Chandrayaan 2 Landing: ‘ககன்யான் திட்டத்திற்காக முழுமையாக தயாராகி வருகிறோம்’ – இஸ்ரோ தலைவர் சிவன்

Chandrayaan 2 Moon Landing News: இப்போது தைரியமாக இருக்க வேண்டிய தருணம், நாம் தைரியமாக இருப்போம்!

By: Sep 7, 2019, 10:27:04 PM

 Chandrayaan 2 Vikram Lander Updates: சந்திரயான் -2 விண்கலம் நிலவில் இறங்கும் வரலாற்று நிகழ்வை காண இந்தியாவே காத்துக் கொண்டிருக்கையில் விக்ரம் லேண்டருடான தொடர்பை இழந்தது இஸ்ரோ. இதனால் நிலவில் தரையிறங்க முடியாமல் போனது. இந்த நிகழ்வு பில்லியன் கணக்கான மக்களின் கனவுகளை சிதறடித்துள்ளது.

இருப்பினும் இஸ்ரோவின் இந்த முயற்சியை அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.

Chandrayaan 2 Moon Landing Live: Chandrayaan 2 Landing on Moon Live Telecast

உங்கள் பணி வீண் போகவில்லை என காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார். “நிலவில் தரையிறங்கும் சந்திரயான் 2 திட்டத்தில் நம்ப முடியாத பணியை செய்த இஸ்ரோ குழுவினருக்கு வாழ்த்துக்கள். உங்கள் ஆர்வமும் அர்ப்பணிப்பும் ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகம் அளிக்கும். உங்கள் பணி வீண் போகவில்லை. பல சாதனைகளை படைக்க இது சிறப்பான அடித்தளமாக அமைந்துள்ளது” என ராகுல் காந்தி தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

”இஸ்ரோவின் சந்திரயான் -2 சாதனை ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்த்துள்ளது. இஸ்ரோவின் எங்களது உறுதியான மற்றும் கடின உழைப்பாளிகளான விஞ்ஞானிகளுடன் இந்தியா துணை நிற்கும். எதிர்கால முயற்சிகளுக்கு எனது வாழ்த்துக்கள்” என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

”பெங்களூருவில் உள்ள இஸ்ரோ டெலிமெட்ரி, டிராக்கிங் மற்றும் கமாண்ட் நெட்வொர்க்கில் உள்ள மிஷன் ஆபரேஷன்ஸ் காம்ப்ளக்ஸ் லேண்டரிடமிருந்து அப்டேட் பெறுவதில் தடை ஏற்பட்டது. “திட்டத்தின் படி விக்ரம் செயல்பட்டுக் கொண்டிருந்தது, சாதாரண செயல்திறன் 2.1 கி.மீ உயரத்தில் காணப்பட்டது. இதையடுத்து, லேண்டரிலிருந்து இஸ்ரோ நிலையத்திற்கு தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதன் டேட்டா தற்போது அனலைஸ் செய்யப்படுகிறது” என இஸ்ரோவின் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

சந்திரயான் -2 என்பது நிலவில் ஒரு விண்கலத்தை தரையிறக்கும் இந்தியாவின் முதல் முயற்சி. இதற்கு முதல் அமெரிக்கா, முந்தைய சோவியத் ஒன்றியம் மற்றும் சீனா ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே இதனை செய்திருக்கிறார்கள்.

Live Blog
Chandrayaan-2 landing updates: சந்திரயான் 2 குறித்த லைவ் அப்டேட்டுகளை இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.
21:25 (IST)07 Sep 2019
ககன்யான் திட்டத்திற்காக முழுமையாக தயாராகி வருகிறோம் - இஸ்ரோ தலைவர் சிவன்

அறிவியலில் முடிவுகளைத் தேடக்கூடாது; மீண்டும் மீண்டும் நடத்தும் சோதனைகளே முடிவுக்கு அழைத்துச் செல்லும். ககன்யான் திட்டத்திற்காக முழுமையாக தயாராகி வருகிறோம். பிரதமர் மோடி எங்களுக்கு ஊக்கம் மற்றும் ஆதரவு தரும் சக்தியாக இருக்கிறார் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

