஒரு நிலவு நாளில் செயல்பட வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு நிலவு நாள் பூமிக்கு சுமார் 14 நாட்களுக்கு சமம் (ஒரு நிலவு நாள்= 14 பூமி நாள் ). பெங்களூருக்கு அருகிலுள்ள பைலாலுவில் இருக்கும் இந்திய டீப் ஸ்பேஸ் நெட்வொர்க் (ஐடிஎஸ்என்), ஆர்பிட்டர் மற்றும் ரோவர் உடன் தொடர்பு கொள்ளும் திறனை விக்ரம் கொண்டுள்ளது. விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் மென்மையான தரையிறக்கத்தை செயல்படுத்துவதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்திய விண்வெளி திட்டத்தின் தந்தை டாக்டர் விக்ரம் சரபாயின் பெயரால் பெயரிடப்பட்ட இந்த லேண்டர் சந்திரியன் -2 இன் தனித்துவமான அம்சமாக கருதப்படுகிறது. இஸ்ரோ ஒரு லேண்டரை பூமிக்கு வெளியில் முயற்சிப்பது இதுவே முதல் முறை. விக்ரம் லேண்டர் ஒரு நிலவு நாளில் செயல்பட வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு நிலவு நாள் பூமிக்கு சுமார் 14 நாட்களுக்கு சமம் (ஒரு நிலவு நாள்= 14 பூமி நாள் ). பெங்களூருக்கு அருகிலுள்ள பைலாலுவில் இருக்கும் இந்திய டீப் ஸ்பேஸ் நெட்வொர்க் (ஐடிஎஸ்என்), ஆர்பிட்டர் மற்றும் ரோவர் உடன் தொடர்பு கொள்ளும் திறனை விக்ரம் கொண்டுள்ளது. விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் மென்மையான தரையிறக்கத்தை செயல்படுத்துவதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ள
து.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன் நிலவில் கால் பதித்தார் நீல் ஆம்ஸ்ட்ராங். இன்று இந்தியாவின் லேண்டர் விக்ரம் நிலவில் கால் பதிக்கின்றது. ஆனால் இதற்கு முன்னர் எந்த விண்கலமும் செல்லாத இடத்திற்கு நமது சந்திரயான் செல்ல விருக்கிறது என்பதே நமது பெருமை . விக்ரம் என்று அழைக்கப்படும் லேண்டர், சந்திரனின் தென் துருவத்திற்கு (70 டிகிரி தெற்கு அட்சரேகையில் ) மிக அருகில் தரை இறங்க உள்ளது.
Rooting for team India. Good luck, India! #Chandrayaan2 https://t.co/iWWSqPs4nz
— Jeff Bezos (@JeffBezos) September 6, 2019
இன்று நிலவில் விக்ரம் லேண்டரை பெண்மையாய் தரையிறக்கும் இந்திய விஞ்ஞானிகளுக்கு அமேசான் சி.இ.ஓ ஜெப் பெசாஸ் தனது வாழ்த்தை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
சந்திரயான் -2 நிலவில் நீர் இருப்தற்கான ஆதாரங்களையும், நீரின் அளவு மதிப்பிடுவதற்கான முயற்சியை மேற்கொள்ளப் போகிறது.
ஆர்பிட்டரில் எட்டு, விக்ரம் லேண்டரில் நான்கு மற்றும் பிரக்யான் ரோவரில் இரண்டு என்று ஒட்டுமொத்தமாக சந்திரயன் -2 இல் 14 சாதனங்கள் உள்ளன. 2008 – ல் அனுப்பப்பட்ட சந்திரயான் -ஒன்றில் 13 கருவிகள் இருந்தன என்பது குறிப்பிடத் தக்கது.
