எடை குறைப்பு, கண் பார்வை... மரவள்ளிக் கிழங்கை மிஸ் பண்ணாதீங்க!

maravalli kizhangu (Tapioca) Health Benefits, Nutrition, and Uses in tamil: மரவள்ளிக் கிழங்கின் இலைகளை கொதிக்க வைத்து, கஷாயம் தயாரித்து பருகி வந்தால் நமக்கு ஏற்படும் லேசான காய்ச்சல் பறந்து போகும்.

maravalli kizhangu (Tapioca) Health Benefits, Nutrition, and Uses in tamil: மரவள்ளிக் கிழங்கின் இலைகளை கொதிக்க வைத்து, கஷாயம் தயாரித்து பருகி வந்தால் நமக்கு ஏற்படும் லேசான காய்ச்சல் பறந்து போகும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
healthy food tips in tamil: maravalli kizhangu Benefits in tamil

healthy food tips in tamil: மலைப்பாங்கான இடங்களில் மற்றும் வறண்ட நிலப்பகுதிகளில் விளையும் மருத்துவ பயன்கள் கொண்ட கிழங்கு வகைகளில் மரவள்ளிக்கிழங்கும் ஒன்றாகும். வேர்களில் உருவாகும் இந்த அற்புத கிழங்கில் கார்போஹைட்ரெட், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் சி போன்ற சத்துகள் மிகுந்து காணப்படுகிறது.

Advertisment

பல்வேறு பொருட்களின் தயாரிப்புகளுக்கு மூலப் பொருளாக, மருந்துப் பொருட்கள் தயாரிக்க, உணவில் சேர்க்க என பல வழிகளில் மரவள்ளிக்கிழங்கு பயனளிக்கிறது. மேலும், கேரள மக்களின் தினசரி உணவில் தவறாமல் இடம்பெறும் ஒரு உணவுப்பொருளாகவும் இது உள்ளது. அந்த மக்களின் சுறுசுறுப்புக்கும், வியாதிகள் அணுகாத் தன்மைக்கும் இவை தான் காரணம் என்றால், அது நிச்சயம் மிகையாகாது. 

இப்படி பல ஆரோக்கிய நன்மைகளை தன்னக்கத்தே உள்ளடக்கியுள்ள மரவள்ளிக் கிழங்கின் முக்கிய பலன்களை இங்கு பார்க்கலாம்.

மரவள்ளிக் கிழங்கு சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்

Advertisment
Advertisements
publive-image

சரும பிரச்னைகளுக்கு தீர்வு தருகிறது 

மரவள்ளிக் கிழங்கு தோல் மற்றும் பல்வேறு சரும பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு தருகிறது. இவற்றின் தோலை சீவி, கூழாக்கி, அதை, உங்கள் முகத்தில் அல்லது பாதிக்கப்பட்ட இடத்தில் பூசி ஒரு மணி நேரம் கழித்து கழுவினால் நல்ல பலனை அடையலாம்.

இவை, முகத்தில் உள்ள அதிக எண்ணெய் பசையை வெளியேற்றுவதுடன், துளைகளை மூடுகிறது. இதனால், சருமம் புத்துணர்ச்சி அடைந்து, பொலிவைப் பெறுகிறது 

முடி உதிர்வை தடுக்கிறது

வளி மண்டல நிலையாலும், குறைந்த அளவு ஊட்டச்சத்துகளாலும் நமக்கு தலை முடி உதிர்வு பிரச்சனை வருகிறது. இதனால்  இளம் வயதிலேயே வழுக்கை விழுகிறது. இந்த பிரச்சனைகளுக்கு மரவள்ளிக் கிழங்கு நல்ல தீர்வை தருகிறது. 

இதற்கு மரவள்ளிக் கிழங்கை கூழாக்கி, தலையில் பூசி ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் ஊற விட்டு அலசி வரவும். இதேபோல் வாரத்திற்கு, இரண்டு முறை செய்து வந்தால், முடி  முன்பை விட அடர்த்தியாக வளரும். 

publive-image

எடை குறைப்பில் உதவுகிறது 

மரவள்ளிக் கிழங்கை நமது அன்றாட உணவுகளுடன் சேர்த்துக்கொள்வதன் மூலம், நமது உடல் எடையை படிப்படியாக குறைக்கலாம். 

இவற்றில் நார்ச்சத்து அதிகளவில் காணப்படுகிறது. இது குடலில் இருந்து வெளிப்படும் எல்லா நச்சுகளையும் உறிஞ்சி, செரிமான மண்டலத்தை மேம்படுத்துகிறது. மேலும், உடலில் ஏற்படும் அழற்சியையும் குறைக்கவும், இரைப்பை பிரச்னைகளில் இருந்தும் காக்கிறது.

தலைவலியை தடுக்கிறது 

நமக்கு ஏற்படும் ஒற்றை தலைவலி மற்றும் சாதாரண தலைவலிக்கு மரவள்ளிக் கிழங்கு மற்றும் அதன் இலைகள் பயன்படுகின்றன. இவற்றை அப்படியே உண்ணலாம் அல்லது கழுவி, அரைத்து சாறு எடுத்தும் பருகலாம். 

publive-image

மரவள்ளிக் கிழங்கு சாற்றை தினமும் இரண்டு வேளை பருகுவதால், வருங்காலத்தில் தலைவலி ஏற்படாமல் தடுக்கிறது. 

கண் பார்வையை மேம்பட செய்கிறது

மரவள்ளிக் கிழங்கை நாம் தினமும் சாப்பிடுவதால், உடலுக்கு தினசரி தேவையான 'வைட்டமின்கள்' மற்றும் 'மினரல்கள்' எளிதில் கிடைக்கின்றன. இவை நமது கண் பார்வையை மேம்படச் செய்கின்றன.  

மரவள்ளிக் கிழங்கின் மற்ற நன்மைகள்: 

மரவள்ளிக் கிழங்கின் இலைகளை கொதிக்க வைத்து, கஷாயம் தயாரித்து பருகி வந்தால் நமக்கு ஏற்படும் லேசான காய்ச்சல் பறந்து போகும். 

உடலில் ஏற்படும் காயங்களுக்கு மரவள்ளிக் கிழங்கு இலையில் உள்ள பசையை பிழிந்து எடுத்து, காயங்கள் மேல் பூசுவதால், சிறந்த நிவாரணம் கிடைக்கும். 

publive-image

மரவள்ளி கிழங்கின் இலைகளை நறுக்கி, சாலட் மற்றும் இதர இறைச்சி உணவுகளில் சேர்த்துக்கொண்டால் கூடுதல் சுவையைத் தரும். 

பெண்கள் தங்களது கர்ப்ப காலத்தில் மரவள்ளி கிழங்கை சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு நல்ல பலனைத் தரும். மேலும், அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் இவற்றில் அதிகமாகவே உள்ளன. 

publive-image

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Health Benefits Healthy Food Tips Healthy Food Tamil Health Tips Health Tips Lifestyle Healthy Life Healthy Food Tamil News 2

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: