தினமும் இத்தனை பாதாம் ஊறவைத்து சாப்பிடுங்க… என்னென்ன நன்மை தெரியுமா?

Top health benefits of eating almonds in tamil: “ஒருவர் தினமும் 1 அவுன்ஸ் அல்லது 28-30 கிராம் பாதாம் பருப்புகளை சாப்பிடலாம் (இது 22-23 பாதாம் பருப்பாகும்)” என பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ரித்திகா சமதார் தெரிவித்துள்ளார்.

benefits of almonds in tamil: how many almonds to eat per day tamil

Health benefits of almonds in tamil: உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அள்ளித்தரும் பருப்பு வகைகளில் பாதாம் பருப்புக்கு முக்கிய இடம் உண்டு. இவற்றில் புரதங்கள், நார்ச்சத்து, கொழுப்பு, வைட்டமின் ஈ, மெக்னீசியம், மாங்கனீசு, தாமிரம் மற்றும் பாஸ்பரஸ் ஆகிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணபடுகின்றன. நீங்கள் உடல் எடையை குறைப்பதில் கவனம் செலுத்துபவராக இருந்தால் உங்களது உணவுப்பட்டியலில் பாதம் பருப்பை சேர்த்துக் கொள்ளலாம்.

இதய ஆரோக்கியத்திற்கு சிறந்ததாக அறியப்படும் பாதாம் பருப்புகள் கொழுப்பைக் குறைக்கவும் உதவுகின்றன. இந்த சூப்பர்-ஆரோக்கியமான பருப்புகளை பச்சையாகவோ அல்லது ஊறவைத்தோ சாப்பிட்டு வரலாம். நாம் வீட்டில் தயார் செய்யும் இனிப்புகளில் மிருதுவாக பொடி செய்த பிறகு அவற்றைச் சேர்த்துக்கொள்ளலாம்.

பெரும்பாலான சுகாதார நிபுணர்களால் பாதாம் பல நன்மைகளுக்காக பரிந்துரைக்கப்படுகிறது. இவற்றை ஒரு நாளைக்கு எத்தனை பாதாம் சாப்பிடுவது சிறந்தது என்று நம்மில் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. “ஒருவர் தினமும் 1 அவுன்ஸ் அல்லது 28-30 கிராம் பாதாம் பருப்புகளை சாப்பிடலாம் (இது 22-23 பாதாம் பருப்பாகும்)” என பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ரித்திகா சமதார் குறிப்பிட்டுள்ளார்.

“நான் நிச்சயம் பரிந்துரைக்கும் ஒரு சிற்றுண்டி பாதாம். ஒரு ஆய்வின்படி, பாதாம் ஒரு சிற்றுண்டியாக சாப்பிடுவது மத்திய கொழுப்பு (தொப்பை கொழுப்பு) மற்றும் இடுப்பு சுற்றளவு ஆகியவற்றைக் குறைக்க உதவுகிறது. உங்கள் எடையை சிறப்பாக நிர்வகிக்க தினமும் ஒரு கைப்பிடி பாதாம் சாப்பிட வேண்டும். உங்கள் இதய ஆரோக்கியத்திற்கு அவை நல்லது” என்கிறார் ரித்திகா சமதர்.

பாதம் குறித்த கட்டுக்கதையும் – நிபுணர் ரித்திகாவின் பதிலும்…

பாதாமில் கொலஸ்ட்ரால் அதிகம்

பாதாமில் உண்மையில் ஜீரோ கொலஸ்ட்ரால் உள்ளது. தாவரப் பொருட்களான எதிலும் கொலஸ்ட்ரால் இல்லை. நீரிழிவு அல்லது இதய நோயாளிகளுக்கு பாதாம் நல்லதல்ல என்று பலர் கூறுகிறார்கள். மாறாக, பாதாம் பூஜ்ஜியக் கொழுப்பைக் கொண்டுள்ளது மற்றும் உண்மையில் அவை உங்கள் கெட்ட கொழுப்பைக் குறைக்கின்றன, இது இதய நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்.

பாதாம் சூடு

இந்தியாவில், கரம் (சூடான) மற்றும் தண்டா (குளிர்) என்ற 2 நிலைகள் உள்ளன. நம்மிடம் நிறைய பாதாம் இருந்தால், அது நம் உடலுக்கு பொருந்தாது, அது மிகவும் ‘சூடு’ என்று மக்கள் நினைக்கிறார்கள். ஒரு நாளைக்கு 4-5 பாதாம் பருப்புகளுக்கு மேல் சாப்பிடக்கூடாது என்று நம்மில் பெரும்பாலோர் நம்புகிறோம். மாறாக, நீங்கள் ஆரோக்கியமற்ற தின்பண்டங்களை பாதாமுடன் மாற்றினால், அவற்றில் சிறிதளவு (22-23) இருந்தால், அது இதயத்தைப் பாதுகாக்கும் மற்றும் நீரிழிவு நோய்க்கு நல்லது.

சாப்பிடுவதற்கு முன் நாம் பாதாம் தோலை அகற்ற வேண்டும்

நம்மில் பெரும்பாலோர் பாதம் சாப்பிடுவதற்கு முன் அவற்றின் தோலை ஊறவைத்து உரிக்கிறார்கள். ஊறவைப்பது நல்லது, ஏனெனில் இது நுண்ணூட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு உதவுகிறது, ஆனால் அவற்றை உரிக்காமல் இருக்க வேண்டும். பாதாம் பருப்பைப் பற்றி நாம் பேசும்போது, ​​அதில் நார்ச்சத்து மிக அதிகமாக உள்ளது மற்றும் தோலை உரிக்கும்போது, ​​நார்ச்சத்து இல்லாமல் போகிறது. நீங்கள் அதை ஒருபோதும் உரிக்கக்கூடாது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Benefits of almonds in tamil how many almonds to eat per day tamil

Next Story
சிவப்புத் தோலும் பாலியல் தேர்வும்… கறுப்பு என்பது வெறுப்பா?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com