Benefits of black pepper Tamil News: மசாலாப் பொருட்களின் மருத்துவ குணங்களைப் பற்றி நாம் பேசும்போது, கருப்பு மிளகு பற்றி பேசாமல் கடந்து போவது மிகவும் கடினம். காளி மிர்ச் என்றும் அழைக்கப்படும் கருப்பு மிளகு முதன்முதலில் அறியப்பட்ட மசாலாக்களில் ஒன்றாகும். மற்றும் இது இந்தியாவின் மலபார் கடற்கரைக்கு சொந்தமானது ஆகும். இந்த கருப்பு மிளகு பல்வேறு வகையான உணவுகளுக்கு சுவையை சேர்க்க உலகம் முழுவதும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. மேலும், கருப்பு மிளகு அத்தியாவசிய எண்ணெயை தயாரிக்கவும் பயன்படுகிறது. அதோடு இது கீல்வாதம் மற்றும் வாத நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் பயனளிக்கிறது.
எடையை இழக்க உதவும் மிளகு
கருப்பு மிளகு வைட்டமின்கள் மற்றும் தாதுக்களுடன் நிரம்பி காணப்படுவதால் இது ஒரு சிறந்த சூப்பர்ஃபுட் ஆகிறது. இது பல சுகாதார நோய்களை குணப்படுத்த உதவுகிறது மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதன் மூலம் எடை இழப்பு செயல்முறையை துரிதப்படுத்துகிறது.
இந்த கருப்பு மிளகு வைட்டமின் ஏ, கே, சி மற்றும் கால்சியம், பொட்டாசியம் மற்றும் சோடியம் போன்ற தாதுக்களின் நன்மைகளால் நிரம்பியுள்ளது. தவிர, இவற்றில் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் உணவு நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
தெர்மோஜெனிக் விளைவு காரணமாக, காரமான உணவுகள் உணவை வளர்சிதை மாற்றமாக்க உதவுகின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உணவின் தெர்மோஜெனிக் விளைவு அல்லது வெப்ப விளைவு (TEF) என்பது உங்கள் உடல் உணவை உட்கொண்ட பிறகு ஏற்படும் கலோரிகளை எரிக்கும் விகிதத்தில் ஸ்பைக் என குறிப்பிடப்படுகிறது.
தெர்மோஜெனிக் விளைவு எரிந்த கலோரிகளின் எண்ணிக்கையை பாதிக்கும் என்றும் உங்கள் எடை இழப்பு இலக்கை விரைவில் அடைய உதவும் என்றும் நம்பப்படுகிறது. மேலும், காரமான உணவுகள் முழுமையின் உணர்வை ஊக்குவிக்கின்றன மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகளுக்கான ஏக்கத்தை குறைக்கின்றன.
கருப்பு மிளகு பைபர்களை கொண்டுள்ளதால், செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்ற செயல்திறனை மேம்படுத்துகிறது. இந்த கலவை உண்மையில் உங்கள் உடலில் கொழுப்பு சேருவதை குறைக்கிறது மற்றும் ஆரோக்கியமான எடையை பராமரிக்க உதவுகிறது.
கருப்பு மிளகின் மற்ற நன்மைகள்
கருப்பு மிளகு ஆக்ஸிஜனேற்றங்களைக் கொண்டுள்ளது. அவை ஃப்ரீ ரேடிகல்களின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளைத் தடுக்க அல்லது தாமதப்படுத்தும் சக்தியைக் கொண்டுள்ளன.
இது உடலில் உள்ள ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கும் நமது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துவதற்கும் உதவுகிறது.
கருப்பு மிளகின் அழற்சி எதிர்ப்பு பண்புகள் கீல்வாதம், பருவகால ஒவ்வாமை மற்றும் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்மை பயக்கும்.
மூளையின் செயல்பாடு மற்றும் இரத்த சர்க்கரை வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும் பைபரின் உதவும்.
கருப்பு மிளகு தேநீர்
உங்கள் உணவில் கருப்பு மிளகு சேர்ப்பது நிச்சயமாக இந்த மசாலாவை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வதற்கான எளிதான வழியாகும். ஆனால் உங்கள் உணவில் இந்த மசாலாவின் அளவு மிகவும் குறைவு. எனவே, அதன் அனைத்து நன்மைகளையும் நீங்கள் அறுவடை செய்ய முடியாது. எடை இழப்பு செயல்முறையை விரைவுபடுத்த, இந்த கருப்பு மிளகு தேநீரை முயற்சிக்கவும், அதன் அற்புதமான ஆரோக்கிய நன்மைகளுக்காக உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்
1/4 தேக்கரண்டி கருப்பு மிளகு
1 அங்குல இஞ்சி வேர்
1 ஸ்பூன் தேன்
1 ஸ்பூன் எலுமிச்சை
1 கப் தண்ணீர்
எப்படி தயாரிப்பது
ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் தண்ணீர், கருப்பு மிளகு மற்றும் அரைத்த இஞ்சி வேர் சேர்க்கவும். 5 நிமிடங்கள் தண்ணீர் கொதிக்க விடவும், பின்னர் அடுப்பை அணைக்கவும். ஒரு கோப்பையில் தேநீரை வடிகட்டி அதில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்க்கவும். இப்பொது நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்த கருப்பு மிளகு தேநீர் தயராக இருக்கும்.
கருப்பு மிளகு சேர்ப்பதற்கு முன்னர் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டியவை
கருப்பு மிளகு ஆரோக்கியமானது, ஆனால் ஒரே நாளில் அதிக அளவு கருப்பு மிளகு சேர்ப்பது இரைப்பை பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். ஒரு நாளில் 1/2 டீஸ்பூனுக்கு அதிகமாக கருப்பு மிளகு உட்கொள்ள வேண்டாம். மேலும், இவற்றின் தேநீர் அனைவருக்கும் பொருந்தாது. இந்த தேநீர் முதன்முறையாக குடித்த பிறகு உங்கள் உணவுக் குழாய் மற்றும் வயிற்றில் எரிச்சல் ஏற்பட்டால் அதைத் தவிர்க்கவும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " (https://t.me/ietamil)
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.