தேசிய அளவில் 24 மாநிலங்களில் தேடப்பட்ட கருணாநிதி!!!

Karunanidhi : திமுக தலைவர் கருணாநிதி கடந்த 27ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் உடல் நல்லடக்கம் வரை 24 மாநிலங்களில் தேடப்பட்டுள்ளார்

Kalaignar Karunanidhi : திமுக தலைவர் கருணாநிதி கடந்த 27ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் உடல் நல்லடக்கம் வரை 24 மாநிலங்களில் கூகிலில் தேடப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Kalaignar Karunanidhi : கருணாநிதி மறைவு:

திமுக தலைவர் மு. கருணாநிதி கடந்த 7ம் தேதி உடல்நலக் குறைவால் காவேரி மருத்துவமனையில் காலமானார். கடந்த மாதல் ஜூலை 27ம் தேதி நள்ளிரவு காவேரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். சிறுநீர் தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்ட அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

21 குண்டுகள் முழங்க கருணாநிதி உடல் நல்லடக்கம்!

கடந்த 6ம் தேதி அவரின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக அறிக்கை வெளியானது. 24 மணி நேரம் கழித்து உறுதியான தகவல் அளிக்க முடியும் என்று கூறப்பட்டது. 7ம் தேதி மாலை கருணாநிதியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவரின் உடல் சிகிச்சைக்கு பலனளிக்க போராடுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. பின்பு அதே நாள் வெளியான அறிக்கையில், மாலை 6.10 மணிக்கு அவர் காலமானார் என்று தெரிவிக்கப்பட்டது.

Kalaignar Karunanidhi : இணையத்தில் 5 லட்சம் முறைக்கு மேல் தேடப்பட்ட கருணாநிதி

இந்நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து இந்தியா முழுவதும் அவரே கூகிலில் அதிகமாக தேடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கருணாநிதியின் உடல்நிலை பாதிப்படைந்து சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நாள் முதல் நேற்று நடைபெற்ற இறுதி ஊர்வலம் வரை தேசிய அளவிலான இணையத்தளம் தேடலில்  கருணாநிதி மற்றும் கலைஞர் என்ற வார்த்தைகளே அதிகளவில் தேடப்பட்டுள்ளது.

Kalaignar Karunanidhi

Kalaignar Karunanidhi

அதாவது கடந்த 7 நாளில் மட்டும், இணையத்தளத்தில் 5 லட்சம் முறைக்கு மேல் ‘கருணாநிதி’ என்ற வார்த்தையையும், 2 லட்சம் முறைக்கு மேல் ‘கலைஞர்’ என்ற வார்த்தையையும் மக்கள் பதிவிட்டு தேடியுள்ளனர். குறிப்பாக மாநிலங்கள் வரிசையில், கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தெலங்கானா ஆகியவற்றில் கருணாநிதி குறித்தும் அவரது உடல்நிலை குறித்தும் அதிக முறை தேடப்பட்டுள்ளது.

திமுக தலைவருக்கு வெண்கலச்சிலை.. இறுதி ஊர்வலம் தொடங்கும் முன்பே அறிவித்த முதலமைச்சர்!

கூகுள் தேடல் பொறி மூலம், கடந்த 7 நாளில் 24 மாநிலங்களில் கருணாநிதி குறித்த தகவல்களை அதிகமாக தேடியுள்ளனர். தேசிய அளவில் மட்டுமின்றி, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 58 நாடுகளிலும் கருணாநிதி, கலைஞர் என்ற வார்த்தைகளை கொண்டு இணையத்தில் தகவல்கள் தேடப்பட்டுள்ளது.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதி இறப்பு சான்றிதழ் வெளியீடு குறித்த செய்திக்கு:

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close