20:53 (IST)07 Sep 2019
அறிவியலில் முடிவுகளைத் தேடக் கூடாது - இஸ்ரோ தலைவர் சிவன்

'அறிவியலில் முடிவுகளைத் தேடக் கூடாது; மீண்டும் மீண்டும் நடத்தும் சோதனைகளே முடிவுக்கு அழைத்துச் செல்லும். விக்ரம் லேண்டர் தரையிறங்கும் போது சிக்னல் துண்டிக்கப்பட்டதால், அதை தொடர்பு கொள்ள முடியவில்லை. அடுத்து வரும் 14 நாட்களும் விக்ரம் லேண்டரின் சிக்னலை மீண்டும் பெற முயற்சிப்போம்' என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

20:49 (IST)07 Sep 2019
இஸ்ரோ விஞ்ஞானிகள் புது நம்பிக்கையுடனும், ஊக்கத்துடனும் செயல்பட்டு பல வெற்றிகள் பெற வாழ்த்துகள் - முதல்வர் பழனிசாமி

சந்திரயான் -2 விண்கலத்தை ஏவும் திட்டத்திற்காக அல்லும், பகலும் அயராது உழைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளின் முயற்சி, உழைப்பு மிகவும் பாராட்டத்தக்கது. இஸ்ரோ விஞ்ஞானிகள் இந்த திட்டத்தில் மட்டுமல்லாமல், மேலும் பல திட்டங்களில் கண்டிப்பாக வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இஸ்ரோ விஞ்ஞானிகள் புது நம்பிக்கையுடனும், ஊக்கத்துடனும் செயல்பட்டு பல வெற்றிகள் பெற தமிழக மக்கள் சார்பாக வாழ்த்துகிறேன் - முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து

19:43 (IST)07 Sep 2019
95% இலக்கு நிறைவேற்றம் - இஸ்ரோ

"வெற்றியின் அளவுகோல்கள் ஒவ்வொரு கட்டத்திற்கும் வரையறுக்கப்பட்டன, தற்போது வரை 90 முதல் 95 சதவிகித இலக்கு நிறைவேற்றப்பட்டுவிட்டது. மேலும் லாண்டருடனான தொடர்பு இழப்பு இருந்தபோதிலும், இது சந்திர அறிவியலுக்கு தொடர்ந்து பங்களிக்கும். தற்போதைய பின்னடைவு குறித்து கவலைப்படாமல் நிலவின் ஆய்வில் தொடர்ந்து முனைப்பு காட்டுவோம்" என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. 

18:25 (IST)07 Sep 2019
இஸ்ரோவை பாராட்டிய நல்லக்கண்ணு

சந்திர மண்டலத்திற்கு சென்று வந்திருக்கிறோம் என்றால் அது பாராட்டுக்குரியது என நல்லக்கண்ணு பாராட்டு தெரிவித்துள்ளார்.

17:49 (IST)07 Sep 2019
சந்திரயான் 2 சோதனை விரைவில் மாறும் - கேரள முதல்வர்

சந்திரயான்-2 திட்டத்தில் பணியாற்றிய விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது

விஞ்ஞானிகளின் கடும் உழைப்பிற்கான பலனை அறுவடை செய்யும் காலம் வெகுதொலைவில் இல்லை

சந்திரயான்-2 திட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள சோதனை விரைவில் சரியாகிவிடும்

- கேரள முதல்வர் பினராயி விஜயன்

17:46 (IST)07 Sep 2019
நாங்கள் உங்களோடு இருக்கிறோம் - ஏ.ஆர்.ரஹ்மான்

'நாங்கள் உங்களோடு இருக்கிறோம்' என இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு நம்பிக்கை தெரிவித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ட்வீட் செய்துள்ளார்.

17:45 (IST)07 Sep 2019
இஸ்ரோவின் நோக்கம் விரைவில் வெற்றிபெறும் - ஓ.பி.எஸ் வாழ்த்து

சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டரை நிலவில் இறங்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்ட இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பாராட்டு தெரிவித்துள்ளார்.

உற்சாகம், தன்னம்பிக்கையுடன் பணியாற்றிட வேண்டும் என்ற இஸ்ரோவின் நோக்கம் விரைவில் வெற்றிபெறும் என துணை முதல்வர் ஓபிஎஸ் வாழ்த்தியுள்ளார். 

16:58 (IST)07 Sep 2019
95% சக்சஸ் - இஸ்ரோ முன்னாள் தலைவர்

இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் கூறுகையில், "நாம் அதிகம் கவலைப்படத் தேவையில்லை என்று நினைக்கிறேன் ... சந்திரயான் 2ன் பணி நோக்கம் 95 சதவீதத்திற்கும் அதிகமாக நிறைவேறியிருக்கிறது" என்றார்.

16:46 (IST)07 Sep 2019
சந்திரயான் 2 ரோவர் பிரக்யான்

நிலவில் களமிறங்கி இருக்க வேண்டிய சந்திரயான் 2ன் ரோவர் பிரக்யான்

15:04 (IST)07 Sep 2019
மகிந்த ராஜபக்ச கருத்து!

சந்திரயான் 2 - இறுதிக்கட்டத்தில் வெற்றியை எட்டாவிட்டாலும் தெற்காசியாவிற்கு பெருமை சேர்க்கும் பயணம் அது - இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச கருத்து  தெரிவித்துள்ளார். 

14:17 (IST)07 Sep 2019
அன்புமணி ராமதாஸ் வாழ்த்து!

முயற்சி பெருமைக்குரியது. தற்போது ஏற்பட்டுள்ள பின்னடைவு தற்காலிகமானது தான். விண்வெளிக்கு மனிதர்களை அழைத்து செல்லும் ககன்யான் உள்ளிட்ட அனைத்து அடுத்த கட்ட முயற்சிகளிலும் இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றி பெற வாழ்த்துகள் என அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

14:16 (IST)07 Sep 2019
கனிமொழி பதிவு!

சந்திராயன் 2 95% நிறைவடைந்த பணி அடுத்த முறை 100 சதவீதம் ஆக்குவோம். நம் தேசத்தை பெருமைப்படுத்தியதற்காக இஸ்ரோ தலைவர் சிவனுக்கு நன்றி  என்று எம்.பி. கனிமொழி ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். 

14:15 (IST)07 Sep 2019
சரத்குமார் வாழ்த்து!

சந்திரயான் - 2 சோதனையை கடந்து சாதனை படைக்கும் என சரத்குமார் வாழ்த்தியுள்ளார். சந்திராயன் 2 விண்கலம் நிலவில் கால்பதிக்கும் இறுதிகட்டத்தில் சந்தித்திருக்கும் சோதனை, ஏமாற்றம் அல்ல. வெற்றி சாதனையை பற்றி பிடிக்கும் நேரம் ஒத்தி போடப்பட்டிருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

14:10 (IST)07 Sep 2019
ராமதாஸ் ட்வீட்!

சந்திரயான் விண்கலத்தின் ஆராய்ச்சிக் கருவியை தரையிறக்குவதில் ஏற்பட்ட பின்னடைவு தற்காலிகமானதே. சந்திரயான்-2 முயற்சி மிகவும் அற்புதமானது. இஸ்ரோ விஞ்ஞானிகள் பாராட்டப்பட வேண்டியவர்கள். நிலவை நெருங்கும் முயற்சியில் விஞ்ஞானிகளுக்கு இந்த நாடு துணை நிற்கும் என்று பாமக தலைவர் ராமதாஸ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 

13:10 (IST)07 Sep 2019
சோனியா காந்தி அறிக்கை

இஸ்ரோவிற்கும் அங்கு பணியாற்றும் புத்திசாலித்தனமான ஆண்களுக்கும் பெண்களுக்கும் நாங்கள் கடன் பட்டிருக்கிறோம். அவர்களின் கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் விண்வெளி பயண நாடுகளின் லீக்கில் இந்தியாவுக்கு ஓரிடத்தைப் பெற்றுத் தந்துள்ளது” என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

12:40 (IST)07 Sep 2019
சந்திரயான் 2 முயற்சியைப் பற்றி முன்னாள் நாசா விஞ்ஞானி

நிலவில் தரையிறங்கும், இந்தியாவின் சந்திரயான் 2 எனும் "தைரியமான முயற்சியில்" இருந்து கற்றுக்கொண்ட பாடங்கள், அதன் எதிர்கால பயணங்களின் போது நாட்டுக்கு உதவும் என்று நாசாவின் முன்னாள் விண்வெளி வீரர் ஜெர்ரி லினெஞ்சர் தெரிவித்துள்ளார். ”நாம் மிகவும் சோர்வடையக்கூடாது. இந்தியா மிகவும் கடினமான ஒன்றைச் செய்ய முயற்சித்திருக்கிறது. உண்மையிலேயே, லேண்டர் இறங்கும்போது எல்லாமே திட்டமிட்டபடி நடந்து கொண்டிருந்தது” என முன்னணி செய்தி நிறுவனத்துக்கு மின்னஞ்சலில் தெரிவித்துள்ளார் ஜெர்ரி.  

12:32 (IST)07 Sep 2019
5% மட்டுமே இழந்திருக்கிறோம் - இஸ்ரோ

சந்திரயான் -2 வின் ’விக்ரம் லேண்டர்’ இஸ்ரோவுடனான தொடர்பை இழந்ததால் சந்திரனில் ஒரு விண்கலத்தை தரையிறக்க வேண்டும் என்ற இந்தியாவின் கனவு மங்கிப்போனது. இந்நிலையில், விண்கலத்தின் ஆர்பிட்டார் கூறு சந்திர சுற்றுப்பாதையில் ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. " விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யன் ரோவர் பயணத்தின் 5 சதவிகிதத்தை மட்டுமே இழந்திருக்கிறது. 95 சதவிகிதம் மீதம் இருக்கிறது” என முன்னணி செய்தி நிறுவனத்திற்கு இஸ்ரோ தெரிவித்துள்ளது. 

12:17 (IST)07 Sep 2019
மம்தா ட்வீட்

சந்திரயான் 2-வுக்காக கடுமையாக உழைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளை நினைத்து பெருமைப் படுகிறோம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.&nbs

p;

11:57 (IST)07 Sep 2019
சோதனை இல்லாமல் அறிவியல் இல்லை

”சோதனை இல்லாமல் அறிவியல் இல்லை . சில நேரங்களில் நாம் வெற்றி பெறுகிறோம், சில நேரங்களில் நாம் கற்றுக்கொள்கிறோம். புத்திசாலித்தனமான இஸ்ரோவுக்கு வாழ்த்துகள்.  உங்களால் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம், நம்பிக்கையுடன் இருக்கிறோம். மீண்டு எழுவோம்” என பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் தெரிவித்துள்ளார்.

11:40 (IST)07 Sep 2019
யூ ட்யூப் இந்தியாவின் ட்வீட்

இஸ்ரோவுடன் துணை நிற்பதாக யூ ட்யூப் இந்தியா ட்வீட் செய்துள்ளது. 

11:06 (IST)07 Sep 2019
இஸ்ரோவை நம்புகிறோம் - கமல் ஹாசன்

”இது தோல்விக்கு சமமானதல்ல, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் எப்போதும் ஒரு கற்றல் வளைவு இருக்கும். நாங்கள் விரைவில் சந்திரனுக்கு வருவோம். இந்த தேசம் இஸ்ரோவை நம்புகிறது” என நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல் ஹாசன் தெரிவித்துள்ளார். 

10:45 (IST)07 Sep 2019
சத்குரு ட்வீட்

புத்திசாலித்தனமான விஞ்ஞானிகள் விடாமுயற்சியுடன் நம்மை சந்திரனுக்கு அழைத்துச் செல்வார்கள் என்று நம்புகிறேன் என சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார். 

10:07 (IST)07 Sep 2019
தொடர்பை தான் இழந்தது 1.3 பில்லியன் மக்களின் நம்பிக்கையை அல்ல - துணை குடியரசுத்தலைவர்

”இதில் விரக்தியடைய ஒன்றுமில்லை. இஸ்ரோ விக்ரம் லேண்டருடனான தொடர்பை மட்டுமே இழந்தது, 1.3 பில்லியன் இந்தியர்களின் நம்பிக்கையை அல்ல” என்று துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். 

10:01 (IST)07 Sep 2019
சிவனை தேற்றிய பிரதமர் மோடி - வீடியோ

09:33 (IST)07 Sep 2019
இஸ்ரோவுக்கு நன்றி - மு.க.ஸ்டாலின்

”ஒரு பில்லியன் மக்களை விண்வெளியை நோக்கிப் பார்க்கவும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் ஆற்றலில் எங்கள் நம்பிக்கையை ஊக்கப்படுத்தியதற்காகவும் இஸ்ரோ குழுவினருக்கு நன்றி. எங்கள் விஞ்ஞானிகளால் பெருமைப் படுகிறோம்” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

09:10 (IST)07 Sep 2019
இஸ்ரோவால் இந்தியா பெருமை கொள்கிறது!

சந்திரயான் 2 மிஷன் மூலம், இஸ்ரோ குழு, முன்மாதிரியான அர்ப்பணிப்பையும் தைரியத்தையும் காட்டியுள்ளன. இஸ்ரோவால் நாடு பெருமிதம் கொள்கிறது” என குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். 

08:59 (IST)07 Sep 2019
கண்ணீர் விட்ட சிவன் கட்டியணைத்த மோடி

மோடியின் உரையைக் கேட்ட சில பெண் விஞ்ஞானிகள் கண்ணீர் விட்டு அழுதனர். அப்போது பிரதமரிடம் இறுதியாக பேசிய, இஸ்ரோ தலைவர் சிவனும் கண்ணீர் விட்டு அழுதார். அவரை கட்டியணைத்த மோடி, சிவன் மற்றும் குழுவினருக்கு தைரியம் கூறினார். சிவனுக்கு தைரியம் சொல்லும் போது, மோடியும் கண் கலங்கினார். 

08:56 (IST)07 Sep 2019
மோடி உரை

நிலவில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்பட்ட சந்திரயான் 2-ன் விக்ரம் லேண்டாரிடமிருந்து சிக்னல் கிடைக்காமல் போனது, இது இந்தியர்களுக்கு அதிர்ச்சியளித்தாலும், இஸ்ரோ விஞ்ஞானிகளின் கடும் உழைப்பை அனைவரும் பாராட்டி வருகிறார்கள். இந்நிலையில், இன்று காலை நாட்டு பெங்களூருவில் இஸ்ரோ விஞ்ஞானிகள் முன்னிலையில் உரையாற்றினார் பிரதமர் மோடி. அப்போது, “இஸ்ரோ விஞ்ஞானிகளால் இந்தியா பெருமை கொள்கிறது. சந்திரயான்-2 திட்டத்துக்காக தூக்கமின்றி பல நாட்கள் விஞ்ஞானிகள் உழைத்துள்ளனர். இரவு-பகலாக உழைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளால் இந்தியா பெருமை கொள்கிறது ! கடைசி நிமிட தோல்வி நிரந்தரமில்லை. நிலவை தொடும் முயற்சி நிச்சயம் வெற்றியடையும். நமது விண்வெளி திட்டத்தில் புதிய உச்சங்கள் இனிமேல்தான் வரவுள்ளன. அறிவியல் ஆராய்ச்சியில் தோல்வி என்பதே கிடையாது” என்றார்.

03:01 (IST)07 Sep 2019
இந்தியா தனது விஞ்ஞானிகளை நினைத்து பெருமைப் படுகிறது : பிரதமர் மோடி

இந்தியா தங்கள் விஞ்ஞானிகளை நினைத்துப்  பெருமிதம் கொள்கிறது! அவர்கள் மிகச் சிறந்ததை இந்தியாவிற்கு கொடுத்திருக்கிறார்கள்,  இவை தைரியமாக இருக்க வேண்டிய தருணங்கள், நாம் தைரியமாகவே இருப்போம்' என்று பிரதமர் மோடி தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

02:50 (IST)07 Sep 2019
தைரியமாக இருங்கள்: பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி, 'நாம் இங்கு அடைந்தது சிறியதல்ல. வாழ்வில் ஏற்றமும் இருக்கும், தாழ்வுகளும் இருக்கும். சந்திரயன் -2 ஒரு சிறிய பணி அல்ல'. உங்களை நான் மனமார வாழ்த்துகிறேன்.  உங்களோடு நான் நிற்கிறேன்,  தைரியமாய் முனேறி செல்லுங்கள்.

இஸ்ரோவின் விஞ்ஞானிகள் தங்களது தைரியத்தைக் காட்டியுள்ளனர், மேலும் மனிதகுலத்துக்காகவும் கடுமையாக உழைத்துள்ளனர் என்று நரேந்திர மோடி கூறி இஸ்ரோவில் இருந்து வெளியேறினார்

02:31 (IST)07 Sep 2019
திட்டமிட்ட நேரத்தை கடந்தது இஸ்ரோ

விக்ரமின் தரை இறங்கும் நிகழ்வு அதிகாலை 1.30 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், லேண்டர் விக்ரமிடம் இருந்து இன்னும் தகவல் வரவில்லை. 

அதைத் தொடர்ந்து ரோவர் பிரக்யன் காலை 5.30 மணி முதல் காலை 6.30 மணி வரை வெளியே வரும்.

