
கலைஞர் கருணாநிதிக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த எம்.ஜி.ஆர். அவர்களின் “முன்னேற்றம்” குறித்த புரிதல் இதே மேம்போக்கான, அரைகுறை அறிவுப் பாதையிலேயே பயணித்தது.
கூடங்குளம் போராட்டக் குழு வழக்கறிஞர் செம்மணி போலீஸாரால் கடத்தப்பட்டதாக புகார் எழுந்திருக்கிறது. அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என தெரிகிறது.
இந்தக் கடற்கரைப் பகுதிகளில் எண்ணெய், எரிவாயு தோண்டி எடுக்கப்படும்போது, ஏழரை லட்சம் தமிழக மீனவர்களின் வாழ்வும், மீன் உற்பத்தியும் கேள்விக்குறியாகும்.
நிதி-ஆயோக் அமைப்பின் துணைத்தலைவர் ராஜீவ் குமார் உற்பத்தியையும் மூலதனத்தையும் பெருக்குவதற்கு ஊக்கத்தொகைக் கொடுக்கலாம் என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார்.
ரூபாய் 135 லட்சம் கோடி மதிப்புள்ள இந்தியப் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த வங்கிகளுக்கும், ஏற்றுமதியாளர்களுக்கும் ஊக்கத்தொகை கொடுக்கலாம் என்பது அரசின் திட்டம்.
உலகமயமும் ஒரு புல்லட் ரயில் போன்றதுதான். இது பணக்காரர்களுக்கானது, பாமரர்களைக் கண்டுகொள்ளாதது. உலகமய புல்லட் ட்ரெயின் உங்களுக்கும், எனக்குமானதல்ல.
சிலருக்கு கைநிறைய சம்பளம் வழங்கினாலும், முடிவெடுக்கும் அதிகாரத்தையோ, தலைமைப் பொறுப்புக்களையோ உலகமயம் கொடுப்பதில்லை. அடைக்கலம் கோருவோர் வெறுக்கப்படுகின்றனர்.
உலகச்சந்தையின் இனவெறி (இன, தேசிய இன) சிறுபான்மையினரின் அரசியல் அதிகாரமிழப்பில், சமூக விலக்கில், பொருளாதாரச் சுரண்டலில் பெரும் பங்காற்றுகிறது.
தாங்கள் வாழ விரும்புகிற வழியில் மக்கள் வாழ்க்கையை வாழ்ந்திடச் செய்யும் திறன்களை வளர்ச்சி வழங்க வேண்டும் என்கிறார் அமர்த்யா சென்.
நரபலிகள் கிராமங்களிலும், குப்பங்களிலும், சேரிகளிலும் இருந்துதான் கொண்டுபோகப்படுகின்றன. வளம், வாய்ப்பு, வசதி படைத்தவர்கள் வளர்ச்சியின் நரபலிகள் ஆவதேயில்லை.
உலகம் முழுவதும் உற்பத்திப் பொருட்களும், சேவைகளும் தடையின்றி பயனாளிகளைச் சென்றடையலாம் எனும் உலகமயமாதல் முதலாளிகளால் பெரிதாக்கப்படுகிறது.
மூன்றாம் உலக நாடுகளின் அருமை பெருமைகளை மட்டம் தட்டி, மேற்கத்திய நாடுகளின் மேன்மையை உறுதி செய்வதாகவே இருக்கிறது நவீனமயமாக்கல் அணுகுமுறை.
‘ஊருக்கு நல்லது சொல்வேன், எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்’ என்று நீங்கள் சிந்தித்தால், செயல்பட்டால், நாமெல்லாம் இடிந்தகரை முதல் கதிராமங்கலம் வரையுள்ள மக்களோடு ஒரே பக்கம் நிற்கிறோம்.
இடிந்தகரை முதல் கதிராமங்கலம் வரை மீண்டும், மீண்டும் வெவ்வேறு வழிகளில், விதங்களில் கேட்கப்படும் அடிப்படைக் கேள்விகள் இவைதான்: எந்த மாதிரியான வளர்ச்சி? யாருக்கான வளர்ச்சி?