Athimathuram Benefits In Tamil: அதிமதுரம் மிகச்சிறந்த மருத்துவ குணங்கள் வாந்த பொருள்களில் ஒன்றாகும். இனிப்பு சுவையுடைய வேர்களை கொண்டுள்ள அதிமதுரம் நல்ல வாசனையை கொண்டது. இவை அனைத்து ஆயுர்வேதம் மற்றும் உலகில் உள்ள அனைத்து மருத்துவமுறைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.
இந்த அற்புத மூலிகையில் டீ தயார் செய்து பருகி வந்தால் தொண்டை வலி மற்றும் புண் ஆறும். சளித்தொல்லை இருக்காது.
அதிமதுரம் ஊறவைக்கப்பட்ட தண்ணீரை அவ்வப்போது பருகி வந்தால் சிறுநீர்ப்பையில் இருக்கும் கிருமிகள் அழிந்து, புண்கள் ஆறும். சிறுநீரகங்களில் கற்கள் உருவாவதையும் தடுக்கும்.
இப்படியாக எண்ணற்ற அற்புத நன்மைகளை உள்ளடக்கியுள்ள அதிமதுரத்தில் சுவையான மற்றும் ஆரோக்கியமான டீயை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :
அதிமதுரம் தூள் – 1 டீஸ்பூன்
தண்ணீர் – 1 டம்ளர்
நாட்டு சர்க்கரை – தேவைக்கு

அதிமதுரம் டீ சிம்பிள் செய்முறை:
ஒரு அகலமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
பின்னர், அதனுள் அதிமதுரம் தூளை தூவி இரண்டு நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
இவை கொதிக்க தொடங்கியதும் நாட்டு சர்க்கரையை சேர்க்கவும்.
இவை கரைந்த பிறகு கீழே இறக்கி வடிகட்டி பருகலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“