02:26 (IST)07 Sep 2019
விக்ரமுடன் தகவல் தொடர்பு இழந்தது: இஸ்ரோ

இஸ்ரோ தலைவர் கே. சிவன் கூறுகையில்  : “விக்ரம் லேண்டரோடு  தகவல் பரிமாற்றத்தை  இழந்திருக்கின்றோம். கிடைத்த தகவல்களை  பகுப்பாய்வு செய்து கொண்டிருக்கிறோம்" என்றார்

02:14 (IST)07 Sep 2019
மிஷன் கன்ட்ரோல் ரூமில் இருந்து இன்னும் தகவல் வரவில்லை.

லேண்டர் விக்ரம் தரையிறங்கும் நேரதத்தை கடந்துவிட்டது. ஆனால், இன்னும் மிஷன் கன்ட்ரோல் ரூமில் இருந்து எந்த தகவலும் வரவில்லை 

 

இஸ்ரோ தலைவர் பிரதமிரடம் விளக்கம் கொடுத்து வருகிறார்

01:58 (IST)07 Sep 2019
லேண்டர் விக்ரம் முதல் வெற்றியை அடைந்தது.

விக்ரம் லேண்டர் rough breaking phase கட்டத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டது. அடுத்த 96 வினாடிகளில் Fine-breaking phase கட்டத்தை எட்டும் . சந்திரனின் தென் துருவ பகுதியில் தரையிறங்க 9 நிமிடங்களே உள்ளன. 

 

fine breaking phase - ல் லேண்டர் விக்ரம் 

01:53 (IST)07 Sep 2019
தென் துருவத்தில் இறங்க ஆரம்பித்துவிட்டது.

ரோவர் 'பிரக்யான்' உடன் சந்திரயான் 2  லேண்டர் 'விக்ரம்'  சந்திரனின் தென் துருவ பகுதியில் இறங்கும் பணியைத்  தொடங்கியது.  

01:40 (IST)07 Sep 2019
ஆன்லைனில் பார்க்க:
01:27 (IST)07 Sep 2019
இஸ்ரோ புகைப்படம்

பெங்களூருவில் உள்ள இஸ்ரோவின் கட்டளை மையத்திலிருந்து சில  காட்சிகள்

01:13 (IST)07 Sep 2019
லேண்டர் விக்ரம் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

இந்திய விண்வெளி திட்டத்தின் தந்தை டாக்டர் விக்ரம் சரபாயின் பெயரால் பெயரிடப்பட்ட இந்த லேண்டர் சந்திரியன் -2 இன் தனித்துவமான அம்சமாக கருதப்படுகிறது. இஸ்ரோ ஒரு லேண்டரை பூமிக்கு வெளியில் முயற்சிப்பது இதுவே முதல் முறை. விக்ரம் லேண்டர் ஒரு நிலவு நாளில் செயல்பட வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு நிலவு நாள் பூமிக்கு சுமார் 14 நாட்களுக்கு சமம் (ஒரு நிலவு நாள்= 14 பூமி நாள் ). பெங்களூருக்கு அருகிலுள்ள பைலாலுவில் இருக்கும் இந்திய டீப் ஸ்பேஸ் நெட்வொர்க் (ஐடிஎஸ்என்), ஆர்பிட்டர் மற்றும் ரோவர் உடன் தொடர்பு கொள்ளும் திறனை விக்ரம் கொண்டுள்ளது. விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் மென்மையான தரையிறக்கத்தை செயல்படுத்துவதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது.

விக்ரம் லேண்டர் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

01:11 (IST)07 Sep 2019
விக்ரம் லேண்டரைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

இந்திய விண்வெளி திட்டத்தின் தந்தை டாக்டர் விக்ரம் சரபாயின் பெயரால் பெயரிடப்பட்ட இந்த லேண்டர் சந்திரியன் -2 இன் தனித்துவமான அம்சமாக கருதப்படுகிறது. இஸ்ரோ ஒரு லேண்டரை பூமிக்கு வெளியில் முயற்சிப்பது இதுவே முதல் முறை. விக்ரம் லேண்டர் ஒரு நிலவு நாளில் செயல்பட வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு நிலவு நாள் பூமிக்கு சுமார் 14 நாட்களுக்கு சமம் (ஒரு நிலவு நாள்= 14 பூமி நாள் ). பெங்களூருக்கு அருகிலுள்ள பைலாலுவில் இருக்கும் இந்திய டீப் ஸ்பேஸ் நெட்வொர்க் (ஐடிஎஸ்என்), ஆர்பிட்டர் மற்றும் ரோவர் உடன் தொடர்பு கொள்ளும் திறனை விக்ரம் கொண்டுள்ளது. விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் மென்மையான தரையிறக்கத்தை செயல்படுத்துவதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ள

து.விக்ரம் லேண்டர் - நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

00:52 (IST)07 Sep 2019
இதுவரை இஸ்ரோவின் சந்திரயான் -2 கிளிக் செய்த படங்கள்

இஸ்ரோவின் சந்திரயான் -2, இதுவரை மேற்கொண்ட பயணத்தில் கிளிக் செய்த அனைத்து படங்களின் தொகுப்பு இங்கே.