மேலும் விவரங்களுக்கு: சந்திரயான் -2: இடம் பெற்ற கருவிகள், அவற்றின் பணிகள் முழு விவரம்
இஸ்ரோவின் சந்திரயான் - 2 விண்கலத்தின் லேண்டர் விக்ரம் இன்னும் மூன்று மணி நேரத்திற்குள் நிலவில் தரையிறங்குகிறது. இந்த அரிய நிகழ்வை பார்க்க வேண்டும் என்ற ஆவல் எல்லோருக்கும் உண்டு என்பதை யாராலும் மறுக்க முடியாது .
இஸ்ரோ தனது வலைத்தளமான isro.gov.in. -ல் சந்திரயான் 2 தரையிறங்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் லைவாக வெளியிடும். இதன் நேரடி ஸ்ட்ரீமை பிஐபி இந்தியா (PIB India) என்ற யூடியூப் சேனலில் பார்க்கலாம்.
மேலும் விவரங்களுக்கு, Chandrayaan 2 Moon Landing: நிலவில் தரையிறங்கும் சந்திரயான் 2 - ஆன்லைனில் எப்படி பார்ப்பது?
சந்திரயான் -2 என்பது சந்திரனுக்கான 110 வது விண்வெளிப் பணியாகும். கடந்த பத்தாண்டுகளில் இது 11 வது விண்வெளிப் பணியாகும். முதல், 90 சந்திரன் பயணங்கள் 1958 மற்றும் 1976 க்கு இடையில் அனுப்பப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது .
பல்வேறு வகையான நிலவு பயணங்கள் இங்கே:
Flybys– இந்த ஆய்வு, நிலவை நோக்கி வடிவமைக்கப்பட்டிருந்தாலும், நிலவின் சுற்றுவட்டப்பாதை அளவிற்கு மட்டுமே இந்த விண்கலம் இயக்கப்பட்டது
Orbiters - நிலவின் சுற்றுவட்டப்பாதையின் வடிவமைப்பு, நிலவின் மேற்பரப்பு மற்றும் அதன் வளிமண்டலம் குறித்து அறிவதற்காக இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன
Landers :- ஆர்பிட்டர் ஆய்வுகளிலேயே மிகவும் கடினமான கட்டமைப்புடன் கூடியதாக இந்த லேண்டர்கள் உள்ளன. முதல் 11 லேண்டர் மிஷன்கள் தோல்வியிலேயே முடிந்துள்ளன. 1966ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி சோவியத் ரஷ்யாவால் அனுப்பப்பட்ட லுனா 9 விண்கலம் மூலம் முதல் லேண்டர் மிஷன் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது
மேலும் விவரங்களுக்கு, நிலவை நோக்கிய விண்வெளி ஆய்வுகள் - ஒரு பார்வை
Hearty welcome to H’ble PM @narendramodi ji who has reached Bengaluru to witness a proud moment with @isro scientists, the #Chandrayaan2 descending onto the Lunar South Pole. pic.twitter.com/SgezQ7gyOb
— B.S. Yediyurappa (@BSYBJP) September 6, 2019
சந்திரயான் -2 மூன் லேண்டிங்: கர்நாடக முதலமைச்சர் பி.எஸ்.எடியூரப்பா பெங்களூரு விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்றார். முதல்வர் தவிர, ஆளுநர் வஜுபாய் வாலா, மத்திய அமைச்சர்கள் டி வி சதானந்த கவுடா மற்றும் பிரல்ஹாத் ஜோஷி, கர்நாடக வருவாய் அமைச்சர் ஆர்.அசோகா, மாநில பாஜக தலைவர் நலின் குமார் கட்டீல் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
'இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் பெருமைமிக்க தருணத்தை காண பெங்களூரை வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடியை மனதார வரவேற்கிறேன்' என்று பி.எஸ்.எடியூரப்பா ட்வீட் செய்துள்ளார்.
#ISRO
Less than four hours to go, we are ready for the historic event of landing of #Chandrayaan2 #VikramLander.Stay tuned for updates..
