scorecardresearch

ஜீரண சக்தி… சுகர் பிரச்னை தீர்வு… பெருஞ்சீரகம் தரும் அபூர்வ நன்மைகள்!

Top health benefits of saunf or fennel seeds or perunjeeragam in tamil: பெருஞ்சீரகம் விதைகளில் இருக்கும் அத்தியாவசிய எண்ணெய்கள் மற்றும் செரிமான சாறுகள் நொதிகளின் சுரப்பை தூண்டுகிறது. இது செரிமான செயல்முறைக்கு உதவுகிறது.

ஜீரண சக்தி… சுகர் பிரச்னை தீர்வு… பெருஞ்சீரகம் தரும் அபூர்வ நன்மைகள்!

perunjeeragam benefits in tamil: நம்முடைய பகுதிகளில் விருந்திற்கு பிறகு பெருஞ்சீரகம் மென்று சாப்பிடுவது ஒரு பொதுவானது பழக்கமாக உள்ளது. இது நமது பற்களை சுத்தப்படுத்துவதோடு சுவாசத்தையும் புத்துணர்ச்சியடையச் செய்கிறது. ஆனால், இது மட்டுமே பெருஞ்சீரகத்தின் பயன் கிடையாது. இன்னும் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை பெருஞ்சீரகம் கொண்டுள்ளது.

இயற்கையாகவே அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டவையாக பெருஞ்சீரகம் உள்ளது. இவற்றில் காணப்படும் பைட்டோ கெமிக்கல்களில் ஒன்றான அனெத்தோல் என்ற ஆன்டிஆக்ஸிடன்ட், உடலில் உள்ள பல அழற்சியைத் தடுக்கிறது.

மேலும் இவற்றில் உள்ள கனிம மாங்கனீசு நொதி செயல்படுத்துதல், வளர்சிதை மாற்றம், செல்லுலார் பாதுகாப்பு, எலும்பு வளர்ச்சி, இரத்த சர்க்கரை ஒழுங்குமுறை மற்றும் காயம் குணப்படுத்துதல் ஆகியவற்றிற்கு முக்கியமானதாக இருக்கிறது.

செரிமானத்திற்கு உதவுகிறது

பெருஞ்சீரகம் விதைகளில் இருக்கும் அத்தியாவசிய எண்ணெய்கள் செரிமான சாறுகள் நொதிகளின் சுரப்பை தூண்டுகிறது. இது செரிமான செயல்முறைக்கு உதவுகிறது. மற்றும் வாய்வு அல்லது அதிகப்படியான வாயு உருவாக்கம் காரணமாக வயிற்றின் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.

பெருஞ்சீரக விதைகள் வயிற்றின் அமிலத்தன்மையை நடுநிலையாக்கவும் உதவுகின்றன. இது முறையற்ற உணவுப் பழக்கவழக்கங்கள், கட்டுப்பாடற்ற வாழ்க்கை முறை மற்றும் எடை காரணமாக சில நேரங்களில் அதிகரிக்கும். இந்த அமிலத்தன்மை நெஞ்செரிச்சலை ஏற்படுத்துகிறது, எனவே, உணவுக்குப் பிறகு பெருஞ்சீரகம் சாப்பிடுவது, அது நிகழும் வாய்ப்பைக் குறைக்கும். பெருஞ்சீரகத்தின் இந்த பண்பு அமிலத்தன்மை எதிர்ப்பு மருந்துகளில் ஒரு பொதுவான மூலப்பொருளாக அமைகிறது.

இரத்த சோகைக்கு எதிராக போராடுகிறது

ஹீமோகுளோபினின் முக்கிய கூறு இரும்புச் சத்து ஆகும். அதற்கு பெருஞ்சீரகத்தில் உள்ள ஹிஸ்டைடின் எனப்படும் அமினோ அமிலம் நல்ல மூலமாகும். இவை ஹீமோகுளோபின் உற்பத்திக்கு உதவுகின்றன. ஹிஸ்டைடின் ஹீமோகுளோபின் மற்றும் இரத்தத்தின் பிற கூறுகளின் உற்பத்தியையும் தூண்டுகிறது.

உடல் சூட்டை குறைக்கிறது

பெருஞ்சீரகம் விதைகளை தண்ணீரில் ஊறவைத்து, காலையில் வடிகட்டி குடிப்பது உடல் சூட்டைக் குறைக்க சிறந்த வழி. உட்புற உடல் வெப்பத்தை குறைக்க இது சிறந்த வழிகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்துகிறது

மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் ஆர்த்தெரோஸ்கிளிரோசிஸ் போன்ற பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துவதால், அதிக அளவு கொலஸ்ட்ரால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். இதற்கு பெருஞ்சீரகம் விதைகள் ஒரு ஆகச் சிறந்த வழி. ஏனெனில் இதில் உள்ள நார்ச்சத்து இரத்தத்தில் கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது.

உயர் இரத்த அழுத்தத்திற்கு எதிராக செயல்படுகிறது

உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க, பொட்டாசியத்தின் அத்தியாவசிய ஆதாரமான பெருஞ்சீரகம் உதவும். இது இரத்த நாளங்களை விரிவடையச் செய்வதன் மூலம் அவற்றின் பதற்றத்தைக் குறைக்கிறது. இதன் விளைவாக இரத்த அழுத்தம் குறைகிறது. பொட்டாசியம் நம் உடலில் நீர் சமநிலை மற்றும் அமில-அடிப்படை சமநிலையை ஒழுங்குபடுத்துகிறது.

வேர்ல்ட் ஜர்னல் ஆஃப் பார்மசி அண்ட் பார்மசூட்டிகல் சயின்சஸில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், எலிகளுக்கு மெந்தோலேட்டட் பெருஞ்சீரகம் விதைகளிலிருந்து எடுக்கப்பட்ட சாற்றில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சில அளவுகளில், இந்த சாறு இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை நிலையான ஆண்டிஹைபர்கிளைசெமிக் மருந்துகளுடன் ஒப்பிடும் விகிதத்தில் குறைக்கிறது.

நார்ச்சத்து, குறிப்பாக கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ள உணவை உண்பது, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை மேம்படுத்த உதவுவதோடு, டைப் 2 நீரிழிவு நோயை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்கும். பெருஞ்சீரகம் விதைகளில் உள்ள மற்றொரு ஆக்ஸிஜனேற்றியான பீட்டா கரோட்டின், வகை 2 நீரிழிவு நோயாளிகளுக்கு கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும் என்றும் கூறப்படுகிறது. பெருஞ்சீரகம் புற்றுநோயை எதிர்க்கும் பண்புகளைக் கொண்டுள்ளது என்பதை ஆய்வுகள் நிரூபித்துள்ளன.

எப்படி உட்கொள்வது?

பெருஞ்சீரகத்தை பச்சையாக சாப்பிடலாம் அல்லது மசாலாவாக பயன்படுத்தலாம். பெருஞ்சீரகம் எண்ணெய் கூட உணவுகள் மற்றும் குழம்புகள் உள்ளிட்டவைகளில் சுவையூட்டப் பயன்படுத்தப்படுகிறது. பெருஞ்சீரகம் பல்புகளை சாலட்களிலும் சேர்க்கலாம்.

கருஞ்சீரகம் சரியான அளவுகளில் குறுகிய காலத்திற்கு எடுத்துக் கொள்ளும்போது பாதுகாப்பானது என்றாலும், கேரட், செலரி அல்லது குவளை போன்ற சில தாவரங்களுக்கு உணர்திறன் உள்ளவர்கள் அதற்கு ஒவ்வாமை எதிர்வினைகளை உருவாக்கலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Fennel seeds benefits in tamil from aiding digestion to controlling blood sugar