கேப்ரியெல்லா நடாலி சார்ல்டன்(Gabriella Charlton), தனது ஒன்பதாவது வயதில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். இந்த நிகழ்ச்சியில் வெற்றிபெற்றதையடுத்து, வாய்ப்புகள் குவியத்தொடங்கியது. தொடர்ந்து, . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 7 ஆம் வாகுப்பு சி பிரிவு என்ற தொலைக்காட்சி நாடகத் தொடரிலும் நடித்திருந்தார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ஜோடி நம்பர் ஒன், பருவம் 6 என்ற ஒரு நடன ரியாலிட்டி நிகழ்ச்சியிலும் தோன்றினார். ஜோடி நம்பர் ஒன்னின் 6 ஆவது சீசனின் வெற்றியாளர் ஆவர்.
தொடர்ந்து, தமிழ்த் திரைப்படமான 3 படத்தில், ஸ்ருதிஹாசனின் தங்கையாக சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து மக்களிடம் வரவேற்பை பெற்றவர்.
இதையடுத்து, விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்று கவனத்தை ஈர்த்தவர். தற்போது, விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் ஈரமான ரோஜாவே சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.Read More
விஜய் டிவியில் முரட்டு சிங்கிள்ஸ், பிக் பாஸ் ஜோடிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் கலந்துக் கொண்ட கேப்ரியல்லா தற்போது ஈரமான ரோஜாவே சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.