— ISRO (@isro) September 6, 2019
சந்திரயான்-2 விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்க இன்னும் நான்கு மணி நேரத்திற்கும் குறைவாகவே உள்ளது. இந்த தருணம் தான் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. நிலவில் தரையிறங்கும் போது அதன் வேகத்தை நொடிக்கு வெறும் 2 மீட்டர் என்ற வேகத்தில் குறைக்க வேண்டும்.
PM @narendramodi landed in Bengaluru.
He was welcomed by Governor of Karnataka Shri Vajubhai Vala, CM @BSYBJP, Union Ministers @DVSadanandGowda, @JoshiPralhad, Ministers of the Karnataka Cabinet and officials. pic.twitter.com/2kEwDX4N26
— PMO India (@PMOIndia) September 6, 2019
பிரதமர் நரேந்திர மோடி லேண்டர் விக்ரம் தரை இறங்கும் நிகழ்வைக் காண பெங்களூரு விமான நிலையத்திற்கு தற்போது வந்திருக்கிறார். அவரை கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலா வரவேற்றார். இன்னும் சற்று நேரத்தில் இஸ்ரோ தலைமையகத்தை அடைவார்.
இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவிக்கையில் " தரை இறங்குவதகான பணிகள் ஏற்கனவே சோதிக்கப் பட்டுவிட்டதாகவும், சந்திரயான்- 2 ல் உள்ள அனைத்து சாதனங்களும் நல்ல முறையில் செயல் பட்டு வருவதால் தரை இறங்கும் நிகழ்வில் எந்த ஒரு தவறும் நடக்காது என்று இஸ்ரோவின் தலைவர் சிவன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சந்திரயான் -2 சந்திரனின் மேற்பரப்பில் செப்டம்பர் 7 ஆம் தேதி (சனிக்கிழமை ) அதிகாலை 1:30 மணி முதல் அதிகாலை 2:30 மணி வரை மென்மையான தரையிறக்கத்தை செய்யும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
நள்ளிரவில் நடக்கும் இந்த நிகழ்வை இரவு முழுவதும் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் உங்களுக்காக நேரலையில் செய்திகளை தரவிருக்கிறது.
ஜூன் 22ம் தேதி துவங்கி இன்றுடன் 48 நாட்கள் விண்வெளியில் பயணித்து வருகிறது சந்திரயான் 2. தற்போது வரை மட்டும் 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் வரை பயணம் செய்துள்ளது. தற்போது லேண்டர் விக்ரம் நொடிக்கு 6 கி.மீ வேகத்தில் பயணித்து வருகிறது. அதாவது மணிக்கு 21,600 கி.மீ ஆகும். ஆனால் இன்று நிலவின் தரையிறங்கும் தருணம் தான் மிகவும் முக்கியமான ஒன்றாகும். நிலவில் தரையிறங்கும் போது அதன் வேகத்தை நொடிக்கு வெறும் 2 மீட்டர் என்ற வேகத்தில் குறைக்க வேண்டும். அதுவும் வெறும் 15 நிமிடங்களில். இது சாத்தியப்பட்டால் மட்டுமே இன்று நிலவில் (அதாவது நாளை காலை 01:30 மணிக்கு) தரையிறங்கும் சந்திரயான் 2.
இருந்தாலும், சந்திர மேற்பரப்பு வெவ்வேறு கூறுகளின் ஆக்சைடுகளால் நிறைந்துள்ளது என்பது அறியப்படுகிறது. இந்த ஆக்சைடுகள் சூரியக் காற்றில் உள்ள ஹைட்ரஜன் அயனியுடன் வினைபுரிந்து ஹைட்ராக்ஸில் மூலக்கூறுகளை உருவாக்கி இருந்திருக்கலாம். அவை மீண்டும் ஹைட்ரஜனுடன் இணைந்து எச் 2 0 வை உருவாக்கி இருந்திருக்கலாம் .
