Nirmala Sitharaman

நிர்மலா சீதாராமன்(Nirmala sitharaman), இந்தியாவின் தற்போதைய நிதியமைச்சர் ஆவார். தமிழ்நாட்டின் மதுரையில் 1959 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 அன்று ஸ்ரீ நாராயணன் சீத்தாராமன்-சாவித்ரி தம்பதிக்கு பிறந்தார். இவரின் அப்பா ரயில்வே துறையில் பணியாற்றினார். இளங்கலைப் பட்டத்தை திருச்சியில் உள்ள சீத்தாலக்ஷ்மி ராமசுவாமி கல்லூரியில் முடித்த இவர், டெல்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் முதுகலை பட்டத்தை முடித்தார்.

பரக்கல பிரபாகர் என்பவரை 1986 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர் லண்டனுக்கு குடிப் பெயர்ந்தார். சிறிது காலம் லண்டனில் கழித்தப் பின்பு 1991 ஆம் இந்தியாவிற்கு திரும்பினார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும் உள்ளார்.

2003 – 2005 ஆண்டுகளில் நிர்மலா சீத்தாராமன் “ பெண்கள் நல ஆணையத்தில் “ உறுப்பினராக பணியாற்றி வந்தார். அவரது பேச்சால் ஈர்க்கப்பட்ட சுஷ்மா சுவராஜ், அவரை கட்சியில் சேர அழைப்பு விடுத்தார். அவரின் அழைப்புப்படி 2006 ஆம் ஆண்டு கட்சியின் வெறும் பேச்சாளராக இணைந்த இவர் , 2010 ஆம் ஆண்டு ரவி சங்கர் தலைமையிலான கட்சியின் 6 பேர் கொண்ட குழுவின் முக்கிய பேச்சாளர்களில் ஒருவரானார்.

2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மோடிக்கும் , பா.ஜா.காவிற்கும் ஆதரவான பிரச்சாரத்தின் பலனாக, மே 26 , 2014 அன்று வர்த்தகத்துறை மற்றும் தொழில்துறை அமைச்சகத்தில் இணை அமைச்சராகப் பொறுப்பேற்றார். மனோகர் பரிக்கர் மறைவிற்குப் பின்னர் இவர் இந்தியப் பாதுக்காப்புத் துறையின் அமைச்சராக பதவி வகித்தார். 2019 மே 31 அன்று மத்திய நிதி அமைச்சராகப் பதவி ஏற்றார். இந்திரா காந்திக்குப் பிறகு இத்துறையை வகிக்கும் இரண்டாம் பெண் என்ற பெருமையைப் பெற்றார்
Read More

Nirmala Sitharaman News

sekar babu
நிர்மலா சீதாராமன் பிரஸ் மீட்டில் கலந்து கொண்டது ஏன்? சேகர்பாபு விளக்கம்

“நாடாளுமன்ற கட்டடத்தை குடியரசுத் தலைவர்தான் திறக்க வேண்டும் என்பதில் திமுக உறுதியாக உள்ளது” – அமைச்சர் சேகர் பாபு

இறையன்பு, சைலேந்திரபாபு இடத்தை நிரப்பும் புதிய உயர் அதிகாரிகள் யார்?

கூடுதல் தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா மற்றும் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் ஆகியோர் அந்தந்த பதவிகளுக்கு வெற்றிபெற வாய்ப்புள்ளது.

மத்திய அரசின் மகிளா ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி உயர்கிறதா? நிதி அமைச்சகம் பதில்

மகளிர், பெண் குழந்தைகளுக்காக பிரத்யேகமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தில் ஒருவர் ரூ.2 லட்சம் வரை சேமித்துக் கொள்ளலாம்.

ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம்.. புதிய தீர்பாயம்.. வட்டி குறைப்பு

இழப்பீட்டுத் தொகையில் கிட்டத்தட்ட 90 சதவிகிதம் தற்காலிகத் தொகையாக மாநிலங்களுக்கு விடுவிக்கப்படுகிறது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

நடுத்தர வர்க்கத்திற்கு தவறான வழிகாட்டல்: ப. சிதம்பரம்

ஒன்றிய அரசின் உள்நோக்கம் மறைவானதாக இல்லை. அதாவது வருமான வரி செலுத்துவோருக்கு இனி எந்த சலுகையும் அளிக்கக் கூடாது என்பதே அந்த நோக்கம்.

உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரம் இந்தியா – நிர்மலா சீதாராமன்

நாட்டின் பொருளாதாரம் நிலையான பாதையில் செல்கிறது என்று கூறிய மத்திய நிதி அமைச்சர் சீதாராமன், இந்தியா உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக உள்ளது என்றும்,…

பெண்களுக்கான பிரத்யேக சிறு சேமிப்பு திட்டம்.. டெபாசிட் லிமிட், வட்டி, காலம் எவ்வளவு?

2023 பட்ஜெட் உரையின் போது, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெண் முதலீட்டாளர்களுக்கான முதலீட்டு திட்டத்தை முன்மொழிந்தார்.