 

00:32 (IST)07 Sep 2019
பெங்களூரிலிருந்து சில காட்சிகள்:

 
ISRO Telemetry Tracking and Command Network 

00:18 (IST)07 Sep 2019
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்

ஐம்பது ஆண்டுகளுக்கு முன் நிலவில் கால் பதித்தார் நீல் ஆம்ஸ்ட்ராங். இன்று இந்தியாவின் லேண்டர் விக்ரம் நிலவில் கால் பதிக்கின்றது. ஆனால் இதற்கு முன்னர் எந்த விண்கலமும் செல்லாத இடத்திற்கு நமது சந்திரயான் செல்ல விருக்கிறது என்பதே நமது பெருமை . விக்ரம் என்று அழைக்கப்படும் லேண்டர், சந்திரனின் தென் துருவத்திற்கு (70 டிகிரி தெற்கு அட்சரேகையில் ) மிக அருகில் தரை இறங்க உள்ளது.

00:03 (IST)07 Sep 2019
அமேசான் சி.இ.ஓ வாழ்த்து:

இன்று நிலவில் விக்ரம் லேண்டரை பெண்மையாய் தரையிறக்கும் இந்திய விஞ்ஞானிகளுக்கு அமேசான்  சி.இ.ஓ ஜெப் பெசாஸ் தனது வாழ்த்தை ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 

23:59 (IST)06 Sep 2019
சந்திரயான் -2: இடம் பெற்றுள்ள சாதனங்கள்:

சந்திரயான் -2 நிலவில் நீர் இருப்தற்கான ஆதாரங்களையும், நீரின் அளவு மதிப்பிடுவதற்கான முயற்சியை மேற்கொள்ளப் போகிறது.

ஆர்பிட்டரில் எட்டு, விக்ரம் லேண்டரில் நான்கு மற்றும் பிரக்யான் ரோவரில் இரண்டு என்று ஒட்டுமொத்தமாக சந்திரயன் -2 இல் 14 சாதனங்கள் உள்ளன. 2008 – ல் அனுப்பப்பட்ட சந்திரயான் -ஒன்றில் 13 கருவிகள் இருந்தன என்பது குறிப்பிடத் தக்கது.

மேலும் விவரங்களுக்கு:   சந்திரயான் -2: இடம் பெற்ற கருவிகள், அவற்றின் பணிகள் முழு விவரம்

23:52 (IST)06 Sep 2019
ஆன்லைனில் எப்படி பார்ப்பது ?

இஸ்ரோவின் சந்திரயான் - 2 விண்கலத்தின் லேண்டர் விக்ரம்  இன்னும் மூன்று மணி நேரத்திற்குள் நிலவில் தரையிறங்குகிறது. இந்த அரிய நிகழ்வை பார்க்க வேண்டும் என்ற ஆவல் எல்லோருக்கும் உண்டு என்பதை யாராலும் மறுக்க முடியாது . 

இஸ்ரோ தனது வலைத்தளமான isro.gov.in. -ல் சந்திரயான் 2 தரையிறங்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் லைவாக வெளியிடும். இதன் நேரடி ஸ்ட்ரீமை பிஐபி இந்தியா (PIB India) என்ற யூடியூப் சேனலில் பார்க்கலாம். 

மேலும் விவரங்களுக்கு, Chandrayaan 2 Moon Landing: நிலவில் தரையிறங்கும் சந்திரயான் 2 - ஆன்லைனில் எப்படி பார்ப்பது?  

23:37 (IST)06 Sep 2019
சந்திரயான் 2 - க்கு முன்

சந்திரயான் -2 என்பது சந்திரனுக்கான 110 வது விண்வெளிப் பணியாகும். கடந்த பத்தாண்டுகளில் இது 11 வது விண்வெளிப் பணியாகும். முதல், 90 சந்திரன் பயணங்கள் 1958 மற்றும் 1976 க்கு இடையில் அனுப்பப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது .

பல்வேறு வகையான நிலவு பயணங்கள் இங்கே:

Flybys– இந்த ஆய்வு, நிலவை நோக்கி வடிவமைக்கப்பட்டிருந்தாலும், நிலவின் சுற்றுவட்டப்பாதை அளவிற்கு மட்டுமே இந்த விண்கலம் இயக்கப்பட்டது

Orbiters - நிலவின் சுற்றுவட்டப்பாதையின் வடிவமைப்பு, நிலவின் மேற்பரப்பு மற்றும் அதன் வளிமண்டலம் குறித்து அறிவதற்காக இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன

Landers :- ஆர்பிட்டர் ஆய்வுகளிலேயே மிகவும் கடினமான கட்டமைப்புடன் கூடியதாக இந்த லேண்டர்கள் உள்ளன. முதல் 11 லேண்டர் மிஷன்கள் தோல்வியிலேயே முடிந்துள்ளன. 1966ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி சோவியத் ரஷ்யாவால் அனுப்பப்பட்ட லுனா 9 விண்கலம் மூலம் முதல் லேண்டர் மிஷன் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது

மேலும் விவரங்களுக்கு,  நிலவை நோக்கிய விண்வெளி ஆய்வுகள் - ஒரு பார்வை 

23:05 (IST)06 Sep 2019
பிரதமர் மோடியை முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா வரவேற்றார்

சந்திரயான் -2 மூன் லேண்டிங்: கர்நாடக முதலமைச்சர் பி.எஸ்.எடியூரப்பா  பெங்களூரு விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்றார். முதல்வர் தவிர, ஆளுநர் வஜுபாய் வாலா, மத்திய அமைச்சர்கள் டி வி சதானந்த கவுடா மற்றும் பிரல்ஹாத் ஜோஷி, கர்நாடக வருவாய் அமைச்சர் ஆர்.அசோகா, மாநில பாஜக தலைவர் நலின் குமார் கட்டீல் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

'இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் பெருமைமிக்க தருணத்தை காண பெங்களூரை வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடியை மனதார வரவேற்கிறேன்' என்று பி.எஸ்.எடியூரப்பா ட்வீட் செய்துள்ளார்.

23:00 (IST)06 Sep 2019
இன்னும் நான்கு மணி நேரம் கூட இல்லை:

சந்திரயான்-2 விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்க இன்னும் நான்கு மணி நேரத்திற்கும் குறைவாகவே உள்ளது.  இந்த  தருணம் தான் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. நிலவில்  தரையிறங்கும் போது அதன் வேகத்தை நொடிக்கு வெறும் 2 மீட்டர் என்ற வேகத்தில் குறைக்க வேண்டும். 

22:25 (IST)06 Sep 2019
மோடி வருகை

பிரதமர் நரேந்திர மோடி லேண்டர் விக்ரம் தரை இறங்கும் நிகழ்வைக் காண பெங்களூரு விமான நிலையத்திற்கு தற்போது வந்திருக்கிறார். அவரை கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலா வரவேற்றார். இன்னும் சற்று நேரத்தில் இஸ்ரோ தலைமையகத்தை அடைவார்.

Chandrayaan-2 Moon Landing Updates: சந்திரயான்- 2 விண்கலம் ஆர்பிட்டர், விக்ரம் லேண்டர் மற்றும் ரோவர் பிரக்யன் என மூன்று பிரிவுகளைக் கொண்டுள்ளது. கடந்த ஜூலை 22 -ம் தேதி விண்ணில் பாய்ந்தது சந்திரயான் 2. விக்ரம் லேண்டர் சந்திரயான் -2 ஆர்பிட்டரில் இருந்து திங்கள்கிழமை (செப்டம்பர் 2-ம் தேதி) மதியம் 1:15 மணிக்கு பிரிந்து சந்திரனை நோக்கி இறங்கத் தொடங்கியது.

சந்திரயான் – 2 விக்ரம் லேண்டர் செப்டம்பர் 7, 2019 அதிகாலை 1.30 மணி முதல் 2.30 மணிக்குள் நிலவில் தென் துருவப் பகுதியில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால், சந்திரனில் மென்மையாக தரையிறங்கும் நான்காவது நாடாகவும், சந்திரனின் தென் துருவப் பகுதியைத் தொடும் முதல் நாடாகவும் இந்தியா மாறும் என கருதப்பட்டது.

Web Title:Chandrayaan 2 moon landing live updates chanrayaan 2 vikram lander india moon mission

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
இதைப் பாருங்க!
X