அல்லது, நீர் வெளிப்புறத்தில் இருந்தும் வந்திருக்கலாம். நீராவி கொண்ட வால்மீன்கள் மற்றும் சிறுகோள்கள் கடந்த காலங்களில் சந்திரனுடன் மோதியதாக அறியப்படுகிறது, இதனால், இந்த நீரின் தடயங்களை சந்திரனுக்கு மாற்றியிருக்கலாம் என்ற கருத்தும் நிலவி வருகிறது.
எனவே, சந்திரனில் கண்டறியப்பட்ட நீர் எவ்வாறு உருவானது எனபதற்கு இன்னும் தெளிவான விளக்கம் நம்மில் இல்லை என்றே சொல்லாம்.
I am extremely excited to be at the ISRO Centre in Bengaluru to witness the extraordinary moment in the history of India’s space programme. Youngsters from different states will also be present to watch those special moments! There would also be youngsters from Bhutan.— Narendra Modi (@narendramodi) September 6, 2019பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை அதிகாலை சந்திரனில் மென்மையாக தரையிறங்கும் சந்திரயான்-2 விண்கலத்தை காண்பதற்காக பெங்களூரில் உள்ள இஸ்ரோ தலைமையகத்திற்கு வருகை தருகிறார்.
நிலவை நோக்கிய விண்வெளி ஆய்வுகள் 100க்கும் மேல், சர்வதேச நாடுகளால் நிகழ்த்தப்பட்டு வந்துகொண்டிருக்கின்றன. இப்போது செல்லவிருக்கும் சந்திரயான் 2 விண்கலம் 110 வது நிலவு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது என்பதே நிதர்சனமான உண்மை. 1958 முதல் 1976ம் கோல்ட் வார் வரையிலான காலகட்டத்தில் மட்டும் 90 ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன . பின் நில்லவை பற்றிய ஆராய்ச்சி சற்று மந்தம் அடைந்தது என்றே சொல்லலாம். நிலவில் தண்ணீர் இருப்பதாக 2008ம் ஆண்டில் நமது இஸ்ரோவால் அனுப்பப்பட்ட சந்திரயான் கண்டுபிடித்ததை தொடர்ந்து, சர்வதேச நாடுகள் நிலவு பற்றிய ஆராய்ச்சிகள் அதிக கவனம் கொள்ள துவங்கின.
மேலும், படிக்க நிலவை நோக்கிய விண்வெளி ஆய்வுகள் - ஒரு பார்வை
2008 ஆம் ஆண்டில் விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் -1 ல் இருந்த இரண்டு கருவிகளின் மூலம் , நிலவில் நீர் இருப்பதற்கான மறுக்கமுடியாத சான்றுகள் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டது . ஆனால், நிலவில் இருக்கும் நீர் திரவ வடிவத்தில் இருப்பதற்க்கான சான்றுகள் நம்மில் இல்லை. அந்நீரின் அளவு என்ன? என்பது குறித்த நியாயமான மதிப்பீடும் நம்மில் இல்லை என்றே சொல்லாம்.
ஹைட்ரஜன், எச் 2 ஓ மற்றும் ஹைட்ராக்சில் அயனிகளின் மூலக்கூறுகள் மட்டுமே இதுவரை நிலவில் நம்மால் கண்டறியப்பட்ட ஒன்றாய் உள்ளது .
