Latest Breaking News in Tamil Updates : இன்று தமிழகத்தில் நடைபெறும் அனைத்துவிதமான முக்கியச் செய்திகளையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
Latest Breaking News in Tamil Updates : நேற்றைய முக்கிய நிகழ்வுகள்
நேற்று தமிழகத்தில் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் மிக உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எரிவாயு எடுப்பதற்கான திட்டத்தை ரத்து செய்யக் கோரியும், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அதை அறிவிக்க வேண்டும் என்று திமுக ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் படிக்க : ‘கருணாநிதி போல ராஜதந்திரி என்பதை ஸ்டாலின் நிரூபித்துவிட்டார்’ – திருமாவளவன்
பருவமழை தாமதம் ஆவதால் பல்வேறு இடங்களில் மக்கள் குடிநீருக்காக மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
Live Blog
தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம், முக்கிய தலைவர்களின் அறிக்கைகள், செயல்பாடுகள், அறிவிப்புகள் ஆகியவற்றை அறிந்து கொள்ள இந்த இணைப்பில் தொடருங்கள்
ஐசரி கணேசன் தலைமையிலான அணி களமிறங்குகிறது : விஷால் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என புகார்https://t.co/SbXdocZakv#Vishal | #Nadigarsangam
— Thanthi TV (@ThanthiTV) 4 June 2019
‘Autonomous' என பொருள்படும் தன்னாட்சி குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ட்வீட்; ஏற்கனவே மும்மொழி திட்டத்திற்கு எதிராக ட்வீட் செய்திருந்த நிலையில் தற்போது தன்னாட்சி குறித்து ட்வீட் #ARRahman pic.twitter.com/YTskhcWQ9A
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) 4 June 2019
சமூக மேம்பாடு திட்டத்தின் மூலம் கிராமப்புற பெண்கள் மேற்கொள்ளும் அனைத்து வங்கி பரிவர்த்தனைகளையும் டிஜிட்டலாக்கும் திட்டம், தமிழகத்தில் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. டிஜிட்டல் சஹி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தை, கவர்னர் பன்வாரிலால் புரோஹித் துவக்கிவைத்தார்.
மதுரை கலெக்டர் நாகராஜன் உள்ளிட்ட 3 ஐ.ஏ.எஸ்.களை தமிழக அரசு இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.
மதுரை கலெக்டராக இருந்த நாகராஜன், தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புதிய கண்டுபிடிப்பு பயிற்சி மைய இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார் , மாவட்ட ஆட்சியர் பொறுப்பை மறு உத்தரவு வரும் வரை கவனிப்பார்
கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி எம். பாலாஜி, பொதுப்பணித்துறை கூடுதல் செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
கூடுதல் தலைமை தேர்தர் அதிகாரி வி.ராஜாராமன், நகரம் மற்றும் கிராம திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்டு உள்ளதாக தலைமை செயலாளர் வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் தற்போது காலியாக இருக்கும் 11 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் சில வாரங்களில் நடைபெற உள்ளது. கத்பந்தன் என்ற பெயரில் கூட்டணி அமைத்த சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கூட்டணி உத்திரப்பிரதேசத்தில் பெரிய அளவில் வெற்றியை தக்கவில்லை என்ற காரணத்தான் தற்போது இருவரும் பிரிந்து தனித்தனியாக போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர். மேலும் தன் மேல் அளவு கடந்த மரியாதையை அகிலேஷ் மற்றும் டிம்பிள் யாதவ் வைத்திருப்பதாகவும் நெகிழ்ச்சியுடன் கூறினார் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி
நாளை முதல் கேரளாவில் பருவமழை துவங்குவதைத் தொடர்ந்து முல்லை பெரியாறு அணையில் மத்திய நீர்வள பொறியாளர் குல்சன் ராஜ் தலைமையிலான மூவர் கண்காணிப்பு குழு ஆய்வினை நடத்தி வருகின்றது. கடந்த ஆகஸ்ட் மாதம் அங்கு வழக்கத்திற்கு மாறாக பருவமழை பெய்ய மாநிலத்தில் உள்ள 20 அணைகளும் நிரம்பியது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் நடைபெற்ற பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. எழுத்துத் தேர்வுகள் மார்ச் 26ம் தேதியும், செய்முறை தேர்வுகள் ஏப்ரல் 4ம் தேதியும் ஆரம்பமாகின. அதன் தேர்வு முடிவுகளை நீங்கள் tndte.gov.in இணையத்தில் நீங்கள் பார்த்துக் கொள்ளலாம்.
கேரள மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு நிஃபா வைரஸ் தொற்று உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. யாரும் பயப்பட்த் தேவையில்லை என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா அறிவித்துள்ளார்.
2019ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மொத்தமாக 60 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டதாக முக்கியமான புள்ளி விபரக்கணக்குகளை வெளியிட்டுள்ளது புது டெல்லியை மையமாக கொண்டு இயங்கி வரும் சி.எம்.எஸ் என்ற நிறுவனம்.
மேலும் படிக்க : அதிக பொருட்செலவில் நடைபெற்ற உலகின் மிகப்பெரிய தேர்தல் திருவிழா
இன்று வானில் பிறை தெரிந்ததால் சவுதி மற்றும் இதர மத்திய கிழக்கு நாடுகளில் ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள மதுரை, நெல்லை, நாகூர் போன்ற முக்கியமான இடங்களில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றது.
பருவமழை இயல்பைக் காட்டிலும் 5 நாட்கள் தாமதமாக வரும் என்று ஏற்கனவே வானிலை ஆராய்ச்சி மையம் தகவல் அளித்திருப்பதால் இன்னும் பல்வேறு இடங்களில் பருவமழை தொடங்கவில்லை. வெப்பநிலை அதிகமாக இருப்பதால் சில இடங்களில் வெப்பச்சலனத்தால் மழை பெய்து வருகின்றது. தேனி, சேலம், கரூர், திருச்சி, அரியலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திரிணாமூல் காங்கிரஸ் எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை கூட்டம் ஒன்றை நேற்று நடத்தியுள்ளார். அதில் நடந்து முடிந்த தேர்தலில் தோல்விகளை சந்தித்ததிற்கான காரணங்கள் ஆலோசிக்கப்பட்டது. பிறகு வாக்குச்சீட்டு முறைக்கு தேர்தல் முறைகள் திரும்ப வேண்டும் என்றும் வாக்குப்பதிவு இயந்திரத்தின் நன்பகத்தன்மையை சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.
புதுச்சேரி மாநிலத்தில் அதிகாரம் யாருக்கு என்ற பிரச்சனை ஆளுநர் கிரண் பேடி மற்றும் முதல்வர் நாராயணசாமிக்கு மத்தியில் வெகுநாட்களாக இருந்து வருகின்ற நிலையில் இன்று இது தொடர்பான பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க உள்ளது உச்ச நீதிமன்றம். ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ப்பட்ட வழக்கில், நிர்வாக விவகாரத்தில் கிரண் பேடி தலையிட வேண்டாம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார் துணை நிலை ஆளுநர் கிரண் பேடி. இன்று இந்த மனு விசாரணைக்கு வருகின்றது.
வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்ஷங்கர் ஆர்கனிசேசன் ஆஃப் இஸ்லாமிக் கோ ஆப்ரேசன்ஸ் என்ற அமைப்பு ஜம்மு மற்றும் காஷ்மீர் தொடர்பான கருத்துக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, இந்தியாவிற்குள் நடக்கும் பிரச்சனை இந்தியாவின் பிரச்சனை. இதில் யாரும் கருத்து சொல்ல வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றும் அஜித் தோவல் கேபினட் ரேங்கிற்கு உயர்ந்துள்ளார். ஒரு சிவில் சர்வீஸ் அதிகாரி இந்த நிலையை அடைவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights