Election 2019: DMK candidates aiadmk seats list : எதிர்வரும் மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலை முன்னிட்டு, திமுக, அதிமுக கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டிருக்கிறது. இரு கட்சிகளும் தலா 20 மக்களவை தொகுதிகளிலும், 18 சட்டமன்ற இடைத் தேர்தலிலும் வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது.
மேலும் படிக்க - Election 2019 Live Updates: பரபரக்கும் தமிழக தேர்தல் களம் லைவ் அப்டேட்ஸ்
Election 2019 : DMK candidates aiadmk seats list
11:30 PM - மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாமக வெளியிட்டுள்ளது.
பாமக வேட்பாளர்கள் குறித்த முழு விவரம் அறிய இங்கே க்ளிக் செய்யவும்
10:50 PM - மேலும் படிக்க - அதிமுக சார்பில் 20 தொகுதிகளில் களம் இறங்கும் வேட்பாளர்கள் யார் ?
10:35 PM - அதேபோல், 18 சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
தலைமைக் கழக அறிவிப்பு. pic.twitter.com/AqOZjvWsS6
— AIADMK (@AIADMKOfficial) 17 March 2019
10:25 PM - அதிமுக மக்களவைத் தேர்தல் வேட்பாளர்கள் பட்டியல், பல கட்ட தாமதத்திற்குப் பிறகு வெளியிடப்பட்டுள்ளது.
தலைமைக் கழக அறிவிப்பு. pic.twitter.com/ZZXVZizQhW
— AIADMK (@AIADMKOfficial) 17 March 2019
07:53 PM - அமமுக கூட்டணியில் மத்திய சென்னை வேட்பாளராக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தெஹ்லான் பாகவி போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
07:35 PM - அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் பட்டியலில் இன்னும் சிறிது நேரத்தில் வெளியாக வாய்ப்பு.
07:15 PM - பிரபலங்களுடைய வாரிசுகளின் அணிவகுப்பு
1. சென்னை வடக்கு - கலாநிதி வீராசாமி
2.சென்னை தெற்கு - தமிழச்சி தங்கபாண்டியன்
3.மத்திய சென்னை - தயாநிதிமாறன்
4.காஞ்சி - செல்வம்
5. அரக்கோணம் - ஜெகத்ரட்சகன்
6.வேலூர் - கதிர் ஆனந்த்
7.தருமபுரி - செந்தில்குமார்
8.கள்ளக்குறிச்சி - கவுதமசிகாமணி
06:30 PM - திமுக வேட்பாளர்கள் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
06:10 PM - இன்னும் சற்று நேரத்தில் திமுக வேட்பாளர்கள் பட்டியலை மு.க.ஸ்டாலின் வெளியிட இருக்கிறார்.
05:40 PM - ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மீண்டும் முக்கிய நிர்வாகிகள் வருகை புரிந்துள்ளனர். இதனால், அதிமுக வேட்பாளர்கள் பட்டியலும் இன்று வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
05:00 PM - சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை. திமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடவுள்ள நிலையில் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை.
04:35 PM - இன்று பிற்பகல் 03.30 மணியளவில் அதிமுக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் விவரம் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில், பட்டியல் வெளியீடு தாமதமாகியுள்ளது.
04:00 PM : மக்களவை தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் பாரிவேந்தர் வெற்றிக்காக மதிமுக பாடுபடும் என வைகோ தெரிவித்துள்ளார்.
03:45 PM : புதிய தமிழகம் கட்சி வேட்பாளர்
அதிமுக - பாஜக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் புதிய தமிழகம் கட்சி தென்காசியில் போட்டியிடுகிறார். தனிச் சின்னத்தில், அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி போட்டியிருகிறார்.
03:15 PM : சற்று நேரத்தில் வெளியாகிறது அதிமுகவின் வேட்பாளர்கள் பட்டியல்
அதிமுக போட்டியிடும் 20 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை இன்னும் சற்று நேரத்தில் அறிவிக்க உள்ளது அதிமுக
02:00 PM : பெரம்பலூரில் பாரி வேந்தர் போட்டி
திமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் இந்திய ஜனநாயக கட்சி, பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடுகிறது. வேட்பாளாராக பாரிவேந்தர் அறிவிக்கப்பட்டுள்ளார். தற்போது முக ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றார்.
01:45 PM : மார்ச் 22ம் தேதி தேர்தல் அறிக்கை வெளியாகும்
டிடிவி தினகரனின் அமமுக கட்சியின் தேர்தல் அறிக்கை மார்ச் 22ம் தேதி அறிவிக்கப்படும் என்று சென்னை செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவிப்பு. ஏற்கனவே 24 தொகுதிகளில் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்ட நிலையில், தேனி தொகுதியில் நானே நிற்கலாம் என்றும் டிடிவி அறிவித்துள்ளார்.