Ever wondered about Pragyan’s different parts and how it functions? Watch the full video to find out!https://t.co/EuL6Gf72Jd#ISRO #Chandrayaan2 #Moonmission
— ISRO (@isro) September 6, 2019
விக்ரம் நிலவில் தரையிறங்கும் நிகழ்வுக்காக இந்திய நாடே காத்துக் கொண்டிருக்கிறது. லேன்டர் விக்ரம் தரையிறங்கிய பின்னர் பிரக்யன் என்ற ஆறு சக்கர ரோபோ வாகனம் லேண்டரிலிருந்து வெளியே வரும். பிரக்யன் சந்திரனின் மேற்பரப்பில் வலம் வந்து தகவல்களை சேகரித்து இஸ்ரோவிற்கு அனுப்பும் இந்த பிரக்யன் பற்றிய சிறப்பு வீடியோ வை தற்போது இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
இஸ்ரோ தனது வலைத்தளமான isro.gov.in.-ல் சந்திரயான் 2 தரையிறங்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் லைவாக வெளியிடும்(இமேஜ் படங்களை) . PIB India என்ற யூடியூப் சேனலில் நீங்கள் பார்க்கலாம்.
மேலும் விவரங்களுக்கு, https://tamil.indianexpress.com/technology/chandrayaan-2-moon-landing-live-how-to-watch-online/
சந்திரனின் மேற்பரப்பில் தரையிறங்க போகும் 29 வது விண்கலம் ஆகும். ஆனால் இதற்கு முன்னர் எந்த விண்கலமும் செல்லாத இடத்திற்கு நமது சந்திரயான் செல்ல விருக்கிறது என்பதே நமது பெருமை . விக்ரம் என்று அழைக்கப்படும் லேண்டர், சந்திரனின் தென் துருவத்திற்கு (70 டிகிரி தெற்கு அட்சரேகையில் ) மிக அருகில் தரை இறங்க உள்ளது.
சந்திரனில் தரையிறங்கிய மற்ற அனைத்து விண்கலங்களும் சந்திர பூமத்திய ரேகை(lunar equator)பகுதியில் மட்டுமே இது வரை தரைஇறங்கியுள்ளன. இந்த பூமத்திய ரேகைக்கு வடக்கு அல்லது தெற்கே ரேகைக்கு சென்ற ஒரே விண்கலம் நாசாவால் ஏவப்பட்ட சர்வேயர் 7 மட்டுமே ஆகும். இது ஜனவரி 10, 1968 இல் 40 டிகிரி தெற்கு அட்சரேகைக்கு அருகில் தரையிறங்கியது
நிலவில் தரையிறங்கும் விக்ரம் லேண்டரைப் பார்க்க காத்திருக்கும் மக்களுக்கு ஒரு மிகப்பெரிய ஏமாற்றம் என்னவென்றால் அந்த நிகழ்வுக்கான வீடியோ எதுவும் கிடைக்காது என்பது தான். நிலவின் மேல் பரப்பின் 100 கி.மீ தொலைவில் சுற்றிவரும் ஆர்பிட்டர் விண்கலத்தில் இருக்கும் கேமரா இந்த தரையிறங்கும் நிகழ்வை பதிவு செய்ய முடியாத நிலையில் வேறு திசையில் இருக்கும். இந்த ஆர்பிடர் கேமராவைத் தாண்டி லேண்டுருக்கு வெளியில் வேறு எந்த கேமராவும் இல்லை. மேலும் லேண்டர் தனது சொந்த கேமராவைப் பயன்படுத்தி தன்னைத்தானே வீடியோ எடுக்கவும் முடியாது. எவ்வாறாயினும், நிலவை நெருங்க நெருங்க விக்ரம் லேண்டரில் உள்ள கேமரா மூலம் நிலவின் மேற்பரப்பை படங்களாக(இமேஜ்) எடுக்க முடியும். இந்த படங்களை மட்டும் பூமியில் நேரலையாக ஒளிபரப்பலாம்.
சந்திரயான் – 2 விக்ரம் லேண்டர் செப்டம்பர் 7, 2019 அதிகாலை 1.30 மணி முதல் 2.30 மணிக்குள் நிலவில் தென் துருவப் பகுதியில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால், சந்திரனில் மென்மையாக தரையிறங்கும் நான்காவது நாடாகவும், சந்திரனின் தென் துருவப் பகுதியைத் தொடும் முதல் நாடாகவும் இந்தியா மாறும் என கருதப்பட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights