Trending viral video of people welcoming scavengers with garlands and flowers : இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கும் நிலையில் மக்கள் அனைவரும் தங்களின் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கி உள்ளனர். நாட்டு மக்களை காக்க இவர்கள் வீட்டுக்குள் இருக்க மருத்துவர்களும் துப்புரவு தொழிலாளர்களும், காவலர்களும் அரசு அதிகாரிகளும், அமைச்சர்கள் மற்றும் இதர முக்கிய பொறுப்பு வகிப்பவர்களும் தங்களால் முடிந்த அளவு நாட்டு மக்களின் நன்மைக்காக போராடி வருகின்றனர்.
போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை. வென்டிலேட்டர்கள் இல்லை. கருவிகள் இல்லை. இடம் பற்றாக்குறை என்று உலக நாடுகள் கவலை கொண்டிருக்கும் வேளையில், தொடர்ந்து தங்களின் பணியை சிறப்பாக செய்து கொண்டே இருக்கின்றனர் துப்பரவு தொழிலாளர்கள்.
சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் வெளியான வீடியோ ஒன்றில், குப்பைகளை அகற்ற குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் துப்புரவு தொழிலாளர்களை மலர்தூவி வரவேற்றுள்ளனர் பொதுமக்கள். மேலும் அவர்களுக்கு மாலை அணிவித்தும், பண மாலை அணிவித்தும் பொதுமக்கள் தங்களின் நன்றிகளை தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது. இன்று நம் அனைவரும் எந்த ஒரு நோய் தொற்றுக்கும் ஆளாகாமல் இருக்கின்றோம் என்றால் அதற்கு அவர்களும் முக்கிய காரணம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil