கலாநிதி மாறன்(kalanithi maran), சன் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவர் ஆவார். இவர் ஜூலை 24, 1965 அன்று பிறந்தார். இவரது தந்தை முன்னாள் மத்திய வர்த்தக அமைச்சர் முரசொலி மாறன் ஆவார். மேலும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மருமகன் வழிப் பேரன் ஆவார். இவரது தம்பி தயாநிதி மாறன் எம்பி ஆவார்.
சென்னையில் உள்ள டான் பாஸ்கோ பள்ளியில் பயின்றார். லயோலா கல்லூரியில், இளங்கலை வணிகவியல் படிப்பை படித்து முடித்தார். பின்னர் அமெரிக்காவில் உள்ள ஸ்கரான்டன் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் படிப்பை முடித்தார்.
ஆரம்பத்தில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் உரிமையாளராக இருந்தார். அந்த நிறுவனம் தொடர் இழப்புகள் மூலம் பெரும் சிக்கலில் மாட்டிக் கொண்ட பொழுது, அந்த நிறுவனத்தை அதனுடைய பங்குதாரர்களில் ஒருவருக்கு விற்று விட்டு அந்த நிறுவனத்தை விட்டு வெளியேறினார். பின்னர், குங்குமம் இதழுக்கு பொறுப்பு ஏற்றார்.
இதற்கிடையில், 1991 ஆம் ஆண்டில், கர்நாடகத்தைச் சேர்ந்த காவேரி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு காவ்யா மாறன் என்கிற ஒரு பெண் குழந்தை 1992 ஆம் ஆண்டுப் பிறந்தது.
1993 ஆம் ஆண்டில் சன் டிவி நிறுவனத்தை தொடங்கிய கலாநிதி மாறன். அதற்கு கிடைத்த அமோக வரவேற்றப்பால் கன்னடத்தில் ‘உதயா’, தெலுங்கில் ‘ஜெமினி’, மலையாளத்தில் ‘சூர்யா’, வங்க மொழியில் ‘சன் வங்காள’ ஆகிய சேனலை உள்ளடக்கிய ‘சன் நெட்வொர்க்’ என்ற குழுமத்தை நிறுவினார் காவேரி மாறன் சன் டிவி நெட்வொர்க் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பதவி வகிக்கிறார்.
கலாநிதி மாறன் சிஎன்பிசி-ன் எர்னஸ்ட் & யங்-ல் இருந்து சிறந்த இளம் தொழிலதிபராக விருது வழங்கப்பட்டுக் கவுரவிக்கப்பட்டார்.இந்தியாவின் டாப் பணக்காரர்களில் ஒருவராக திகழ்கிறார்.Read More
பான்-இந்தியா ஐஐஎஃப்எல் வெல்த் ஹுருன் செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியல் 2019-இல் கலாநிதி மாறன் 43வது இடத்தையும் தமிழ்நாடு அளவில் பணக்காரர்கள் பட்டியலில் கலாநிதி…
இந்தியாவிலேயே அதிக ஊதியம் பெறும் ஊடக பெரு முதலாளிகள் பட்டியலில் சன் டிவி குழுமத்தின் கலாநிதி மாறன் மற்றும் காவேரி கலாநிதி ஆகியோர் முதலிடம் வகிக்கின்றனர்.