1931 ஆம் ஆண்டு, அக்டோபர் 15 அன்று ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாக தமிழ்நாடு மாநிலம் ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் (Abdul Kalam) பிறந்தார். இவர் ஒரூ இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர். இவருடைய குடும்பம் ஏழ்மையில் இருந்ததால், இளம் வயதிலே குடும்ப வருமானத்திற்காக வேலைக்கு சென்றார். பள்ளி நேரம் போக மற்ற நேரங்களில் இவர் செய்தித்தாள்கள் விநியோகம் செய்தார்.
பள்ளிப்படிப்பை முடித்தபிறகு, திருச்சியிலுள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் இயற்பியல் பயின்றார். 1954ஆம் ஆண்டு, இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றார். ஆனால், இயற்பியல் துறையில் ஆர்வம் இல்லை என உணர்ந்தவர், விண்வெளி பொறியியல் பட்டத்தை சென்னை எம்.ஐ.டி-யில் பெற்றார்.
1960 ஆம் ஆண்டு DRDO-வில் விஞ்ஞானியாக இணைந்தார். அப்போது, ஒரு சிறிய ஹெலிகாப்டரை இந்திய ராணுவத்திற்காக வடிவமைத்து கொடுத்தார். பின்னர், இஸ்ரோவில் தனது ஆராய்ச்சிப் பணிகளைத் தொடர்ந்தார். 1980 ஆம் ஆண்டு SLV -III ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி-I என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவச்செய்ததில் கலாமின் பங்கு முதன்மையானது. இதற்காக மத்திய அரசு கலாமுக்கு 1981 ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருது வழங்கியது.1999 ஆம் ஆண்டில் பொக்ரான் அணு ஆயுத சோதனையில் முக்கிய பங்காற்றியுள்ளார். அக்னி சிறகுகள், இந்தியா 2020, எழுச்சி தீபங்கள், அப்புறம் பிறந்தது ஒரு புதிய குழந்தை என 4 நூல்களையும் எழுதியுள்ளார்.
2002 ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக பதவியேற்றார். குடியரசு தலைவர் பதவியில் அமரும் முன்பே இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது கலாமுக்கு அளிக்கப்பட்டது. 2007 ஆம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராக இருந்த கலாம் ‘மக்களின் ஜனாதிபதி’ என்று அன்போடு அழைக்கப்பட்டார்.
ஜூலை 27, 2015 ஷில்லாங்கில் உள்ள இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் மேடையில் உரையாற்றிக்கொண்டிருந்தபோதே மயக்கமடைந்து விழுந்து காலமானார்.
அப்துல் கலாமின் மணிமண்டபம் அவரது சொந்த ஊரான ராமேஸ்வரம் அருகே பேக்கரும்பு இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல்,கலாம் வாழ்ந்து மறைந்த அவரது சொந்த வீடு மக்களின் பார்வைக்காக கலாம் இல்லம் எனும் பெயரில் காட்சியமாக மாறியுள்ளது.
உலகம் போற்றும் விஞ்ஞானியான கலாம் தன்னுடைய பொன்மொழிகளாலும், கவிதைகளாலும், வாசகங்களாலும் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார்.Read More
முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் மறைந்த 5வது ஆண்டு நினை நாளில் பிரதமர் மோடி, துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர்…