“ஏ. ஆர் ரகுமான் (A R Rahman), புகழ் பெற்ற இந்திய திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். பல இந்தி, தமிழ், ஆங்கிலம் மற்றும் பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர் இசைப்புயல் என அழைக்கப்படுகிறார்.
1967 ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதி சென்னையில் பிறந்தார். இவரின் தந்தை சேகர் மலையாள திரைப்படத்துறையில் பணியாற்றியவர். சிறு வயதிலேயே தந்தையை இழந்தார். குடும்பம் வருமானம் இன்றி தவித்த போது, தந்தையின் இசைக்கருவிகளை வாடகைக்குவிட்டு, வாழ்க்கையை நடத்தினர். அந்த கஷ்டத்தோடு பியானோ, ஹார்மோனியம் மற்றும் கிதார் வாசிக்க கற்று கொண்டார். தன்ராஜ் மாஸ்டரிடம் முறைப்படி இசை கற்றுக் கொண்டார்
11 வயதில் இளையராஜா இசைக்குழுவில் கீபோர்டு வாசிப்பதற்காக சேர்ந்தார். பின்னர் எம். எஸ். விஸ்வநாதன், ரமேஷ் நாயுடு, ஜாகீர் உசேன் மற்றும் குன்னக்குடி வைத்தியநாதன் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களிடன் பணியாற்றினார். டிரினிட்டி காலேஜ் ஆப் மியூசிக் கல்லூரியில் கிளாசிக்கல் மியூசிக்கில் பட்டம் பெற்றார்.
1992 இல் தனது வீட்டிலேயே மியூசிக் ரெக்கார்டிங் தியேட்டர் அமைத்தார். அதே ஆண்டு வெளியான மணிரத்தினத்தின் ரோஜா திரைப்படம், இவருடய வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. இப்படத்தின் பாடல்கள் முதல் தேசியவிருது வாங்கித் தந்தது. பின்னர் 1997ல் மின்சாரக்கனவும், 2002 லகான் இந்தி படமும், 2003ல் கன்னத்தில் முத்தமிட்டால் படமும் இவருக்கு தேசிய விருதுகள் வாங்கி தந்தன.
ஹாலிவுட் திரைப்படமான ஸ்லம் டாக் மில்லியனியர் என்ற ஆங்கிலத் திரைப்படத்திற்கு இசையமைத்தமைக்காக ஆஸ்கார் விருதுகளை வென்றிருக்கிறார். இத்திரைப்பட இசைக்காக இவருக்கு 2008 ஆம் ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருதும் , பாஃப்டா விருதும் கிடைத்தன. இவ்விரு விருதுகளைப் பெற்ற முதலாவது இந்தியரும் இவரேயாவார். மேலும், இவரை கவுரவிக்கும் விதமாக மத்திய அரசு 2010இல் பத்ம பூசண் விருதை வழங்கியது.
படங்கள் மட்டுமின்றி பூஸ்ட்,ஏசியன் பெயின்ட்ஸ்,ஏர்டெல்,லியோ காபி ஆகிய 300க்கும் மேற்பட்ட விளம்பரப்படங்களுக்கும் ரகுமான் இசையமைத்துள்ளார். தற்போது, துபாயில் மிகவும் பிரம்மாண்டமான ஃபிர்தோஸ் ஸ்டூடியோவை தொடங்கியுள்ளார். ‘எல்லாப் புகழும் இறைவனுக்கே’ என்கிற மந்திர வார்த்தையின் பயணம், இசையுடன் தொடர்ந்து வருகிறது.”Read More
ஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்தில் ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில் தனது மனைவியுடன் பங்கேற்றார். இதில் மேடையில் இந்தியில் பேச வேண்டாம் என்று தனது மனைவியிடம் கூறினார்
ஏ.ஆர்.ரஹ்மானின் கேஎம் மியூசிக் கன்சர்வேட்டரியின் முன்னாள் மாணவரான சீதா ராமம் படத்தின் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர், ரஹ்மான் குறித்து ஆராயப்படாத தகவல்களை பகிர்ந்துள்ளார்.
AR Rahman trolls anchor for Hindi speaking Tamil News: விருந்தினர்களை வரவேற்று பேசிய தொகுப்பாளர், ரஹ்மானை தமிழிழும், நடிகர் ஈஹான் பட்டை ஹிந்தியிலும் வரவேற்று…