சரிந்த அதானி பங்குகள்.. நாட்டின் நற்பெயருக்கு பாதிப்பா? நிர்மலா சீதாராமன் பதில்

அதானி குழுமத்தின் ஏழு பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் தங்கள் சந்தை மதிப்பில் பாதியை இழந்துவிட்டன.

புதிய வரி முறை மிகவும் கவர்ச்சிகரமானது; கட்டாயம் இல்லை – நிர்மலா சீதாராமன்

புதிய வரி விதிப்பின் கீழ், தனிநபர் வருமான வரி தள்ளுபடி வரம்பு முன்பு இருந்த ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஆன்லைன் வங்கி பரிவர்த்தனை அளவு உயர்வு.. புதிய தொகை எவ்வளவு?

நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டில் ஆன்லைன் வங்கிப் பணப் பரிவர்த்தனைக்கான அளவு ரூ.4.5 லட்சத்தில் இருந்து ரூ.9 லட்சமாக உயர்த்தி அறிவித்துள்ளார்.

பழைய, புதிய வரி விதிப்பு.. நீங்கள் எதை தேர்வு செய்ய வேண்டும்?

பழைய வரி முறையின் கீழ், வரி செலுத்துவோர் ஐ-டி சட்டத்தின் கீழ் குறிப்பிட்ட வரி சேமிப்பு முதலீடுகளில் முதலீடு செய்வதன் மூலம் வருமான வரிச் சலுகைகளைப் பெறலாம்.

2023-24 பட்ஜெட்டின் மூன்று முக்கிய அம்சங்கள்: மூலதனச் செலவு, நிதி நிர்வாகம், புதிய வருமானவரி

மத்திய பட்ஜெட் 2023-ல் மத்திய அரசு மூலதனச் செலவினங்களை உயர்த்தியுள்ளது, நிதி நிர்வாகத்தையும் காட்டியுள்ளது. தனிநபர் புதிய வருமான வரியை இயல்பான வரி என அறிவித்துள்ளது.

மாநில தலைநகரில் ‘யூனிட்டி மால்’; அது என்ன? எப்படி செயல்படும்?

ஒவ்வொரு மாநில தலைநகர்களிலும் யூனிட்டி மால் நிறுவப்படும். இது, உள்ளூர் தயாரிப்புகள் மற்றும் கைவினைப் பொருள்களை ஊக்குவிக்கும் என்று நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கலின் போது கூறினார்.

பட்ஜெட் 2023: 87 நிமிடங்கள் தான்… மிகக் குறைந்த நேரத்தில் பட்ஜெட் உரை வாசித்த நிர்மலா சீதாராமன்

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெறும் 87 நிமிடங்களில் மிகக் குறைந்த நேரத்திற்குள் பட்ஜெட் உரையை நிறைவு செய்தார்.

பட்ஜெட் 2023: கல்விக்கான ஒதுக்கீடு ரூ.1.13 லட்சம் கோடியாக உயர்வு; கடந்த ஆண்டை விட 8.3% அதிகம்

முதல்முறையாக ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டி, 2022-23ஆம் ஆண்டில் கல்விக்கான மொத்த ஒதுக்கீடு ரூ.1.04 லட்சம் கோடியாக இருந்த நிலையில், திருத்தப்பட்ட மதிப்பீடு ரூ.99,881 கோடியாக உள்ளது

மத்திய பட்ஜெட்: பிராணாம் முதல் மிஷ்தி வரை திட்டங்களுக்கு தொடரும் மோடி அரசின் ஆதரவு

உரங்களை குறைப்பது, சதுப்புநிலத் தோட்டம், இயற்கை வளங்களை ஊக்குவித்தல் ஆகியவை கவர்ச்சியான முழக்கங்களுடன் வடிவமைக்கப்பட்ட திட்டத்தின் சுருக்கமான பெயரின் நோக்கங்கள் ஆகும்.

புதிய வரி முறையில் குழப்பம்; யாருக்கெல்லாம் விலக்கு கிடைக்கும்?

மத்திய பட்ஜெட் 2023: ரூ. 6-9 லட்சம் வருமான வரம்புக்கு பொருந்தக்கூடிய வரி விகிதம் 10 சதவீதமாக இருக்கும் என நிதியமைச்சர் கூறினார். எனவே ரூ.7 லட்சம்…

மீண்டும் மீண்டும் நிர்மலா சீதாராமன் பயன்படுத்திய அந்த வார்த்தை.. அம்ரித் கால் என்றால் என்ன?

“அம்ரித் கால்க்கான எங்கள் பார்வையில் தொழில்நுட்பம் சார்ந்த மற்றும் அறிவு சார்ந்த பொருளாதாரம், வலுவான பொது நிதி மற்றும் வலுவான நிதித்துறை ஆகியவை அடங்கும்” என நிர்மலா…

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.

Nirmala Sitharaman Videos

Exit mobile version