அதென்ன கார்ப்பரேசன் பஸ்ஸா? மும்பையில் தூங்கி அபுதாபியில் இறங்கிய லோடுமேன்

அவருக்கு அங்கே மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு பிறகு அதே விமானத்தில் பத்திரமாக மும்பைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார்.

viral news, viral video
இண்டிகோ விமானம்

Viral news Cargo handler sleeps in plane : நாளுக்கு நாள் அதிகரிக்கும் உழைப்பு, எங்காவது கொஞ்சம் கண் அயர்ந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்து தூங்கியிருப்போம். அந்த தூக்கத்தின் போது பல தருணங்களை நாம் மிஸ் செய்திருப்போம். இது வாடிக்கையான ஒன்று தான். சில நேரங்களில் ட்ரெய்ன்களில், பஸ்களில் அயர்ந்து தூங்கி, இறங்க வேண்டிய இடத்தை விட்டு வேறொரு பஸ் ஸ்டாண்டில் இறங்கியிருப்போம். இது எல்லாம் சர்வ சாதாரணம் என்று ஒரு சூப்பர் வேலையை பார்த்திருக்கிறார் மும்பை சர்வதேச விமான நிலையத்தில் பேக்கேஜ் லோட்மேனாக பணியாற்றும் ஒருவர்.

மூளைக்குள்ள மண்ணா? இந்த மீனை பார்த்து இப்படி கேட்கவே முடியாது; வித்தியமான தோற்றத்தில் புதிய கண்டுபிடிப்பு

மும்பையில் இருந்து அபுதாபி செல்லும் இண்டிகோ விமானத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பயணிகளின் லக்கேஜ்களை சரக்கு பெட்டியில் வைத்து முடித்த அவர் அசதியில் உறங்கியுள்ளார். விமானம் புறப்பட்ட பிறகு தான் கார்கோ பகுதியில் தூங்கியதை உணர்ந்து அவர் அவசர அவசரமாக விழித்துள்ளார். ஆனாலும் என்ன செய்வது?

டென்னிஸ் பந்தில் கிரிக்கெட்லாம் ரொம்ப பழசு பாஸ்… அதிரடி காட்டும் சூப்பர் கேம் இது – வைரல் வீடியோ

அண்ணன் இல்லாத குறையை நீக்கிய CRPF வீரர்கள்; வீர மரணம் அடைந்தவரின் குடும்பத்தினர் நெகிழ்ச்சி

இரண்டு மணி நேரம் கழித்து அபுதாபியில் இறங்கிய விமானத்தின் கார்கோ பகுதியை திறக்க, உள்ளே லோட்மேன் இருப்பது தெரிய வந்துள்ளது. அவருக்கு அங்கே மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு பிறகு அதே விமானத்தில் பத்திரமாக மும்பைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார். இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரிகளுக்கு தகவல்கள் அளிக்கப்பட்ட நிலையில் விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Viral news cargo handler sleeps in plane at mumbai airportreaches uae

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express