12:45 PM : இந்திய தவ்ஹீத் ஜமாத் ஆதரவு
இந்திய தவ்ஹீத் ஜமாத் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு தங்களின் ஆதரவை அளித்துள்ளது. நடைபெற இருக்கும் 18 சட்டமன்ற இடைத் தேர்தலில் தங்களின் ஆதரவினை அமமுகவிற்கு அளிப்பதாக அறிவித்துள்ளது ஜமாத் அமைப்பு.
12:30 PM : திமுக அதிமுக நேரடி பலப்பரீட்சை
திமுக அதிமுகவிற்கு 8 இடங்களில் நேரடியாக போட்டியாளர்களை களம் இறக்குகிறது. சின்னங்களை ஒப்பிட்டுப் பார்க்கையில் 11 இடங்களில் இரண்டு கட்சிகளும் நேரடியாக மோதுகின்றது. திமுக பாமகவுடன் நேரடியாக 6 இடங்களில் போட்டியிடுகிறது.
மேலும் படிக்க : திமுக Vs அதிமுக : 8 தொகுதிகளில் நேரடி பலப்பரீட்சை…
11:30 AM : தஞ்சை தொகுதிக்கான தமாகா வேட்பாளர் யார் ?
அதிமுக-பாஜக கூட்டணியில் இணைந்திருக்கும் தமிழக மாநில காங்கிரஸ் கட்சி தஞ்சை தொகுதியில் போட்டியிடுகிறது. யார் போட்டியாளர்காக களம் இறக்கப்படுவார் என்பதை நாளை ஜி.கே.வாசன் அறிவிக்க உள்ளார்.
11:00 AM : விடுதலைச் சிறுத்தைக் கட்சி வேட்பாளர்கள் யார் ?
திமுக கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைக் கட்சி சிதம்பரம் மற்றும் விழுப்புரம் பகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்பதை அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார். சிதம்பரம் தொகுதியில் அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிடுகிறார். விழுப்புரம் தொகுதியில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் போட்டியிடுகிறார்.
கழக தலைவர் @mkstalin அவர்களிடம், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், சிதம்பரம் & விழுப்புரம் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் @thirumaofficial மற்றும் @WriterRavikumar ஆகியோர் வாழ்த்து பெற்றனர். pic.twitter.com/D1FK6j2NyV
— DMK - Dravida Munnetra Kazhagam (@arivalayam) 17 March 2019
ஆந்திரா மற்றும் கேரளாவிலும் போட்டியிடும் விசிக
10:25 AM : தொகுதி பட்டியலை வெளியிட்டு அறிவித்தது அதிமுக
அதிமுக, பாஜக, பாமக, புதிய நீதிக்கட்சி, புதிய தமிழகம் கட்சி, தேமுதிக, என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் எங்கே போட்டியிடுவார்கள் என்ற அறிவிப்பினை வெளியிட்டது அதிமுக.
அது தொடர்பான முழுமையான தகவல்களைப் படிக்க
09:55 AM : தலைவர்கள் வருகை
எடப்பாடி பழனிசாமி, பன்னீர் செல்வம், தமிழிசை சௌந்தரராஜன், எச்.ராஜா உள்ளிட்ட தலைவர்கள் தற்போது வருகை புரிந்துள்ளனர்.
09:45 AM : சிறிது நேரத்தில் வெளியாக உள்ளது தொகுதிப் பட்டியல்
சென்னை ஆழ்வார்பேட்டையில் அமைந்திருக்கும் தனியார் விடுதியில் தொகுதிப் பட்டியலை வெளியிட தலைவர்கள் வந்து சேர்ந்த வண்ணம் உள்ளனர். இன்னும் சிறிது நேரத்தில் பட்டியல் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
09:00 AM : அதிமுக கூட்டணி - எந்தெந்த தொகுதிகள் யாருக்கு ?
இன்று காலை சரியாக 09:30 மணிக்கு கிரவுன் பிளாசா ஓட்டலில் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து தொகுதி பட்டியலை எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் இருவரும் இணைந்து வெளியிடுகின்றனர்.
08:15 AM : விசிக வேட்பாளர்கள் யார் ?
இன்று காலை சரியாக 10 மணி அளவில், திமுகவின் தோழமை கட்சியான விசிக நிற்கும் பெரம்பலூர் மற்றும் விழுப்புரம் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவிக்க உள்ளார்.
08:00 AM : திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு எப்போது ?
திமுக வேட்பாளர்களின் பட்டியல் மாலை 06:30 மணிக்கு அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. திமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் தோழமை கட்சிகள் ஒவ்வொருவராக தங்கள் கட்சியின் வேட்பாளர்களை அறிவித்த வண்ணம் இருக்கின்றனர்.
07:45 AM : அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் ?
அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார். முதற்கட்டமாக 24 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும், 9 சட்டமன்ற இடைத் தேர்தல் தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் அறிவித்துள்ளார். அமமுக வேட்பாளர்கள் பட்டியல் தொடர்பான முழுமையான தகவலுக்கு
மேலும் படிக்க : டிடிவி தினகரன் vs திமுக! மத்திய சென்னையில் காத்திருக்கும் கடும் சவால்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.