முடி உதிர்வதில் இருந்து தப்பிக்க உதவும் நெல்லி ஜூஸ்… செய்வது எப்படி? நெல்லி ஜூஸ் பயன்கள்

Nelli juice benefits in tamil: உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்று நீங்கள் நினைத்தால், தினமும் காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் நெல்லி ஜூஸ் குடித்து வாருங்கள்.

Healthy drinks in tamil: How to Make Amala Juice in tamil

Healthy drinks in tamil: ஆயுர்வேத மருத்துவத்தில் பல பிரச்சனைகளை குணப்படுத்தும் ஒரு முக்கிய மூலிகையாக நெல்லிக்காய் உள்ளது. உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்று நீங்கள் நினைத்தால் தினமும் காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் நெல்லி ஜூஸ் குடித்து வாருங்கள்.

ஏராளமான மருத்துவ குணமிக்க இந்த நெல்லிக்கனி, கொழுப்புக்கள் கரைவதற்கும், எலும்புகள் ஆரோக்கியமாகுவதற்கும் உதவுகின்றன. இவற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளதால் நமது உடலில் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கிறது. மேலும், இவை உடல் சூட்டை தணிக்கவும், இரத்தத்தை சுத்தமாகுவதற்கும், சரும அழகை மேம்படுத்துவதற்கும் உதவுகின்றன.

இவ்வளவு மருத்துவ பயன்களை உள்ளடக்கியுள்ள நெல்லிக்கனியில் எப்படி எளிய முறையில் ஜூஸ் தயார் செய்யலாம் என்று பார்க்கலாம்.

நெல்லி ஜூஸ் செய்யத் தேவையான பொருட்கள்

நெல்லி – 3
வெள்ளரி – பகுதியளவு
எலுமிச்சை – 1
தேன் – 1 1/2 முதல் 2 ஸ்பூன்
இஞ்சி – 10 கிராம்
தண்ணீர் – 1 லிட்டர்

செய்முறை

முதலில் 3 நெல்லி எடுத்து அதில் உள்ள விதைகளை நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பின்னர், வெள்ளரியையும் அதே போல் நறுக்கிக்கொள்ளவும்.

இப்போது ஜூஸ் அடிக்கும் மிக்சி அல்லது வெறும் மிக்சி எடுத்து அதில் முதலில் நறுக்கிய நெல்லி மற்றும் வெள்ளரியை சேர்க்கவும். இவற்றோடு இஞ்சி மற்றும் பிழிந்த எலுமிச்சை சாறை சேர்க்கவும். பின்னர் இவற்றில் 1லிட்டர் தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து ஒரு வடிகட்டியால் வடிகட்டவும்.

வடிகட்டிய சாற்றுடன் தேன் கலந்து (சுவைக்கேற்ப) பருகி மகிழவும்.

நெல்லி தண்ணீர்

தேவையான பொருட்கள்

நெல்லி (விதை எடுக்காமல் கீறியது)
பச்சை மிளகாய் – 2 (நடுவில் கீறியது)
வெள்ளரி – பாதியளவு
உப்பு – சிறிதளவு
தண்ணீர் – 1 முதல் 2 லிட்டர்

செய்முறை

ஒரு பாத்திரம் அல்லது கேனில் தண்ணீர் ஊற்றி அதில் மேல் கொடுக்கப்பட்டுள்ளது பொருட்களை இட்டு, சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு மிக்ஸ் செய்த பின் மூடியால் மூடி வைக்கவும்.

இந்த நெல்லி தண்ணீரை மறுநாள் சுவைக்கவும். மிக அருமையாக இருக்கும்.

“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறt.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Healthy drinks in tamil how to make amala juice in tamil

Next Story
ஆந்திரா மெஸ் பருப்பு பொடின்னா இப்படி இருக்கணும்! சிம்பிள் ரெசிபி…Paruppu podi recipe in tamil: Andhra Mess special pappu podi in tamil
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express