கடம்பூர் ராஜு(kadambur raju), தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் அருகே உள்ள சிதம்பராபுரத்தில் ஆகஸ்டு 20, 1959 அன்று பிறந்தார். பி.யூ.சி. படிப்பை முடித்துவிட்டு, ஆசிரியர் பயிற்சி பள்ளியில் இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்றார். பின்னர், சொந்த ஊரில் உள்ள இந்து தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார். இவருக்கு இந்திரா காந்தி என்ற மனைவியும், அருண்குமார் என்ற மகனும், காயத்ரி என்ற மகளும் உள்ளனர்.
அரசியலில் ஆர்வம் அதிகரிக்க, ஆசிரியர் வேலையை ராஜினாமா செய்துவிட்டு, அதிமுகவில் இணைந்தார். 2011 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து, 2016 ஆம் ஆண்டும் அதே சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வென்று, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் இருந்து அதிமுக சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினரானார். கோவில்பட்டி, கடம்பூர் ராஜுவின் கோட்டையாக திகழ்கிறது.Read More
Is Possible Cinema Tickets are for sale only Online: தமிழகத்தில் இனி அனைத்து திரையரங்குகளிலும் சினிமா டிக்கெட் ஆன்லைன் மூலம் மட்டுமே விற்பனை செய்யப்படும்…
திமுகவை எதிர்ப்பதற்காக எல்லா கசப்பான நிகழ்வுகளை மறந்து அமமுகவுடன் இணையுங்கள் என்று தங்க தமிழ்செல்வன் கூறியதற்கு கடம்பூ ராஜூ பதிலளித்துள்ளார். 2019ம் ஆண்டில் தேர்தலை எதிர்கொள்ள அனைத்து…